http://i57.tinypic.com/15x2wyu.jpg
Printable View
'நீயா நானா' வில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்து கலந்து கொண்டு நமக்கும், நமது ஹப்பிற்கும் பெருமை தேடித் தந்தவர்களை முதலில் நாகரீகமாக வாழ்த்துவோம் ராஜேஷ்ஜி. அதில் கலந்து கொண்டு சிறப்பித்த நடுத்தர வயது இளைஞர்களையும் மனதார வாழ்த்துவோம்.
எஸ்வி சார்
அமர்க்களம் எந்த ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம். எந்த நிகழ்ச்சியில்
கொஞ்சம் மேல் தகவல்கள் கிட்டுமா
அத்துணை இசைக் கலைஞர்களையும் ஒரு சேரக் கண்டு களிக்க வைத்த வினோத் சாருக்கு நன்றி!
வாசு சார்
எந்த ஆண்டு என்று நினைவு இல்லை . அநேகமாக 2001 இருக்கலாம் .புத்தகத்திலும் குறிப்பிடவில்லை .
http://i62.tinypic.com/2rnvf3k.jpg
மதிப்பிற்குரிய ஸ்டெல்லா மேடம்,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். அனைவரையும் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் தவறாமல் திரியை வாசித்து வருவது பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஒரு சிறு வேண்டுகோள். தாங்கள் அடிக்கடி இங்கு பெற வேண்டும். தங்களுக்கு எது விருப்பமாயினும் இங்கு கேட்டுப் பெறலாம். எங்களால் முடிந்ததை தருகிறோம். மது அண்ணா, ராகவேந்திரன் சார், ராஜேஷ் சார், கோபால் சார், கார்த்திக் சார் போன்ற ஜாம்பவான்கள் கலந்து கொண்டு பெருமைப்படுத்தும் திரி இது. இவர்கள் கீழ் பணி புரிவது சொர்க்கத்திற்கு இணையானது. அதை மகிழ்வுடன் நான், எனதருமை கிருஷ்ணா, சின்னக் கண்ணன் சார், கோபு சார், வினோத் சார் மற்றும் அனைத்து நண்பர்களும் செய்து வருகிறோம்.
தங்களைப் போன்றோரின் ஆதரவினால் திரி வெகு விரைவில் மூன்றாம் பாகத்தைப் பிடிக்க உள்ளது. நன்றி!
அடிக்கடி கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மெல்லிசை மன்னர்களை வாழத்தி நடிக மன்னர் பேசுகிறார். அற்புதமான புகைப்படம்.
மதுஜி,
'நாலுவகைப் பூவில்' பாடலை இப்போதுதான் ஆனந்தமாக தங்கள் புண்ணியத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டு களித்தேன். நன்றி!
ஹாய் குட்மார்னிங்க் ஆல்
ஒரு இனிய ஷோவில்கலந்துகொண்டு இனிமையாக ந.தி பற்றி வழங்கிய இனிய நண்பர்கள் ராகவேந்தர் சார், முரளி சார், கிருஷ்ணா சார், சந்திரசேகர் சார் ஆகியோருக்கு என் இனிய வாழ்த்துக்களுடன் கூடிய நன்றி.. நேற்றே சொல்லியிருக்கவேண்டும் தூக்கக் கலக்கம்..டபக்குன்னு மனசுல இருக்கறத க் கொட்டிட்டு சமத்தா பொசுக்குன்னு சி.குழந்தை மாதிரி தூங்கிட்டேன்..காலைல எழுந்தா தளுக்கு, குலுக்கு கோழைன்னு வசனம் தான் நினைவுக்குவருது..! ( நான் அசல் மதுரைக் காரனாக்கும்..ழ அவ்வளவாய் வராது!)
(அந்தச் சுரிதார் பொண்ணு பாக்க அசப்புல கோடி வீட்டு கோமளாபாட்டியோட பேத்தி மாதிரி இருந்துச்சே..(கண்ணா உன்னைத்திருத்தவே முடியாதுடா)
சுமதி என் சுந்தரியில் பொட்டு வைத்த முகமோ ஷர்ட் என் சகோதரியும் சொல்லியிருப்பதாக நினைவு..
மறுபடியும் யூ.ட்யூபில் பார்க்க வேண்டும் வார இறுதியில்..
ம்ம் நம் நினைவுகள் தொடரட்டுமே..யா இன்னிக்கு
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ ....
எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா
நினைவோ ஒரு பறவை விரிக்கும் தன் சிறகை..
பசுமை நிறைந்த நினைவுகளே..பாடித்திரிந்தபறவைகளே
நெஞ்சினிலே நினைவு முகம் நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
ம்ம் நினைவுகள் தொடரட்டும்..அப்புறம் வர்றேன் :)
dear vaasu sir
ரோஜாவின் ராஜா 'ஜனகனின் மகளை' பாடலை பற்றிய கட்டுரை ஒரு முழுமை பெறாமல் போல் இருந்தது . நடிகர் திலகம் படங்களுடன் நீங்கள் வெளியிட்ட கருத்துகள் அந்த பாடலை முழுமையாக மீண்டும் ஒரு முறை ரசிக்க வைத்தது . எங்கு ஆரம்பித்தாலும் முடிவது என்னவோ நடிகர் திலகத்திடம் தான் என்பது மீண்டும் ஒரு முறை நிருபிக்கபட்டு விட்டது