கார்த்திக் சார் ஆலோசனை ஏற்று,கூடிய விரைவில்....
முதல் அத்தியாயம்...
நடிகர்திலகத்தின் முதல் காதல்.
Printable View
கார்த்திக் சார் ஆலோசனை ஏற்று,கூடிய விரைவில்....
முதல் அத்தியாயம்...
நடிகர்திலகத்தின் முதல் காதல்.
மிகவும் அருமையான பதிப்பு - என்ன சத்தியமான வார்த்தைகள் - சிவாஜி யின் படங்களை கணக்கிலிருந்து எடுத்துவிட்டால் தமிழ் திரை உலகம் வறுமையின் அடி மட்டத்தில் தான் இருக்கும் - உணர்ந்து கூறிய வார்த்தைகள் - பொன் ஏட்டில் பதிக்கவேண்டிய வார்த்தைகள் .
நல்லவர்கள் சொல்வது ஒன்று தான் நடப்பதில்லை இந்த தமிழகத்திலே ! நடந்திருந்தால் இன்று உலகஅளவில் ஒரே ஒரு திரி தான் உபயோகத்தில் இருந்திருக்கும் - ம்ம் என்ன செய்வது விதியின் சதி ----
:???::smokesmile:
Ravi
நடிகர்திலகத்தின் மேதைமையை எவ்வளவோ விவரித்தாயிற்று. ஆனாலும் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக.......
நேற்று உலகம் நீயாடும் சோலை... பாட்டும் பரதமும் படத்தில் தற்செயலாக பார்க்க நேர்ந்த போது ஒரு ஆச்சர்யம்.
மயிலின் முகம் ஒன்று அவர் தலைக்கு மேலே அந்த உடையின் பகுதியாக...அவர் நடன அசைவு கொடுத்து கொண்டே தலையில் மேலே இருக்கும் மயிலின் கழுத்து தலை பாகத்தை மயிலின் அசைவு போலவே தெரிய வைக்கும் விந்தை....
அடுத்த முறை அந்த காட்சி வரும் போது சிவாஜி முகத்துக்கு மேலே இருக்கும் அந்த மயிலின் கழுத்தையும்,முகத்தையும் மட்டுமே பாருங்கள். அவர் மேதைமை புலப்படும்.
Had a nice experience on 1st October at Annai Illam as well as at Music Academy where i have met
all the hubbers Mr Raghavendar, Mr Pammalar, Mr Neyveli Vasudevan, Mr Murali Srinivas, Mr Sarathy
and others. Special thanks to Mr Vasudevan for providing me an opportunity to see the function without
him I could not see the function. Had an wonderful experience with him by talking to various moments of
our god. Unprecedented crowds seen in this year and it shows that day by day the affection growing towards
our NT.
http://i1302.photobucket.com/albums/...ps1405c6d9.png
http://i1302.photobucket.com/albums/...psa3839488.png
http://i1302.photobucket.com/albums/...psda28d911.png
http://i1302.photobucket.com/albums/...ps165c1484.png
http://i1302.photobucket.com/albums/...psafc58827.png
http://i1302.photobucket.com/albums/...ps4bbfc23a.png
http://i1302.photobucket.com/albums/...ps56c2fa47.png
http://i1302.photobucket.com/albums/...ps2fda9660.png
http://i1302.photobucket.com/albums/...ps934af056.png
http://i1302.photobucket.com/albums/...psf77c7689.png
சந்திரசேகர் சார்,
மிக்க நன்றி. ஸ்ரீரங்கத்தில் நேற்று நீங்கள் நடத்திய நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது என்று கேள்விப்பட்டேன். நமது நண்பர்கள் சொல்லுவதை விட பொது மக்களில் ஒருவர் வயதில் இளையவர் ஒருவர் என்னிடம் இதை கூறினார்.
