புரட்சித்தலைவரின் மறைவையொட்டி, "தி ஹிந்து " நாளிதழ், 25-12-1987 அன்று வெளியிட்ட சிறப்புக்கட்டுரை - திரியின் பார்வையாளர்களுக்கு ......
http://i59.tinypic.com/qrcdxy.jpg
Printable View
புரட்சித்தலைவரின் மறைவையொட்டி, "தி ஹிந்து " நாளிதழ், 25-12-1987 அன்று வெளியிட்ட சிறப்புக்கட்டுரை - திரியின் பார்வையாளர்களுக்கு ......
http://i59.tinypic.com/qrcdxy.jpg
பொதுவாக ஒரு செய்தியை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு "மொழி மாற்றம்" செய்வது என்பது மிகவும் கடினமானது. அதுவும், ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கும் பொழுது, சில சிக்கல்கள் இருக்கும். ஆங்கிலத்தில், ஒரு வார்த்தை உபயோகப்படுத்தினால் அதற்கு தமிழில்
பல பொருள் உண்டு.
உதரணத்துக்கு, mass என்ற வார்த்தைக்கு, தமிழில் -
1. நிறை, 2. வழிபாட்டுக்கூட்டம் 3. மக்கள் தொகுதி என பல பொருள் கொள்ளலாம்.
இடத்துக்கேற்றாற்போல், நாம் சொல்லவேண்டிய கருத்துக்களுக்கேற்றாற்போல், சொற்களை பிரயோகப்படுத்திட வேண்டும். அவ்வாறு கையாளப்படும் பொழுது, என்ன சொல்ல வந்தோமோ அதனை வேறு வாக்கியமாக .கொண்டு குறிப்பிட்டிருந்தாலும், பொருள் மட்டும் மாறாமல்,இருத்தல் அவசியமானது. வார்த்தைக்கு வார்த்தை அப்படியே ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கும் பட்சத்தில், அது படிப்பதற்கேற்றவாறு சில சமயங்களில் இருப்பதில்லை.
எனவே, பொருள் மாறாமல், 25-12-1987 அன்று "தி. ஹிந்து " பத்திரிகை, நம் மக்கள் திலகத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரை போற்றும் விதத்தில் , புரட்சித்தலைவருக்கு புகழாரம் சூட்டி, மேலே பதிவிட்ட ஆங்கில கட்டுரையின் தமிழாக்கத்தை, அதி சிரத்தையுடன், கீழே தந்துள்ளேன்.
மக்களின் மாபெரும் மனிதர்
எம். ஜி. ஆர். போன்று சிலர் திடீரென்று அரசியலில் ஈடுபட்டு எழுச்சி பெற்றிருக்கலாம். ஆனால் தனியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சியினை ஆரம்பித்து 5 வருடங்களில் தமிழக முதல்வராக அதிகார பீடத்தில் அமர்ந்த பெருமை மருதூர் கோபால ராமச்சந்திரனுக்கு உண்டு. அரசியல் விழிப்புணர்வு உள்ள வாக்காளர் களிடையேயும், தமிழக அரசியலிலும், ஒரு அசாதாரண செல்வாக்கினை பெற்றிருந்தார்.
எம். ஜி. ஆர். என்று அன்புடன் அழைக்கப்படுபவர், உண்மையிலேயே மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்ட மக்களின் தலைவர்தான், மக்கள் திலகம், புரட்சித்தலைவர். மறைந்த முதல்வர் எம். ஜி. ஆர். அவரது சம காலத்தில் பிரபலமான இந்தியராக பொது மக்களிடையே ஆச்சரியப்படத்தக்க வகையில் விளங்கினார். மகாத்மா காந்தி, பண்டித நேரு, பேரறிஞர் அண்ணா, இந்திரா காந்தி போன்றவர்களின் பேச்சினை கேட்க திரண்ட கூட்டத்தை விட, அவரை (எம். ஜி. ஆரை) காணவும், அவரது உரையினை கேட்கவும் திரண்ட கூட்டம் மிகப் பெரிய அளவிலானது.
