டியர் ரவி சார்,
எல்லோரும் ஞான ஒளியை அக்குவேறு, ஆணி வேறாக அலசி ஆராய்ந்தபிறகும், பிடிவாதமாக தாங்கள் அதனை மீண்டும் தொடருவதன் காரணம் புரிகிறது. கண்டிப்பாக வாசுதேவன் சாரின் 4000-வது பதிவு விரைவில் வரும். தொடருங்கள்.
Printable View
டியர் ரவி சார்,
எல்லோரும் ஞான ஒளியை அக்குவேறு, ஆணி வேறாக அலசி ஆராய்ந்தபிறகும், பிடிவாதமாக தாங்கள் அதனை மீண்டும் தொடருவதன் காரணம் புரிகிறது. கண்டிப்பாக வாசுதேவன் சாரின் 4000-வது பதிவு விரைவில் வரும். தொடருங்கள்.
யாரு மாத்து முகாமு வினோத்து சாரா.
யப்பா நீயாச்சும் வெல்கம் குடுத்திகினியே.இன்னாபா கேட்டுகின எனக்கு வயசு இன்னான்னா.65 அ மூனால பெருக்கிகினு அத்த நாளால வகுத்துக்குனு அத்தோட பன்னெண்ட கூட்டிக்கோ.அப்பால அத்தோட இன்னும் நுப்பத சேத்துக்கோ.அதுல தொன்னூறக் கழிச்சுடு கழிச்சிகினியா.அய்ய கணக்குல இன்னா இவ்வளவு வீக்கா கெடக்குற. கூட்டிகழிச்சியாந்தா வருது பாரு ஆன்சரு.அதான்பா நம்ப வயசு. அப்புறம் இன்னா கேப்ப.சைசயா. ஊரு இன்னான்னு கேட்ட இல்ல.ஊரு கோவேரு.
ஒத்த ஆளாப் போராடிக்குனு நைசா எம்சியாரு திரிய ஆறுக்குக் கொண்டாந்தது வுட்டுபுட்டியே. நெசமாவே ஒழைப்பாளிதான் கண்ணு நீயி.விடிகாத்தால காப்பி குடிக்கிறியோ இல்லியோ மறக்காம போஸ்ட்டு போட்டுடுற பாத்தியா.அதான் கண்ணு இன்வால்வ்மேன்ட்டு.இங்க இருக்கவங்க நெறையா உன்கிட்ட கத்துக்கணும் கண்ணு.அய்ய என்னையயும் சேத்துத்தான் சொல்லிக்கினேன்.அக்காங்.
எங்க ஊர்ல ஒரு தபா காங்கிரஸ் கொடிஏத்த சிவாஜி வந்தாரு.ஒரே கூட்டம்.நானும் என்னோட பிரண்டும் பாக்க போயி இருந்தோம்.சிவாஜி சொம்மா லட்டுகணக்கா ஷோக்கா சந்தனக்க்கலரு ஜிப்பா போட்டுகினு சம்முன்னு இருந்தாரு என் பிரண்டு செம வெறிப்பய.சிவாஜின்னா உசுர விட்ருவான்.சிவாஜி கொடிய ஏத்திபுட்டு அல்லாரையும் பாத்து கைஆட்டினாரு.அப்புறம் அவுரு கையிலே ஆப்பிள் குடுத்தாங்க.அவுரு ஒவ்வொன்னா ஜனங்களப் பாத்து தூக்கிப் போட்டாரு.அத்தப் புடிக்க நீனான்னு போட்டி.என் பிரண்டு கொரங்கு மாறிதாவி எப்பிடியோ ஒரு ஆப்பிள லபக்குன்னு புடிச்சிட்டன்.அவன் மூஞ்சியில அப்பிடிஒரு சந்தோசம்.கொஞ்சநாலு அந்த ஆப்பிள பாத்துபாத்து வச்சிருந்தான்.அந்த ஆப்பிள்அப்புறம் கெட்டுபோச்சு.அன்னைக்கு முச்சூடும் கொழந்தமாறி அழுதான் பாருக.எனக்கே ரொம்ப கஸ்டமாபோச்சு.தேத்தறதுக்குள்ள போறும் போறும்நு ஆயிடுச்சுபா.
Kiruba sir -
கிருபா சார் - உங்கள் அவதாரம் " எல்லாமும் நானாக இருப்பது" - டக்கர் - என்னத்த எழுதுவதென்றே புரியலே சார் - குந்திக்கொண்டு எழுதினாலும் , நடந்துகொண்டே எழுதினாலும் , மெய்யாலுமே உங்களை மிஞ்ச முடியாது - இங்கே மற்றவர்கள் பாராட்டுகளுக்காக பதிவுகளை போடுவதை விட , நம் மன நிம்மதிக்காக போடுவதே நல்லது - நடு நடுவே சிலர் பாராட்டினால் சரி , இல்லையென்றாலும் , நம் பனி தொடரட்டும் - உங்கள் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் - போட்டுகிட்டே போ கண்ணா - பேஜாரு பண்ணாமல் - .அக்காங்.