என் சக ஊழியர் ஒருவர் நேற்று முன்னிரவு ஸ்ரீரங்கம் திருச்சி ரோடில் அரசு பேருந்தில் சென்ற போது [அவர் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்] டிராபிக் jam ஆகி வாகனங்கள் நகர முடியாமல் நின்று விட்டனவாம். 20 நிமிடங்களுக்கு பிறகு ஊர்ந்து ஊர்ந்து பேருந்து சென்ற போதுதான் என்ன விஷயம் என்று பார்த்த போது விழா மண்டபம் நிறைந்து வழிந்து ஏராளமானோர் சாலையில் மண்டபத்திற்கு வெளியேயும் கூடி நின்ற காட்சியை பார்த்திருக்கிறார். நடிகர் திலகத்தின் போஸ்டர்கள் பானர்களை பார்த்துவிட்டு என்னவென்று கேட்க நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா என்று சொல்லியிருக்கிறார்கள். பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த ஒரு நபர் [நமது ரசிகர்?] யார் தயவும் இல்லாம என் தலைவனுக்கு வந்த கூட்டத்தை பாருங்க என்று உணர்ச்சியோடு முழக்கமிட்டாராம். அந்த கூட்டம், இந்த நபரின் பேச்சு ஆகியவற்றை கேட்ட உடன் என் colleague என்னை தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். பேருந்தில் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை என்றார். மேலும் அடுத்த நிறுத்தமான அம்மா மண்டபத்தில் அவர் இறங்க வேண்டியிருந்ததால் நேரில் வந்து சொல்லலாம் என்று முடிவு செய்து இன்று காலை என்னை பார்த்தவுடன் முதலில் இந்த செய்தியைத்தான் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் இன்றைய நாளே மிக மகிழ்ச்சியான ஒரு தகவலை கேட்டபடி தொடங்கியது.
உங்கள் சேவைகளுக்கு என் வாழ்த்துகளும் மனங்கனிந்த பாராட்டுகளும்.
அன்புடன்
Dear KC Sir
Yesterday Evening is Unforgottable event in my life since continuously 5th year You and your organsiation celebrated our great nadigar thilagam's Birthday function. Really amazing. Also at Chief minister constituency you have organised 2nd function sucessfully. In trichy i think this is the grand gala fans function for the past five years. Lot of emotion speeches given by most of our fans expecially Mr.Sivaji krishnamoorthy has given beutiful speech about Peravai starting and non opeing of sivaji statue. Really superb speech.Outside the meeting hall lot of public enquired about you and we told them about your tremendous service through your organisation. In srirangam some rajini fans surprised that continuously celebrating sivaji's birthday grand gala by sivaji peravai is really great achievement.Really you have done great effort for this function success and we appreciate for supporters like Sivaji shanmugam, sona ramanathan, srinivasan, Mukundan etc.Surely this kind of programmes will give more energy to all sivaji fans not only in trichy but also entire tamilnadu.
Keep it up
C.Ramachandran
பாச மலர் டிஜிட்டல் பிரிண்ட் வெளியீடு
பாச மலர் வெளியான போதும் அதன் பிறகும் என்ன நடந்தது என்பதைப் பற்றியும் பாச மலர் படத்தின் restoration செய்யப்பட்ட விதம் பற்றியும் பாச மலர் படம் இப்படி restoration முறையில் வெளியிடப்பட வேண்டிய படம்தானா என்று பல கேள்விகள் எழுப்பபட்டிருக்கின்றன. நண்பர் ஜோ அவர்களும் இதை குறிப்பிட்டு என்னிடம் இதைப் பற்றி எழுதுங்கள் என்றார். அதற்காக இந்த பதிவுகள். பதிவுகள் என்று குறிப்பிட காரணம் கர்ணன் திரைப்படத்திற்கு பின்னர் வெளிவந்த இரண்டு சிவாஜி படங்களைப் பற்றிய ஒரு தவறான மதிப்பீடும் அவற்றைப் பற்றிய தவறான பரப்புரையும் இங்கே நிகழ்த்தப்படுகிறது. அதன் உண்மை நிலை பற்றியும், பாச மலர் படத்தின் restoration work பற்றியும், பாச மலர் படம் வெளியான போது நிகழ்ந்த சில சம்பவங்களையும் குறிப்பிடவே இந்த மூன்று பதிவுகள். சில காலத்திற்கு முன்பே பதிவிட வேண்டும் என்று நினைத்திருந்த போதினும் அதற்கான காலம் இப்போதுதான் வந்திருக்கிறது. மற்றொரு காரணம் நாம் தவறான தகவல்களை மறுக்கவில்லையென்றால் அவை உண்மை ஆகி விடக் கூடிய அபாயம் இருக்கிறது, ஆகவேதான் இப்போது இந்த பதிவுகள். மெயின் திரியில் பதிவிடும் நோக்கம் அனைத்து வாசகர்களையும் சென்று அடைய வேண்டும் என்பதற்காகவே.முதலில் கர்ணன் படத்திற்கு பின் வெளிவந்த திருவிளையாடல் மற்றும் வசந்த மாளிகை பற்றிய உண்மை நிலவரங்கள்.