அசாதாரணமான ஈர்ப்பு :
ஒரு நடிகர் என்பதனையும் மீறி தேர்ந்த அரசியல்வாதிக்கே உரித்தான விவேகத்துடன், மதி நுட்பத்துடன் கூடிய அதி விசேட, அசாதாரண ஈர்ப்பு சக்தியால் அரசியலில் முக்கியத்துவம் பெற்றார். தான் கொண்ட சமூக அக்கறையின் காரணமாக, தகுதி வாய்ந்த சத்துணவு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலம் அவரது அரசியல் எதிரியான திரு. கருணாநிதி அவரை வெற்றி கொள்ள இயலாமல் போனது. பொதுவான நல்ல அபிப்ராயத்தை வடிவமைத்திட, தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக நற்கருத்துக்களை மக்களுக்கு தெரிவிக்க, திரைப்பட ஊடகத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டார். அவரது வாழ்க்கையின் பிந்தைய கால கட்டங்களில் அரசியல் ஆற்றலை பெருக்கிக்கொண்டு தனது பலத்தை உணரும்படி காட்டினார்.
தனது சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு பேசுவது என்பது சற்று கடினமானது என்பதையும் தன்னைப்பற்றியும் முழுமையாக உணர்ந்த எம். ஜி. ஆர். அவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டு பேச்சுத்திறன் இழந்த 1984ன் பிற்பகுதி காலம் வரை நீண்ட உரையாற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இத்தனைக்கும் அவர் ஒன்றும் சிறந்த பேச்சாளர் அல்ல ! பெரும்பாலும், அவரது உரை தெளிவாகவும், குறிப்பிடும்படியாகவும் இருந்ததில்லை.
நேர்மையான அரசாங்கம் :
முதல்வராக பொறுப்பேற்ற ஆரம்பகால கட்டங்களில் அவர் ஆற்றிய உரைகளில் தெரிவித்தபடி, ஊழலை அறவே ஒழித்து ஒரு நல்ல தூய்மையான, நேர்மையான ஆட்சியை அளிக்க உறுதி பூண்டார். எந்த அளவிற்கு இதில் வெற்றி பெற்றார் ? அவரது உறுதியான நோக்கத்தில் அவர் முழுமையான வெற்றி பெறவில்ல என்றே கூறலாம். அவரது ஆட்சிக்காலத்தில் வருவாய் துறை மந்திரியாக இருந்த எஸ். டி. சோமசுந்தரம் அவர்கள் அ.தி. மு. க ஆட்சியில், ஊழல் மலிந்து விட்டது என்ற குற்றச்சாட்டினை முன் வைத்து வெளியேறினாலும், அவரால், எம். ஜி. ஆர். உருவாக்கிய அ. தி. மு. க. வில் ஒரு சிறு பிளவைக்கூட ஏற்படுத்த முடியவில்லை. பின்னர் அவரே, மீண்டும் எம். ஜி. ஆரின் அ. தி. மு. க. வில் ஐக்கியமானதும், கட்சியில் அவருக்கு எம். ஜி. ஆர். அவர்கள் பொறுப்பு அளித்ததும், தெரிந்ததே !
ஒரு மலையாளி என்று திரு. கருணாநிதி அவர்கள் அவரை விமர்சித்து தமிழ் பண்பாட்டிலும், கலாசாரத்திலும் அக்கறை கொள்ளாதவர் என்ற குற்றச்சாட்டினை அடுக்கினார். அதனை பொய்யாக்கும் விதமாக, திராவிடத்தின் பெருமையையும் புகழையும் காப்பதில் தனக்கும், தான் நிறுவிய அ. தி. மு. க. விற்கும், உள்ள உண்மையான உரிமையை பறை சாற்ற, தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் விதமாக, காரணங்கள் கூறி விவரிக்க முடியாத அளவுக்கு எல்லாவிதமான செயல்களை ஆற்றிட, அதிக ஈடுபாடு காட்டி முனைப்புடன் செயல்பட்டார்.
