-
வாசு சார்
தங்களுடைய அன்பிற்கு என் உளமார்ந்த நன்றி. உடனுக்குடன் நம் நண்பர்களின் நிழற்படங்களைப் பதிவிட்டு தங்களுடைய சிறப்பை உணர்த்திவிட்டீர்கள்.
இன்றைய விஜய் டி.வி. நடிகர் திலகம் ஸ்பெஷல் நீயா நானா ஒரு பார்வையாளன் என்ற முறையில் பார்த்தால் நிச்சயம் பாராட்டத் தக்கதாய் இருந்தது. நாங்கள் அன்று ஏமாற்றமாக உணர்ந்தது வாஸ்தவம் தான். ஆனால் ஒரு பார்வையாளனாக சரியான முறையில் இந்நிகழ்ச்சி இன்று அமைந்திருந்தது. குறிப்பாக இயக்குநர் சார்லஸ் அவர்களுக்கு முழு பாராட்டும் சேர வேண்டும். We have to rediscover நடிகர் திலகம் என்று அவர் கூறிய போதும் பேராசிரியர் ராமசாமி ஸ்லானிஸ்லாவ்ஸ்கியைப் பற்றிப் பேசும் போதும் நான் கோபாலை பெரிதும் மிஸ் பண்ணி விட்டோம், இந்நிகழ்ச்சியில் அவர் இல்லாமலே போய் விட்டாரே என உணர்ந்தேன். முரளி சாரிடமும் சொன்னேன். அதுவும் குறிப்பாக நாம் தொடங்கிய Sivaji School of Acting என்ற அதே சொற்றொடரை கோபிநாத் கூறிய போது ஒரு கணம் நினைத்தேன், நம் மய்யம் திரியிலிருந்து இதை எடுத்திருப்பார்களோ என்று கூட...
அந்த வகையில் பார்த்தால் இந்நிகழ்ச்சி முழு அளவில் வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் சரியான கோணத்தில் மக்களிடம் நடிகர் திலகத்தைக் கொண்டு சென்றுள்ளது எனத் தான் நான் நினைக்கிறேன். அந்த பெண் ரசிகர்கள் இருவரும் இந்த ஒட்டு மொத்த சிவாஜி ரசிக சமுதாயத்தின் பிரதிபலிப்பாக இன்று என் கண் முன் காட்சியளித்தனர். எந்த அளவிற்கு நடிகர் திலகம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை இன்றைய தலைமுறை உணர்ந்து கொள்வதற்கு இது சரியான அளவுகோலாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.
நம்மைப் போன்றவர்களின் யானைப் பசிக்கு எவ்வளவு கிடைத்தாலும் அது சோளப் பொறிதான். ஆனால் நடிகர் திலகம் என்ற ஆளுமையைப் பற்றிக் கூறிய வரையில் இந்நிகழ்ச்சி மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. குறிப்பாக SIVAJI GANESAN SCHOOL OF ACTING, அவருடைய நடிப்பை மிகை நடிப்பு எனக்கூறுவோருக்கு வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி மூலம் ஒரு அன்பர் கொடுத்த சவுக்கடி இவை நிச்சயமாக நடிகர் திலகத்தின் புகழுக்கு விஜய் டி.வி. அளித்த நல்ல Tribute எனவே நான் உணர்கிறேன்.
எது எப்படியிருந்தாலும் உலக அளவில் இன்றைய தலைமுறையினரிடையே நடிகர் திலகத்தின் நடிப்பைத் தாண்டி அவருடைய ஆளுமை, அவருக்கு இருந்த இருக்கும் இருக்கப் போகும் ரசிகர்களின் உணர்வு போன்றவற்றிற்கு ஒரு சிவாஜி ரசிகன் என்கிற முறையில் என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும்.
-
அருமையான நிகழ்ச்சி. மீண்டும் நிதானமாக யூடியூபில் ரசித்துப் பார்க்க வேண்டும். தாடி இல்லாமல் ராகவ்ஜியை கண்டுபிடிக்க முடியலீங்கோ.. சாரிங்கோ..!
எதிர்பாராத விதமாக என் உறவினர் ஒருவரை அங்கே கண்டேன். ஒரு நல்ல நிகழ்ச்சி மூலமாக நடிகர் திலகம் எனும் வைரத்தின் ஒளியை இன்றைய தலைமுறையின்
இதயத்தில் ஒளிர வைத்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும் பங்கு கொண்டு பூமாலையில் மணம் சேர்த்த மலர்களான நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்.
