https://s10.postimg.org/705xvnvtl/Untitled-2.jpg
அடிமைப்பெண்
அசத்துகிறது இரண்டாவது வாரம்
திருப்பூர் - அபிராமி சினிமா - தினசரி 4 காட்சிகள்
இணைந்த இரண்டாவது வாரம்
சேலம் - கீதாலயா - தினசரி 4 காட்சிகள் - இரண்டாவது வாரம்
Printable View
https://s10.postimg.org/705xvnvtl/Untitled-2.jpg
அடிமைப்பெண்
அசத்துகிறது இரண்டாவது வாரம்
திருப்பூர் - அபிராமி சினிமா - தினசரி 4 காட்சிகள்
இணைந்த இரண்டாவது வாரம்
சேலம் - கீதாலயா - தினசரி 4 காட்சிகள் - இரண்டாவது வாரம்
http://i65.tinypic.com/2d1v9nc.jpg
இன்று மதுரை மினிப்பிரியாவில் வேங்கயனை தரிசித்தேன். படம் பிரிண்ட் நன்றாக துல்லியமாய் உள்ளது. ஆனால், இசை சரியில்லை. சில இடங்களில் புதிதாக இசை சேர்ப்பு செய்திருக்கிறார்கள். ரீ ரிகார்டிங் சரியாய் இல்லை.
தாய் இல்லாமல் நான் இல்லை பாட்டுக்கு முன் வரும் இசை இல்லை. ஏற்கனவே நாம் பல தடவை படம் பார்த்திருப்பதால் இந்த முறை நாம் பார்க்கும் காட்சிகளில் வரும் இசை வித்தியாசம் போல ஒலிக்கின்றது.
ஒரு வேளை தியேட்டரில் சவுண்ட் கோளாறா என்று தெரியவில்லை. இடைவேளையில் மற்றவர்களும் என்னைப் போலவே சொன்னார்கள். மற்ற ஊர்களில் நன்றாக இருக்கிறதா? படம் பார்த்த நண்பர்கள் விளக்கி சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
உலகம் சுற்றும் வாலிபனில் ஏற்கனவே 2009ல் வந்தபோது இசையை கெடுத்து வைத்தார்கள். மறுபடி உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டலில் வரும்போது இந்த தவறு இருக்கக் கூடாது.
http://i68.tinypic.com/2nqv050.jpg
உலகிலேயே இப்படிப்பட்ட.....
ஒரு முதல்வரை கண்டதுண்டா?
பொன்மனச்செம்மலுடன்.... அமர்ந்து உரிமையுடன் .
பேசிக்கொண்டிருக்கும் சாமான்யன்.
ரசிகர்களுடன் ...
போட்டோ எடுக்க ..
ஏக கெடுபிடியுடன் ...
ஆதார்கார்டு,
அடையாள அட்டையை காண்பித்தால்தான் ...அனுமதி!
இந்த நபருக்கு ....
ரேஷன் கார்டு கூட இருக்காது.
மனிதருள் புனிதர் மக்கள் திலகம்!
நன்றி : ராமச்சந்திரன் சீனிவாசன் முகநூல்
http://i65.tinypic.com/2a2ts0.jpg
ஈழ விடுதலை போராட்டத்திற்க்காக மரணிக்கும் முன்புகூட 21-கோடிகளை அள்ளி கொடுத்த கொடை வள்ளல். அதை கொண்டு இரண்டு கப்பல்கள் வாங்கிய #புலிகள்...
