-
கடந்த அக்டோபர் மாதம் நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு சில ரசிகர்களால் இதய ராஜா என்ற இதழ் வெளியிடப்பட்டதும், அதன் விற்பனை மூலம் கிடைக்கும் தொகையை மண் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நலனுக்கு வழங்கப்படுகிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டிருந்தோம். அந்த இதழை படித்து பார்த்த போது பளிச்சென்று கண்ணில் பட்டது ஒரு விளம்பரம். அது ஞான ஒளி படத்தின் விளம்பரம்.
[html:6bd24a9878]
http://farm6.static.flickr.com/5161/...cc1f8d91_z.jpg
[/html:6bd24a9878]
நடிகர் திலகம்தான் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை பலமுறை பல ஆதாரங்களோடு சொல்லியிருக்கிறோம். இதோ மேலும் ஒரு சாதனை சான்று.
நடிகர் திலகத்தின் BO சாதனைகளைப் பற்றிய ஆதாரங்களைப் பற்றி பேசும் போது இப்போதும் சிலர் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள் அல்லது, வேறு சிலர் படங்களை விட சிவாஜி படங்கள் வசூல் சாதனை புரிந்தது என்பதை நம்ப முடியவில்லையே என்பார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லும் முத்தாய்ப்பான ஆதாரமாக இந்த விளம்பரம் உதவும் என நினைக்கிறேன்.
விளம்பரமே self explanatory என்றாலும் சில தகவல்கள். இந்த விளம்பரம் 1972 ஏப்ரல் மூன்றாம் வாரம் சென்னை பதிப்பில் வெளியானது. சென்னை நகரிலும் சுற்றுப்புறங்களிலுமாக நடிகர் திலகத்தின் சுமார் 20 படங்கள் திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருந்த சூழலிலும் ஞான ஒளி சென்னை பிளாசா திரையரங்கில் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளில் ஓடியிருக்கிறது [ஞான ஒளி மட்டுமே பிளாசா தவிர மேலும் 4 திரையரங்குகளிலும் ஓடிக் கொண்டிருந்தது]. இது தவிர சென்னை சபாக்கள் தங்கள் உறுப்பினர்களுக்காக மிக அதிகமாக சிறப்பு காட்சிகள் [55 காட்சிகள்] நடத்திய படமும் ஞான ஒளிதான். இவற்றையெல்லாம் தாண்டி இந்தப் படம் இப்படிப்பட்ட சாதனை புரிந்திருக்கிறது என்றால் நடிகர் திலகத்தின் BO பவருக்கு இதை விட ஆதாரம் வேண்டுமா என்ன?
வழக்கம் போல் விளம்பர பிரதியை ஸ்கேன் செய்து அனுப்பியது அன்பு சகோதரர் சுவாமிநாதன் அவர்கள்தான். அவருக்கு நமது மனமார்ந்த நன்றி.
அன்புடன்
-
"அடாது மழை பெய்தாலும் விடாது வித்யாபதியை வரவேற்போம்"
தற்பொழுது திண்டுக்கல் நகரின் என்.வி.ஜி.பி. திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, கலைமகளின் மானுட வடிவமான நமது நடிகர் திலகத்தின் "சரஸ்வதி சபதம்" திரையிடப்பட்டு, கடும் மழையிலும் வசூல் மழை பொழிந்து, பெரும் வெள்ளத்திலும் மக்கள் வெள்ளத்தை பெற்று ஜெயக்கொடி நாட்டி வருகிறது.
பெருமிதத்துடன்,
பம்மலார்.
-
பழனி தாலுகாவில் உள்ள புதுஆயக்குடி என்கின்ற சிற்றூரில் இருக்கும் கோமதி டூரிங் டாக்கீஸில், நேற்று 13.12.2010 திங்கள் முதல், தினசரி 2 காட்சிகளாக, கலையுலக மன்னர்மன்னனின் 286வது திரைக்காவியமான "மன்னவரு சின்னவரு" திரையிடப்பட்டு மகத்தான வரவேற்பைப் பெற்று வருகிறது. பப்ளிசிடிக்காக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களில், அர்ஜுனும், சௌந்தர்யாவும் வட்டங்களுக்குள் சிறிதாக இருக்கிறார்கள். அதே சமயம் அந்த போஸ்டர்களில் நமது நடிகர் திலகம் Full Standingல் பெரிதாக, பிரதானமாக காட்சியளிக்கிறார்.
