கட்டாயமாக. எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். கோட்டு போட்ட கோபினாத் உங்களை எல்லாம் பேச விட்டாரா ??
Printable View
வாசு ஜி
இதோ சகுந்தலையே பாடும் பாடல்
நான் முனி குமாரி எனக்கு காதல் எப்படி தெரியும் நான் எப்படி அதை சொல்வேன் என்ற பொருள் பட இசையரசி ஜமாய்க்கும் பாடல்
http://www.youtube.com/watch?v=pRxGLMhF_R8
மதுஜி,
http://www.thehindu.com/multimedia/d...lai__5521f.jpg
இதோ 'செல்லப் பிள்ளை' படத்தில் நம் சிந்தை கவர்ந்த வித்தியாசமான பாடல் முழு வரிகளுடன். பாடலை ஞாபகப்படுத்திய தங்களுக்கும், கோபாலுக்கும் நன்றி! என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடல். 'ஜாவர்' தொட்டிலில் அமர்ந்து அமர்க்களம் செய்வாராம். ஆனால் விவரமான குழந்தையாம். வட்டிக்கு விட்டு சம்பாதிக்குமோ?! பாடல் அப்படித்தான் அர்த்தமாகிறது. அது என்ன பசவப்பா? கன்னடத்துக் குண்டுக் குழந்தையா?
அது ஒரு பக்கம் இருக்கட்டும். சுசீலா அம்மாவின் குரல் சுட்டிக் குழந்தையின் குரல் போல் தேவார்மிதமாய் காதில் பாய்கிறதே. பாடகர் திலகத்திற்கும் அப்படித்தான்.
அதுவும் ஒவ்வொரு முறை ஆ..ராரோ முடிந்தவுடன் 'கொகைங்க் ...கொகைங்க்' என்று வரும் மியூசிக் அப்படியே நம்மை வாரி அள்ளிக் கொள்கிறதே.
பாடலின் முழு வரிகள்
ஆராரோ ஆராரோ ஆ..ராரோ
ஆராரோ ஆராரோ ஆ..ராரோ
கோவில் காளை நீ பாப்பா
குண்டு பசவப்பா
கோவில் காளை நீ பாப்பா
குண்டு பசவப்பா
கோமாளி குட்டிப் பாப்பா
கோமாளி குட்டிப் பாப்பா
கண் மூடி தூங்கப்பா
ஆராரோ ஆராரோ ஆராரோ
கரிபசவப்பா குண்டு பசவப்பா
கண் மூடி தூங்கப்பா
பாவ புண்ய விவகாரம்
அது பரமசிவன் பாரம்
பாவ புண்ய விவகாரம்
அது பரமசிவன் பாரம்
அது பரமசிவன் பாரம்
அது பரமசிவன் பாரம்
பணம் வட்டி வியாபாரம்
பணம் வட்டி வியாபாரம்
நம்ம பாப்பாக்கு அதுவே போதும்
நம்ம பாப்பாக்கு அதுவே போதும்
ஆராரோ ஆராரோ ஆ..ராரோ
கைராசி உனக்கிருக்கு
கைராசி உனக்கிருக்கு
கடன் கேக்க ஆளிருக்கு
இங்கே கடன் கேக்க ஆளிருக்கு
தாலாட்ட நானிருக்கேன்
தாலாட்ட நானிருக்கேன்
மனம் தளராமே நீ தூங்கு
மனம் தளராமே நீ தூங்கு
ஆராரோ ஆராரோ ஆ..ராரோ
ஆராரோ ஆராரோ ஆராரோ
கரிபசவப்பா குண்டு பசவப்பா
கண் மூடி தூங்கப்பா
அணுகுண்டு போட்டாலும்
அஞ்சாத இளஞ்சிங்கம்
அணுகுண்டு போட்டாலும்
அஞ்சாத இளஞ்சிங்கம்
அஞ்சாத இளஞ்சிங்கம்
அஞ்சாத இளஞ்சிங்கம்
துளியூண்டு கடுகைக் கண்டால்
துளியூண்டு கடுகைக் கண்டால்
துள்ளியே பயந்தோடும்
பாப்பா துள்ளியே பயந்தோடும்
ஆராரோ ஆராரோ ஆ..ராரோ
கரிபசவப்பா குண்டு பசவப்பா
கண் மூடி தூங்கப்பா
எட்டு அஞ்சு வயசிருக்கும்
பாப்பா புட்டியிலே பால் குடிக்கும்
எட்டு அஞ்சு வயசிருக்கும்
பாப்பா புட்டியிலே பால் குடிக்கும்
தொட்டிலிலே தான் தூங்கும்
தொட்டிலிலே தான் தூங்கும்
ரொம்ப கெட்டிகாரன் போல் நடிக்கும்
பாப்பா கெட்டிகாரன் போல் நடிக்கும்
ஆராரோ ஆராரோ ஆ..ராரோ
கரிபசவப்பா குண்டு பசவப்பா
கண் மூடி தூங்கப்பா
கரிபசவப்பா குண்டு பசவப்பா
கண் மூடி தூங்கப்பா
கரிபசவப்பா குண்டு பசவப்பா
கண் மூடி தூங்கப்பா
அன்பர்கள் இந்த அருமையான பாடலை தரவிறக்கம் செய்து கேட்கவும். ஆமா! எப்ப வீடியோ பார்ப்பது? ரொம்ப ஆசையா இருக்கே!