(தொடரும்)
அன்புடன்
திருவிளையாடல் டிஜிட்டல் பிரிண்ட் வெளியீடு
ஒரு பழைய படத்தை Restore செய்து மீண்டும் வெளியிடுவது எனபது ஒரு புதிய படத்தை தயாரித்து வெளியிடுவதற்கு சற்றும் குறைந்த செயலல்ல. படத்தின் நெகடிவ் உரிமையையும் வணிக ரீதியாக பிரிக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களின் விநியோக உரிமையையும் பெற்ற ஒருவரே இந்த முயற்சியில் இறங்க முடியும். பெரும்பாலோருக்கு இதைப் பற்றி தெரிந்திருக்கும். இருப்பினும் தெரியாதவர்களுக்காக திரைப்பட விநியோகம் வணிக ரீதியில் நடைபெறும் விதம் பின்வருமாறு. தமிழகம் மொத்தம் 7 ஏரியாக்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. சென்னை நகரம், NSC எனப்படும் வடஆற்காடு தென்னாற்காடு மற்றும் செங்கல்பட்டு, TT எனப்படும் திருச்சி தஞ்சாவூர், MR எனப்படும் மதுரை ராமநாதபுரம், TK எனப்படும் திருநெல்வேலி கன்யாகுமரி, கோவை நீலகிரி, சேலம் தருமபுரி ஆகியவையே அந்த 7 ஏரியாக்கள். இந்த ஏரியாக்களின் மொத்த விநியோக உரிமையும் நெகடிவ் உரிமையும் கைவசம் இருக்குமானால் அந்த நபரால் இந்த restoration work-ஐ எடுத்து செய்ய முடியும். இப்போது நாம் நம்முடைய படங்களுக்கு செல்வோம்.
கர்ணன் பெற்ற பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அடுத்து தலை காட்டியது திருவிளையாடல். இதன் பின்னணியில் இருந்தவர் அமரர் அருட்செல்வர் ஏ.பி.என். அவர்களின் குமாரர் திரு பரமசிவம் அவர்கள். வெளிநாட்டு வாழ் இந்தியரான அவர் இந்த படத்தை வெளிநாட்டு தொழில் நுட்ப உதவியோடு restoration செய்திருந்தார்.படத்தை வெளியிட அவர் முயற்சி எடுக்கும் போதுதான் வந்தது சிக்கல். 1976-ம் ஆண்டு ஏ.பி.என். அவர்கள், தான் தயாரித்துக் கொண்டிருந்த படத்திற்காக பைனான்ஸ் பெறுவதற்காக தன் சொந்த நிறுவனமான விஜயலட்சுமி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், திருமால் பெருமை மற்றும் தில்லானா மோகனாம்பாள் ஆகிய ஐந்து படங்களின் நீண்ட கால விநியோக உரிமை மற்றும் நெகடிவ் உரிமைகளை மயிலாடுதுறையை சேர்ந்த ஒரு பழம்பெரும் விநியோகஸ்தரிடம் கொடுத்துவிட்டு பைனான்ஸ் பெற்றுக் கொண்டார். விநியோக துறையில் இந்த விநியோகஸ்தர் மாயவரம் செட்டியார் என்ற பெயரில் பிரசித்தம்.
