http://i68.tinypic.com/a49068.jpg
http://i65.tinypic.com/r2vyvs.jpg
Printable View
யுக புருஷர்!!
-----------------------
எம்.ஜி.ஆரின் சாதனைகள்!!
அவ்ரது திரைத் துறையை எடுத்துக் கொண்டாலே--
முதல் வேற்று கிரகத்தில் எடுக்கப்பட்ட படம்!
முதல்--பகுதி வண்னத் திரைப்படம்!
முதல் முழு நீள வண்னப்படம்!
பெரிய படக் கம்பெனிகள் எடுத்த முதல் வண்ணப்படம்!
நடிகர் சங்கம் ஆரம்பித்தது!
துணை நடிகர்களுக்கு இலவசமாக மதிய உணவு அளிக்கப்பட்டது!
ஒரு நடிகனாக இருந்து ஒரு கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது!
உலக வரலாற்றிலேயே ஒரு நடிகன் முதல்வரானது!
உலக வரலாற்றிலேயே ஒரு நடிகன் மிக உயரிய பாரத ரத்னா விருது பெற்றது!!
இப்படி முதல்--முதல்--என்று அவர் பதித்த முத்திரைகளை முழங்கிக் கொண்டே போகலாம்!!
தற்போது மலர்ந்திருப்பது--
எம்.ஜி.ஆர் பெயரில் மத்திய ரயில் நிலையம்!!
காலம்,, ஒருவருக்கான அங்கீகாரத்தை சரித்திரம் என்னும் மகத்துவத்தில் வைக்கும்!
ஆனால் இதிலும் எம்.ஜி.ஆருக்குக் கொடுக்கப்பட்ட இடமும்,,உயரமும் உலகில் வேறு எவருக்கும் கொடுக்கப்படவில்லை என்பதிலும்--முதல் சாதனையாளராக எம்.ஜி.ஆரே நிற்கிறார்?
எப்படி என்றால்??
ஒருவர் ,,வாழும் காலத்தில் அவரைப் புகழ்பவர்கள்,,காலப் போக்கில் மறந்துவிடுவார்கள்!!
அவரது கடந்த கால சாதனைகள் சரித்திரத்தில் இடம் பெறுமே தவிர--அவரின் சிறப்பு கூடுவதற்கு வாய்ப்பில்லை!!
ஆனால்,,எம்.ஜி.ஆரை எடுத்துக் கொண்டால்--
அவரது புகழை இன்னும் வளர்த்துக் கொண்டே போகிறது வரலாறு!!
ஆங்கிலத்தில் ரசிப்பவர்களுக்காக--இந்த வார்த்தை!!
அன்று ஏழ்மை நிலையில் இன்னலுற்று--
ப்ளாட்-ஃபார்ம் டிக்கட்டுக்கே வழியில்லாதவருக்கு--மிக உயர்ந்ததொரு-
ஃப்ளாட்-ஃபார்ம் கொடுத்து --
ஃப்ளாட்-ஃபார்ம் டிக்கெட்டிலேயே அவர் பெயரைப் பொறித்து---
கௌரவித்திருக்கிறது--சென்ட்ரல் -ரயில் --
ஃப்ளாட்--ஃபார்ம்??
தமிழில் சொல்ல வேண்டுமென்றால்--
அன்று சீட்டு வாங்கி -படம் பார்த்தவர்களின்--
வாழ்க்கைப் பயணத்தை செழிக்க வைத்த--
எம்.ஜி.ஆர் பெயரில் இன்று--
பயணச் சீட்டு???
இந்த சிறப்பின் மூலம்--
தமிழகத்தின் ஒட்டு மொத்த தேர்தல் பிரச்சாரமும்--
தலை நகரின் மத்திய ரயில் நிலையத்திலேயே நடந்து முடிந்திருக்கிறது??
சீட்டில் உள்ள எம்.ஜி.ஆர் பெயரையும்--நிலையத்தின் உள்ளே உள்ள பெயர்ப் பலகையைப் பார்த்தும் மெய் மறந்து--
ரயிலைக் கோட்டை விடுபவர்கள் எத்தனை பேரோ??