https://www.mediafire.com/folder/89a...Pillai_%281955
1979 கால கட்டத்தில் வெளி வந்த நிறம் மாறாத பூக்கள் திரை படத்தில் இடம் பெற்ற பாடல் . சுதாகர் ராதிகா ஜோடியாக ஒரு ஜாலி பாடல் . உற்சாகம் தரும் பாடலாக பாரதி ராஜா இயக்கத்தில் பாலசுப்ரமணியம் பாடிய முதல் பாடல் என்று நினைவு
பதினாறு வயதினிலே,கிழக்கெ போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் மூன்று படத்திலும் பாலாவுக்கு வாய்ப்புகள் இல்லாத போது இந்த படத்தில் தான் முதன் முதலில் பாலா பாடுகிறார் .கண்ணாதசன் எழுதியது.இளையராஜாவின் ஆரம்பச் சூரத்தனம் பாட்டு முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்
இளையராஜாவும் ஜானகி அம்மாவும்,எஸ்.பி,பி யும் கைபிடித்தும் மனம் பிடித்துமாய் கூட்டிக்கொண்டு போவார்கள். பாலாவின் கெஞ்சலையும் கொஞ்சலையும் ரசிக்க வைக்கும் பாடல்.பாடல் பாடும் போதே பாலாவின் நடிப்பு திறமை வெளிப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறன். அதனால் தான் பின்னாளில் அவர் நடிகர் ஆகவும் வெற்றி பெற்றார் அதே நேரத்தில் ஜானகியின் ஆதிக்க குரல் .காதல் என்றாலே அங்கே ஊடல் சகஜம் தானே. அப்புறம் காதலன் தான் கெஞ்சி கூத்தாடி பாட்டு பாடணும். அம்மணி எறங்கி வரவே மாட்டாங்க.
அதிலும் ரெண்டாவது சரணத்தில் 'ஐய்யயோ! சும்மா தான் ஜாடை சொன்னேன்! கண்ணே கண்மணியே' இதுல 'ஐய்யயோ' சும்மா 'ஐயோ' என்று இருக்குங்க. மனுசன் குரலிலேயே நடிக்கிறார். ரெண்டாவது சரணத்தின் இடை இசையில் 'எழிலா சிற்பமாக' என்று கீச்சுக்குரல் வரும். அதுவும் பாலா தானே?.
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேறேதம்மா
சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேறேதம்மா
ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று
மோசம் செய்த துரோகியே
உன் கோபம் தேவைதானா அன்பே ஆருயிரே
அது யாரந்த பெண்
ஒரு நடிகையம்மா
அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தாயோ
நீ காதல் மன்மதனோ நான் பறந்து போவேனோ
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே
சிங்காரப் பாவை உந்தன் வடிவாகவே..
ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே
சிங்காரப் பாவை உந்தன் வடிவாகவே..