எனினும், தற்போது உள்ள தமிழ் சமூகம் மொழி, இனம், மதம், பண்பாடு ஆகியவற்றால் வெவ்வேறு குழுக்களாக, பிரிவுகளாக வேறுபட்டிருப்பதை உணர்ந்து, ஒன்றுபட்ட இந்தியத்திரு நாட்டில் தமிழ் மொழியும், அதன் கலாச்சாரமும் எதிர்காலத்தில் போற்றுதலுக்குரிய ஒன்றாக இருக்க வேண்டும் என்று கருதி அதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். இதன் மூலம் தான் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இல்லாத குடிமகன் என்று காட்டிக்கொண்டார். ஒரு தேசிய கண்னோட்டத்துடன், கண்ணியம் ஏற்படவேண்டும் என்ற எண்ணத்தில், தனது கட்சியின் பெயரான அண்ணா தி. மு. க. வுக்கு முன்பாக அகில இந்திய என்ற வார்த்தையை சேர்க்க நினைத்தார்..
மலையாள பெற்றோருக்கு மகனாக 17-01-1917 அன்று இலங்கை கண்டி நகரில் பிறந்த எம். ஜி. ஆர். தனது இளம் பிராயத்தில், வறுமை, பசி, பட்டினியால் வாடினார். அவரது தாய், தனது இரண்டு மகன்களுடன் (எம். ஜி. ஆர். மற்றும் எம். ஜி. சி. சக்கரபாணி) தமிழகத்தில், கும்பகோணம் நகரில் வந்து வாழத் தொடங்கினாலும், அங்கும் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையவில்லை.
மகன்கள் இருவரையும் பள்ளியில் சேர்க்க சிரமப்பட்ட தாய் சத்தியபாமா அவர்களை மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்த்து விட்டார். சகோதரர்கள் இருவரும் மேடை நாடக நடிகர்களாக பயிற்சி பெற்றிருந்தாலும், திரைப்பட நுழைவு என்பது அப்போது அவர்களுக்கு எட்ட முடியாத தூரத்தில் இருந்தது.
இளைஞர் ராமசந்திரன், தன்னை ஒரு நடிகராக நிலை நிறுத்திக்கொள்ள மிகவும் போராட வேண்டியதாயிற்று. பல திரைப்பட நிறுவன அலுவலக கதவுகளை தட்டிய பின்பே "சதி லீலாவதி " திரைப்படத்தில் ஒரு சிறு வேடம் கிடைத்தது. மெதுவாக, தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள ஆரம்பித்தார். அவரது வசீகரப் பார்வையும், திடமான உடலமைப்பும், சண்டைக்காட்சிகளில், அவர் வெளிப்படுத்திய திறனும், தனிப்பட்ட ஈர்ப்பு சக்தியும் மொத்தமாக இணைந்து, அவரை புகழேணியின் உச்சியில் கொண்டு சென்றது. தமிழ் திரையுலகின் உச்சியில் இருந்த நிலையில், அவர், சிறந்த நடிகருக்கான, நாட்டின் உயர்ந்த விருதாகிய "பாரத்" பட்டம் வழங்கப்பட்டு கவுரவிக்கபட்டார்.
1950 களில், தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றன. தங்களுடைய எழுத்தாற்றலினாலும், பேச்சுதிறனாலும், நாத்திக வாதியும், சமூக சீர்திருத்த செம்மலுமாகிய தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோர் மக்களை விழிப்படையச் செய்து, ஒரு பெரும் கூட்டத்தினையே திரட்டி தங்களின் பின்னால் அணி வகுக்க செய்தனர். பேரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த தி,.மு,. க. ஒரு எழுச்சி பெற்ற பேரியக்கமாக, வளரத் தொடங்கி விட்டது. இந்த நிலையில், எம். ஜி. ஆர். அவர்கள் தி. மு. க. வில் சேர்ந்ததன் மூலம் அக்கட்சியினரிடையே மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. ( இந்து பத்திரிகை எழுத மறந்தது - இந்த தார்க்கத்தின் எதிரொலியாக, தி. மு. க . வெகு வேகமாக வளரத் தொடங்கியது.)
உண்மையில், பேரறிஞர் அண்ணா அவர்கள் இருந்த காலத்தில், எந்த அளவுக்கு கட்சியின் செல்வாக்கு அவருக்கு உதவியதோ, அந்த அளவுக்கு கட்சியும் அவரின் (எம். ஜி. ஆரின்) செல்வாக்கை நன்கு பயன் படுத்திக் கொண்டது. இதனால் ஆதாயம், பொதுவில் கட்சிக்கும், அவருக்கும் கிடைத்தது.
