https://www.youtube.com/watch?v=x92eM4bcBjE
Printable View
[QUOTE=RavikiranSurya;1274272][B][COLOR="#000000"][SIZE=4]
சமீபத்தில் திருமதி சாவித்திரி புதல்வியார் அவர்களிடம் திருமதி சாவித்திரி அவர்களுக்கு மக்கள் திலகம் அவர்கள் வீடும் பணமும் கொடுத்ததாக ஒரு செய்தி உள்ளதே என்றபோது...
அவர் கூறிய பதில் "அம்மா சாவித்திரியிடம் இதனை பற்றி யாரும் கேட்டு இனி தெரிந்துகொள்ள முடியாது என்கின்ற நம்பிக்கையில், தைரியத்தில் இப்படி பல கட்டு கதைகளை கூறுவது வழக்கம்தானே என்று புன்வுருவளோடு கூறியுள்ளார் !
சாவித்திரி அவர்கள் பற்றிய உண்மையான தகவல் கொண்ட புத்தகம் "சாவித்திரி - கலைகளில் ஓவியம் " நாஞ்சில் இன்பா எழுதியுள்ளார். சாவித்திரி மகளுடன், உறவினருடன், திரை உலகில் சாவித்திரி அவர்களுடைய நெருங்கி பழகியவர்களுடன் உரையாடி புத்தகம் எழுதியுள்ளார்.
ப்ராப்தம் திரைப்படம் 100 நாட்கள் ஓடவில்லையே தவிர வெளியிட்ட அனைத்து திரை அரங்கிலும் 4 வாரங்களுக்கு குறையாமல் ஓடியது. அதிகபட்சமாக மதுரை சிந்தாமணியில் 67 நாட்கள் ஓடியது. [QUOTE=RavikiranSurya;1274272][B][COLOR="#000000"][SIZE=4]
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்களே !
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ? நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் நடிகை சாவித்திரிக்கு உதவிகள் செய்ய வில்லை. அப்படித்தானே !
உண்மை செய்தியை அறிய வேண்டும் என்றால், ஒலிக்கிறது உரிமைக்குரல் பத்திரிகையும், நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கமும் இணைந்து 16-06-2013 அன்று நடத்திய "பொன்மனச்செம்மல் - முப்பெரும் விழா" வில், அருமை சகோதரர் ஷாரியார் அக்பர் அவர்கள் குறிப்பிட்டிருந்தபடி, நடிகை சாவித்திரி மகள் திருமதி விஜய சாமுண்டீஸ்வரி மற்றும் திருமதி கமலா செல்வராஜ் ஆகிய இருவரும், மக்கள் திலகம் அவர்கள் நடிகை சாவித்திரிக்கு செய்த உதவிகள் பற்றி நினைவு கூர்ந்து தங்கள் நன்றி கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது பற்றிய வீடியோ ஆதாரம் கூட பதிவு செய்ய தயார்.
மேலும் திரு. கே. பி. ராமகிருஷ்ணன் அவர்கள் எங்கள் மக்கள் திலகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் தான். அவர் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள "எம். ஜி. ஆர். ஒரு சகாப்தம்" என்ற புத்தகத்தின் 18 மற்றும் 19 வது பக்கங்களில், எங்கள் புனித தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் செய்த உதவிகள் பற்றி விளக்கமாக தெரிவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிடப்பட்ட மேற்கூறிய புத்தகத்தில், நடிகை சாவித்திரி அவர்களுக்கு, நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் பாரத ரத்னா, தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி டாக்டர் புரட்சித்தலைவர் அவர்கள் செய்த உதவிகளை பற்றி தெரிவித்தமைக்கு, சாவித்திரி தரப்பிலிருந்து 8 ஆண்டுகளுக்கு பின்னரும், எந்த வித மறுப்பும் இல்லாத பட்சத்தில், திருமதி விஜய சாமுண்டீஸ்வரி எப்படி நீங்கள் தெரிவித்த படி கருத்து தெரிவித்திருக்க முடியும் ?. யாரிடம் இப்படி அவர் கூறினார் ? நீங்கள் குறிப்பிட்டிருந்தபடி திருமதி நடிகை விஜய சாமுண்டீஸ்வரி கூறியிருந்தால், அதனை நிரூபிக்க முடியுமா ?
