நன்றி.
Printable View
ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு பக்கம் நடந்தால் கூட, மக்கள் திலகம் பிறந்த நாள் கோலகாலகமாக தமிழ்நாடு முழுதும் கொ்ண்டாடப்பட்டது. ஆனால், ஒரு நடிகரின் ரசிகர்கள் நம் தலைவரின் பிறந்த நாளை மக்கள் ஒதுக்கிவிட்டார்கள் என்று கூறிகிறார்கள்.
அந்த நடிகரின் மகனே நடிகர் சங்க விழாவில் கலந்து கொண்டு புரட்சித் தலைவரின் படத்துக்கு மரியாதை செய்தார். சமாதியிலும் மரியாதை செய்தார். ஒரு வருடம் முழுது்ம் விழா கொண்டாட வேண்டும் என்றார். அப்பிடி இருக்கும்போது இவர்கள் உளறுகிறார்கள்.
ஏன்? இந்த நடிகரின் பிறந்தநாள், நினைவுநாளை யார் கொண்டாடுகிறார்கள். மறந்தே போய்விட்டார்கள். சென்னையில் இரக்கும் சிலையும் சில மாதங்களில் தூக்கப்பட்டு யாருமே போகாத மண்டபத்துக்குள் வைக்கப்போகிறார்ள். அந்த விரக்தியில் உளறுகிறார்கள். அந்த நடிகரின் சிலைக்கு கவுன்ட் டவன் ஸ்டார்ட்.... நல்லா பாட்டு பாடறவன், நல்லா வண்டி ஓட்டறவனுக்கெல்லாம் சிலை வைக்க முடியுமா?
எம்ஜிஆர் பெயரில் மாமனிதர் விருது!- சித்ரா லட்சுமணன் கோரிக்கை
Read more at: http://tamil.filmibeat.com/news/chit...rd-044314.html
ஒவ்வொரு ஆண்டும் எம்ஜிஆர் பிறந்த தினத்தன்று அவரது பெயராலே மா மனிதர் விருது வழங்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வருக்கு சித்ரா லட்சுமணன் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் எங்கெங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் எம் ஜி ஆரின் நூற்றாண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
புரட்சி நடிகர் என்றும் புரட்சித் தலைவர் என்றும் தமிழக மக்களால் பாசத்தோடு அழைக்கப்படுகின்ற எம் ஜி ஆர் அளவிற்கு தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்த நடிகர்-தலைவர் எவரும் இல்லை. மக்களால் அந்த அளவிற்கு நேசிக்கப்பட்டதால்தான் தமிழ் சினிமாவை முப்பதாண்டு காலமும் தமிழ் நாட்டை பதினொரு ஆண்டு காலமும் அவரால் ஆள முடிந்தது. காலம் அவரது உயிரைப் பறிக்காமல் இருந்திருந்தால் எக்காலத்திலும், எவராலும் எம்ஜிஆரை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கியிருக்கவே முடியாது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
இன்றும் தமிழக மக்களில் பலர் தங்களை வாழவைக்க அவதரித்த கடவுளாகவே எம் ஜி ஆர் அவர்களைப் பார்ப்பதால்தான் பூஜை அறையில் அவரது படத்தை வைத்து வணங்கிக் கொண்டிருக்கின்றனர். நான் தயாரித்த ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவிலே கலந்து கொண்டு சிறப்பித்த புரட்சித் தலைவரோடு பல சந்தர்ப்பங்களில் மிகவும் நெருக்கமாக பழகுகின்ற வாய்ப்பை இறைவன் எனக்கு அளித்ததை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
இன, மத, கட்சி வேறுபாடின்றி எல்லோராலும் மதிக்கப்படுகின்ற புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சேவை மனப்பான்மையுள்ள ஒரு நல்ல மனிதரைத் தேர்ந்தெடுத்து 'எம்ஜிஆர் மா மனிதர் விருது' என்று பெயரிலே ஒரு விருது தர வேண்டும் என்றும் அந்த விருது வழங்கும் விழாவை ஒவ்வொரு ஆண்டும் எம்ஜிஆர் அவர்களின் அவரது பிறந்த நாளான ஜனவரி பதினேழாம் தேதி மிகப்பெரிய விழாவாக தமிழக அரசின் சார்பில் கொண்டாட வேண்டும் என்றும் தங்களை அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்," என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
காமராஜர் கொண்டு வந்த மத்திய உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக விரிவுப்படுத்தி ஏழை குழந்தைகளின் பசியை எம்ஜிஆர் போக்கினார். கலைத் துறையில் உச்சம் தொட்டு, அரசியல் துறையிலும் சிகரம் தொட்டவர்.
நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் உறுதுணையாகச் செயல்பட்ட தேசியத் தலைவர். எம்ஜிஆரும் மூப்பனாரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நெருங்கிப் பழகியவர்கள்.
பன்முகத் திறன் கொண்ட எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது என்று கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழகமெங்கும் உற்சாகக் கொண்டாட்டம் - சிறப்பு தபால் தலை வெளியீடு
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 100வது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் உள்பட பலரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அவருடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தபால்தலை, சிறப்பு நாணயம் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை ஒட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆளும்கட்சியான அதிமுக ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.
எம்ஜிஆரின் நூறாவது பிறந்தநாள் விழா என்பதால், இதனை சிறப்பாக கொண்டாட அக்கட்சித் தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழகத்தினர், கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்டங்களை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கும், திருவுருவ படத்திற்கும் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். அதிமுகவினர் மட்டும்மல்லாது திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழாவை மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் சிறப்பு தபால் தலையை, தலைமை அலுவலர் மூர்த்தி வெளியிட ஓ.பன்னீர் செல்வம் பெற்று கொண்டார்.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சரும் அமைச்சர்களும் மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் திரளாக பங்கேற்றனர்.
தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர் சிறப்பு தபால் தலையை பொதுச்செயலாளர் சசிகலாவிடம் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் வழங்கினார்.
புதுச்சேரி அரசு செய்தி, விளம்பரத்துறை சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாசம், நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி உள்ளிட்டோர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செய்தித்துறை இயக்குநர் உதயகுமார் மறறும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், அவர் குறித்த அபூர்வ புகைப்படங்கள், தகவல்களை ஆவணப்படுத்தி வருகிறார் தூத்துக்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற வரலாற்று ஆசிரியர்.
தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்தவர் வே.குப்புசாமி (69), வரலாற்று ஆசிரியர். தூத்துக்குடி எஸ்ஏவி மேல்நிலைப்பள்ளியில் 32 ஆண்டுகளும், தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆண்டுகளும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
பழங்கால பொருட்கள் சேகரிப்பு
வரலாற்று ஆசிரியர் என்பதாலோ என்னவோ அரிய வரலாற்று பொக்கிஷங்களை சேகரித்து பாதுகாப்பதில் குப்புசாமிக்கு அலாதி பிரியம். ஏராளமான பண்டைய கால பொருட்களை சேகரித்து தனது இல்லத்தையே வரலாற்று களஞ்சியமாக மாற்றியுள்ளார்.
இது மட்டுமின்றி மகாத்மா காந்தி தொடங்கி அப்துல்கலாம் வரை வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த தலைவர்களின் அரிய புகைப்படங்கள், அவர்களை பற்றிய முக்கிய தகவல்கள், ஆவணங்களையும் சேகரித்து வைத்துள்ளார்.
அபூர்வ புகைப்படங்கள்
தனது மனம் கவர்ந்த தலைவர்களில் ஒருவராகவும், தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவருமான எம்ஜிஆரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையில் நடந்த அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் ஆவணப்படுத்தியுள்ளதுடன், அவரது அபூர்வ புகைப்படங்களையும் சேகரித்து வைத்துள்ளார்.
எம்ஜிஆர் பங்கேற்ற சினிமா நிகழ்ச்சிகள், விருது பெறும் விழாக்கள், பாராட்டு விழாக்கள், அரசியல் கூட்டங்கள், உலக மற்றும் தேசியத் தலைவர்களுடன் அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள், துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுத்த படங்கள், அமெரிக்காவுக்கு அவர் சிகிச்சைக்கு சென்ற போதும், சிகிச்சை முடிந்து அங்கிருந்து திரும்பிய போதும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இறுதிச் சடங்கு நிகழ்ச்சி போன்ற பல முக்கிய நிகழ்வுகளை புகைப்படங்களாக ஆவணப்படுத்தி வைத்துள்ளார்.
மேலும், எம்ஜிஆர் தொடர்பாக பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள், கட்டுரைகள், பேட்டிகள், புத்தகங்கள், பத்திரிகைகளில் அவர் எழுதிய, ‘நான் ஏன் பிறந்தேன்’, ‘எனது வாழ்க்கை பாதையிலே’ உள்ளிட்ட தொடர்கள், சினிமா இதழ்களில் அவரைப்பற்றி வெளிவந்த தகவல்கள், அவரது சினிமா குறித்த விமர்சனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சேகரித்து வைத்துள்ளார். ‘தி இந்து’ நாளிதழில் 100 நாட்கள் தொடராக வந்த ‘எம்ஜிஆர்-100’ என்ற கட்டுரைகளும் இதில் அடங்கும்.
எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களின் குறுந்தகடுகள், பாடல்கள் மற்றும் வசனம் அடங்கிய சுமார் 700 இசைத்தட்டுகளையும் சேகரித்து வைத்துள்ளார். இசைத்தட்டுகளை இயக்க பழைய கிராமபோன் கருவி ஒன்றையும் வைத்துள்ளார்.
தூய்மையானது
எம்ஜிஆர் மீது தனக்கு மிகுந்த பற்று ஏற்படுவதற்கான காரணம் குறித்து குப்புசாமி கூறும்போது, ‘‘எம்ஜிஆரின் சினிமா வாழ்க்கையும் சரி, அரசியல் வாழ்க்கையும் சரி தூய்மையானதாவே இருந்தது. எந்தப் படங்களிலும் அவர் மோசமான கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. சிகரெட், மது பழக்கங்களை சினிமாவில் கூட அவர் தொடவில்லை.
மேலும், அரசியலுக்கு வந்த பிறகு அவர் கொண்டுவந்த சத்துணவு திட்டம் இன்றும் அனைவராலும் பாராட்டப்படுகிறது. இதுபோன்ற அவரது நல்ல திட்டங்கள் என்னை கவர்ந்ததன் காரணமாகவே அவர் மீது எனக்கு பற்று ஏற்பட்டது.
எம்ஜிஆர் தொடர்பான தகவல் எந்த பத்திரிகைகளில் வெளிவந்தாலும் அவற்றை உடனடியாக சேகரிப்பேன். எம்ஜிஆர் குறித்த ஆயிரம் புகைப்படங்கள், 25 புத்தகங்கள், ஏராளமான இசைத்தட்டுகளை சேகரித்து வைத்துள்ளேன். எம்ஜிஆர் 130 படங்களில் நடித்துள்ளார். இதில் 100 படங்களின் குறுந்தகடுகள் என்னிடம் உள்ளன. இவற்றை சேகரிக்க எம்ஜிஆரின் தொண்டர் செல்வம் என்பவர் எனக்கு உதவினார்.
நகைகளை விற்று உதவினார்
மேலும், என்னோடு பணியாற்றிய அருட்சகோதரர்கள் லூர்து, லாரன்ஸ் ஆகியோரும் பெரிதும் உதவி புரிந்தனர். எனது மனைவி முத்துலெட்சுமி இதற்காக அவரது நகைகளை விற்றும் கூட பணம் தந்துள்ளார்.
சென்னை, மதுரை, திருச்சி என தமிழகம் முழுவதும் சென்று சுமார் 25 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு இவற்றை சேகரித்து வரலாற்று பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்.
வருங்கால சந்ததிகளான மாணவர்களுக்கு இவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.
100 பள்ளிகளில் கண்காட்சி
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 பள்ளிகளில் எம்ஜிஆர் குறித்த கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளேன். இது தொடர்பாக பள்ளிகளிடம் பேசி வருகிறேன். முதல் கட்டமாக தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கண்காட்சி நடத்த முடிவு செய்துள்ளேன்.
இன்று அறிவியலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் வரலாற்றுக்கு கொடுப்பதில்லை. நமது பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை பாதுகாக்க வரலாறு முக்கியம். எனவே, வரலாற்றுக்கும் இன்றைய மாணவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
அதிமுக-வினர் மட்டும்மல்லாது திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழாவை மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
சத்தியமூர்த்தி பவனில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
மறைந்த முதல்வரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 100-ஆவது பிறந்த நாள் விழா, காங்கிரஸ் அலுவலத்தில் கொண்டாடப்பட்டது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்துக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
தேசியத் தலைவராகவும் விளங்கியவர் எம்ஜிஆர். தமிழக மக்களின் நெஞ்சம் நிறைந்தவர். உலகம் போற்றும் தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இறந்த பிறகு வழிபடுவது இயல்பு. அந்த வகையில்தான் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுகிறோம். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டவன் நான் (திருநாவுக்கரசர்) என்பது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும் தெரியும். ஜல்லிக்கட்டை அடுத்த ஆண்டாவது நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைக் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றார். காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் குமரி அனந்தன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் விஸ்வநாதன், மாநிலப் பொதுச்செயலர் கே.சிரஞ்சீவி, மாமன்ற முன்னாள் உறுப்பினர் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.