மேலே உள்ள 3 பதிவை படிச்சீங்களா? இப்போது என் கருத்தை சொல்கிறேன்.
ஒரு காலத்தில் கருணாநிதி ,வீரமணி, சோ 3 பேரும் புரட்சித் தலைவரை என்னவெல்லாம் சொன்னார்கள். எப்படி எல்லாம் கேலி செய்தார்கள்.
1. கருணாநிதி
கருணாநிதி பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. புரட்சித் தலைவரை மிகவும் மட்டமாக விமர்சனம் செய்தவர். இருந்தாலும் அவர் என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு நடைப் பயணம் சென்றபோது அவரது காலில் கொப்புளங்கள் வந்தது. உடனே, புரட்சித் தலைவர் அவரை நலம் விசாரித்ததோடு, மருத்துவர்களையும் அனுப்பி வைத்தார்.
என்றாலும் புரட்சித் தலைவர் இருந்த வரையில் அவரை கருணாநிதி பாராட்டியது இல்லை. சில வருசத்துக்கு முன் எம்ஜிஆரிடம் இருந்த நாகரிகம் மனிதாபிமானமும் இப்போதைய அரசிடம் (புரட்சித் தலைவி அரசை சொன்னார்) இல்லை என்றார்.
இப்போது. எம்.ஜி.ஆரை பற்றி இனிய நினைவுகள்தான் இருக்கின்றன. அவரை மி்ஸ் பண்ணிவிட்டேன் என்று ஆனந்தவிகடனில் பேட்டி அளித்திருக்கிறார்.
2. கி.வீரமணி
கி.வீரமணியும் கருணாநிதியோடு சேர்ந்து கொண்டு புரட்சித் தலைவரை கடுமையாக விமர்சித்திருக்கிறார். தேர்தலில் அதிமுவை எதிர்த்திருக்கிறார். பின்னர் புரட்சித் தலைவி ஆட்சிக்கு வந்ததும் வீரமணி ஆதரித்தார். 69 சதவீத இடஒதுக்கீட்டுக்காக சமூக நீதிகாத்த வீராங்கனை என்று புரட்சித் தலைவிக்கு விழா நடத்தி பட்டமும் அளித்தார். என்றாலும் புரட்சித் தலைவர் இருந்த காலத்தில் அதிமுக ஆரம்பித்த பிறகு அவரை பாராட்டியது இல்லை.
ஆனால், இப்போது, வள்ளல் எம்.ஜி.ஆர். என்று புகழ்ந்து புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவுக்கு உண்மை பத்திரிகையில் சிறப்பிதழ் வெளியிட்டு புரட்சித் தலைவரை புகழ்ந்து கட்டுரை எழுதுகிறார் வீரமணி.
3. சோ
இவரும் புரட்சித் தலைவர் இருந்தபோது அவரை தனது பத்திரிகையிலும் பேட்டியிலும் கூட்டங்களிலும் எவ்வளவு கேலி செய்திருக்கிறார். அவரது ஆட்சியை கேலி செய்தார். சத்துணவு திட்டத்தை குறை கூறினார். 1980வது வருசம் தேர்தலில் மட்டும் புரட்சித் தலைவரை ஆதரித்தார். தேர்தலுக்குப் பின் மறுபடியும் புரட்சித் தலைவரை குறை கூறினார்.
பின்னர், புரட்சித் தலைவியை ஆதரித்தார். 1996 தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்தாலும் பின்னர் மறுபடியும் புரட்சித் தலைவியை சோ தீவிரமாக ஆதரித்தார். கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதையும் ஆதரித்தார். புரட்சித் தலைவியின், அதிமுகவின் ஜால்ரா பத்திரிகை துக்ளக் என்ற அளவுக்கு அவரது செயல்பாடுகள் அமைந்தன. புரட்சித் தலைவி இலவச திட்டங்களை கொண்டு வந்தபோதும் ஆதரித்தார். நமது நாட்டில் ஏழைகள் உள்ளவரை இதுபோன்ற திட்டங்கள் தேவை என்றார். சத்துணவுத் திட்டமும் நல்ல திட்டம் என்பதை இப்போது உணர்கிறேன் என்றார். புரட்சித் தலைவர் இருந்தபோது இதை உணரவில்லை. புரட்சித் தலைவருக்கு ரிக்க்ஷாக்காரன் படத்துக்காக பாரத் பட்டம் கொடுக்கப்பட்டதை கூட தனது பத்திரிகையில் விமர்சித்தார். அதை ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை.
