http://i49.tinypic.com/11mgev9.jpg
Printable View
Makkal thilagam mgr in mahadevi movie at ktv to day 1.oo pm.
மக்கள் திலகம் பிறந்த நாள் -17-1-2013
உலகில் எந்த ஒரு தனி மனிதனுக்கும் கிடைக்காத புகழ் மக்கள் திலகம் m.g.r என்ற மாமனிதருக்கு கிடைத்திருப்பது ஒரு வரலாற்று சாதனை .
பசி என்ற கொடுமை யான ஏழ்மையின் தாக்கம் அவரது இளம் வயதில் பாதிக்க பட்டதின் விளைவுதான் 1982 ஆண்டில் சத்துணவு திட்டமாக தமிழ் நாட்டில் அறிமுகபடுத்தபட்டது .
இந்த திட்டத்தின் மூலம் பலன் அடைந்த பல லட்சகணக்கான மாணவர்கள் இன்று சமுதயாத்தில் நல்ல நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர் .
ஒரு தனி மனிதன் தனது வாழ் நாளில் தினமும் சந்திக்கும்
ஏமாற்றம் - கவலை - வறுமை - துரோகம் - நம்பிக்கை -ஆனந்தம் - என்று பல கோணங்களில் வெளிப்படும் செய்லகளுக்கு மருந்தாய் இருப்பது மக்கள் திலகத்தின் பட பாடல்கள் .
அந்த பாடல்களை கேட்பதின் மூலம் நமது மனதுக்கு புத்துணர்வும் ,நேர்மறை எண்ணங்களும் அலை மோதும் .
மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகள் ஆன பின்னரும்
உலகமெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் வீட்டிலும் , தெருவிலும் அவரது படத்தை வைத்து மாலை இட்டு பூஜை செய்வது நமது இதய தெய்வம் எங்க வீட்டு பிள்ளை
ஒருவருக்குதான் என்பது உலக சாதனை .
மக்கள் திலகம் [1947-1977.] முப்பது வருடங்களில் நமக்கு தந்த காவியங்கள் 115.
சரித்திர படங்கள் - சமுதாய படங்கள் என்று பலவேறு பாத்திர படைப்புக்கள் . இனிமையான பாடல்கள் இயல்பான நடிப்பு .சமுதாய சீர் திருத்த கொள்கை பாடல்கள் -வீரமான சண்டை காட்சிகள் . இதுதான் நம்முடைய மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் அழியா சொத்து .
நமக்கு மட்டுமல்ல . இந்த சொத்து அவர் பெயர் மட்டும் கூறி அனுபவிக்கும் கட்சிக்காரர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் - விநியோகஸ்தர்கள் - ஊடகங்கள் உரிமையாளர்கள் -குறுந்தகடு விற்பனையாளர்கள் - தயாரிப்பாளர்கள் - என்று இன்றும் அவர்கள் வாழ்க்கையில் வருமானத்தை அள்ளி தரும் அமுத சுரபியாக நமது மக்கள் திலகம் வாழ்ந்து கொண்டு வருகிறார் .
இந்த சாதனை படைக்கும் உலகில் ஒரே தனி மனிதர்
எங்கள் அமுத சுரபி மக்கள் திலகம் .
அவர் புகழ் வாழ்க
செல்வி பிரபா
பெங்களூர்
Dear Jai Shankar Sir,
CONGRATULATIONS on your postings crossed 450, in this Thread, within short span of time.
We expect more postings with rare pictures of our beloved God M.G.R.
S. Selvakumar
Endrum M.G.R. Engal Iraivan
வெள்ளித்திரையில் மக்கள் திலகத்தின் மகத்தான சென்னை நகர சாதனைகள் :
ஆதாரத்துடன் உள்ள உண்மை தகவல்கள் - தொடர்ச்சி பகுதி - 5
1. முதன் முறையாக திரையிடப்பட்ட 3 அரங்குகளிலும் (பாரகன், ஸ்ரீ கிருஷ்ணா, உமா) தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்து புதிய
சாதனை படைத்தது பொன்மனச் செம்மலின் பொற்கவீயமாம் "நாடோடி மன்னன்'.