Ravi
:smile2::smokesmile:
எல்லாத்துக்கும் ஆசைபடு - Part 1 ஞான ஒளி -
ஒரு சின்ன அலசல் - தொடர்கின்றது
யாரும் இதுவரை திட்டாததால் , என் பதிவு ஓர் அளவுக்கு சுமாராக உள்ளது என்ற அற்ப சந்தோஷத்தில் பதிவை தொடர்கிறேன் - இதன் நடுவில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் , பகவத் கீதையின் குரல் ... இதன் நடுவே யும் அந்தோணி அடிக்கும் மாதா கோயிலின் மணியும் சத்தமாக கேகட்டுமே !!
Nadippu :
நடிப்பை முன்று விதமாக பிரிக்கலாம் - 1. இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று ஒரு வகை , 2. இப்படியும் நடிக்கலாம் என்று ஒரு வகை 3. எப்படியும் நடிக்கலாம் என்று ஒரு வகை. இரண்டாவது , முன்றாவது பிரிவை சார்தவர்களை உலகம் என்றோ மறந்து விட்டது , மறந்தும் விடுகின்றது . இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று நடத்தி காண்பித ஒருவனை உலகம் இன்றும் , என்றும் பாராட்டுமே அதுதான் இந்த படத்தில் நாம் பார்ப்பது - பல நூறு ஆண்டுகள் ஆனாலும் , இந்த படம் பேசப்படும் , வாசு , முரளி சாரை போன்றவர்கள் வருவர் - அவர் மேன்மையை மேலும் நிலை நாட்டுவர் .
காதலனாக ஒரு கலக்கு கலுக்குவார் - இன்னும் காதலிக்க மாட்டாரா என்று இருக்கும் - அப்பா பொறுப்பு ஏற்றபின் , ஒரு கடமை உணர்ச்சி தென்படும் - மகளின் மீது வைத்த பாசம் , படம் பார்க்கும் எல்லோரையும் கட்டி போட்டுவிடும் - தாத்தாவாக நடிக்கும்போது - ஒரு மனிதனின் பலவீனம் , கோபம் , இயலாமை வெளிப்படும் - ஒரே படம் , ஒரே மனிதன் , பல பல கூடுகளில் --- முள்ளை முள்ளால் எடுக்கும் பாண்பு - நண்பனை விரோதியாக எடுத்துகொள்ளவேண்டிய நிர்பந்தம் --- இறைவனையே திட்ட வேண்டிய நிலை - "கேட்கிறேன் பலமுறை தரவில்லை " ---- சான்ஸ் ஏ இல்லை
தொடரும்
எல்லாத்துக்கும் ஆசைபடு - Part 1 ஞான ஒளி -
ஒரு சின்ன அலசல் - தொடர்கின்றது
ஒரு மதத்தை சான்றிய கதை : இருந்தாலும் , யார் மனதையும் நோக வைக்காமல் வெற்றி கண்ட கதை - முருகனும் உண்டு , ஏசுவும் உண்டு , மாரியும் உண்டு , மேரியும் உண்டு - எல்லா நாடகங்களும் படம் ஆனபின் வெற்றி கண்டதில்லை - ஆனால் இந்த படம் கண்ட வெற்றி இனிமேலும் ஒரு படம் பெருமா என்றால் கண்டிப்பாக முடியாது என்று தான் சொல்லவேண்டும்
There is a saying : " One good thing about STONES ! : They come in our way as hurdles ; once we pass them , they automatically become our MILESTONES !!