இறுதியாக, பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் தி. மு. க. ஆட்சி யில் அமர்ந்த போது, மக்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்ல வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில், அறிவுரைகள் கூறும் திரைப்படங்களில் தொடந்து நடித்து வந்தார். அவரது திரைப்படங்கள் எப்போதுமே வர்த்தகரீதியில்தான் அதிகம் இருக்கும்.
கதையமைப்பு இயல்பாகவும், சாதாரணமாகவும் இருந்த அதே சமயத்தில், தெளிவாகவும், நெறிமுறைகள் கொண்டதாகவும், அவரது திரைப்படங்கள் திகழ்ந்தன. நல்லது செய்யும் நாயகனாகவும், கடமை உணர்வு கொண்ட தனயனாகவும், ஆதிக்க வர்க்கத்தை எதிர்ப்பவராகவும், சமூக விரோதத்துக்கு முற்றிலும் எதிராகவும், இழிவான செயல்கள் மற்றும் பேராசை முதலானவற்றிற்கு எதிரான வேடங்கள் தாங்கி, திரைப்படங்களில் நடித்தார்.
திரு. கருணாநிதியுடன் வேறுபாடு :
1972 அக்டோபரில், திரு. கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த போது, இருவருக்குமிடையே, முரண்பட்ட கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.. எம். ஜி. ஆர். அவர்கள் தனது பழைய நண்பர் திரு. கருணாநிதி மீது ஊழல் புகார் வாசித்தார். அதன் விளைவாக, திரு. கருணாநிதி எம். ஜி. ஆர். அவர்களை கட்சியை விட்டு நீக்கினார். மக்கள் திகைத்தனர். அரசியல் மேகம் சூழ்ந்தது. எம். ஜி. ஆர். அ . தி. மு. க. என்ற பெயரில் தனிக்கட்சி துவக்கினார். ( பின்னர் அ. இ. அ . தி. மு. க. என பெயர் மாறியது) .
5 வருடங்களுக்குள்ளாகவே, எம். ஜி. ஆரின் கட்சி, 1977 ஜூன் மாதத்தில் ஆட்சியை பிடித்தது. எ ம். ஜி. ஆர். தமிழக முதல்வரானார். அரசியல் பார்வையாளர்கள் பலரும், ஒரு நடிகர் முத்லவராகி என்ன செய்துவிட முடியும் என்று ஆச்சரியப்பட்டனர். எம். ஜி. ஆர். தனது திரையுலக செல்வாக்கினை மட்டுமே பயன்படுத்தி அரசியலில் பலம் பெற்று விட முடியாது என, திரு. கருணாநிதி, தவறாக கணித்தார்.
எம். ஜி. ஆரின் ஆரம்ப கட்ட ஆட்சிக் காலத்தில், எதிர்கட்சியாக இருந்த தி. மு. க. வின் தூண்டுதலால் , தினந்தோறும் ஒரு போராட்டம் நடைபெற்ற வண்ணம் இருந்தது. அவருக்கு பல வகையிலும் தொல்லைகள் தொடர்ந்தது. ( இந்து பத்திரிகை எழுத மறந்தது - மொத்தத்தில் அவரை நிம்மதியாக ஆட்சி புரிய முடியாமல் செய்தனர்) ஆனால், அவற்றையெல்லாம் தனது சாதுர்யமான அணுகு முறைகளினாலும், தி. மு. க. வின் பலவீனத்தை பயன்படுத்தியும், வெகு எளிதாக முறியடித்தார் என்றே சொல்ல வேண்டும்.
தி. மு. க. வும் இந்திரா காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்து 1980ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், அவரது கட்சி தோல்வியை தழுவியது. பின்னர், அவரது ஆட்சி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் ( இந்து பத்திரிகை எழுத மறந்தது - திரு. கருணாநிதி அவர்களின் நிர்ப்பந்தத்தால்) கலைக்கப்பட்ட போதிலும், சோர்ந்து விடாமல், சட்டமன்ற தேர்தல் வரை பொறுமை காத்து, தான் பழி வாங்கப்பட்ட அநியாயத்தை மக்களிடையே வெளிப்படுத்தி, மீண்டும் மக்களின் பேராதரவுடன் தமிழக ஆட்சியை கைப்பற்றினார்.
