தினகரன் -20/9/18
http://i66.tinypic.com/20a6no3.jpg
Printable View
தினகரன் -20/9/18
http://i66.tinypic.com/20a6no3.jpg
மக்கள் குரல் -20/9/18
http://i67.tinypic.com/2j6p91.jpg
http://i63.tinypic.com/lb4nn.jpg
மக்கள் குரல் -20/9/18
http://i68.tinypic.com/25zgnxv.jpg
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவரின் திரையுலக சாதனை
பயணத்தில்
வைரம் பதித்த
நாடோடி மன்னன்
ஆய்வு பதிவு
தொழில் நுட்ப வசதிகள் இல்லாத
காலத்தில்
இப்படி ஓரு இரண்டு
கதாநாயகன் படமா
இது எப்படி சாத்தியம்
இன்று வரை திரையுலகம்
வியக்கும்
சாதனை திரைப்படம்
இன்னும் எத்தனை காலம்
கடந்தாலும்
இது
ஆய்வுக்குரிய
பிரமிப்பின் உச்சம் தான்
இத்தனை வியப்புக்கும்
சாதனைக்கும் பின்
மிகப்பெரிய
கலை நுணுக்க
தொழில் நுட்ப
திறமையாளரரான
புரட்சித் தலைவர்
அனைத்திலும்
சிறந்த ஆளுமையை
கையாண்டார் என்ற
பெருமிதத்துடன்
இந்த பதிவு
மக்கள் திலகத்தின் மகத்தான படைப்பான நாடோடி மன்னனின் டெக்னிகல் விஷயங்களைப் பற்றி பார்த்துக்கொண்டுவருகிறோம்.கடந்த பதிவுகளில் வந்த வார்த்தைகள் முழுவதும் மக்கள் திலகம் நேரடியாக உங்களைச் சந்தித்துச் சொன்னது.இதை நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுச் சொல்லியிருந்தாலும் சிலர் நான் சொல்வதாக எடுத்துக்கொள்கிறார்கள்.இந்தக் குழப்பத்தை தவிர்க்க மக்கள் திலகம் சொன்னதை எனது மொழியில் சொன்னால் இயல்பாக இருக்குமென நினைக்கிறேன்.அவர் இந்தப் படத்தின் எடிட்டிங் பற்றி சொல்ல வந்ததோடு போன பதிவு நின்றிருந்தது.தொடர்ந்து பேசலாம் மற்ற விஷயங்களோடு.
எடிட்டிங் எவ்வளவு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.பல பாகங்களாக பிரிந்து கிடக்கும் ஒரு உருவத்திற்குக் கொண்டுவரும் முக்கியமான பணி இந்த எடிட்டிங். மக்கள் திலகம் ஒரு மிகச் சிறந்த எடிட்டர் என்பது நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கும்.அவரது படங்களின் விறுவிறுப்பிற்குக் காரணம் இந்த எடிட்டிங் தான்.
எடிட்டிங்கைப் பற்றிச் சொல்லும்போது ஸ்ரீதரின் தேன் நிலவு படம் ஞாபகத்திற்கு வருகிறது.அந்தப் படத்தின் ஒரு க்ளோஷப் ஷாட்டைத் தேடப்போய் ஏ.எம்.ராஜாவிற்கும் அவருக்கும் மனஸ்தாபமே வந்தது.படமெல்லாம் எடுத்து முடிந்து எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்த ஸ்ரீதருக்கு இருபதாம் ரீலில் அந்த வைஜயந்தியின் க்ளோஷப் தேவைப்பட்டது.தேடித் தேடிப் பார்த்து எங்குமே கிடைக்கவில்லை.மாதவன் இருபதாவது ரீலையே காணோம் என்ற குண்டைத் தூக்கிப் போட டென்ஷனின் உச்சிக்கே சென்றார் ஸ்ரீதர்.
கடுப்போடு ராஜாவின் ரெக்கார்டிங் ரூமில் இருந்தவரிடம் வகையாக மாட்டினார் ராஜேந்திரன்.இருந்த கோபத்தையெல்லாம் அவர் மீது செலுத்தினார்.மைனர் மாதிரி சீட்டா பேண்டைப் போட்டுக்கிட்டு இப்படியே சுத்திக்கிட்டு இருந்தாப் போதாது கொடுத்த வேலையை ஒழுங்காச் செய்யாம... என கண்படி திட்டிவிட்டார்.அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்த ராஜா விருட்டென வெளியேறிவிட்டார்.பாடல் பதிவு அந்தரத்தில் தொங்கியது.என்ன விஷயம் என விசாரித்தால் அன்று ராஜா போட்டிருந்தது ஸ்ரீதர் சொன்ன சீட்டா பேண்ட்.