பெரும்பாலானவர்கள் வீட்டில் இனி குவியப் போவது-பயணச் சீட்டும்,,நடை மேடை சீட்டும் தான்??
சைதையார்,,ஐசரி கணேஷ்,,எம்.ஜி.ஆர் லதா, முன்னாள் அமைச்சர் திரு வி.வி.சாமினாதன்,, மெகா டி.வி ஆதவன் போன்றோருடன்--இதயக்கனி விஜயன்,,மின்னல் பிரியன்,,பவானி மின்னல் பிரியன்,,திரு மனோகரன்,,ஹயாத்,,கனரா வங்கி சரவணன்,,மூத்த சகோதரர் ஹம்ஸா அமீர் உட்பட நேற்று மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் இந்த வைபவத்தைக் கொண்டாடி மகிழ்ந்தவர்களின் தலைகளை விட அலைகளின் எண்ணிக்கைக் குறைவு என்பதே நம் கருத்து!!
விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து அமர்க்களப் படுத்தியவர் நம் ஓமப்பொடியார்!!
முற்றுப் புள்ளி இல்லா எம்.ஜி.ஆரின் சாதனைகளை---
சற்றுத் தள்ளிக் கூட இனி எவராலும் பெற இயலாது என்பது என் கருத்து!!
உங்கள் கருத்து???.............. Thanks wa., fb.,
இந்து மத காவியங்களை
நோன்றதை விட்டால் உங்களுக்கு வேறு ஒன்னும் தெரியாதுங்களா ?
இந்து மதத்தை கிண்டல் செய்ற நீங்கள் அறிவாளி.
இந்து மதத்தை வணங்குறவன் முட்டாளா ?
தலைவர் னா
எங்கள் புரட்சித் தலைவர் போல எல்லா சமுதாய மக்களையும்
மதங்களையும் கலாச்சாரங்களையும்
மதிக்கிறவன் தான் தலைவன்.மதங்களை கேலி செய்வதை விட்டுட்டு
பின் தங்கிய சமூக மக்களின் கல்வி வளர்ச்சிக்கு உங்கள் பொன்னான நேரத்தை செலவிடுங்கள்......... Thanks wa.,
#புரட்சித் #தலைவருக்கு #புகழ் #சேர்த்த #கவிஞர்கள்
நமது தமிழக ரசிகர்களைத் தனது துடிப்பான நடிப்பாலும் வாரி வழங்கும் வள்ளல் குணத்தாலும் ஆளுமை செய்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவருக்கு எழுதிய பாடல்களில் இலக்கியம் மற்றும் தத்துவம் போன்ற தாக்கங்களால் அவருக்கு பெருமை சேர்த்தவர்கள் கவியரசு கண்ணதாசன் மற்றும் வாலிபக் கவிஞர் வாலி.
கவியரசு அவர்களின் "அச்சம் என்பது மடமையடா",வாலி அவர்களின்" நான் ஆணையிட்டால் " போன்ற பாடல்கள் எம் ஜி ஆர் அவர்களைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றன.
1931 ம் ஆண்டு பேசும் படம் வரத்தொடங்கிய காலங்களில் வசனங்களை விட பாட்டுகளே நிறைந்து வசனங்கள் குறைந்த படங்கள் தான் வெளிவந்தன.
பாடல்களே அதிகம் உள்ள இது போன்ற படங்களைப் பேசும் படம் என்பதை விட பாடும் படம் என்பதே சரியாக இருக்கும்.
ஒரு படத்தில் 50 பாடல்கள் இருந்த நிலை மாறி படிப்படியாக 1960 களில் ஆறு அல்லது ஏழு பாடல்களோடு நின்றன.
இப்படி வானும் நிலவும் போல, நிலமும் நீரும் போல, மலரும் மணமும் போல, காதலனும் காதலியும் போல படமும் பாடல்களும் இணைந்தே இருந்தன.
இந்தப் பாடல்களை கவிஞர், பாடகர், இசையமைப்பாளர் மூவர் கூட்டணி அமைத்துப் பாடுபட்டால் தான் பாடல் வெற்றி பெறும். படமும் வரவேற்பைப் பெறும். இதில் முக்கிய பங்கு வகிப்பது பாடல் வரிகள்.
