-
கடவுள் பல்வேறு கால கட்டத்தில் பல்வேறு அவதாரங்கள் எடுத்ததாக நாம் வரலாறு புத்தகத்தில் படித்து இருப்போம் ஆனால் போன நூற்றாண்டில் தான் கடவுள் மனித பிறவியாக பிறந்து கடைசி வரை ஒழுக்கத்தின் இலக்கணமாக வாழ்ந்து தான் சம்பாதித்த அனைத்தையும் ஏழை மக்களுக்கு எழுதி வைத்த எளிமையின் இலக்கணம் அவர் தான் எங்கள் மூன்று எழுத்து கடவுள் எம் ஜீ ஆர்
-
எம் ஜீ ஆர் என்ற தனி ஒரு மனிதனுக்கு எத்தனை பட்டங்கள்
1.மன்னாதி மன்னன்
2.நாடோடிமன்னன்
3.கலை வேந்தன்
4.மக்கள் திலகம்
5.பொன்மனச்செம்மல்
6.புரட்சிதலைவர்
7.இதயக்கனி
8.புரட்சி நடிகர்
9.வசூல் சக்கரவர்த்தி
10.பாரத்
11.பாரத் ரத்னா
12.கொடுத்து சிவந்த கரம்
13.காலத்தை வென்றவன்
14.சரித்திர நாயகன்
15.ஒளிவிளக்கு
16.மீனவ நண்பன்
17.கலியுக கடவுள்
18.நடிக மன்னன்
19.பரங்கிமலை பாரி
20.முப் பிறவி கண்ட முதல்வர்
21.நினைத்ததை முடிப்பவன்
22.எங்கள் தங்கம்,
23.கொடை வள்ளல்
24.பாட்டளிகளின் தோழன்
25.நடிக மன்னன்
-
மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம்
ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் எம்.ஜி.ஆர்., என்ற மாமனிதர் ஏதோ ஒரு வகையில் பிரதிபலித்தார்.
அதனால் தான் மறைந்து இத்தனை ஆண்டுகளாகியும் அவரது புகழ் சிறிதும் மங்கவில்லை. பத்திரிகையாளர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு அன்பு பாராட்டுபவர் அவர். அவரது தேர்தல் சுற்றுப்பயணம் என்றால் உடன் செல்லும் பத்திரிகையாளர் களுக்கு குஷியான அனுபவம் கிடைக்கும். பிரசாரத்தில் எம்.எஸ்.டபிள்யூ 2248 என்ற எண்ணுள்ள வேனை பயன்படுத்துவது எம்.ஜி.ஆர்., வழக்கம். அதைப் பார்த்து பிற கட்சி தலைவர்களும் வேன் பிரசாரத்தை பின்பற்றினர். கோடை வெயிலில் மக்கள் பாதிக்கக் கூடாது என்பதால் எம்.ஜி.ஆர்., மாலையில் பிரசாரம் செய்வார். மக்கள் வெள்ளத்தை கடந்து பிரசாரம் முடிப்பதற்குள் இரவாகிவிடும். வழியில் பெயர் வைக்க தங்கள் குழந்தைகளை நீட்டும் தாய்மார்களிடம் புன்னகையை பரிசளித்து பெயர் சூட்டி உச்சி முகர்வார். அன்றைய பிரசாரம் நிறைவு பெறும் போது அனேகமாக விடிந்து விடும். 1973ல் திண்டுக்கல் லோக்சபா இடைத்தேர்தல் காலம். மதுரையில் தங்கி திண்டுக்கல் பிரசார திட்டத்தை வகுத்தார் எம்.ஜி.ஆர்., மக்கள் வெள்ளம் வழிமறித்து கொடியேற்றம், கொண்டாட்டம் என களைகட்டும். இதனால் ஒவ்வொரு இடத்திலும் தாமதமாகும். அவரது வேனின் பின்னால் இருந்து பத்தாவது இடத்தில் பத்திரிகையாளர்கள் கார் இருக்கும். ஆனால் கட்சியினர் ஆர்வத்தில் காரை முந்திக் கொண்டு செல்வர்.
