-
A proverb in tamil is coming to my memory
my father is not in the basket.
-
ஆதிராம் சார்,
நான் எனது வேலைப்பளுவின் காரணமாக திரிக்கு கொஞ்சநாளாக வர இயலவில்லை. ஆனால் திரியை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா? நான் ஏன் சார் வேறு யார் பெயரிலோ பதிவு போட வேண்டும்? இதற்கு அவசியம் என்ன நேர்ந்தது? எதுவாய் இருந்தாலும் என் சொந்தப் பெயரிலேயே போட்டு விட்டுப் போகிறேன். நான் ஒன்றும் பேடி அல்ல சார். எதற்கு தேவையில்லாமல் என் பெயருக்கு களங்கத்தை உண்டாக்குகிறீர்கள். நீங்கள் இன்று நேரடியாக என் பெயரைப் போட்டு நான்தான் முத்துராமன் என்று எழுத உங்களுக்கு யார் தந்த துணிச்சல்? உங்கள் மனம் போனபடி எது வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாமா? பதிவுகளைப் பாராட்டுவதும், பாராட்டாமல் இருப்பதும் தங்கள் இஷ்டம். அதற்கு நான் ஏன் இன்னொருவர் பெயரில் தங்களைத் தாக்க வேண்டும்? எதுவாய் இருந்தாலும் நேராக பேசி, எழுதித்தான் எனக்குப் பழக்கம். இது திரியில் உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். இதுவரை உங்களைப் பற்றி நான் எனது பதிவில் ஏதாவது கூறியிருக்கின்றேனா? நீங்கள் மற்ற ஹப்பர்களின் பதிவுகளை தேவையில்லாமல் இழித்துரைத்ததற்கு நான் ஒரே ஒரு முறை மட்டுமே பதிலளித்துள்ளேன். அனாவசியமாக தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள். எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு என்னை ஆள்மாறாட்டம் செய்யும் நபர் என்று எழுதியிருக்கிறீர்கள்? இது சட்டப்படி எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா? இதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். இல்லையென்றால் தங்கள் மீது சட்டப்படி எந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை எடுக்கத் தயங்க மாட்டேன். யாரோ முத்துராமன் என்று ஒருவர் எழுதினால் அதை நான் என்று அதுவும் நேரிடையாக எழுதும் அளவிற்கு துணிந்து விட்டீர்கள். எதையும் ஆழ்ந்து நிதானமாக யோசித்து செயல் படுங்கள். என்னை நீங்கள் மிகவும் அவமானப் படுத்தியிருக்கிறீர்கள். இதற்கு நீங்கள் கண்டிப்பாக மன்னிப்பு கேட்டே தீர வேண்டும்.
நெய்வேலி வாசுதேவன்
-
மாடரேட்டர்களின் கவனத்திற்கு
திரியில் என்ன சார் நடக்கிறது? தேவையில்லாமல் ஆதிராம் என்ற நபர் யாரோ முத்துராமன் என்ற பெயரில் நான் அவரைத் தாக்கி எழுதுவதாக என் மீது பகிரங்கமாக பலர் படிக்கும் இந்தத் திரியில் என்னை அவமானப்படுத்தி எழுதியுள்ளார். எதை வைத்து இந்த நபர் இப்படியெல்லாம் எழுதுகிறார்? திரிக்கு உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் என் பெயருக்கு தீராத களங்கத்தை உண்டு பண்ணியிருக்கிறார். இதுவரை பொறுமை காத்தேன். இன்று என் பெயரை பகிரங்கமாக அறிவித்து அவர் திரியில் என்னை அவமானப்படுத்தியிருப்பதால் தாங்கள் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இது சாதாரண விஷயமல்ல. அந்த ஆதிராம் என்ற நபர் திரியில் பகிரங்கமாக இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அந்த ஆதிராம் என்ற நபரின் அர்த்தமற்ற இந்த போக்கிற்கு தாங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? (இது பற்றி மூன்று தினங்களுக்கு முன்னதாகவே மதிப்பிற்குரிய மாடரேட்டர் திரு NOV அவர்களுக்கும் private message அனுப்பியிருக்கிறேன்)
அன்புடன்,
வாசுதேவன்.
-
திரியின் உறுப்பினர்களுக்கு,
தேவை இல்லாமல் ஆதிராம் என் பெயரை இழுத்து அவர் இஷ்டத்திற்கு பிதற்றிக் கொண்டிருக்கிறார். என்னை முத்துராமன் என்று நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். திரியில் உழைத்ததற்கு இதுதான் பலனா? இதற்கும் நீங்கள் அனைவரும் மௌனம் சாதிக்கப் போகிறீர்களா?
அன்புடன்,
வாசுதேவன்.
-
Dear Moderators,
I share Mr. Vasudevan's feelings. I too have come across such pesonal insults on me and did not want to precipate it. It's time you rise to the occasion.
Raghavendran
-
Mr. NEYVELI VASUDEVAN,
MY APPOLOGIES FOR HURTING YOU SEVERELY. BUT IT IS DUE TO A 'PM' I RECEIVED FROM ONE OF THE HUBBERS HERE, stronly sating THAT IS YOU. ON SEEING THE CONVERSATION AS 'THIRUVILAIYADAL' I GOT WILD, AND THE HUBBER'S PM ALSO CAME IN THE SAME TIME, MENTIONING YOUR NAME.
