http://i58.tinypic.com/rmicys.jpg
Printable View
திரை உலக சக்கரவர்த்தி மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களின் மகத்தான படைப்பு "ஆயிரத்தில் ஒருவன்"- 101 அருமை வெற்றிவிழாவை, பிரம்மாண்ட விழாவாக உறுதுணையாக விளங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கு இதயமார்ந்த நன்றி...
To Day Malai Malar
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 100–வது நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் 1965–ல் வெளியானது. தற்போது இப்படத்தை டிஜிட்டலில் புதுப்பித்து திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் மீண்டும் ரிலீஸ் செய்தார்.
தமிழகம் முழுவதும் 100–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. சென்னை சத்யம் மற்றும் ஆல்பட் தியேட்டர்களில் ஆயிரத்தில் ஒருவன் 100 நாட்கள் தாண்டி ஓடியது. இப்படத்தின் 100–வது நாள் விழா ஆல்பட் தியேட்டரில் கொண்டாடப்பட்டது.
சிந்தாதிரிபேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ரசிகர்கள் மாலை அணிவித்து விட்டு தியேட்டருக்கு ஊர்வலமாக வந்தனர். தியேட்டர் வாயிலில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. இனிப்பும் வழங்கப்பட்டது. பின்னர் தியேட்டரில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
டைரக்டர் பி.வாசு, நடிகர் மயில்சாமி, பின்னணி பாடகி பி.சுசீலா, வசனகர்த்தா, ஆர்.கே.சண்முகம், எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி, திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பில் பிரதீப், உரிமைக்குரல் ராஜு, அண்ணாநகர் பகுதி ஜெயலலிதா பேரவை பொருளாளர் டி.ஈஸ்வரன், சைதை கலை உலக தலைமை எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் சைதை எஸ்.மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்று படம் பார்த்தனர்.
http://i57.tinypic.com/21159uw.jpg
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 100–வது நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நடித்து கடந்த 1965ஆம் ஆண்டு வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்த படத்தை திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் டிஜிட்டலில் ரிலீஸ் செய்தார். இந்நிலையில் டிஜிட்டலில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சென்னை சத்யம் மற்றும் ஆல்பட் தியேட்டர்களில் 100 நாட்கள் தாண்டி ஓடியது.
இதையொட்டி எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இந்த நூறாவது நாள் விழாவை ஆல்பட் தியேட்டரில் நேற்று மிகப்பெரிய அளவில் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த விழாவில் இயக்குனர் பி.வாசு, மயில்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர். நேற்றைய தினம் பல ரசிகர்கள் இந்தப்படத்தை காணவந்து டிக்கெட் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற காட்சியையும் காண முடிந்தது.