இதனால் பத்திரிக்கையாளர் கார் பின்நோக்கி சென்று ஒவ்வொரு இடத்திலும் போட்டோ எடுக்க நீண்ட தூரம் ஓடிச் செல்ல நேரிடும். எம்.ஜி.ஆர்., பங்கேற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஆயிரக்கணக்கான மக்கள் மேடை முன் அமர்ந்திருந்தனர். நேரமின்மை காரணமாக பெரும்பாலும் வேனில் இருந்து பேசும் எம்.ஜி.ஆர்., அன்று காத்திருந்த மக்களை ஏமாற்ற விரும்பாமல் மேடை ஏறினார். போட்டோ எடுத்துக் கொண்டிருந்த நான் மேடையிலிருந்து கீழே இறங்க நினைத்த போது கால் வைக்க இடமில்லை. அந்த அளவிற்கு பெண்கள், குழந்தைகள் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தனர். வேறுவழியின்றி ஒருமணி நேரம் காத்திருந்தேன். அவர் பேசி முடிந்ததும் ஒரே கூச்சல். குழந்தைக்கு பெயர் வைக்க நின்ற தாய்மார்களிடம் தள்ளுமுள்ளு. பொறுமையாக அனைவருக்கும் பெயர் சூட்டி வேனுக்கு சென்றார்.
மேடையில் கேமரா உடன் சிக்கிக் கொண்ட நான் கீழே இறங்க முடியாமல் தவித்தேன். நிருபர்களின் காரையும் கண்ணுக்கெட்டிய தூரம் காணோம். எம்.ஜி.ஆர்., வாகனம் அந்த மக்கள் வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த சமயத்தில் என் கேமரா பிளாஷை அவரை நோக்கி அடித்துக் கொண்டே இருந்தேன். அதனை கவனித்து தற்செயலாக எம்.ஜி.ஆர்., திரும்பி பார்த்தார். என்னை மீட்டு அழைத்துச் செல்லுங்கள் என சைகையில் தெரிவித்தேன். புரிந்து கொண்ட அவர் பாதுகாவலர்களை அனுப்பினார். மேடைக்கு வந்து என் கரங்களை பிடித்த பாதுகாவலர்கள் கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆர்., இருக்கும் வேனில் ஏற்றினர். இப்படி பத்திரிகையாளர்களிடம் அன்பு பாராட்டியவர் எம்.ஜி.ஆர்.,
courtesy dinamalar today edition 24.12.14
-
உழைப்பை...உன் புகழை...உன் வெற்றியை..உன் அன்பை...உன் கனிவை..உன் குரலை ...உன் நடையை..உன் பாசத்தை....உன் உதவிகளை..உன் அழகை...உன் அரவணப்பை....யார் மறப்பது... ஏன் மறக்கவேண்டும்... ஒவ்வொரு மணித்துளியும் உன் நினைவுகளே...எங்களை வழிநடத்துகிறது...
சாப்பிடுங்க... உங்களுக்கு என்னவேண்டும் ..இந்த இரண்டு வார்த்தைகள் உனது தாரகமந்திரமாய் இருந்ததாலேயே இன்றும் உன்னை மக்கள் மனசைவிட்டு தூக்காமல் இருக்கிறார்கள்.
-
இறைவனும்_கொலைகாரன்_தான்ஆம்,
இறைவனும் கொலைகாரன் தான்
உணர்கிறேன் இந்நாளில்
இயற்கையின் அழைப்பு
மீறமுடியாத பயணம்
காலம் இழப்பின்
காயத்தை மாற்றும்
காலம் கடந்தாலும்
நீங்காது நினைவுகள்….
தன் கையே கண்ணை,
காயப்படுத்தி கொள்வதைப் போல!!
"உங்களுக்கு உயிரளித்தவனே"
உங்களை கொலை செய்த நாள்!!!!....
"இறந்தாலும்_எங்களுடன்_என்றும்"
வாழ்ந்து கொண்டிருக்கும் ,
"எங்கள்_இதய_தெய்வத்திற்கு "
27-ம் ஆண்டு [24-டிசம்பர்-2014],
நினைவஞ்சலி !!!!!!!!!!!!!
காலனால் கலைந்தாலும், காலத்தால் அழியாதவர்
-
-
http://i1170.photobucket.com/albums/...ps8ef64d01.jpg
நேற்றும்,இன்றும்,நாளையும் ஒப்பாரும்,மிக்காரும் இல்லா
ஒரே தலைவர்.கோடானகோடி தமிழ் நெஞ்சங்களில் என்றும்
வாழும் உலக தமிழர்களின் இதயத்தில் இன்று கடவுளாக இருக்கும் எங்கள் சாமியே..
உங்களை போற்றி வணங்குகிறோம்
-
-
-