Before to post that matter, I must have clarify the doubt with you by PM. But kobam kannai maraiththu vittathu.
As per the moderator's (Mr. Little Master) instruction, I was away from that unnecessary matter, and was thinking, that guy (Muthraman) was also dropped it. But again he started that issue today, which made me out of patience.
Again I am submitting my "un-conditional appologies" for you, for hurting you, and making damage to your good name in the thread.
Same time, I am not asking you stop your actions against me..., You carry on.
Definitely I will find out who is that 'MUTHRAMAN' and sure, that will be a very bad day for him.
-
அன்பு நண்பர்களே,
திரு வாசுதேவன் அவர்களின் வருத்தத்தினை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். என்னையும் இது போல் தனிப்பட்ட முறையில் தாக்கியதை தாங்கள் அறியாமல் இருக்க மாட்டீர்கள். ஒருவர் ஒரு பெயரில் எழுதுகிறாரோ அல்லது வெவ்வேறு பெயர்களில் எழுதுகிறாரோ அது வேறு விஷயம் ஆனால் குறிப்பிட்டு சிலரைத் தனிமைப் படுத்தி அவர்களை மன வருத்தம் செய்யும் வகையில் எழுதுவதை நாம் தவிர்க்க வேண்டும்.
இப்பதிவினை எழுதும் போது திரு ஆதிராம் அவர்கள் தன்னுடைய வருத்தத்தினைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இனி இது போல் மற்றவர் மனதைப் புண்படுத்தும் வகையில் எழுதமாட்டார் என எதிர்பார்க்கிறேன். தன்னுடைய வருத்தத்தினைத் தெரிவித்துக் கொண்டதற்காக அவருக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
-
ஆதிராம் சார்,
It's ok. leave it. நானும் ஒன்றும் நினைக்க வில்லை. நான் நீங்கள் குறிப்பிட்ட அந்த நபர் இல்லை என புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி! தங்களை மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்ற அகந்தையோ, நோக்கமோ கண்டிப்பாக என்னிடம் இல்லை. என் பெயரை நீங்கள் bold ஆக குறிப்பிட்டு விட்டதால் நான் உணர்ச்சிவசப்பட வேண்டியதாயிற்று. எல்லா மனிதருக்கும் வரும் சந்தேகம் தங்களுக்கும், எல்லா மனிதர்களுக்கும் வரும் உணர்ச்சி வேகம் எனக்குமாக நம் இருவருக்கும் வந்து விட்டது. மன்னிப்போம். மறப்போம். தங்கள் மனம் வருந்தும்படி என்னுடைய பதிவு இருந்திருந்தால் அதற்காக நெஞ்சார நான் தங்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் நடிகர் திலகம் என்னும் குருவி கூட்டில் வசிக்கும் குருவிக் குஞ்சுகள். நமக்குள் பிரிவு பேதம், விரோத மனப்பான்மை வேண்டாம். மறுபடியும் சொல்கிறேன். மற்றபடி நான் சகோதர வாஞ்சையுடன்தான் தங்களைப் பார்க்கிறேன். திரியில் நடிகர் திலகம் பற்றிய கருத்துக்களை துணிவோடு பகிர்ந்து கொள்ளும் தங்கள் பதிவுகளுக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள். நன்றி!
-
டியர் ராகவேந்திரன் சார்,
தொடர்ந்து தாங்கள் அளித்து வரும் தங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் என் உள்ளம் நெகிழ்ந்த நன்றி!
-
ஆதிராம் ,வாசு தேவன் ஆகியோருக்கு நன்றிகள். யாரும் மன வருத்தம் கொள்ளும் படி பதிவுகள் தவிர்க்க படலாம். (நகைச்சுவை உணர்வு கெடாமல்)
ஒருவரே பல பெயரில் எழுதினால் தவறொன்றும் இல்லை. ரசித்து விட்டு கடந்து செல்லுங்கள்.
ராகவேந்திரன் சார், சந்தடி சாக்கில் புகுந்து ஏன் உங்கள் குறைகளையும் சொல்கிறீர்கள்? மற்றவர்களை புண் படுத்தி அதிக பதிவுகள் இட்டு தூண்டி விட்டவரே நீங்கள்தான். இந்த திரியில் mafia groupism தலையெடுக்க காரணகர்த்தா நீங்கள்தான். உங்களை நீங்கள் சீர்படுத்தி கொண்டால் நலம். இதற்கு ,ஆதாரம் வேண்டுமென்றால்,எண் வாரியாக தங்கள் 35 பதிவுகளையாவது ஆதாரம் காட்டுகிறேன். பம்மலார் ,வாசுதேவன் அனைவருக்குமே பிடித்த பதிவாளர்கள். அவர்கள் முதுகில் ஏறி , வடிவேலுவின் பாணியில், நானும் ரௌடிதான் என்று ஜீப்பில் ஏற வேண்டாம்.
தனி தனியாய் ,அத்தனை பதிவாளர்களையும் நண்பர்களாய் ஏற்று ,திரியில் சமத்துவம்,சகோதரத்துவம்,சுதந்திரம் மலர்ந்திட செய்வோம்.
முத்துராமன் சார்,தயவு செய்து எனக்காக ,விட்டு விடுங்கள்.
வாசு சார்,உங்களை ரொம்ப மிஸ் செய்கிறோம். நீங்கள் இன்றி திரி களையாகவே இல்லை. வந்து விடுங்கள்.