2. முதன் முறையாக திரையிடப்பட்ட 4 அரங்குகளிலும்(மிட்லண்ட், ஸ்ரீ கிருஷ்ணா, மேகலா, நூர்ஜஹான்) தொடர்ந்து 100 காட்சிகள்
அரங்கு நிறைந்து மற்றுமோர் புதிய சாதனை படைத்தது கலைவேந்தனின் "அடிமைப்பெண்".
3. அதே போல், திரையிடப்பட்ட 4 அரங்குகளிலும் (பிளாசா, பிராட்வே, சயானி, கிருஷ்ணவேணி) தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்து
மீண்டும் சாதனை படைத்தது கலியுக கர்ணனின் "மாட்டுக்கார வேலன்" .
4. விளம்பரம் ஏதுமின்றி திரையிடப்பட்ட, உற்சாக ஊற்றாம் - நமது கொள்கைத் தங்கத்தின் "உலகம் சுற்றும் வாலிபன்' 81 ஆண்டு கால தமிழ்
சினிமா உலகில் புதிய சரித்திரம் படைத்திட்டது. வெளியிடப்பட்ட 3 அரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகள்
விவரம் வருமாறு :
( தேவி பாரடைஸ் - தொடர்ந்து 227 காட்சிகள், அகஸ்தியா - தொடர்ந்து 156 காட்சிகள், உமா - தொடர்ந்து 127 காட்சிகள் )
5. தமிழ் திரை உலகில் முதன் முதலாக 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து வெற்றிக்கொடி நாட்டிய படம் நமது மக்கள் திலகத்தின்
மலைக்கள்ளன் திரைப்படமே. (அரங்கு : காசினோ )
6. முதன் முதலாக 150 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து கலையுலகில் புரட்சி செய்திட்ட படம் குணக்குன்றின் "ரிக்ஷாக்காரன்"
( அரங்கு : அதிக இருக்கைகள் கொண்ட தேவி பாரடைஸ் )
7. முதன் முதலாக 200 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து வசூல் சாதனை புரிந்த படமும் நமது இதய தெய்வத்தின்
"உலகம் சுற்றும் வாலிபன்' ( அரங்கு : அதிக இருக்கைகள் கொண்ட தேவி பாரடைஸ் )
8. 266 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து மீண்டும் புரட்சியை ஏற்படுத்திய படம் "நீதிக்கு தலை வணங்கு"
( அரங்கு : தேவி கலா )
இப்படி சாதனை மேல் சாதனை படைத்து தமிழ் திரையுலகின் முடி சூடா மன்னனாக மட்டுமல்லாமல் நிரந்தர வசூல் சக்ரவர்த்தியாக
திகழ்ந்து கொக்ன்டிருப்பவர் நமது மக்கள் தங்கம் எம்.ஜி ஆர். அவர்கள் மட்டுமே.
சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர். எங்கள் இறைவன்
மக்கள் திலகம் நடித்த சத்யா மூவிஸ் காவல்காரன்
இன்று முதல் 4-1-12013
சென்னை மகாலட்சுமி திரையரங்கில் -தினசரி 3 காட்சிகள் .
