Originally Posted by
esvee
சன் லைப் தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் ''என் தங்கை '' [1952 ] படம் பார்த்தேன் .
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை மக்கள் திலகத்தின் வெண்கல குரலில் நிதானமான வசனத்துடன் பாச பிணைப்புடன்
நடித்த காட்சிகள் மூலம் தன்னுடைய நடிப்பாற்றலை வெளிபடுத்தியுள்ளார் .மருதநாட்டு இளவரசி , மந்திரிகுமாரி , சர்வதிகாரி , மர்மயோகி போன்ற படங்களில் எரிமலையாக நடித்த அவரா இப்படி சாந்தமாக , சோகமாக நடித்து இருக்கிறார் என்றால் வியப்பாக உள்ளது
.சமூக படங்களில் அவர் உருவாக்கிய தாக்கம் பின்னாளில் ஒரு அரசியல்
மாற்றத்தையே உருவாக்கி , ஆட்சி மாற்றங்கள் வரை சென்று ,வரலாறு கண்டது மாபெரும் சாதனை .