http://i62.tinypic.com/5l2w7o.jpg
Printable View
மக்கள் திலகம் எம்.ஜி .ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " 101 வது நாள் விழா
பிரம்மாண்ட வெற்றி! வெற்றி ! வெற்றி!.
---------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை ஆல்பட் காம்ப்ளக்ஸ், சத்யம் சினிமாஸ் -ல் ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாளை வெற்றிகரமாக கடந்தது.
நேற்று மாலை 6.30 காட்சிகள் இரு அரங்குகளிலும் அட்வான்ஸ் புக்கிங்கில்
அரங்குகள் நிறைந்தன. 1070 பேர் அடங்கிய ஆல்பட் அரங்கில் நேற்றைய மாலை காட்சியினை சுமார் 1400 பேர் கண்டுகளித்தனர். அரங்கின் உள்ளே இருமருங்கிலும் தரையில் உட்கார்ந்தும் , நின்றபடியும் 300பேர்கள் மேல்
காட்சிகளை ரசித்தவாறு இருந்தனர்.
தமிழ் திரையுலகில் டிஜிடல் வடிவில் உருவான படங்களில், 100 வது நாளில் பெரிய அரங்கில் (ஆல்பட் ) திரையிடப்பட்டு , அட்வான்ஸ் புக்கிங்கில் அரங்கு நிறைந்து வழிந்த காட்சி நடைபெற்ற ஒரே படம்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "ஆயிரத்தில் ஒருவன் " தான்.
பேபி ஆல்பட்டில் திரையிட்டிருந்தாலும் அரங்கு நிறைந்திருக்கும் .
ஏனெனில் ஏராளமானோர் டிக்கட் கிடைக்காமல் அரங்கிற்கு வெளியே
ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.
ரூ.85/- டிக்கட் ரூ.200/- க்கு பிளாக்கில் விற்பனை ஆனது.
முன்னதாக காலை 11 மணியளவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சதுக்கத்தில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் மூலம்
சுமார் 1000 பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது.
பிற்பகல் 3 மணியளவில் சிந்தாதிரிபேட்டை மார்கெட் அருகிலுள்ள
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து, அனைத்து எம்.ஜி.ஆர்.
மன்ற அமைப்புகளை சேர்ந்த பக்தர்கள் சுமார். 200 பேர் ஊர்வலமாக
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாளை கொண்டாடும் வகையில் பேனர்களை கைகளில் ஏந்தியபடி ஆல்பட் அரங்கிற்கு அணிவகுத்து
வந்தனர்.
பெங்களூரில் இருந்து சுமார் 50 பெரும், மதுரை, திருச்சி, கோவை, சேலம், தூத்துக்குடி,வேலூர் ஆகிய நகரங்களில் இருந்தும் எண்ணற்ற
பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
ஆல்பட் அரங்கு வளாகம் முழுவதும் அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற
அமைப்புகள் சார்பாக வைக்கபட்டிருந்த பேனர்கள், பதாகைகளால்
விழா கோலம் பூண்டன.
ஆல்பட் அரங்கின் சாலைகள் இருமருங்கிலும் மக்கள் வெள்ளம் கரைபுரண்டது. இதனால் போக்குவரத்து வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டது . போலீசார் மிகுந்த சிரமத்திற்கிடையே கூட்டத்தை
கட்டுபடுத்தினர் . சாலைகள் அ.தி.மு.க. கட்சி கொடிகள், மற்றும் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய சிறிய பேனர்கள் அமைக்கப்பட்டன.
சாலையின் ஒருபுறத்தில் இருந்து சிறிது தூரத்திற்கு , ஆயிரத்தில் ஒருவன் படப்பெட்டி ஊர்வலமாக பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து
வந்தது. அப்போது காரில் வந்திறங்கிய இயக்குனர் திரு.பி.வாசு பக்தர்கள்
வெள்ளத்தில் திக்கு முக்காடி போனார்.அவருக்கு உற்சாக வரவேற்பு
அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வசனகர்த்தா திரு. ஆர். கே. சண்முகம் தனது
குடும்பத்துடன் காரில் வந்திறந்கினார் . அவருக்கும் சிறப்பான வரவேற்பு
தரப்பட்டது. வயது மூப்பின் காரணமாக சிலர் அவரை தூக்கி கொண்டு
அரங்கிற்கு வந்தனர்.
நடிகர் ஹாஜாஷெரிப் , மற்றும் பத்திரிகை தொடர்பாளர் திரு. நிகில்
ஆகியோரும் வந்திருந்தனர். அவர்களுக்கும் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் சில கட்சி பிரமுகர்கள் , முக்கிய பிரமுகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
ஆல்பட் சாலையில் பட்டாசுகள் மாலை 4 மணி முதல் 6 மணி வரை
இடைவிடாது வெடித்த வண்ணம் இருந்தன . அவ்வப்போது வான
வேடிக்கைகள் நடத்தப்பட்டன.
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் வெற்றிவிழாவில் அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளின் பக்தர்கள் மிக்க ஆர்வத்துடனும்
பலத்த உற்சாகத்துடனும் கலந்து கொண்டது விழாவின் சிறப்பம்சம் .
திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் , அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற
அமைப்பு பக்தர்களுடன் அரவணைத்து , அனைத்து பிரமுகர்களையும்
வரவேற்ற வண்ணம் இருந்தார்.