சென்னை மாநகரில் நமது எழில் வேந்தன் எம்.ஜி. ஆர். அவர்களின் "உழைக்கும் கரங்கள்" திரைப்படம் 1976-ம் வருடம் ஜூலை மாத கடைசி வாரத்தில் 11வது வாரமாக சாந்தம், ஸ்ரீகிருஷ்ணா, உமா ஆகிய அரங்குகளில் வெற்றி உலா வந்து கொண்டிருந்த காலத்தில் சென்னை நகரின் பெரும்பாலான திரை அரங்குகளில் ஆக்கிரமிப்பு செய்த இருபதாம் நூற்றாண்டின் இனையற்ற வள்ளலாம் நமது நாயகனின் திரைப்படங்கள் :
1. கிரவுன் : அன்னமிட்ட கை
2. பிரபாத் : நீதிக்கு தலை வணங்கு
3. பாரத் : விக்கிரமாதித்தன்
4. பாண்டியன் (மகாராஜா) : அன்பே வா
5. மகாராணி : தாய்க்கு தலை மகன்
6. பிரைட்டன் : நாளை நமதே
7. தங்கம் : பெரிய இடத்துப் பெண்
8. ஈராஸ் : அலிபாபாவும் 40 திருடர்களும்
9. நேஷனல் : ஒரு தாய் மக்கள்
10. பாலாஜி : சக்கரவர்த்தி திருமகள்
11. சன் : படகோட்டி
12. பிளாசா : நான் ஆணையிட்டால்
13. மகாலட்சுமி : மாட்டுக்கார வேலன்
14. கமலா : மதுரை வீரன்
15. லிபர்ட்டி : மர்ம யோகி
இது ஒரு சிறு உதாரணம் தான். இது போல் சம்பவங்கள் தமிழகம் எங்கும் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது
மக்கள் திலகத்தின் படங்களின் வசூலை முறியடிக்கவோ அல்லது வசூலை பாதிப்பதோ அவரது இன்னொரு படத்தால் ம ட்டுமே முடியும் என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
பல திரை அரங்குகள் மூடப்பட்டு வணிக வளாகங்களாக மாறி வரும் தற்போதைய நவீன சூழ் நிலையில், பொன்மனச் செம்மலின் பழைய படங்கள் பல மீண்டும் மீண்டும் மறு வெளியீடு செய்யப்பட்டு தமிழ் திரை உலகத்தை காப்பாற்றி வருவதும், திரை அரங்க உரிமையாளர்களையும், வினியோகஸ்தர்களையும் வாழ வைத்துக் கொண்டிருப்பதும் நிதர்சனமான உண்மை.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகம் என்ற பட்டம் நமது தெய்வத்திற்கு சாதரணமாக வரவில்லை..அவர் மக்களுக்கு பிடித்தவர் மட்டுமல்ல..மக்கள் மனங்களை அறிந்து அவர்களின் தேவையை உணர்ந்தவர்..அதனால்தான் அவர் இருக்கும் வரை மட்டுமல்ல அவர் இல்லாதபோதும் கூட அவரை மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியவில்லை..அதற்கு நிறைய உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்..படபிடிப்பு நடைபெறும்போது படபிடிப்பு குழுவினர்களுக்கு அவர் படைக்கும் விருந்தும் பரிசளிப்பும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்..அதற்கும் பல உதாரணங்கள் உண்டு..அவற்றில் சில..ராஜஸ்தான் பாலைவனத்தில் அனைவருக்கும் குளிர்பானம் வரவழைத்தது..காஷ்மீர் படபிடிப்பில் அனைவருக்கும் ஸ்வட்டர் அளித்தது..சிம்லா படபிடிப்பில், வெளிநாட்டு பிடிப்பில் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..அதே போல சூட்டிங் பார்க்கும் மக்களையும் அவர் கவனிக்க தவறியதே இல்லை..அவர்களுடைய பாதுகாப்பு அவர்களுடைய தேவைகள் இவற்றை எல்லாம் எண்ணிக்கொண்டே தான் அவர் படபிடிப்பில் நடிப்பார்..அதற்கு ஒரு உதாரணம்..மாட்டுக்கார வேலன் எனும் வெள்ளிவிழா பட சூட்டிங்கின் போது நடந்தவற்றை இயக்குனர் ப. நீலகண்டன் கூறியதை காணுங்கள்
http://i47.tinypic.com/1zyhj41.jpg