போனவாரம் கூட சோவின் மகன் அப்போலோ ஆஸ்பத்திரிக்கு சென்று முதல்வரின் உடல்நிலையை விசாரித்தார் என்ற செய்திகள் வந்தது. இதில் அரசியல் பார்க்கக் கூடாது. மனிதாபிமானம்தான். ஆனால், இந்த சோவின் மகன் புரட்சித் தலைவியின் தோழி சசிகலா நடராஜன் அவர்கள் நடத்தும் மிடாஸ் மதுபான ஆலையின் இயக்குநர்களில் ஒருவர் என்று சில மாதங்களுக்கு முன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் செய்தி வெளியானது. அந்த கம்பெனி நிர்வாகிகளில் சோவின் மகன் பெயர் உள்ளதை அந்த கம்பெனியின் சான்றிதழோடு போட்டோ காப்பியை வெளியிட்டார்கள். அந்த பத்திரிகைக்கு சோ மறுப்பு தெரிவிக்கவில்லை. துக்ளக் பத்திரிகையிலும் மறுத்து எழுதவில்லை.
புரட்சித் தலைவர் ஆட்சியில் எரிசாராய ஊழல் நடந்ததாக சோ துள்ளிக் குதித்தார். பின்னர், விசாரணை கமிஷனில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என்று தீர்ப்பு வெளியானது. அந்த சமயத்தில் சோவின் தந்தை எரிசாராய ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று புரட்சித் தலைவர் குற்றம் சாட்டினார். அதையும் இப்போது மிடாஸ் மதுபான ஆலையில் சோவின் மகன் ஒரு நிர்வாகியாக இருப்பதையும் நினைத்துப் பாருங்கள். அதற்காக மிடாஸ் மதுபான ஆலையில் ஊழல் என்று நான் சொல்லவில்லை. முறைப்படி அனுமதியோடு நடத்துகிறார்கள். ஆனால், சாராய ஆலை என்றாலே சோ குடும்பத்துக்கு தீட்டு என்று அர்த்தமில்லை, அதிலும் 1996-ம் ஆண்டு புரட்சித் தலைவி ஊழல் செய்கிறார் என்று திமுகவை ஆதரித்தவர் இப்போது தன் மகன் அவர்கள் நிறுவனத்தில் பங்கேற்றதை தவறாக நினைக்கவில்லை என்பதைப் பாருங்கள்.
ஆனால் ஒன்று, புரட்சித் தலைவரின் வள்ளல்தன்மையை சோ எப்போதும் பாராட்டி வந்திருக்கிறார். 6-7-2016 தேதியிட்ட துக்ளக் பத்திரிகையில் புரட்சித் தலைவரின் தர்ம சிந்தனை வேறு எந்த நடிகருக்கும் இல்லை என்று வாசகர்களின் கேள்விக்கு தானே பதில் அளிக்கும் கேள்வி பதில் பகுதியில் சோ பாராட்டியுள்ளார். அதை இங்கே தருகிறேன்.
http://i66.tinypic.com/juedrs.jpg
இப்போதும் இரா. செழியன் பேட்டி மூலம் புரட்சித் தலைவருக்கு ஆதரவான கருத்துக்களை தனது பத்திரிகையில் சோ வெளியிடுகிறார்.
ஆக இதிலிருந்து ஒன்று புரியுது. புரட்சித் தலைவரை ஒரு காலத்தில் தூற்றியவர்கள் இப்போது அவரது பெருமையை உணர்ந்து வாழ்த்துகிறார்கள். இந்த பெருமை எல்லாருக்கும் கிடைக்காது.
தர்மம் தலைகாக்கும் படத்தில் தர்மம் தலைகாக்கும்... என்ற பாடலில் ‘மலைபோலே வரும் சோதனை யாவும் பனி போல நீங்கிவிடும். நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்’ என்று புரட்சித் தலைவர் பாடுவார்.
அதுபோல புரட்சித் தலைவரை நல்லபடி வாழவிடாமல் செய்யும் முயற்சியில் (அப்போதே அதிலும் இவர்கள் தோல்விதான் கண்டார்கள்) இறங்கியவர்கள் இப்போது அவர் வாசலில் வணங்கி நிற்கிறார்கள். அதனால்தான் புரட்சித் தலைவர் சாதாரண மனிதர் இல்லை. மனித உருவத்தில் வந்த தெய்வமாக விளங்குகிறார்.
மனித வடிவில் வந்து வாழ்ந்து காட்டிய தெய்வம் புரட்சித் தலைவர், எதிரிகள் உட்பட எல்லாருக்கும் அருள் தருவார்.
http://i68.tinypic.com/2vta53n.jpg