படத்தை வெளியிட பரமசிவம் அவர்கள் முயற்சிக்க மாயவரம் செட்டியார் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. படத்தை வெளியிடும் அனைத்து உரிமைகளும் தன்னிடம் இருப்பதாகவும் ஆகவே பரமசிவம் அவர்கள் வெளியிட முயற்சிக்கும் ஸ்கோப் டிஜிட்டல் பதிப்பை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனபது அவரது கோரிக்கை. படத்தின் 35 mm உரிமை மட்டுமே தன தந்தையார் வழங்கியிருப்பதாகவும் தான் வெளியிடப் போவது டிஜிட்டல் ஸ்கோப் பிரதி என்றும் அதற்கான உரிமைகள் யாருக்கும் வழங்கப்படவில்லை என்றும் ஆகவே தன முயற்சியை நீதிமன்றம் தடை செய்யக் கூடாது என்றும் பரமசிவம் வாதிட்டார். படத்திற்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.
படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்து ட்ரைலர் வெளியீட்டு விழா நடத்தி படத்தை வெளியிட வேண்டும் என்று நினைத்திருந்த பரமசிவத்திற்கு அப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. இந்த சட்ட சிக்கலிருந்து தப்பிக்க நீதிமன்றம் மூலம் கிடைத்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு திருவிளையாடல் படத்தின் டிஜிட்டல் ஸ்கோப் பிரதியை ஒரு காட்சியாக சென்னை உட்லாண்ட்ஸ் திரையரங்கில் வெளியிட்டார். அவர் strategy என்னவென்றால் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதனால் திரையிட தயங்கும் திரையரங்க உரிமையாளர்கள் படம் திரையரங்கில் வெளியாகி விட்டது என்று தெரிந்தால் தனக்கு ஆதரவளித்து படத்தை தங்கள் அரங்குகளில் வெளியிடுவார்கள் அதன் மூலம் படத்தை தமிழகமெங்கும் திரையிட்டு விடலாம் என்பதேயாகும். ஆனால் பட தயாரிப்பு மற்றும் விநியோக துறையைப் பற்றி ஏதும் அறியாத NRI பரமசிவம் விநியோக துறையில் பழம் தின்று கொட்டை போட்ட மாயவரம் செட்டியாரை குறைவாக மதிப்பிட்டு விட்டார். செட்டியார் அனைத்து மாவட்ட விநியோகஸ்தர்களிடம் கலந்து பேசினார். அவர் highlight செய்தது ஒரே ஒரு point-தான். அனைத்து மாவட்டங்களிலும் பழைய திரைப்படங்களின் விநியோக உரிமை பெற்றுள்ள நாம் அனைவரும் 35 mm பிரதிக்கு மட்டுமே உரிமை வைத்திருக்கிறோம். பரமசிவத்தை இப்போது இந்த டிஜிட்டல் ப்திப்பு வெளியிட அனுமதித்தால் பிறகு அனைத்து தயாரிப்பாளர்களும் அந்த முறையை பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள்.இப்போது தடுக்கவில்லை என்றால் இப்படி ஸ்கோப், டிஜிட்டல் அல்லது 70 mm உரிமைகள் யாருக்கும் கொடுக்கப்படவில்லை ஆகவே நாங்கள் அந்த format-ல் படத்தை வெளியிடுவோம் என்று படத் தயாரிப்பாளாரோ அல்லது படத்தின் தற்போதைய உரிமையாளரோ step எடுத்தால், நாம் அனைவரும் தொழில் செய்ய முடியாது விநியோக நிறுவனத்தை இழுத்து மூட வேண்டியதுதான் என்றார்.இது மிக பிரமாதமாக வேலை செய்தது. விநியோகஸ்தர்கள் அவரவர்களின் ஏரியாவில் உள்ள திரையரங்க உரிமையாளர்களிடம் தாங்கள் எடுத்திருக்கும் முடிவை கறாராக சொல்லிவிட, அவர்களும் இந்த ஒரு படத்திற்காக எப்போதும் தங்களுக்கு படங்களை தரும் விநியோகஸ்தர்களை பகைத்து கொள்ள விரும்பாமல் திருவிளையாடல் டிஜிட்டல் version வெளியிட ஒத்துழைப்பு கொடுக்க மறுத்து விட்டனர்.
