விகடன் மேடை - பி.சி.ஸ்ரீராம் பதில்கள்
வாசகர் கேள்விகள் - கி.ராமலிங்கம், விருத்தாச்சலம்.
'' 'அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் 'அப்பு’ கமலின் குள்ள ரகசியம் என்ன? இப்போதாவது சொல்லுங்களேன்!''
''கமல் கால் மடிச்சு நடிச்ச சில இடங்கள் போக, பல இடங்கள் கேமரா ட்ரிக். கமல் ஃப்ரேம் ஓரத்தில் இருப்பார். நான் தேவைக்கு அதிகமாகவே சர்க்கஸ் அரங்கத்தின் கலர் கலரான கேலரியை ஃப்ரேமில் காட்டுவேன். 'அங்கே ஏதோ இருக்கு’னு உங்க பார்வை திசை திரும்பும் சமயம், கமலோட காலை, அவரோட நடவடிக்கையை உன்னிப்பாக் கவனிக்க மாட்டீங்க. இந்த மாதிரி பல ஃப்ரேம்களில் ரசிகர்களை ஏமாத்தினோம். படம் முழுக்க இப்படி ரசிகர்களை நம்பவைக்க கமல் ரொம்ப மெனக்கெட்டார். அந்தப் படத்தின் மேக்கிங்கை மட்டும் தனி புத்தகமாவே எழுதலாம். 'அப்பு’ கமலின் போர்ஷன் மட்டும் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஷூட் பண்ணோம். இப்போ அந்தப் படத்தை பொறுமையா ஃப்ரீஸ் பண்ணிப் பண்ணிப் பார்த்தா நீங்களே பல கேமரா ட்ரிக்ஸை சுலபமாக் கண்டுபிடிச்சிருவீங்க. இப்போ டெக்னாலஜி எதையும் சாத்தியப்படுத்தும் நிலைமையில் இங்கே எல்லாம் சாத்தியம். ஆனா, அப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாத அந்த நாட்களிலேயே கமல் அட்டகாசப்படுத்தியதுதான் ஆச்சர்யம்!''
http://www.youtube.com/watch?v=qXoNySZ8nvI