Originally Posted by
KALAIVENTHAN
கல்நாயக்,
அத்திக்காய் காய் காய்... பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல். அருமையாக அலசியுள்ளீர்கள்.
‘கரிக்காய் பொறித்தாள், கன்னிக்காய் தீர்த்தாள்...’ என்ற காளமேகப் புலவரின் பாடல் தந்த தாக்கத்தால் கவியரசர் எழுதியது இந்தப் பாடல். இதே போல, ராமச்சந்திர கவிராயர் எழுதிய,
‘கல்லைத்தான் மண்ணைத்தான்
காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான்
எனக்குத்தான் கொடுத்துத்தான் ரட்சித்தானா?’
என்ற பாடலின் தாக்கத்தால் பாவமன்னிப்பு படத்தில் கவியரசர், எழுதிய பாடல், ‘அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்.....’
நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்திக்காய் பாடலில் ஒரு சிறு திருத்தம். 5வது பாராவில் ‘இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏலக்காய்’ என்று உள்ளது. அதில் ‘ஏலக்காய்’ என்பதற்கு பதிலாக ‘ஏழைக்காய்’ என்று இருக்க வேண்டும். உங்களுக்கும் இது தெரிந்திருக்கும். இருந்தாலும் டைப் செய்யும்போது ஏற்பட்ட எழுத்துப் பிழையாக இருக்கும் என்று கருதுகிறேன்.
நிலவு ஒரு பெண்ணாகி பாடலில் ரசிக்க எவ்வளவோ இடம் இருக்கு என்று நீங்களும் சின்னக் கண்ணனும் பேசிக் கொண்டீர்களே. பொன்னூஞ்சல் படத்தில் ‘முத்துச்சரம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு.... ’ பாடலைக் கேளுங்கள். ரசிக்க வேண்டிய இடம் இன்னும் அதிகம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்