கோவை மாவட்ட விநியோகஸ்தர்/மீடியேட்டர் ஒருவர் மூலமாக கோவை நகரிலும் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள ஊர்களிலும் திரையிடப்பட்ட திருவிளையாடல் திரைப்படம் விநியோகஸ்தர்கள் சங்கம் கொடுத்த பிரஷர் காரணமாக உடனே எடுக்கப்பட்டது. சென்னை மாநகரிலும் ஆனந்தா பிக்சர்ஸ் மூலமாக உட்லாண்ட்ஸ் மற்றும் ஆல்பர்டில் திரையிடப்பட்ட படம் மற்ற திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைக்கத காரணத்தினால் வேறு திரையரங்குகளில் திரையிடப்பட முடியாமல் போனது. ஒரு கட்டத்திற்கு மேல் இந்த விநியோகஸ்தர்கள் சங்கத்துடன் போராட முடியாமல் திரு பரமசிவம் அயல்நாட்டிற்கே திரும்பி சென்று விட்டார்.
சென்னை நகரில் படம் வெளியான உட்லாண்ட்ஸ் மற்றும் ஆல்பர்ட் வளாகங்களில் ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ் மூலமாக வெளியிடப்பட்டது. படத்தை வெளியிடும் போது படத்தின் வசூலை எப்படி பிரித்துக் கொள்வது என்பது பற்றி எந்த வித வாய் மொழி ஒப்பந்தம் கூட செய்துக் கொள்ளப்படாமல் திரையிடப்பட்டது. படம் வெற்றிகரமாக ஐந்து வாரங்களை நிறைவு செய்யும் போது கூட நிலைமை அப்படிதான் இருந்தது. வசூலை விகிதாச்சார அடிப்படையில் பிரித்துக் கொள்வதா இல்லை அரங்கத்திற்கு வார வாடகை இவ்வளவு என்ற முறையில் share செய்வதா என்று தெரியாத சூழல் நிலவ, இதற்கு மேலும் வசூலை எப்படி பகிர்வது என்று முடிவு செய்யாமல் முடியாது என்று அரங்க உரிமையாளர்கள் ஆனந்தா சுரேஷை நெருக்க அவர் பரமசிவத்தை கேட்டு சொல்கிறேன் என்று சொல்லி விட்டு பரமசிவத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தால் அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. உங்கள் விருப்ப்படி செய்துக் கொள்ளுங்கள் என்று சுரேஷ் சொல்ல இப்படிப்பட்ட சூழலில் படத்தை தொடர்வது நல்லதல்ல என்று முடிவு செய்து அரங்க உரிமையாளர்கள் படத்தை நிறுத்தினார்கள்.
