மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் அ .இ .அதிமுக
பொதுக்குழு உறுப்பினருமான பெங்களூர் திரு r .s .ராஜன் அவர்கள்
தந்த நிழற் படங்களும் தகவல்களும் .
நன்றி திரு ராஜன் சார்
1976 ஜனவரி இறுதியில் அன்றைய தமிழக அரசு கலைக்கப்பட்ட நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் மைசூர்
நகரில் '' நீதிக்கு தலை வணங்கு '' படபிடிப்பில் இருந்தார்.
2.2.1976 அன்று பெங்களுர் நகருக்கு வந்த மக்கள் திலகம் அவர்கள்
நேரமின்மையால் 3.2.1976 அன்று பெங்களுர் நகரில் அறிஞர் அண்ணா அவர்களின்
7வது நினைவு ஆண்டு அனுசரிக்க முடிவு செய்து அன்று இரவு
முடிவு செய்து பெங்களுர் நிர்வாகிகளுக்கு தகவல் கூறினார் .
இரவோடு இரவாக வாய் மொழி மூலமும் , மிதி வண்டி மூலமும் முக்கியமான மன்ற நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க பட்டது .
3.2.1976 காலை 8மணியளவில் பெங்களூர் - சிவாஜி நகர்
லாவண்யா அரங்கின் அருகில் கிறிஸ்தவ ஆலய மைதானத்தில் அனுமதி பெற்று நினவு அஞ்சலி நிகழ்ச்சி
துவங்குவதற்கு முன் மக்கள் திலகம் சரியாக 8 மணிக்கு வந்து சேர்ந்தார் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களும் கழக தொண்டர்களும் யாருமே
எதிர் பார்க்காத வண்ணம் ஆயிரக்கணக்கில் குவிந்து நினைவு
நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மறக்க முடியாது .
http://i39.tinypic.com/nyzrph.jpg
மைதானத்தில் மக்கள் வெள்ளம் . மரங்கள் மீதும் , கட்டடங்கள் மீதும் மக்கள் அமர்ந்திருந்தனர் .
மக்கள் திலகம் அவர்கள் சரியாக 3 நிமிடம் பேசிவிட்டு
பின்னர் 3 நிமிட மவுன அஞ்சலி செலுத்திய பின்னர்
படபிடிப்புக்கு திரும்பினார் .
http://i42.tinypic.com/20iar1k.jpg
மக்கள் வெள்ளம் சூழ மக்கள் திலகம் விடை பெற்று சென்றார் .