செத்தும் கொடுத்தார் சீதக்காதி. ஆனால், செத்துக் கொண்டு இருக்கும் போதும் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். மரணத்தின் விளிம்பில் நின்ற போதும் மனிதநேயத்தை மறுக்கவில்லை. மரணத்தை அணைத்துக் கொண்ட போதும் தமிழ் ஈழ மக்களை மறக்கவில்லை. அவர்களின் விடுதலைக்காக, கடைசி வரை நின்று போராடியவர். தனி ஈழம் மலர்ந்தால் மட்டுமே ஈழத்துச் சோகம் நீங்கும் என்று அசை போட்டு வாழ்ந்த ஒரு நல்ல மனிதர். அவர் தான் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் கடைசி மூச்சு நிற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கூட, தான் சம்பாதித்த தன் சொந்தப் பணத்தில் பல கோடி ரூபாய் தரத் தயாராக இருந்தார். பிரபாகரனை வரச் சொல்லி ஆளையும் அனுப்பி இருக்கிறார். அப்போது எம்.ஜி.ஆரால் அதிகமாகப் பேச முடியவில்லை. மூச்சுத் திணறல். மருந்து கொடுத்து இருக்கிறார்கள். மயக்கமான நிலை. இருந்தாலும் கடைசி நிமிடம் வரை ஈழத் தமிழர்களை அவர் மறக்கவில்லை.
பிரபாகரன் போர் முனையில் இருந்தார். அதனால் அவர் வரமுடியவில்லை. அவர் சார்பில் தளபதிகளில் ஒருவரை அனுப்பி இருக்கிறார்கள். வழக்கமாக எம்.ஜி.ஆரைப் பார்த்து உதவித் தொகைப் பெற்றுச் செல்பவர், அந்தச் சமயத்தில் இல்லை. அவரும் போர்முனையில் இருந்தார். அதனால் எம்.ஜி.ஆருக்குப் பழக்கம் இல்லாத வேறோர் ஆளை அனுப்பி இருக்கிறார்கள்.
அவரிடம் பணம் கொடுக்க எம்.ஜி.ஆருக்கு விருப்பம் இல்லை. கொடுக்கப் போவது பெரிய தொகை. எப்போதும் வாங்கிச் செல்வாரே, அவரையே அனுப்பி வையுங்கள் என்று எம்.ஜி.ஆர். சொல்லி இருக்கிறார். கடைசியில், அந்தப் பழைய ஆளைத் தேடிப் பிடித்து சென்னைக்கு அனுப்பி இருக்கிறார்கள். அவர் வந்து சேர்வதற்குள் காலதேவன் எம்.ஜி.ஆரைக் கொண்டு சென்று விட்டான்.
இருந்தாலும் அவருடைய உதவியாளர் மூலமாகப் பணம் போய்ச் சேர்ந்து இருக்கிறது. மொத்தம் 21 கோடி ரூபாய். அந்தக் காலத்துப் பணம் எவ்வளவாக இருக்கும். அதைக் கணக்குப் போட்டுப் பாருங்கள். இந்தப் பணத்தைக் கொண்டுதான் 18 முதியோர் காப்பகங்கள், நான்கு மருத்துவமனைகளைக் கட்டி இருக்கிறார்கள். மேலும் இரண்டு கப்பல்களையும் வாங்கினார்கள் என்பது ஒரு கூடுதலான தகவல். இந்த விஷயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். இது மட்டும் இல்லை. இன்னும் இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.
தொடரும்.....
(இது ஒரு தொடர் கட்டுரை. மலேசியா தினக்குரல் நாளிதழில் 14.06.2015 தொடங்கி 19.06.2015 வரை ஆறு நாட்களுக்கு எழுதப்பட்டது. அதை அப்படியே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.) - மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
நன்றி - மலாக்கா முத்துக் கிருஷ்ணன் எம்ஜிஆர் தளம் முகநூல்
http://i67.tinypic.com/52m1s.jpg
எம்.ஜி.ஆர். ஒரு சாமான்யராகப் பிறந்தார். மூன்றாம் வகுப்பு வரை தான் படித்தார். ஒரு கலைஞராக வளர்ந்தார். ஒரு நடிகராக உயர்ந்தார். உண்மைதான். இருந்தாலும், ஒரு நடிகர் என்பதைத் தாண்டிய நிலையில், ஒரு மனிதநேய மாந்தராக மறைந்து போனார் என்பது தான் பெரிய விஷயம்.