பாடல் வரிகள் சிறப்பாக இருந்து நல்ல இசையுடன் ஒரு பாடகர் அதை இனிமையாகப் பாடிவிட்டால் அத்தனை பெருமையும் பாடலுக்கு நடித்த நடிகரையே பெருமைப்படுத்தும்.
இப்படிப்பட்ட பாடல் வரிகளை திரைமறைவிலிருந்து எழுதி படத்திற்கே பெருமை சேர்க்கும் பாடலாசிரியர்கள் எத்தனையோ பேர் .
அவர்களில் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களுக்குப் பாடல் எழுதிய கவிஞர் களைப்பற்றிய ஒரு தொகுப்பு.
எம் ஜி ஆருக்கு அதிக அளவில் பாடல் இயற்றியவர்களில் கவியரசு கண்ணதாசன் அவர்கள் முதலிடத்தில் உள்ளார். வாலி அவர்கள் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார்.
கவியரசு அவர்கள் எம் ஜி ஆரின் 48 படங்களில் 218 பாடல்களும் ,வாலி 51 படங்களில் 182 பாடல்களும் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் படங்களுக்கு பாடல் எழுதி உள்ளனர்.
இருவரும் சேர்ந்து எழுதிய படங்கள்
மற்ற கவிஞர்கள் விபரம்
டி.கே.சுந்தர வாத்தியார் - நான்கு படங்கள்.
கே.பி. காமாட்சி சுந்தரம் - மூன்றுபடங்கள்.
கவி சி.ஏ.லட்சுமண தாஸ் - ஜந்துபடங்கள்.
கலைஞர் கருணாநிதி -மூன்று படங்கள் .
சுரதா -நான்கு படங்கள்
முத்துக்கூத்தன் -ஐந்து படங்கள்.
எம்.கே.ஆத்மநாதன்- நான்கு படங்கள்.
ஆலங்குடி சோமு - பதினாறு படங்கள்.
பஞ்சு அருணாசலம் _ மூன்று படங்கள்
உடுமலை நாராயணகவி -ஆறு படங்கள்
தந்சை ராமய்யா தாஸ் -பத்து படங்கள்
கே.டி.சந்தானம் -ஒரு படம்
க்ளவுன் சுந்தரம் -ஒரு படம்.
ரோஷனாரா பேகம் - ஒரு படம்.
பூவை செங்குட்டுவன் -இரண்டு படங்கள்.
புலமைப்பித்தன் -பத்தொன்பது படங்கள்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -ஏழு படங்கள்.
மருதகாசி -பத்தொன்பது படங்கள்
அவிநாசி மணி, நா.காமராசன், முத்துலிங்கம் பாடல்கள் சரியான விபரம் கிடைக்கவில்லை. எனவே பதிவிடவில்லை
கவியரசுவும், வாலிபக் கவிஞர் இருவரும் பாடல் எழுதிய படங்கள்
பதினொன்று............. Thanks wa.,
தலைவர் இராமபுரத்தில் பயன் படுத்திய கட்டில் மெத்தை இது.1987 டிசம்பர் 24 ம் தேதி அன்று தூயில் கொண்டு கடைசி யில் தன் மீளாதூக்கத்தில் உயிர் பிரிந்த கட்டில் இது. தலைவர் பயன்படுத்திய இந்த அறை இரண்டாவது மாடியில் சிறிய அறை தான். நான் சில தலைவர் அபிமானிகளுடன் மறைந்த ஒரிஜினல் எம்.ஜி.ஆர் விஜயன் அவர்களின் மூலம் அந்த கட்டிலில்1997 ம் ஆண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். ஜானகி அம்மாள் மறைவுக்கு பின் நடந்தது. தலைவர் வாழ்ந்த எளிமை அன்று பார்க்கும் போது எங்கள் அனைவருக்கும் கண்ணீர் வந்து விட்டது. இப்படி ஒரு தலைவர் நம் தமிழ் மண்ணில் ஏழேழு ஜென்மத்திலும் தமிழகத்திற்கு கிடைக்க மாட்டார் என்று எனக்குள்ளே பேசிக்கொண்டேன். 22 .ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இன்று தலைவர் வாழ்ந்த இராமபுரத்தோட்டம் அங்கு வசிப்பவர்களுக்கு ஏற்றாற் போல் உள் அறைகள் மாற்றபட்டு விட்டன... தலைவர் வாழ்ந்த வீட்டை அப்படியே ஏதும் மாற்றமல் இருந்தால் இன்றைய தலைமுறைகளின் பார்வையில் பட்டால் இப்படி ஒரு தலைவர் இவ்வளவு எளிமையாக வாழ்ந்திருக்கிறார் என்று வாழ்த்த தோன்றும் . மேலும் நான் பதிவிட்டால் பல உண்மைகளை சொல்லத்தோன்றும் ஆகையால் இத்துடன் நன்மையாகவே முடித்து நிறைவு கொள்கிறேன். நன்றி! உரிமைக்குரல் ராஜு......... Thanks wa.,
எங்கு நோக்கினும் புரட்சித்தலைவரின் சக்தியப்பா... அது எம்.ஜி.ஆர். என்னும் மூன்றெழுத்து திரு நாமத்துடன் எங்கும் முழுங்குதப்பா..... நாடோடி மன்னன் மூலம் நல்லாட்சி தந்த நல் முதல்வரின் திருப்பெயர் எங்கும் கொடிகட்டி பறக்குதப்பா... வீணர்களின் பொய் முகத்தை கிழீத்து இன்று இந்திய ரயில் நிலைகளில் எல்லாம் உலகின் மும்மொழிகளில் (.தமிழ் இந்தி ஆங்கிலம்) நம் தலைவரின் பெயர் புரட்சியுடன் ஒலிக்குதப்பா.... முப்பதாண்டு காலம் கடந்த பின்னும் காலத்தை வென்ற முதல்வர் எம்.ஜி.ஆரின் திருமந்திரம் 125 கோடி மக்கள் மூலம் ரயில் நிலையங்களில் உச்சரிக்கபடுகிறதப்பா..இந்திய வரலாற்றில் எந்த ஒரு தனி மாநில முதல்வருக்கு கிடைக்காத புகழை பெற்ற முதல்வர் நம் தங்க தலைவரப்பா.... மாநிலம் கொண்டாடுவதை காட்டிலும் இன்று மத்திய அரசும் நம் தலைவருக்கு சென்ட்ரல் ரயில் மூலம் புகழ்பாடுகிறதப்பா... இந்திய வரலாற்றில் உண்மையும் நேர்மையும் அழியாது எற்பதற்கு எடுத்துக்காட்டாக அகிலம் புகழ்பாடும் அன்பு தலைவருக்கு தமிழகமும் தலை வணங்கி மகிழ்கின்றதப்பா.... அன்று : பாரத் விருது மூலம் 1972.ல் உலக புகழ் பெற்று மக்கள் திலகமாக பவனி வந்தார். நேற்று : பாரத ரத்னா மூலம் 1988 ம் ஆண்டு பார் முழுவதும் புகழ் பெற்றார். இன்று :2019 ல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மூலம் தினமும் மக்கள் உச்சரிக்கும் புனித பெயராக புரட்சித் தலைவர் எம் ஜி.ஆர் என்று டிக்கட் வாங்கும் பொழுதெல்லாம் அழைக்கப் படுகிறாறப்பா...... எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை! அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை நினைத்தால் வாழ்கையில் தோல்வியில்லை..... ஆம் ! நம் புரட்சித் தலைவருக்கு என்றுமே ஆண்டுகள் பல கடந்தாலும் வெற்றி தான்.! அப்பாடலே.மீண்டும் உயீர் பெற்றுவிட்டது. நம் இதய தெய்வத்திற்காக.... வணங்குவோம் வள்ளலை! 👍 👌 💐 நன்றி... உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,
தினமலர் -08/04/19
http://i63.tinypic.com/o0c8cy.jpg
தினகரன் -08/04/19
http://i68.tinypic.com/124y81c.jpg