இவர்கள் அனுபவம் இப்படியென்றால் படத்தை தங்கள் அரங்கத்திலே திரையிட விருப்பம் தெரிவித்த சத்யம் நிறுவனத்திடம் ஒப்புதல் அளித்த பரமசிவம் அடுத்த வாரத்திலிருந்து படத்தை வெளிட சொல்லிவிட்டு படத்தின் டிஜிட்டல் பிரதியை முன்கூட்டியே சத்யம் நிர்வாகத்தினரிடம் அளித்தார். ஒரு சோதனை முயற்சியாக எந்த வித விளமபரமும்மின்றி சனி மற்றும் ஞாயிறு காலை சிறப்புக் காட்சியாக அதுவும் 9 மணிக்கு திரையிடப்பட்டது. இணையதள bookingலேயே படம் இரண்டு நாளும் ஹவுஸ் புல்.[இது நடைபெற்ற நாட்கள் செப் 22 மற்றும் 23, 2012]. ஆனால் அதன் பிறகு பரமசிவம் அவர்களுக்கும் சத்யம் நிர்வாகத்தினருக்கும் ஏற்பட்ட ஒரு கருத்து வேறுபாட்டின் காரணமாக திருவிளையாடல் படம் மேற்கொண்டு அங்கு திரையிடப்படவில்லை.
சுருக்கமாக சொன்னால் தமிழகத்தில் ஆக மொத்தம் 10 திரையரங்குகளில் மட்டுமே திருவிளையாடல் வெளியானது.இதே நேரத்தில் கர்ணன் இதுவரை சுமார் 300-330 அரங்குகளில் வெளியாகி ஓடியதை இங்கே நாம் குறிப்பிட்டாக வேண்டும். இதை படிப்பவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும், படங்களின் வணிக விநியோக உரிமைகளைப் பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள், எல்லாம் தெரிந்த மாதிரி இணையத்திலும் பிரிண்ட் மீடியாவிலும் எழுதுபவர்கள் சிவாஜி மேல் 1952 முதலே "மாறா அன்பு" கொண்டவர்கள் இப்படிப்பட்டவர்கள்தான் வெறும் பத்தே பத்து திரையரங்குகளில் மட்டுமே வெளியான திருவிளையாடல் படம் ஓடவில்லை என்று பேசியும் எழுதியும் வருகிறார்கள். இதனால்தான் இந்த பதிவின் தொடக்கத்திலேயே தலை காட்டிய திருவிளையாடல் என்று குறிப்பிட்டேன். திரு பரமசிவம் அவர்கள் முயற்சி எடுத்து மாயவரம் செட்டியார் அவர்களுடன் பேசி ஒரு சுமுகமான முடிவை எடுத்து அதன் பின் இந்த படத்தை மீண்டும் வெளியிட்டால் படம் பெரிய வெற்றி பெறுவது திண்ணம். திருவிளையாடல் இப்படி என்றால் வசந்த மாளிகை வேறு விதம். அதை பற்றி இப்போது பார்ப்போம்.
(தொடரும்)
அன்புடன்
வசந்த மாளிகை டிஜிட்டல் பிரிண்ட் வெளியீடு
வசந்த மாளிகை - ஏரியாக்கள் ஒரே ஆளின் கையில் இல்லாமல் பல்வேறு நபர்களின் கைகளில் பிரிந்து கிடந்த ஓர் சூழல். சென்னை நகரமும் NSC எனப்படும் வட, தென்னாற்காடு, செங்கை மாவட்டங்களின் விநியோக உரிமையை வைத்திருந்த வினியோகஸ்த நண்பர்கள் இந்தப் படத்தையும் டிஜிட்டல் சினிமாஸ்கோப் முறையில் வெளிக் கொண்டு வர விரும்பினார்கள். மற்ற ஏரியாக்களின் உரிமையை வைத்திருந்த விநியோகஸ்தர்களிடம் இவர்கள் பேச, அனைவருக்கும் விருப்பமே. ஆனால் நீ அவல் கொண்டு வா நாங்கள் உமி கொண்டு வருகிறோம் கதையாக சென்னை விநியோகஸ்தரிடம் நீங்கள் முயற்சிகளை தொடங்குங்கள் நாங்கள் பிறகு தருகிறோம் என்றும், படம் வெளியாகி ஓடும் போது வரும் வசூலில் ஒரு ஷேர் விகிதத்தை எங்கள் முதலீட்டிற்கு ஈடாக தருகிறோம் என்றும் கூறி விட்டனர். எடுத்த காலை பின் வைக்க விரும்பாமல் சென்னை விநியோகஸ்தர்கள் டிஜிட்டல் வேலையை ஆரம்பித்தனர்.
