-
துணுக்குக் கதைத்திறன் தோய்த்துவெண் பாவில்
இணக்கி இன்புறுத்து முறையும் --- இனிக்கிறதே
பாணி தனிச்சுவையில் பளிச்சிடவே மேற்சென்றீர்
ஏணிப் படிகளிலே நீர்.
இன்னும் எழுதி இவணுலவு நேயரைப்
பின்னும் மனமகிழச் செய்வீரே -- பன்னும்
கவிதை சிறக்க; கருத்தாழம் காணும்
நவைதீர் பயணம் செல.
-
-
நன்றி மாலா.. அழகிய வெண்பாக்களுக்கு.. கொஞ்சம் பயமாகத் தானிருக்கிறது..சுவையாய் எழுத முயற்சி செய்கிறேன்..
நன்றி பவள மணிக்காவிற்கும்..
*
பலவருடங்களுக்கு முன் முதன் முதலாக என் மனைவியார் திருமணம் முடித்த ஒருமாத்த்தில் அப்போது துபாயில் இருந்த என்னிடம் சேர்வதற்காக வந்தார். அப்போது அவர் அருகில் ஒரு பெண்..கிராமத்துப் பெண்..கையில் குழந்தை- ஒன்றரை இரண்டு வயதிருக்கும்.. கணவ்ன் திருமணம் முடித்துச் சென்றவன் தான். கிட்ட்த்தட்ட மூன்று வருடம் வராமல் இப்போது விசா எடுத்து மனைவியையும் குழந்தையையும் கூப்பிட்டிருக்கிறானாம்..
விமான நிலையத்திலிருந்து வெளிவர என் மனைவியிடம் உதவி கேட்க என் மனைவியும் ஆன உதவியை (விசா வாங்குவது, பெட்டிகள் எடுப்பது என) செய்தார். பின் பெட்டிகள் எடுப்பதற்காக நின்றிருந்த போது வெளியில் கண்ணாடிக் கதவின் பின் என்னைக் கண்டு கொண்டார் என் மனைவி.. கூட இருந்த பெண்ணோ கண்ணாடிக் கதவின் பின்னிருந்தவர்களில் கணவனை அடையாளம் காண முற்பட்டு இவரா..இல்லையில்லை அவரா எனக் குழம்பியது என் மனைவிக்கு மிகவும் உறுத்தலாய் இருந்த்தாம்..அந்தப் பெண்ணுக்கோ விழிகளில் குளம் கட்டியதாம்.. ஆசை முகம் மறக்கடித்தது அயல் நாட்டில் பொருளீட்டும் ஆசை தானே..(வெளியில் வந்து அந்தப் பெண்ணைக் கணவனிடம் சேர்த்த்து வேறு விஷயம்)
இவர்தானா இல்லை அவர்தானா என்றே
உவப்பின்றிப் பார்த்தபடி உள்ளம் அலைபாய
தேவைக்குத் தான்சென்ற தேவனைக் காணாமல்
பூவிழியில் பூத்த குளம்.
-
எப்பொழுதுமே இன்றில் தான் நாமிருந்தாலும் சில சமயம் அன்றைப் பற்றியும் நினைக்கவேண்டுமன்றோ..! முன்பு எழுதி இங்கேயே இட்டிருந்த சில பாக்கள் இங்கே..(பாருங்கள்..வெண்பா எனச் சொல்ல்வில்லை..)
*
கவி காளமேகம் பாடல்கள் முன்பு படித்திருந்த போது அதையொட்டி ஒரே ஒரு ஈற்றடி மட்டும் (கின்னரி வாசிக்கும் கிளி) வைத்துக்கொண்டு எழுதிப் பார்த்த்து..
அவன்:
கண்ணிற் கழகும்யில் காட்சிக் கினியவெழில்
ப்ண்ணிற் குகந்தயிசைப் பாவையே நீயுந்தான்
பின்னிரவில் என் தோளில் பக்குவமாய்ச் சாய்ந்துகொண்டு
கின்னரி வாசிக்கும் கிளி..
அவள்:
கிளியென்பீர் கிட்டே வியந்துவந்தால் சற்றே
விளித்திருந்தேன் உன்மூக்கின் விந்தையெனச் சொல்வீர்
மணத்தைப் பரப்புகின்ற மாலையைப் பிய்க்கும்
குணத்தினைக் காட்டும் குரங்கு
அவன்:
குரங்கென்று கூறாதே கூர்விழியே உன்னால்
உறங்காத நல்லிரவு எத்தனையோ ஆனால்
இடிமுழக்கம் செய்த இதழ்கொண்டு எனது
பிடிக்குள் இறுகும் பிடி..
