http://i36.tinypic.com/29o1s75.jpg
Printable View
http://youtu.be/ek-avfS3Z_o
என்றும் ஸ்டைல் கிங் எம்.ஜி.ஆர் தான். ஆப்பிளைத் தூக்கிப் போட்டு கத்தியால் குத்திப் பிடிக்கும் இந்த ஸ்டைலுக்கு நிகர் உண்டா. எவ்வளவு பயிற்சியும் முயற்சியும் தேவை. அழகாகவும் அனாயாசமாகவும் செய்திருக்கிறார் வாத்தியார்.
வினோத் சார்,. உரிமைக்குரல் மூவிஸ் பற்றிய தங்களது தகவல்களுக்கு நன்றி. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
ரவிச்சந்திரன் சார் ஏவி.எம்.சரவணன் பற்றிய மேஜர் தாசன் அவர்களது கட்டுரை அருமை. ஆனால் அதில் ஒரு சிறு பிழை பொங்கலுக்கு அன்பே வா படத்தை வெளியிட ரூ.25000 அதிகமாகத் தர வேண்டும் என்று கேட்டவர் எம்.ஜி.ஆர் அல்ல. ஆர்.எம்.வீரப்பன். தனது நான் ஆணையிட்டால் படத்தை தாமதித்து அன்பேவா படத்தை பொங்கலுக்குத் திரையிடுவதற்காக அவர் தான் ரூ.25000 கேட்டதாக ஏவி.எம். சரவணன் அவர்கள் பல கட்டுரைகளில் தெரிவித்துள்ளார்.
சினிமினி ப்ளாக்ஸ்பாட் இணையதளத்திலிருந்து
எம்.ஜி.ஆரின் மனதில் ஆழமாக பதிந்த பாட்டி
யானைக்கவுனியில் எம்.ஜி.ஆர். குடியிருந்த நேரத்தில் காலையில் முருகன் டாக்கீஸ் உரிமையாளர் பரமசிவ முதலியாருடன் வோக்கிங் போவது வழக்கம். அப்படி செல்லும் வழியில் ஒரு பாட்டியம்மாள் புட்டு சுட்டு வியாபாரம் செய்வார். தூரத்திலிருந்து வரும் போதே வாசம் மூக்கைத் துளைக்கும். ஒரு நாள் அந்த அம்மாளிடம் புட்டு வாங்குவதற்காக சென்ற எம்.ஜி.ஆர். அவர் விலையை கூறியவுடன் “மறுநாள் வாங்கி கொள்வதாக” கூறி நகர்ந்திருக்கிறார்.
“ஏன் வேண்டாம் என்று சொல்லுகிaர்கள் என்று கேட்ட பாட்டியிடம் “தனக்கு மட்டுல்ல.... எல்லாருக்கும் சேர்த்து வாங்க வேண்டும் என்றும் அந்தளவுக்கு தன்னிடம் காசு இல்லை” என்றும் பதில் அளித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். “பரவாயில்லே! நாளைக்கு வரும் போது காசு குடு” என்று புட்டை பொட்டலம் கட்டிக் கொடுத்த பாட்டியிடம், “நாளைக்கு நான் காசு கொண்டு வராம உன்ன ஏமாத்திட்டா என்ன பண்ணுவே” என்று கேட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
“காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது, வரலேன்னா உங்க மூணு பேரு பசியைத் தீர்த்த புண்ணியம் வருது. தருமக் கணக்குல சேர்ந்துடும்” என்று பாட்டியின் பதில் எம்.ஜி.ஆர். மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. சொன்னபடி மறுநாள் காசைக் கொடுத்துவிட்டார். பாட்டியம்மாவும் சில நாட்கள் கழித்து இடம் மாறி சென்றுவிட்டார்.
பல வருடங்கள் கழித்து தான் முதலமைச்சரான பின் அந்தப் பாட்டியம்மா பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர். அவர் வீடு தேடிச் சென்று பொருளுதவியும் செய்திருக்கிறார்.
மக்கள் திலகம் நடித்த ஆர் ஆர் பிக்சர்ஸ் ''பணக்கார குடும்பம் ''
24.4.1964- 24 -4-2013 - பொன்விழா ஆண்டு உதயம் .
http://i35.tinypic.com/2ms53x4.jpg
1964ல் மக்கள் திலகத்தின் நான்கு மாபெரும் வெற்றி படங்கள் .
1. பணக்காரகுடும்பம்
2. வேட்டைக்காரன்
3. தெய்வத் தாய்
4. படகோட்டி .
சென்னை சித்ரா - பிராட்வே - மேகலா -100 நாட்கள் ஓடியது . மதுரை - திருச்சி -சேலம் -கோவை நகரங்களில் 100 நாட்கள் ஓடியது .
A SUPER SCENE FROM MADURAYAI MEETA SUNDARAPANDIYAN -1978
MAKKAL THILAGAM - P.S.VEERAPPA
http://i38.tinypic.com/fc7mts.jpg