ஜீனத்தமன் போல் என்னை எண்ணி வந்து
பாட்டு பாடும் துரோகியே
ஐயய்யோ... சும்மா தான் ஜாடை சொன்னேன்
கண்ணே கண்மணியே
என்னை போல் ஒரு பெண்
இந்த உலகில் இல்லை
ஒரு நடிகையை போல் என்னை பார்ப்பது தவறு.
முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தாயோ.
https://encrypted-tbn3.gstatic.com/i...M-Smafhrmzn1Zg
வாங்க கிருஷ்ணா சார்..நினைவுகள் நு சொன்னவுடனே முதன் முதலாகப் பாடின டூயட் நினைவுக்கு வருதாக்கும்..:) நல்ல பாட்..ஆண்டாண்டு காலமாய் பெண்கள் ஊடல் கொள்வதும் ஆண்கள் தவித்து சமாதானப் படுத்துவதும்.. நோ எண்ட் டு இட்..அதே ஆண்கள் ஊடல் கொண்டால் அதற்குப் பெயர் கோபமாம்..:)
ஆடிக்குப் பின்னே ஆவணி மாதம் வருவது உண்டு தான் நினைவுக்குவருகிறது..
ஆஹா... அன்போடு குண்டு பசவப்பாவை அள்ளிக் கொண்டு வந்து தந்த வாசுதேவன் ஜி-க்கு ஒரு "ஓ" போடவா ? "விசில்" போடவா ?
இதை பல நாள் முன்பு coolgoose-லிருந்து தரவிறக்கம் செய்து வைத்திருந்தேன். காணாம போயிடுச்சு.
coolgoose பிறகு cooltoad ஆகி இப்போ அதுவே காணாம போயிடுச்சு.
கண்டேன் குண்டு பசவப்பாவை !! :lol:
கிருஷ்ணா சார்,
செம ரிலாக்ஸ் பாடல்.
'முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே'
http://www.sylvianism.com/wp-content...seen-still.jpg
நான் முதன் முதலாகக் கேட்ட போதே வித்தியாசத்தை உணர்ந்தேன். இரவு 9.30 சென்னை விவிதபாரதி விளம்பரதாரர் நிகழ்ச்சியில் கேட்டது இப்போது நினைவுக்கு வருகிறது. எல்.ஆர்.சாமி.
ராதிகா செம ஜோர்.
சுதாகர் மண்ணும் பார்க்கும்படி பண்ணியிருக்கும்.
கிருஷ்ணா சார்!
'நிறம் மாறாத பூக்களில்' ஒரு வயதான பெண்மணி சுதாகரைப் பார்த்து,
"சுதாகரு... சுதாகரு" அப்படின்னு ஜொள்ளு விடுமே! ஞாபகம் இருக்கா?
பாடலுக்கும், பாடல் வரிகளுக்கும் நன்றி சார்.
http://www.youtube.com/watch?v=ZLkWu...yer_detailpage
இன்றைய ஸ்பெஷல் (76)
'மலர்களே மலருங்கள்' இன்றைய ஸ்பெஷலில் மலர்கிறது.
http://www.inbaminge.com/t/m/Malarga...gal/folder.jpg
மிக மிக அருமையான பாடல். என்னை வசியம் செய்த பாடல். விஜயனும், ராதிகாவும் விஜயா கார்டனில் அமைதியாக பாட, தேவாமிர்தம் இந்தப் பாடல். ஜெயச்சந்திரனும், ஜானகியும் அனுபவித்துப் பாடிய பாடல். இனிமை கொட்டிக் கிடக்கிறது இப்பாட்டிலே. விஜயன் அவ்வளவாக உறுத்தவில்லை.(முக இறுக்கத்தை மனிதர் மாற்றவே மாட்டாரே!) ராதிகா சமாளித்து விடுவார்.
அருமையான வரிகள். எம்.ஜி.வல்லபன் கவிதை நயத்தில் நயம்பட எழுதியிருப்பார். அதுவும்
'ரசிப்பில் ஒரு ராஜ பல்லவன் நீ' வரி ரகளை.
பாடியிருக்கும் ஜானகியும் அருமையாக இந்த வரிகளை உச்சரித்திருப்பார்.