இதென்னடா வம்பு என் தம்பியைத் திட்ட இவர் எதற்கு கோவிக்கணும் நான் இந்தப் பக்கமே வரலடா என்னமோ பண்ணித் தொலைங்க என ஸ்ரீதர் வெளியேறக் காரணம் அந்த க்ளோஸப் ஷாட்.எடிட்டிங் டேபிளில் எல்லாம் தயாராக இருந்தால் தான் காட்சிக்குத் தக்கவாறு எடிட் செய்ய முடியும்.எம்.ஜி.ஆர்.அந்த விஷயத்தில் பெர்ஃபெக்ட்.ஷாட் எடுக்கும்போதே அவரது மூளையில் அந்தக் காட்சி சரியாகப் பதிந்துவிடும்.இது எந்த அடியில் போய் சேர வேண்டும் என்பதை அங்கேயே தீர்மாணித்துவிடுவார்.அதிலும் இந்தப் படம் டபுள் ஆக்ட்.கொஞ்சம் ஏமாந்தாலும் திருப்பி எடுக்க முடியாது.
காட்சிகள் டயலாக் எப்படித்தான் சரியாக இருந்தாலும் எடிட்டிங் சொதப்பினால் படமும் சொதப்பலாகும்.ஆரம்பத்தில் இந்தப் படத்திற்கு எடிட்டிங் ஆறுமுகம் என்பவர்.என்ன காரணமோ இடையில் அவர் விலகிவிட்டார்.அவர் என்ன பேண்ட் போட்டிருந்தாரோ?.அதன் பிறகு பெருமாள் என்பவர் அந்த இடத்திற்கு வந்தார்.படம் முடியும் நேரத்தில் அவரும் ஐயா சாமி விட்டுடங்க என்றார்.அவரும் போய் இன்னொருவரும் வந்து கடைசியில் முடித்துக்கொடுத்தது ஜம்பு.அவரும் பெருந்தன்மையா அண்ணே என் பேரைப் போடாதீங்க என வற்புறுத்த அவரது பெயர் டைட்டில் கார்டில் இருக்காது.இவர்கள் அனைவருமே எம்.ஜி.ஆருக்கு உதவி புரிய வந்தவர்கள் தான்.பட விஷயத்தில் மட்டும் அவர் தயவு தாட்சண்யம் பார்க்கமாட்டார்.படம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு பணியாற்றுவார்.அதிலும் இந்தப் படம் அவரது மானப் பிரச்சனை.சிறப்பான எடிட்டிங்கால் படம் இன்றும் பேசப்படுகிறது.
அடுத்து முக்கியமான ஆள் படப்பிடிப்பு நிர்வாகி.உண்மையைச் சொல்லப்போனால் மொத்த யூனிட்டில் கடுமையான உழைப்பாளி இவர் தான்.அத்துவானக் காட்டில் ஆயிரம் குண்டூசி கேட்டால் கூட அடுத்த நாள் கொண்டுவர வேண்டும்.கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.இந்தப் படத்திற்கு வந்து மாட்டிய அப்பாவி மனிதர் திரு.கோவிந்தராசன்.மக்கள் திலகம் இவரை ஒரு அதிசய மனிதர் என்கிறார் என்றால் இவரது உழைப்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்.யார் எவர் மீது கோபப்பட்டாலும் கடைசியில் சிக்குவது படப்பிடிப்பு நிர்வாகி தான்.எங்கு தவறு நடந்தாலும் இவரைத் தான் கைகாட்டுவார்கள்.
நேரத்திற்கு எக்ஸ்ட்ரா நடிகர்கள் வரவில்லையா?.மேக்கப் மேனுக்கு கார் அனுப்பவில்லையா?. செட்டிங்ஸில் சொதப்பலா? .கூப்பிடு கோவிந்தராசனை.மனிதர் பம்பரமாகச் சுற்றினார்.டிரைவர் வராவிட்டால் கூட இவரே காரை எடுத்துக்கொண்டுபோய் சாமான்களை வாங்கி வருவார்.
படத்தில் முக்கியப் பணியாற்றிய மற்றொருவர் திரு.ரங்கசாமி அவர்கள்.சிகையலங்கார நிபுணர்.மக்கள் திலகத்தின் மனம் கவர்ந்தவர்.மர்மயோகி படத்திலிருந்து அவரது தலையை அலங்கரிப்பவர்.இந்தப் படத்தில் இரு வேறு கேரக்டர்களுக்கு வித்தியாசமான விக்கை தயாரித்து அவரை வேறுபடுத்திக் காட்டியிருப்பார்.ஆரம்பத்தில் அவர் ஒரு புல்லாங்குழல் வித்வானாக இருந்து மிகவும் கஷ்டப்பட்டு மக்கள் திலகத்திடம் வந்து சேர்ந்தவர்.எந்தப் படத்தில் எந்தக் கேரக்டருக்கு எம்.ஜி.ஆருக்கு விக் சூட்டாகும் என்பதை சரியாக கணித்துச் சொல்வதில் நிபுணர்.மக்கள் திலகத்தின் விதவிதமான அழகான ஸ்டில்களுக்குப் பின்னால் ரங்கசாமியின் உழைப்பு இருக்கும்.