இந்திரா காந்தியுடனான உறவு :
அடுத்த 4 ஆண்டுகளில், இந்திரா காந்தியுடன், சுமுகமான உறவை கையாண்டார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற போது, அவரைக் காண்பதற்காக, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள், தனி விமானத்தில் பயணித்து, சென்னை வந்தார். எம். ஜி. ஆர். அவர்களின் மோசமான உடல் நிலை கண்டு, வருந்தி, சகலவிதமான மருத்துவ வசதிகள் கொண்ட தனி விமானம் ஒன்றை உடனடியாக ஏற்பாடு செய்து தீவிர சிகிச்சைக்காக அமெரிக்கா வுக்கு அனுப்பி வைத்தார். கிட்டத்தட்ட அவரது கதை முடிந்து போனது என்று கருதப்பட்ட நிலையில், அமெரிக்கா சென்ற எம். ஜி. ஆர். சிகிச்சை முடிந்து, நலமுடன் திரும்பி வந்து, மருத்துவர்களையே அதிசயிக்க வைத்தார்.
சிகிச்சை முறைகளுக்கு அப்பாற்பட்டு, அவரது உறுதியான மன வலிமையும், கடவுளின் அருளும், அனைத்து தரப்பு மக்களின் வழிப்பாடு மற்றும் வேண்டுதல்களினாலும், எம். ஜி. ஆர். உயிருடன் திரும்பியதாக, மருத்துவ நிபுணர்கள் வியந்து சிலாகித்தனர். தமிழகமே, அப்போது ஒரு புதிய விநோதத்தை கண்டது என்றே சொல்ல வேண்டும். நியூ யார்க் - புருக்ளினில் உள்ள down state medical centre ல் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது பக்கவாதம் ஏற்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்ட போழ்தும், அதிசயத்தக்க வகையில் குணமானாலும், பேசும் திறனை இழந்தார்.
1984ல் அமெரிக்க மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட காலத்தில், தமிழகத்தில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில், அவரது கட்சியே மீண்டும் மக்களின் அமோக ஆதரவு பெற்று, ஆட்சியை பிடித்தது. அனால், இம்முறை இந்திரா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார். இந்த கூட்டணி அவரது இறுதி காலம் வரை தொடர்ந்தது.. சுமார் மூன்று மாத கால மருத்துவ சிகிச்சைக்கு பின்பு 04-02-1985 அன்று சென்னை திரும்பிய அவருக்கு எழுச்சி மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
பேச்சுத்திறனை அவர் முழுமையாக இழந்திருந்தாலும்,, அரசு நிர்வாகத்தை, மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், (குறிப்பாக கிராமப்புற வாசிகள் மற்றும் பெண்களின் ஆதரவுடன்) திறம்பட நடத்தி, தனது இறுக்கமான பிடியை மக்களிடையே தக்க வைத்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். இருப்பினும், தன் நோய்வாய்ப்பட்ட தன்மையினால், ஆண்டுக்கொரு முறை அமெரிக்கா சென்று, மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டார்.
பெரும் முயற்சி
கடைசியாக, ஆகஸ்ட் மாத துவக்கத்தில், மருத்துவ பரிசோதனையின் பொருட்டு, அவர் அமெரிக்கா சென்றிந்தபோது, அங்கு அவருக்கு ozdema என்ற நோயின் அறிகுறி தென்பட்ட காரணத்தால், 3 மாத காலம் தங்கி , பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாயிற்று.
அக்டோபர் மாதம் 31ம் தேதி அவர் சென்னை திரும்பிய போது, கடந்த (1986) வருடத்தை விட புதுப் பொலிவுடன், பிரகாசமாக காணப்பட்டார். அந்த சமயத்தில், சிறப்பு இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர்கள் கிளர்ச்சி மற்றும் இலங்கைத்தமிழர் பிரச்சினைகள் தீவிரமானதை தொடர்ந்து, அவற்றுக்கு தீர்வு காண மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டார்.
இலங்கை வாழ் தமிழர்களின் நல் வாழ்விற்காக, உயர் அதிகாரிகளையும், மக்களையும் சந்திப்பதில், எவ்வித சுணக்கமும் காட்டாமல், உடல் நிலையை ஒரு பொருட்டாக கருதாமல், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு தோளோடு தோளாக நின்று, தீவிர அக்கறை கொண்டு பணியாற்றியதால், தன்னை மிகவும் சிரமப்படுத்திக் கொண்டார்.