கங்கை அமரன் அருமையான டியூன் போட்டிருப்பார்.
http://i.ytimg.com/vi/AXnub2eMI8w/hqdefault.jpg
இனி பாடலின் வரிகள்.
https://i.ytimg.com/vi/unLH4KwrqM0/hqdefault.jpg
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண் மூடி மௌனமாய்
நாண மேனியில் கோலம் போடும் போது
இசைக்கவோ
ராசலீலை வாசல் திறப்பாய் பூஜை நேரத்தில்
ராஜதாள மேடை அழைப்பாய் பாதி ஜாமத்தில்
வீதி வலம் போகும் நாளிலே
தேவன் தோளிலே மலர்வேனே
நாதஸ்வரம் பாட சூழ்ந்து நலம்
காண வாழ்த்தவே தருவேனே
சிரிப்பில் புது ராகமாலிகை நீ....
ரசிக்கவோ நம் கல்யாண ராகம்
கண் மூடி மௌனமாய்
நாண மேனியில் கோலம் போடும் போது
ரசிக்கவோ
பாதை மூடி ஜாதி மலர் போல்
பார்வை ஏங்குதே
ராஜவீதி மார்பில் மலர்ந்தேன்
பாரி ஜாதமாய்
போதும் இது காதல் போதையே
காணும் பூவையே போராடு
மீதி வரும் நாளில் நாமம்
திருநாளைக் காணவே நீ ஆடு
ரசிப்பில் ஒரு ராஜ பல்லவன் நீ
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண் மூடி மௌனமாய்
நாண மேனியில் கோலம் போடும் போது
ரசிக்கவோ
http://www.youtube.com/watch?v=unLH4KwrqM0&feature=player_detailpage
வாசு சார்
அந்த வயசான அம்மா பதினாறு வயதினிலே படத்தில் குருவம்மாள் எதிராக வெள்ளையம்மாள் ஆக வருவார் என்று நினைவு .
சின்ன வீடு படத்தில் சின்ன அனுவுக்கு பாட்டி ஆக வருவார் .
சமீபத்தில் ஒரு படத்தில் கூட பார்த்த நினைவு
இது தானே அந்த பா(ர்)ட்டி 'ஈரை பேனாக்கி பேனை பெருமாள் ஆக்கி' என்ற கலைமணியின் இவர்
பேசும் வசனம் மிகவும் பிரபலம்
https://encrypted-tbn1.gstatic.com/i...4HLq9bKdqAltPU
இரண்டாவது ஷிப்டிற்கு டைம் ஆயிடுத்து. போயிட்டு நாளைக்கு வர்றேன்.
மது அண்ணா! ரொம்ப நன்றி! இன்னும் நிறைய உங்களை சந்தோஷப் படுத்தணும்.
கிருஷ்ணா சார்! கலக்கல் பதிவுகள்.
சி.க.சார்! சோகமெல்லாம் போயிடுச்சா?
வினோத் சார்! ஆவணம் பாக்கி இருக்கா? இன்னொரு கலர் ஸ்டில்... இதுவரை போடாத நடிகர் திலகத்தின் ஸ்டில் போடுங்களேன்.
ராஜேஷ் சார்! தாங்கள் பதிந்துள்ள பாடலைப் பார்த்து விட்டு எழுதுறேன்.
கோபால் சார்! மெல்லிசை மன்னர் தொடரை தொடரவும். கார்த்திக் சார் வந்தால்தான் தொடருவேன் என்று கங்கணம் கட்டி இருக்கிறீர்களா?
ராகவேந்திரன் சார்,
உங்கள் பொங்கும் பூம்புனல் இல்லாமல் வாக்கிங் போகவே இல்லை.
கோபு சார்,
முதன் முதலாக நேற்று கைபேசியில் இரண்டு மணி நேரம் ஜாலியாகப் பேசி மகிழ்ந்தோம். ரொம்ப சந்தோஷமாய் இருந்தது.
சிவா சார்,
நேற்று தங்கள் போனைக் கண்டு மிக்க ஆனந்தமடைந்தேன். உங்களுடனும் நேற்றுதான் முதன் முதல் உரையாடினேன். மகிழ்ச்சி. தங்கள் சிங்களத் தமிழ் அவ்வளவு அழகு. அதை விட ரொம்ப அழகான உங்கள் குரல்.
நாளை சந்திப்போம்.