நாடோடி மன்னனின் நடிகர் நடிகையர் பட்டியலை எடுத்துக்கொண்டால் முதலில் வருவது பானுமதி தான்.காரணம் அந்த நேரத்தில் புகழோடு இருந்தது அவர் தான்.மிஸ்டர் ராமச்சந்திரன் என பெயர் சொல்லும் அளவிற்கு அவர் பிரபலம்.தனக்கு மரியாதை கிடைக்காத இடத்தில் அவர் இருக்கவேமாட்டார்.
சேலத்தில் எம்.ஜி.ஆரும் பானுமதியும் அலிபாபா ஷூட்டிங்கில் இருக்கும்போது தான் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டது.நாடோடி மன்னனின் விளம்பரம்.ஜெண்டாவின் கைதி ஆங்கிலக் கதையின் தழுவல் என்ற விளம்பரம்.அதற்கு ஒரு இரண்டு நாட்கள் கழித்து பரணி பிக்சர்ஸ் விளம்பரம் ஒன்று மக்கள் கண்ணில் பட்டது.படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் இடைவேளையில் மக்கள் திலகத்திடம் கோரிக்கை வைக்கிறார் பானுமதி.நாங்கள் எடுக்கும் கதையையே நீக்களும் எடுக்கப்போகிறீர்களாமே.!.நமக்குள் போட்டி வேண்டாம்.உங்கள் கதையை மாற்றிக்கொள்ளுங்கள்.நாங்கள் பல மாதங்களாக செலவு செய்து எல்லாமே தயாராகிவிட்டன என்றார்.மக்கள் திலகத்தின் முகம் மாறியது.காணலாம் நாளை என்ன நடந்ததென்று.
வளரும்.
புரட்சித் தலைவர் பக்தர்கள்... Thanks...
முக்கிய பிரமுகர் ஒருவர் ஒருமுறை முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரிடம், விதவைகள் தன் கணவரின் வேலையை வாரிசு முறைப்படி பெற்றுக்கொண்டு பின்பு மறு திருமணம் செய்கின்றனர்.
இது முதல் கணவருக்குச் செய்யும் துரோகம் இல்லையா? மறுமணம் செய்துகொண்டால் முதல் கணவரால் கிடைத்த வேலையை விட்டுவிட வேண்டும் என்று ஆணையிடுங்கள் என்று கேட்டார்.
அதற்கு எம்.ஜி.ஆர், ‘’ அந்த விதவைப்பெண்ணின் சம்பளத்துக்காகத்தான் பலர் மறு மணம் செய்கின்றனர். அவளுக்கு வேலை போய்விட்டால் அவனும் அவளை விட்டு போய்விடுவான். வேலைதான் விதவைக்கு பலம் என்று கூறினார்.
#சத்துணவு திட்டத்தின் மூலம் 10,000 த்திற்கும் மேற்பட்ட விதவை பெண்களுக்கு வேலை வாய்ப்பளித்து, மறுமணம் செய்ய முன்வரும் ஆண்களுக்கு 5,300 ரூபாய் ஊக்கத்தொகையும் அளித்து பல இல்லங்களில் ஒளி ஏற்றிய ஒரே மக்கள் முதல்வர் எம்ஜிஆர்.
#MGR101... Thanks Friends...
திரையுலக, வசூல் சக்கரவர்த்தி ஆக மக்கள் திலகம் கோலோச்சி கொண்டிருந்த பொற்காலத்தில் 21-09-1956 வருடத்தில் பிரமாண்டமான வசூல் உச்சம் பெற்ற காவியம் சாண்டோ சின்னப்பா தேவருக்கு புரட்சி நடிகருடன் முதல் வெற்றி படைப்பு வெளியான நாள் ...👌
"தாய்க்கு பின் தாரம்" ஆஹா பட பெயரிலேயே என்னவொரு அற்புதமான message... அதனால் தான் இவருக்கு உச்ச பட்ச வெற்றி மக்களால் மனமார வழங்க பட்டது...👍
தமிழ் இந்து -21/9/18
http://i68.tinypic.com/2dl81h1.jpg
மக்கள் குரல் _ 21/9/18
http://i66.tinypic.com/23u8qxg.jpg