-
P_r போன்றவர்களும் இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தால் காலம் கடந்து இன்றைய தலைமுறையினையும் சிவாஜி எப்படி கவர்ந்து இழுக்கிறார் என்பதை எல்லோரும் கண்டுகளிக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும்.
-
நான் நாளை யூடியுபில் தான் பார்க்கவேண்டும்.. பார்த்து ரசித்து எழுதுகிறேன்
-
இனிய நண்பர் வாசு சார்
நீயா நானா - நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஒலி பரப்பான '' பொன் மகள் வந்தாள் '' பாடலை அரங்கத்தில் இருந்த அனைவரும் தங்களை மறந்து ரசித்த காட்சி
அவன்தான் மனிதன் - இறுதி காட்சியில் நடிகர் திலகத்தின் மரணத்தை தாங்கி கொள்ள முடியாத சோகம் பற்றி
ஒரு பெண் ரசிகை
படம் வெளியான முதல் தின அனுபவங்களை பகிர்ந்த கொண்ட ரசிகர்களின் வித்தியாசமான அனுபவங்கள்
மையம் திரியின் நண்பர்கள் திரு ராகவேந்திர , திரு கிருஷ்ணா , திரு முரளி , திரு சந்திரசேகர் வீடியோவில்
காணும் வாய்ப்பு
மொத்தத்தில் விஜய் டிவி யின் சிறப்பான நிகழ்ச்சி .
http://youtu.be/Y4WGotsRPSs
-
பம்மலார் அவர்களுக்கு மேலும் நூறாண்டு சிறப்பான வாழ்வு காண வாழ்த்துக்கள். ஆசிகள்.
இவர்தான் மிக சிறந்த சிவாஜி ரசிகர் என்று உணர்ந்தோ ,என்னவோ ,விஜய் டீவீ ,அவர் பிறந்த நாளன்று ,நீயா நானா ஒலி பரப்பியது வெகு பொருத்தம்.
ஒரு தேர்ந்த சிவாஜி பக்தன் என்ற விதத்தில் ஏமாற்றம் அளித்தாலும், ஒரு சராசரி பார்வையாளன் என்ற விதத்தில் பார்த்தால், இந்த நிகழ்ச்சி ,சிவாஜியின் சில சிறப்புகளையாவது ,உணர்வு பூர்வமாக உணர்த்த கூடியதாகவே அமைந்திருந்தது. வாழ்த்துக்கள்.
ராகவேந்தர் சார் ,பிரெஞ்சு தாடி இல்லாமல் ,தங்களிடம் ஏதோ குறைந்தது போல இருந்தது. கிருஷ்ணாவும் ,நீங்களும் சகோதரர்கள் போலவே
தோற்றமளித்தீர்கள்.
ஏனோ, சிவாஜியை பற்றி குறிப்பிடும் போது Stanislavsky பற்றி மட்டுமே பொத்தாம் பொதுவாக பேசுகிறார்கள். அவர் கிட்டத்தட்ட இது போல 10 குறிப்பிடத்தக்க பள்ளிகளின் மொத்த கலவை. என்னை மிஸ் பண்ணியதாக குறிப்பிட்ட ரகவேநதரன் அவர்களுக்கு நன்றி. நானும்தான் மிஸ் பண்ணி விட்டேன்.சில நேரம் எல்லாவற்றையும் உதறி போதும் என்று ஊர் வந்து விடலாமா என்று தோன்றுகிறது.
-
அன்பு சகோதரர் பம்மலார் அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
http://i1087.photobucket.com/albums/..._000400315.jpg
-
பம்மலாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாசு ஜி, பி.எம் அனுப்பியுள்ளேன் பாருங்கோ
-
ராஜேஷ் சார்,
பதில் p.m பார்க்கவும்.
-
அன்பு நண்பர் பம்மலர் அவர்களுக்கு இதயம் கலந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .
அன்பு வாசு சார்
நமது திரியின் அன்பு நண்பர்களை தொலை காட்சியில் கண்டு மகிழ்ந்ததை உடனடியாக படத்துடன் செய்தி வெளியிட்டு சிறப்பித்த உங்கள் பண்பு மெய் சிலிர்க்க வைக்கிறது . தலை வணங்குகிறேன்
ராகவேந்தர் சார் அவர்கள் கருத்துடன் நிறைய உடன்பாடு உண்டு