எம். ஜி. ஆர். அவர்கள் அமெரிக்காவில் சிகிச்சைக்காக தங்கியிருந்தபோது, பிற அலுவல்கள் காரணமாக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் நியூ யார்க் விஜயம் செய்த பொழுது, அங்கும், அவரிடம் (ராஜீவ் காந்தியிடம்) இலங்கை வாழ் தமிழர்களின் அவல நிலையை எடுத்துரைத்து, அவர்களின் நல்வாழ்விற்கான சாத்தியக் கூறுகள் பற்றி அலசினார் எம். ஜி. ஆர்.
சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து திரும்பிய அவர், உடல் நலிவுற்ற அந்த கால கட்டத்தில் கூட, மரணமடைவதற்கு ஒரு வாரம் முன்பாக, அதாவது டிசம்பர் மாதம் 16ம் தேதி அன்று டெல்லி சென்று பிரதமர் ராஜீவ் காதி அவர்களுடன் இலங்கைத்தமிழர்கள் பிரச்சினை பற்றியும், அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலைகள் பற்றியும் , பரிசீலனை செய்தார்.
தலை சிறந்த தேசியவாதி / அமைதியை விரும்புவர் :
ஜவஹர்லால் நேரு அவர்கள் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்த எம். ஜி. ஆர். அவர்கள், சென்னையின் முக்கியமான பிரதான இடத்தில் அவருக்கு சிலை வைக்க விரும்பினார். அந்த சிலையையும், அவரது பேரனாகிய அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தான் திறந்து வைக்க வேண்டும் என்று பேராவல் கொண்டார். பல நாட்கள் காத்திருந்த பின்பு, இறுதியாக டிசம்பர் 21 அன்று (1987) அவரது ஆசை நிறைவேறியது. ராஜீவ் காந்தி அவர்கள் நேரு சிலையை திறக்க ஒப்புக்கொண்டார். கோலாகலமாக நடத்தப்பட்ட அந்த விழாவில், பேச முடியாத அந்த சூழ்நிலையிலும், சுமார் 15 நிமிடங்கள் உரையாற்றினார், தமிழர்கள் வாழ்வின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்ட எம். ஜி. ஆர்.
மறைந்த எம். ஜி. ஆர். அவர்கள், வி. என். ஜானகியை துணையாக கொண்டு வாழ்ந்து வந்தார்.
.
மனித உருவில் வந்த நமது தெய்வம் புரட்சி தலைவர்.ஓர் உயிராக மண்ணில் பிறந்து !
மண்ணை விட்டு உயிர் பிரிந்து ஒரு உடலில் இருந்து கோடானுகோடி தமிழ் மக்களின் உடலில் கலந்து இன்றும் அவர்களின் உணர்வாக வாழ்கின்றார்.
தன் உடலை விட்டு காற்றில் கலந்து நம் அனைவரின் சுவாசமாக வாழ்ந்து வரும் நமது தெய்வம் புரட்சி தலைவர் அவர்கள்.
வாழ்க புரட்சி தலைவர் நாமம் !
வாழ்க புரட்சி தலைவர் புகழ் வாழ்க !
http://i1170.photobucket.com/albums/...ps9cc8a9f5.jpg
super professor sir nice writing
பரம்புமலை பாரி மன்னனுக்குகூட, முல்லைக்கு தேர் கொடுத்த தயாள குணம் மட்டுமே வரலாற்றில் பதிவாகி இருந்ததது. ஆனால் நம் வள்ளலோ நாலு கோடி மக்களுக்கு மட்டுமல்ல. அறுபத்தி ஐந்து லட்சம் பிள்ளைகளுக்கு சோறூட்டி மகிழ்ந்த மன்னாதி மன்னன். சாதனைகள் நிகழ்த்தி, சரித்திரம் படைத்தவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அற்புதம் நிகழ்த்தி அவதாரமாக நிகழ்ந்தவர் நம் வள்ளல் மட்டுமே.
"நீங்கள் மறையவும் இல்லை !
"நாங்கள் மறக்கவும் இல்லை !!!!!
http://i1170.photobucket.com/albums/...ps99c8a318.jpg