கோவை மாவட்ட மனித தெய்வம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் பேரவை பொருளாளர் திரு. முருகேசன் அவர்கள் தன் இல்லத்தருகே அமைத்துள்ள பேனர்.
http://i60.tinypic.com/2hzpnb5.jpg
Printable View
கோவை மாவட்ட மனித தெய்வம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் பேரவை பொருளாளர் திரு. முருகேசன் அவர்கள் தன் இல்லத்தருகே அமைத்துள்ள பேனர்.
http://i60.tinypic.com/2hzpnb5.jpg
அன்புள்ள நல்ல பல உள்ளங்களுக்கு உகாதி வாழ்த்துக்கள் - எங்கள் வீட்டு பிள்ளை 50 ஆண்டுகள் நினைவலைகள் மிகவும் சிறப்பாக இருந்தது. பலரின் அருமையான உழைப்பும் நன்கு வெளிபடுகின்றது . இந்த அருமையான திரியில் சில பதிவுகளை எனக்கு தெரிந்த அளவில் , பதித்துள்ளேன் - அந்த சிறிய உரிமையில் இதை எழுதுகிறேன் - கடந்த சில பதிவுகள் நம் ஒன்று பட்ட எண்ணங்களை பிரதிபளிப்பதாக இல்லை - மனம் நன்றாக இருந்தால் தான் , அதனிடம் இருந்து வெளி வரும் வார்த்தைகள் நன்றாகவும் , ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
இருவருமே தடம் பதித்தவர்கள் - நம் மனதில் நீங்காத இடத்தை பெற்றவர்கள் .. அவர்கள் இருவரின் வாழ்க்கையில் இருக்கும் சிரஞ்சீவித்தனம் நமது வாழ்க்கையில் இருக்கபோவதில்லை - நமக்கு பின்பும் அவர்கள் நிலையாக வாழ்வார்கள் . ஒருவரை ஒருவர் தட்டி கொடுத்து முன்னோக்கி செல்வதுதான் வாழ்க்கை - இந்த பண்பைத்தான் இருவருமே தாங்கள் நடித்துள்ள பல படங்களில் எடுத்து சொல்லி உள்ளனர் .
நாம் அவர்கள் இருவரின் வியாபார வெற்றியைத்தான் விவாதமாக எடுத்துகொள்கிறோம் - அதனால் சில விஷயங்கள் பின்னோக்கி தள்ள படுகின்றன - அடுத்த தலை முறைக்கு தேவையான கருத்துக்கள் அவர்களின் ஒன்று , இரண்டு படங்கள் தோல்வி அடைந்ததனால் - அந்த படங்களின் மூலம் வெளி வருவதில்லை - உதாரணம் - கப்போலோட்டிய தமிழன் , திருடாதே போன்ற படங்கள் - இவைகளை வெறும் படங்களாக மட்டுமே பார்பதினால் , அவைகளின் முக்கியத்துவம் போற்ற படுவதில்லை - நமக்கு பின் வரும் தலை முறை சுதந்திரத்தின் அருமையையும் , அதற்காக எவ்வளவு உன்னத உயிர்கள் காணிக்கையாக கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியாமலே வளரும் வாய்ப்பு அதிகமாகவே வளர்ந்து வருகின்றது - திருடாதே - எவ்வளவு அருமையான கருத்துக்கள் - தாயை நாடாக போற்றும் நல்ல உள்ளம் உள்ள கதாநாயகன் - இப்படி பட்ட படங்களில் யார் நடித்து இருக்கிறார் ? அந்த படம் எவ்வளவு நாட்கள் ஓடின ? வசூல் எவ்வளவு , எவ்வளவு தடவை மீண்டும் வெளி வந்துள்ளது - இந்த கேள்விகளை தவிர்த்து , நல்ல படங்கள் , நமக்கும் , நமது அடுத்த தலை முறைக்கும் பாடம் சொல்லும் படங்கள் என்று நினைத்து இதை போற்றி , வேறுபாடு இல்லாமல் பார்க்கவேண்டும் , வரவேற்க்கப்பட வேண்டும் - பிறரின் நல்ல பண்புகளை நாம் எடுத்து சொல்லும் போது நல்ல நண்பர்களாக நாம் மாறிவிடுவோம் - பிறகு தடித்த , வெட்ப்பமான வார்த்தைகளுக்கு இங்கு வேலையே இல்லை !
உங்களில் பலர் " வீரபாண்டிய கட்டபொம்மன் " பட வெளியீட்டுக்கு மனமார வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளீர்கள் - மிகவும் சந்தோஷமாக உள்ளது . இந்த படம் உங்கள் குடும்பத்துடன் , உற்றார் உறவினருடன் திரும்பவும் பார்க்க வேண்டிய படம் - இதில் nt உள்ளார் என்பதை மறந்து விடுங்கள் - சிறந்த தமிழுக்காக , வசன உச்சரிப்புக்காக , தேச பக்திக்காக , நம் அடுத்த தலை முறை , நாம் பிறந்த இந்த மண்ணை மதிக்க வேண்டும் என்பதற்காக கண்டிப்பாக பாருங்கள் - இந்த படம் சிறப்பாக ஓடினால் உங்களுக்கும் இதில் பெரிய பங்கு இருக்கும் , ஒரு நல்ல படம் பார்த்தோம் என்ற திருப்தி உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இருக்கும் - படம் ஒரு வேலை ஓட வில்லை என்றால் தோல்வி இந்த படத்திற்கு அல்ல - நம் மன வளர்ச்சி ஒரு சின்ன வட்டத்துக்குள் தான் சுழலும் , தேச பக்தி என்பது ஒரு கண்ணா மூச்சி , தமிழை வளர்ப்போம் என்று சொல்வதெல்லாம் ஒரு கானல் நீருக்கு சம மானது என்பதைத்தான் குறிக்கும் - நமது எண்ணங்களில் வேறு பாடு இருக்கலாம் , கும்பிடும் தெய்வம் வேறாக இருக்கலாம் , செல்லும் பாதை வேறாக இருக்கலாம் - ஆனால் நாம் ஒரு விஷயத்தில் மிகவும் ஒன்று பட்டவர்கள் - நாம் இந்தியர்கள் - நாம் வாழும் நாடு நமது நாடு - பகைவர்களுக்கும் நாம் ஒருவராக தென்படுவோம் - நமது சக்தி ஒன்றுபட்டதாக இருக்கட்டும் - இந்த படத்தை எல்லோரும் குடும்பத்துடன் பாருங்கள் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன் - இந்த மடல் எந்த வியாபார நோக்கத்துடனும் எழுத பட்டதில்லை - ஒன்று பட என்னுடைய ஒரு சிறிய முயற்சி ...
அன்புடன்
ரவி