நிகழ்ச்சியில் திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம், இயக்குனர் திரு.பி.வாசு , வசனகர்த்தா திரு. ஆர். கே. சண்முகம் , நடிகர் ஹாஜாஷெரிப் , பத்திரிகை தொடர்பாளர் திரு. நிகில், ஆல்பட் அரங்கின்
மேலாளர் ஆகியோருக்கு பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள்
மூலம் பொன்னாடைகள் போர்த்தப்பட்டு, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
காட்சி தொடங்குவதற்கு முன்பாக, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல
சங்கமும் , இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் இணைந்து அரங்கிற்கு வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
மாலை 5 மணியளவில் அணைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் சார்பாக வைக்கபட்டிருந்த பேனர்களுக்கு அவரவர் சார்பில் பாலபிஷேகம் , மலர்பூஜைகள், ஆரத்திகள், ஆராதனைகள் போன்ற
சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பாக இலவச சேலைகள் வழங்கப்பட்டது.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு மற்றும் அனைத்துலக எம்.ஜி.ஆர்.
பொது நல சங்கமும் இணைந்து அரங்கு ஊழியர்களுக்கு இலவச
துணிமணிகள் வழங்கப்பட்டன.
அனைத்து முக்கிய பேனர்கள் மலர்மாலைகளால் அலங்கரிக்கபட்டிருந்தன. அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம்,
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு இணைந்து அமைத்த பேனர்,
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் வைத்த பேனர், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் வைத்த பேனர் ஆகியன ரசிகர்ளை கவர்ந்தன.
இருப்பினும் பெங்களூர் நகர புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனரின் மலர்மாலைகள், ஜோடிப்புகள் , அனைவரின் கண்களை கவர்ந்தது என்பது விழாவின் சிறப்பம்சம். பெங்களூர் நகர
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் , மிகுந்த சிரமத்துக்கு இடையே
இந்த மலர்மாலைகளை வேனில் கொண்டு வந்தது மிகவும் பாராட்டுக்கு
உரியது.
வெளியூர் பக்தர்கள் பலர் குறிப்பாக திரு. வினோத் , திரு. சி. எஸ்.குமார்
(பெங்களூர்),திரு. கலியபெருமாள் (புதுவை ), திரு. ரவிச்சந்திரன் (திருப்பூர் ), திரு.துரைசாமி (கோவை), திரு. மலரவன் (திண்டுக்கல் ),
திரு. தமிழ்நேசன், போஸ், மணி, குமார், சரவணன் (மதுரை ), திரு.ஜெய்சங்கர் , திரு.குப்புசாமி, திரு. ஜெயப்ரகாஷ், (சேலம்), திரு.கலீல்
பாட்சா (திருவண்ணாமலை ), ஆகியோர், தொலைபேசி /அலைபேசி மூலம் , ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் வெற்றிவிழா பிரம்மாண்ட
வெற்றி காண தங்கள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர்.
அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் சார்பாக அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
50 ஆண்டுகளுக்கு வெளியான ஒரு பழைய படம் டிஜிடல் வடிவில் உருவாகி 100நாள் கடந்து விழா எடுப்பது குறித்து , இந்த பேராதரவினை கண்டு வியப்படைந்து ,பொதுமக்கள் பலரும், பேருந்துகள், வாகனங்களில் சென்றோரும் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்
மறைந்தும் மறையாமல் மக்கள் நெஞ்சங்களில் இன்னும் வாழ்ந்து
கொண்டு இருப்பதாக புகழாரம் சூட்டினர்.
இந்த நிகழ்சிகளை படம் பிடிக்கவும்,பேட்டி எடுக்கவும், ஜெயா டிவி.,
தந்தி டிவி , வசந்த் டிவி , தினமலர் டிவி, சாக்ஷி டிவி மற்றும் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் வந்திருந்து பதிவு செய்தனர்.
ஆயிரத்தில் ஒருவன் டிஜிடல் திரைபடத்தை பல இன்னல்களுக்கு இடையே உருவாக்கி 130 அரங்குகளுக்கு மேலாக முதன்முறையாக
வெளியிட்டு சாதனை படைத்தது இரு அரங்குகளில் 100 நாள் காண
காரணமான திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் அவர்கள் மிகவும்
பாராட்டுக்குரியவர் .
சத்யம் சினிமாஸ், ஆல்பட் அரங்கு உரிமையாளர்கள் இருவருக்கும்
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் -ஒத்துழைப்பிற்கு நன்றி.
1965-ல் ஆயிரத்தில் ஒருவன் சென்னையில் 3 அரங்குகளில் 100 நாள் கடந்த போது அப்போதைய சூழ்நிலையில் விழா எடுக்க முடியாமல்
போனதற்கு , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள்/ரசிகர்கள் இப்போது
பிராயச்சித்தம் தேடி கொண்டனர். இந்த வெற்றி 125 நாள்/150 நாள்
என தொடரட்டும்.
ஆயிரத்தில் ஒருவன் பிரமாண்ட வெற்றியானது ,இன்றைய தொழில்நுட்ப படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் 75 படங்களுக்கு நடுவே (ஆயிரத்தில் ஒருவன் டிஜிடல் படம் வெளியான பின்பு வந்த ) அரிய சாதனை புரிந்துள்ளது . இதற்கு காரணமாக விளங்கிய அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள்/பக்தர்கள்/ரசிகர்கள் பேராதரவு
அளித்த பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!
ஆர். லோகநாதன்.