-
நண்பர் சுகாராம் அவர்களின் கவனத்திற்கு ,
சீன போருக்கு அட்வான்ஸ் தொகையாக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் அளித்த தொகை எழுபத்து
ஐந்தாயிரம் ரூபாய் என்பதற்கு பதிலாக எழுத்து ஐந்தாயிரம் ரூபாய் என்று
பதிவாகியுள்ளது . ஒரு எழுத்து தவறினாலே அர்த்தமே மாறிவிடும். எனவே
பதிவுகள் செய்யும்போது சற்று கவனமாக செயல்படவும் .நன்றி .
-
-
http://i63.tinypic.com/67pqv6.jpg
ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரல் பயணிக்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ள பயணசீட்டில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பெயர்
இடம் பெற்றுள்ளது என்பதை கவனிக்கவும் .
-
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் சிறப்புகள்
---------------------------------------------------------------------
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
பெயர் - மத்திய அரசு செயலாக்கம் .
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் - சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு அறிவிப்பு .
மதுரை மாட்டுத்தாவணியில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் செயல்பாடு - தமிழக அரசு அறிவிப்பு .
சேலம் புதிய பேருந்து நிலையம் -பாரத ரத்னா டாக்டர் எம்.ஜிஆர். பேருந்து நிலையம் என சில வருடங்களுக்கு முன்பு பெயர் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு .
திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையமாக செயல்பாடு - சில வருடங்களுக்கு முன்பு தமிழா அரசு அறிவிப்பு
சென்னை போரூர் மேம்பாலத்திற்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். மேம்பாலம் என்று பெயர் அமைப்பு - சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு
சென்னை நுங்கம்பாக்கத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை உருவாக்கம் .
சென்னை கே.கே.நகருக்கு அருகில் எம்.ஜிஆர். நகர் .
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள், துணை நகரங்களில் எம்.ஜி.ஆர்.நகர் , எம்.ஜி.ஆர். தெரு உருவாக்கம் .
பாராளுமன்றத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவச்சிலை .
மலேசியாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவ சிலை .
தமிழ்நாட்டில் முக்கிய நகரங்கள், துணை நகரங்கள், மூலை முடுக்கெல்லாம் மக்கள் தலைவரின் மார்பளவு, மற்றும் முழு உருவ சிலைகள்.
சென்னை திருநின்றவூர் அருகில் நத்தமேடு கிராமத்திலும், பொதட்டூர்பேட்டை அருகில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கோவில்கள் .
வெளிநாடுகளில், சிங்கப்பூர், மலேசியா, துபாய், லண்டன்,(பாரிஸ் ) பிரான்ஸ், பர்மா ,இலங்கை (கொழும்பு ), மொரீஷியஸ் , ஆகிய வற்றில்
அவ்வப்போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய விழாக்கள், நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன .
இந்த சிறப்புகள், இந்திய துணை கண்டத்தில் வேறு எந்த ஒரு நடிகருக்கும் ,மாநில தலைவருக்கும் கிடைத்திராதவை என்பது குறிப்பிடத்தக்கது .
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தினரும், பக்தர்களும், ரசிகர்களும் ,
அ .தி.மு.க. தொண்டர்களும் பெருமையாக கருதவேண்டிய விஷயங்கள்.
-
-
நம் மக்கள் திலகம் திரியில் உறுப்பினர்களின் பதிவை உன்னிப்பாக கவனித்து, திருத்தும் பெரும் பொறுப்பை ஏற்று கொண்டு தவறை சுட்டி காட்டும் மூத்த சகோதரர் திரு லோகநாதன் அவர்களுக்கு நன்றி... இனி கவனமாக இருக்க முயற்சிக்கிறேன்.............
-
கடவுளிடம் முதுமை அடைய கூடாது ஆயிரம் ஆண்டு வாழவேண்டும் எனவும் எவரும் வேண்டுவதில்லை ...
ஏன் என்றால் இவை கடவுள் நிறைவேற்ற மாட்டார் , இது இயல்பு என தெரியும்
கடவுளிடம் அதைதா இதைதா என கேட்பது அவர் தருவார தரமாட்டாரா என தெரியாமலேயே....
ஆனால் கடமையை பற்றறு எதை விதைக்கிறாயோ , அதுவே உன்னை வாழவைக்கும் ஆனால் எவரும் அதை. மதிப்பதில்லை ...
கேட்காமாலே மக்கள் குறைதீர்த்தார் எம் .ஜி .ஆர் .,
மனிதநேயம் காத்தார் எம் ஜி ஆர்
வள்ளலாய் வாழ்ந்தார் எம் ஜி ஆர்
நான் என்ற கர்வம் இல்லா எம் ஜி ஆர்
அத்தனையும் மக்களுக்கு என எம் ஜி ஆர் வாழ்ந்ததால் அவர் கேடாகாமலே பதவி புகழ் எல்லாம் கிடைத்தது
மனிதனாக வாழ எல்லாம் படைத்த கடவுளுக்கு இனி எப்படி வாழவைக்கவேண்டும் என்பதும் தெரியும் என்பதை உணர்ந்து மனசாட்சி உறுத்தாத செய்கைகளை செய்து கடமையுடன் வாழ்வதே மனிதனின் கடமை ..........
வள்ளலே எங்கள் வாழ்வே எங்கள் கடவுள்....
வாழ்க எம் .ஜி .ஆர் .,. புகழ்........ Thanks wa.,
-
திரையுலகம், மற்றும் அரசியல் உலகம் என்ற இரண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளிலும், களங்களிலும் எவரும் நெருங்க இயலாத முதலிடத்தில் தொடர்ந்து கோலோச்சி வருடம் மாறாமல் அப்படியே உறுதியாக இருந்தார் என்பதும், மறைந்து 32 ஆண்டுகள் ஆக போகும் இந்த நேரம் வரை மக்கள் திலகம், மக்கள் தலைவர் மங்காத புகழ் வேறு பலராலும் போற்றப்படுகிறது ... இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் j j., இருந்திருந்தால்... மக்கள் திலகம் நூற்றாண்டு விழா வைபவங்கள், பேருந்து நிலையங்கள் திருபெயர் சூட்டுதல், ரயில்வே ஸ்டேஷன் எம்.ஜி.ஆர்., திருப்பெயர் நிகழ்வுகள் இப்படி மகோன்னதமாக நடைபெற்றிருக்குமா என நண்பர்கள் சிலர் கேட்டபோது சிந்தனையில் இருந்தேன்...
-
-