இங்கே ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும். சென்னை விநியோகஸ்தர்கள் பல காலமாக சினிமா விநியோக துறையில் இருப்பவர்கள். ஆனாலும் இன்னமும் small time distributors தான். ஆகவே அவர்களால் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே பணம் முதலீடு செய்ய முடியும் என்பதுதான் எதார்த்தம். அந்த லிமிட் படத்தை ஒரு high quality digital restoration range-ற்கு கொண்டு செல்வதற்கு போதுமானதல்ல. கிடைத்த பணத்தை வைத்து அவர்கள் படத்தை ஸ்கோப் மற்றும் டிஜிட்டல் முறைக்கு மாற்றினார்கள். ஆக compromise அங்கேயே ஆரம்பித்து விட்டது. இதில் நடந்த மற்றொரு technical பின்னடைவு பற்றியும் பார்ப்போம்.
Format change எனும் போது நாம் ஏற்கனவே சொன்னது போல் நெகடிவிலிருந்து பிரிண்ட் எடுத்து செய்ய வேண்டும். அதற்கு நெகடிவ் உரிமையாளர் lab ற்கு லெட்டர் கொடுக்க வேண்டும். அந்த லெட்டர் மூலமாக லேப்-ஐ அணுகி பிரிண்ட் எடுக்க வேண்டும்.இங்கே அது நடக்கவில்லை. அதற்கு இரண்டு வகையான காரணங்கள் சொல்லப்படுகின்றன. நெகடிவ் உரிமையாளரான ராமா நாயுடு லெட்டர் கொடுத்தார். ஆனால் நெகடிவ் நல்ல condition-ல் இல்லை எனவே எடுக்க முடியவில்லை எனபது விநியோகஸ்தர் தரப்பு. மற்றொரு சாரார் சொல்வது என்னவென்றால் ராமா நாயுடு மிகப் பெரிய தயாரிப்பாளர், small time distributors -ஆன இவர்களால் ராமா நாயுடுவை அணுக முடியவில்லை. அதன் காரணமாகவே புதிய பிரிண்ட் எடுக்க முடியவில்லை என்கிறார்கள். இதில் எது உண்மையோ, பிரிண்ட் எடுக்கவில்லை எனபது உண்மை. இதுவும் ஒரு பாதிப்பே.
ஆக ஏற்கனவே இருந்த பிரிண்டில் இருந்து மற்றொரு பிரிண்ட் எடுத்து அதை ஸ்கோப் format-ற்கு மாற்றினார்கள். சரியான முறையில் அது செய்யப்படாததால் பிரிண்ட் quality-ஐ அது மிகவும் பாதித்தது. படத்தி வெளியீட்டு தேதி முடிவு செய்யப்பட்டு விளம்பரம் வந்தது. நிகில் முருகன் அவர்கள் PRO பணியை சிறப்பாக செய்தார்.தமிழகமெங்கும் 72 அரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது வசந்த மாளிகை.
ஆவலுடன் திரையரங்குக்கு சென்ற ரசிகர்கள் படத்தின் பிரிண்ட் பார்த்து மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்கள். பல ஊர்களிலும் இது வெளிப்படையான குமுறலாக வெடித்தது. மிக பெரிய வெற்றியை தன்னிகரில்லாத வெற்றியை பெற வேண்டிய படம் விநியோகஸ்தர்களின் இந்த செயலால் ஒரு பின்னடைவை சந்தித்தது.