தயவு செய்து இது மாதிரி விஷயங்களில் வக்காலத்து வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். வேண்டுமென்றால், நடிகை சாவித்திரி எடுத்த பிராப்தம் படத்தில் நாயகனாக நடித்த சிவாஜி கணேசன் அவர்கள், நடிகை சாவித்திரிக்கு கடைசி காலத்தில் உதவிகள் ஏதேனும் செய்திருப்பின் (?), அந்த தகவலை தேடி கண்டு பிடித்து பதிவிட்டு கொள்ளுங்கள். அதை விடுத்து எங்கள் மக்கள் திலகம் உதவி செய்தாரா - இல்லையா என்று ஒரு பட்டி மன்ற தோரணையில் ஆராய்ச்சி வேண்டாம், சகோதரரே ! .
:நடிகை சாவித்திரி அவர்களை பற்றி புத்தகம் எழுதிய "நாஞ்சில் இன்பா' என்பவர் ஒரு தீவிர சிவாஜி கணேசன் ரசிகர். அந்த புத்தகத்தை நான் இன்னும் படிக்க வில்லை. அவர் உண்மையிலேயே ஒரு எழுத்தாளர் என்றால் மக்கள் திலகம் உதவிய செய்திகள் பற்றி நடு நிலையோடு எழுதியிருக்க வேண்டும். அவ்வாறு அந்த செய்திகள் அதில் இடம் பெற்றிருக்க வில்லையென்றால் அது ஒரு தலை பட்சமாக, வெறும் காழ்ப்புனர்ச்சியுடன் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது என்று கருத வேண்டியுள்ளது.
மக்கள் திலகத்தை பற்றி அவதூறு பரப்பும் விதத்தில் ஏதாவது ஒரு செய்தி, மதி (இழந்த) ஒளி யில் பிரசுரிக்கப்பட்டால், உடனே அதை வெளியிட்டு அற்ப சந்தோஷம் அடைவது, பின்னர், மக்கள் திலகம் திரியில் எங்கள் பொன்மனசெம்மலின் அன்பர்கள் பதில் பதிவாக சில செய்திகள் பதிவிட்டால், உடனே அதை நீக்குமாறு கெஞ்சுவது - இதே வாடிக்கையாகி விட்டது. பிரச்சினைகளை நாங்கள் உருவாக்குவது இல்லை அங்கிருந்துதான் .முதலில் துவக்கப்படுகிறது.
நாகரீகம் கருதி, திரி மரபு காக்கும் விதத்தில் எனது ஆக்ரோஷமான பதிவினை இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.
பின் குறிப்பு :
இந்த மதி ஒளி ஆசிரியர் சண்முகமும், தமிழ் சினிமா ஆசிரியர் கரீமும், ஆரம்பத்தில், எதோ ஆதாயத்துக்காக, தங்கள் காரியங்கள் கை கூட ஒரு காலத்தில், எங்கள் புரட்சித்தலைவரின் பின்னால் சுற்றி திரிந்தனர். பின்னர் அவர்களின் நியாயமாற்ற தேவைகள் நிறைவேறாத காரணத்தால், வரலாற்று நாயகனாம் எங்கள் மக்கள் திலகத்தை பற்றி எதிர் மறையான செய்திகள் வெளியிட்டு, தங்களின் அரிப்பை தீர்த்து கொண்டனர்.
"நாளை நமதே" என்று எங்கள் தலைவர் நடித்த காவியத்துக்கு தலைப்பை சொல்லி, அதற்குண்டான பரிசுத்தொகையை இந்த மதி ஒளி ஆசிரியர் சண்முகம் பெற்றுக்கொண்டதாகவும் ஒரு செய்தி.