அரசியலை விட்டு விடுங்கள். #ஆயிரத்தில்__ஒருவன் சினிமாவையும் விட்டு விடுங்கள். இரண்டையும் சேர்க்க வேண்டாம். தமிழ் மக்களுக்கு அவர் செய்த நல்லவற்றை மட்டும் மனிதத் தன்மையோடு பார்ப்போம். ஈழத் தமிழ் மக்கள் மீது வற்றாத வாஞ்சை காட்டிய பொன்மனச் செம்மலாக வாழ்ந்தாரே... அதைப் பார்ப்போம்.
பிறப்பால் அவர் தமிழர் அல்ல. இருந்தாலும், தமிழராய்ப் பிறக்காமலேயே அவர் ஒரு தமிழராக வாழ்ந்து காட்டினாரே; தமிழர்களின் சரித்திரத்தில் சாதனை படைத்துக் காட்டி இருக்கிறாரே; வேறு என்னய்யா வேண்டும்.
அது தானே மிகப் பெரிய விஷயம். இன்றைக்கு அவரைப் பற்றிப் பேசுகிறோம் என்றால் அதற்கு அவர் செய்த நல்ல காரியங்கள் தானே முன் வந்து நிற்கின்றன. அந்த நல்ல செய்கைகள் தானே அவரை முன் நிறுத்தி அடையாளப் படுத்துகின்றன.
எம்.ஜி.ஆரை ஒரு மலையாளி என்று சொல்கிறார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். ஒரு தமிழன் செய்யாததை எம்.ஜி.ஆர். செய்து காட்டி இருக்கிறாரே. அதைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்.
என்னய்யா தமிழன், என்னய்யா மலையாளி, எல்லாருமே ஒரே தாய்மடி உறவுகள் தான். ஒரே இரத்தத்தில் ஊறிய மட்டைகள் தான்.
சில ஆளவந்தான்களும் சில சோளவந்தான்களும் செய்த குசும்புகள் குறும்புகள். அதனால் வந்த குளறுபடிகள். எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு, எல்லாரும் சேர்ந்து பிரபாகரனைக் கழற்றி விட்டார்களே. அதுதான் இப்போது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது.
அடுத்து ஒரு சின்னக் கேள்வி. தமிழ்நாட்டின் தமிழ்த் தலைவர்களில் எத்தனைப் பேர், எம்.ஜி.ஆரைப் போல ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்து இருக்கிறார்கள். சொல்லுங்கள். விரல்விட்டு எண்ணி விடலாம்.
ஆரம்பத்தில் கலைஞர் உதவி செய்தார். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அதிலே சொந்த நலன்கள் கொஞ்சமாய் மறைந்து நின்றன. சான்றுகள் இருக்கின்றன. எம்.ஜி.ஆரைப் போல நிறைவு நலன்கள் இல்லை.
தொடரும்.....
(இது ஒரு தொடர் கட்டுரை. மலேசியா தினக்குரல் நாளிதழில் 14.06.2015 தொடங்கி 19.06.2015 வரை ஆறு நாட்களுக்கு எழுதப்பட்டது. அதை அப்படியே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.) - மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
நன்றி மலாக்கா முத்துக்கிருஷ்ணன் எம்ஜிஆர் தளம் முகநூல்
http://i67.tinypic.com/6dwavc.jpg
வந்தான் வாழ்ந்தான் போனான் என்றா
உலகம் நினைக்க வேண்டும்
சொன்னான் செய்தான் என்றே நாளும்
ஊரார் சொல்ல வேண்டும்
நன்றி சந்தானம் ஏடிஎம்கே முகநூல்
http://i64.tinypic.com/1556jpx.jpg
சென்னை பேபி ஆல்பட் மற்றும் தேவி பாலா திரை அரங்குகளில்
தினமலர் -22/07/2017
http://i68.tinypic.com/2j176e1.jpg
தினத்தந்தி-திருவண்ணாமலை -19/07/2017
http://i66.tinypic.com/9unjmu.jpg