ஆனாலும் என்ன? வெளியான 1972 செப்டம்பர் 29 முதல் இன்று வரை கணக்கிலடங்கா அரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், இடைநிலைகாரர்கள் என்று ஒரு பெரும் கூட்டத்திற்கே கை கொடுத்த சின்ன ஜமீன் ஆனந்த் இவர்களை மட்டும் கை விட்டு விடுவாரா என்ன? படம் திரையரங்குகளில் பணத்தை கொண்டு கொட்டியது. கோவை சேலம் போன்ற ஏரியாக்களில் விநியோகஸ்தருக்கு ஜாக்பாட்டே அடித்தது. பல்வேறு ஊர்களில் படத்திற்கு வந்த வசூல் தொகையை இங்கே குறிப்பிடுவது தொழில் புரிவோருக்கு நியாயம் செய்வதாக அமையாது எனபதால் அதை இங்கே தவிர்க்கிறேன். ஒரே ஒரு உதாரணம் மட்டும். மதுரையில் நான்கு அரங்குகளில் முதல் வாரம் ஓடி இரண்டாவது வாரம் சரஸ்வதி திரையரங்கில் தொடர்ந்த வசந்த மாளிகை 10 வது நாள் ஞாயிற்றுக்கிழமை மற்றுமே பெற்ற வசூல் பல படங்கள் அதே அரங்கில் ஒரு வாரம் ஓடி பெற்ற வசூலை விட அதிகம். பதிமூன்றே நாட்களில் சரஸ்வதி அரங்கில் மட்டும் பெற்ற நிகர வசூல் [Nett Collection] ருபாய் 6 லட்சத்து எம்பதினாயிரம் ரூபாய் [Rs 6,80,000/-]. எந்த படமும் எட்டி கூட பிடிக்காத வசூல். மதுரையில் மற்றும் மூன்று அரங்குகள் [மினிபிரியா,வெற்றி மற்றும் மணி இம்பாலா] மற்றும் மதுரை முகவை மாவட்டங்களில் வந்த வசூலை நாம் கணக்கிலே சேர்க்கவில்லை.அது மட்டுமா நான்கு மாதங்களுக்கு பிறகு மதுரை அலங்காரில் மீண்டும் திரையிடப்பட்டு ஒரு வாரம் அமோக வசூலை அறுவடை செய்ததை நமது திரியிலே பதிந்திருக்கிறோம். இந்த ஒரு சாம்பிள் போதும் படம் எந்தளவிற்கு வசூலித்து எனபதற்கு.அது மட்டுமல்ல பல ஊர்களிலும் படம் வெற்றிகரமாக ஓடுவதையும் இங்கே பதிவு செய்திருக்கிறோம்.
சென்னையை எடுத்துக் கொண்டால் முதலில் வெளியாகி ஓடிய வசூலை எல்லாம் கூட விட்டு விடுவோம். ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் கிருஷ்ணவேணி அரங்கில் ஆறே நாட்களில் படம் Record collection நடத்தியது. அண்மையில் கடந்த மூன்று வருடங்களில் இது போல் எந்த படமும் வசூல் செய்யவில்லை என்று தியேட்டர் அதிபரே வியந்து போய் சொன்னார்.
சுருக்கமாக சொன்னால் முதல் 2 வாரங்களுக்குள்ளாகவே படத்திற்கு செலவான தொகை திரும்ப வந்ததும் அது மட்டுமல்லாமல் அனைத்து ஏரியா விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தை ஈட்டி தந்து விட்டது. இது வரை சுமார் 125 அரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டிருக்கும் வசந்த மாளிகை கர்ணன் போல 300-350 அரங்குகளில் வெளியிடப்பட்டு ஓட்டத்தை நிறைவு செய்யும் போது மிக பெரிய லாபம் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் கிடைத்திருக்கும்.
சுருக்கமாக சொன்னால் கர்ணன் மற்றும் வசந்த மாளிகை இரண்டு படங்களுமே வசூல் சாதனை புரிந்து முதலீடு செய்தவர்களுக்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்து விட்டது. திருவிளையாடல் படத்தைப் பொறுத்தவரை 10 அரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டது. சுமுகமான சூழல் உருவானால் திருவிளையாடலும் அபார வெற்றி அடையும் என்பதில் ஐயம் இல்லை.
(தொடரும்)
அன்புடன்