அவள்:
பிடித்த பிடிவிட்டுப் படியுங்கள் பாடம்
விடிந்தபின் தந்தையார் வேறுவழி சொன்னால்
உளியால் மனம்சிதையும் உண்மை வயிற்றில்
புளியைக் கரைக்கும் புலி
அவன்:
புலிபதுங்கும் பாயத்தான் பூவழகி உந்தன்
விழிநீர் துடைத்து விடைகொடு நானும்
விரைந்தவர் சம்மதம் வேண்டுவேன் பின்னால்
சிரித்திவன் சிங்கமெனச் சொல்..
*
முன்னைப்போல் இப்பொழுதும் பாவெழுத வரவில்லை..என்னசெய்ய வயதாகிவிட்ட்து.(எட்டு முடிந்து ஒன்பது ஆகின்றது!).கற்பனையும் தள்ளாடுகிறது...வரும்..வரும்..
அன்புடன்
சி.க.
-
-
சின்ன்க் கண்ணன் என்பதால் சொன்னேன்.. இப்படி முழிக்காதீர்கள்..
-
-
Quote:
Originally Posted by
pavalamani pragasam
குறும்புக்கண்ணன்!
எட்டகவை வெண்பா புனைகலை எட்டித்தேன்
சொட்டுவபோல் பாக்கள் சொரிந்திடலாம்!-- எட்டுடன்
ஒட்டினால் ஒன்றினைக் கொட்டிக் கவிமழையால்
முட்டும் சுனாமி முனை.
Keep it up thiru ChinnakaNNan!
-
அன்பின் சிவமாலா..
என்னைத் திரு.வென்றெல்லாம் கூற வேண்டாம்..
வலைவாழ் பாவலர் தம் அடியார்க்கும் அடியேன் என்பதால் பெயரின் முன்
சின்னதைச் சேர்த்துக் கொண்டேன்..(ப.பிக்கா தொண்டையைக் கமறப் போகிறார்..விளம்பரம்..விளம்பரம் என்று)
நீங்கள் தமிழில் 2ஜி ஸ்பெக்ட்ரம் என்றால் அடியேன்சாதாரண சின்ன பிக் பாக்கெட் (கொஞ்சம்புதுசா உவமை சொல்லிப் பார்த்தேன்!)..வர்றேன்..வெண்பாக்களுடன்மீண்டும் (அலுவலகத்தில் கொஞ்சம் வேலை மீட்டிங்க் என(மனச்சாட்சி: கண்ணா புருடா விடாதே..சோம்பல் என்று நேரடியாகவே சொல்லு) வருகிறேன்..
அன்புட்ன்
சி.க
-
வெண்பாக் கதை..
ஆதெள் கீர்த்தனாரம்பத்திலே
நம்ம கதாநாயகன் சுந்தரமூர்த்தி ரொம்பக் குழப்பத்தில இருந்தானாம்..அவனோட தலவிதி பிற்ந்த்தில்ருந்தே போராடணும்னு யாரோ எழுதி வெச்ச மாதிரி ஆயிடுத்தாம்
அவன் பொறந்த்து எப்போன்னா நம்ம் இந்நாளைய முதலமைச்சர் இருக்காரோன்னோ அவர் அந்தாளில் சின்னப்பொண்ணா திரைப்பட்த்தில டூயட் பாடிக்கிட்டிருந்தப்பதான் மதுரை மெஷினாஷ்பத்திரில்ல பொறந்தான்.
அவ்னோட அப்பாக்குஏக் குஷி.. பிற்காலத்தில பையன் நிறைய பேர் வாங்கணும்னு அவனுக்கு ஊர்ல உள்ள எல்லாப் பெயரையும் சேர்த்து சுருக்கமா நடராஜ சுந்தர மூர்த்தின்னு வெச்சுட்டார்...
புகழெல்ல்லாம் த்ன்குழவி தான்பெறவே தந்தை
சிகரமாய்ச் சிந்தித்தே சொன்னது ஏதென்றால்
தேரை இழுக்கின்ற தென்னாட்டு மக்களவர்
பேரைச் சும்ந்த பெயர்
நம்ம பையன், பேர் நீளமா இருக்கேன்னு அப்போதே ஆட்சேபித்து கையக் கால் உதறி அழுது பார்த்தான்.. முதுகுல நெல் குத்தறதால குழந்தை அழறதுன்னு அவன் வாயில சீனியை வச்சுட்டா அவ்ன் பாட்டி..
(தொடரும்)