இனிக்கும் இத்தகவலை எமக்கு வழங்கிய சிவாஜி மன்ற பேச்சாளர் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு எமது இதயபூர்வமான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
-
சென்னை திருவல்லிக்கேணி 'ஸ்டார்' திரையரங்கில், இன்று 17.12.2010 வெள்ளி முதல், தினசரி பகல் 11:30 மணிக் காட்சியாக, கலையுலக மகானின் "சரஸ்வதி சபதம்" திரைக்காவியம் திரையிடப்பட்டு வெற்றிநடைபோட்டு வருகிறது.
இத்தகவலை எமக்களித்த ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
-
கோவை 'டிலைட்' திரையரங்கில், கடந்த வெள்ளி (17.12.2010) முதல் திங்கள் (20.12.2010) வரை,
ஸ்ரீ சிவாஜி பெருமானின் "திருவிளையாடல்", தினசரி 3 காட்சிகளாக திரையிடப்பட்டு, நல்லதொரு வரவேற்பைப் பெற்றுள்ளது.
இத்தகவலை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.வெள்ளியங்கிரி அவர்களுக்கு கனிவான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
-
மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் உள்ள 'லட்சுமி' திரையரங்கில், 17.12.2010 வெள்ளி வைகுண்ட ஏகாதசி முதல் நேற்று 22.12.2010 புதன் வரை ஆறு நாட்களுக்கு, கலையுலக சொக்கநாதரின் "திருவிளையாடல்" திரைக்காவியம் வெளியாகி வெற்றி நடை போட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு நள்ளிரவுக் காட்சியும் நடைபெற்றுள்ளது.
நாளை 24.12.2010 வெள்ளி முதல், சென்னை மண்ணடி 'பாட்சா' திரையரங்கில் (பழைய 'மினர்வா'), தினசரி பகல் 11:30 மணிக் காட்சியாக, வாழ்வியல் திலகத்தின் "எங்க மாமா" திரைக்காவியம் திரையிடப்படுகிறது.
இனிக்கும் இந்த இரு தகவல்களை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு நன்றிகள் பற்பல !
அன்புடன்,
பம்மலார்.
-
சேலம் 'ஸ்ரீசரஸ்வதி' திரையரங்கில், 25.12.2010 சனிக்கிழமை முதல், தினசரி 4 காட்சிகளாக, கலைக்கடவுளின் "ஆலயமணி" திரைக்காவியம் திரையிடப்பட்டு வெற்றி நடைபோட்டு வருகின்றது. இன்று 27.12.2010 திங்கட்கிழமையும் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றது.
இத்தகவலை எமக்கு வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு கனிவான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
-
மதுரை கீரைத்துறை பகுதியில் உள்ள 'நியூடீலக்ஸ்' திரையரங்கில், சனி(25.12.2010), ஞாயிறு(26.12.2010) இரண்டு நாட்கள் மட்டும், தினசரி 3 காட்சிகளாக, நமது நடிகர் திலகத்தின்
"இருவர் உள்ளம்" திரைக்காவியம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இத்தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
-
தற்பொழுது, திண்டுக்கல் 'என்விஜிபி' திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, நமது நடிகர் திலகத்தின் "இருவர் உள்ளம்" திரைக்காவியம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இத்தகவலை எமக்கு வழங்கிய சிவாஜி மன்ற பேச்சாளர் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு கனிவான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
மதுரை ஸ்ரீமீனாக்ஷி திரையரங்கில், நமது இதயதெய்வத்தின் "அவன் தான் மனிதன்", இன்று 7.1.2011 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக திரையிடப்படுகின்றது.
தித்திக்கும் இத்தகவலை வழங்கிய மதுரை நல்லிதயம் திரு.வேலாயுதம் அவர்களுக்கு நன்றிகள் பற்பல !
அன்புடன்,
பம்மலார்.