பல படங்கள் போட்டி இட்ட நேரம் - எல்லா கற்களையும் கடந்து வெற்றி கண்ட படம்
Padalgal :
எல்லா பாடல்களும் தேனிலும் இனியவை - தமிழை போல தித்திப்பவை - நான் மிகவும் விரும்பி கேட்பவைகள் : " அம்மா கண்ணு " ; "தேவனே"
Selection of Co Stars - brilliant -
மாதவன் சாரை எவளவு புகழ்தாலும் தகும் - எலந்த பலம் , எலந்த பலம் - ஆங் --- , சந்திபோமா , சந்திபோமா என்று பாடிய நடிகையை -" அம்மா கண்ணு" வில் பட வைத்து நடிக்கவும் வைத்து , இந்த ஜோடி என்னும் பல படத்தில் நடிக்க மாட்டார்களா என்று ஏங்க வைத்து விட்டார் எல்லாம் இன்ப மயம் என்று சொல்ல வைத்த படம் - சொல்லிகொண்டே போகலாம் -
ஆனால் வாசு சார் வரும் நேரம் ஆகி விட்டதால் , நான் சற்றே ஒதுங்கி கொள்கிறேன் - பதிவை படித்த நல்ல உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி - நன்றாக அலசின ஒரு படத்தை மீண்டும் அலசுவது என்பது சுலபமான காரியம் அல்ல - ஒரு சிறு முயற்சி - இந்த பதிவு மூலம் பிரிந்தவர்கள் எல்லோரும் மீண்டும் வருகை தந்து இந்த திரியை ஒரு MILESTONE ஆக்குவார்கள் என்ற திடமான நம்பிக்கை
முற்றும்
அன்புடன் என்றும் உங்கள்
:):smokesmile:
ரவி
நினைவுகள் அழிவதில்லை Article in Tamil - Hindu
http://tamil.thehindu.com/opinion/co...cle5360574.ece
//எல்லா பாடல்களும் தேனிலும் இனியவை - தமிழை போல தித்திப்பவை - நான் மிகவும் விரும்பி கேட்பவைகள் : " அம்மா கண்ணு " ; "தேவனே" // இன்னும் ஒரே ஒரு பாட்டு தானே இருக்கு ரவி..அதை விட்டுப்புட்டீரே..ம்ம் நீர் யூத் இல்லை போல..(சாரதா பாட்டு)
*
ஞான ஒளி- நாடகமாக வந்து திரையில் மலர்ந்த படங்களில் ஒன்று..அதன் நாடகக் கதை வசனம் கல்கியில் வந்து யாரிடமிருந்தோ பைண்ட் பண்ணப்பட்ட புத்தகமாகப் படித்திருக்கிறேன்.. நாடகத்தில் அந்தோணியாக மேஜர் சுந்தர்ராஜன்..! ப்ளாக் அண்ட் ஒய்ட் புகைப்படங்களில் பார்த்தால் அசப்பில் ந.தி போலவே இருக்கும்..
*
ஸ்வாட் அனலிஸிஸ்னுல்லாம் எழுதிட்டு டபக்குன்னு ஞான ஒளிக்குப் போய்விட்டீர்..எழுதுங்க எழுதுங்க..:)
சந்திப்போமா பாடினது விஜய நிர்மலா இல்லை..எல்.விஜயலட்சுமி என நினைவு..:) நடத்துங்க..
*
பாவம் வாசு சாருக்கு என்ன ப்ரச்னையோ..
கலக்கும் புயலால் கலங்கிய மேகம்
வழக்கமாய் வானில் கலங்கி- பலமுடன்
பெய்தே நனைப்பதுபோல் போடுவார் வாசுவும்
நெய்த பதிவினைத் தான்
[QUOTE=chinnakkannan;1091358]//எல்லா பாடல்களும் தேனிலும் இனியவை - தமிழை போல தித்திப்பவை - நான் மிகவும் விரும்பி கேட்பவைகள் : " அம்மா கண்ணு " ; "தேவனே" // இன்னும் ஒரே ஒரு பாட்டு தானே இருக்கு ரவி..அதை விட்டுப்புட்டீரே..ம்ம் நீர் யூத் இல்லை போல..(சாரதா பாட்டு)
*
- Saar
*
ஸ்வாட் அனலிஸிஸ்னுல்லாம் எழுதிட்டு டபக்குன்னு ஞான ஒளிக்குப் போய்விட்டீர்..எழுதுங்க எழுதுங்க..:)
சந்திப்போமா பாடினது விஜய நிர்மலா இல்லை..எல்.விஜயலட்சுமி என நினைவு..:) நடத்துங்க..
*
====
சார்
- அம்மா கண்ணுவிடம் இல்லாத காதல் ரசமா அந்த நீங்கள் சொன்ன இன்னமொரு பாட்டில் இருக்கும் ?? இதை வைத்து நீங்கள் இப்படி முடிவு எடுக்கலாம் நான் யூத் இல்லை என்று ? - உங்கள் தீர்ப்பை மாற்றி எழுதுங்கள்
SWOT க்கு response இல்லாததினால் தான் இந்த திரியில் ஞான ஒளி வரவேண்டும் என்று இப்படத்தை தேர்தெடுத்தேன் - எப்பதான் சார் நானும் உங்களை போல , கிருபா சாரை போல நன்றாக எழுதுவது ? அந்த வாயிப்பை நானேதான் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் ..
சந்திப்போமா பாடினது -எல் ஆர் ஈஸ்வரி - நடித்து விஜய்நிர்மலாவேதான் - 100 % Sure
Ravi
:smile2::smokesmile: