Maanbumigu Needhiyarasargal. New 7 channalil pudhiya nigalchi.
http://cinema.dinamalar.com/tamil-tv...-7-channel.htm
Nandri.Dinamalar.
Printable View
Maanbumigu Needhiyarasargal. New 7 channalil pudhiya nigalchi.
http://cinema.dinamalar.com/tamil-tv...-7-channel.htm
Nandri.Dinamalar.
Solvathellaam Unmai Nigalchiyai Thodaravillai; solgirar Lakshmi Ramakrishnan.
Thamil Tholaikatchiyil Solvathellaam Unmai Nigalchiyai valangi vandhaar Nadigai Lakshmi Ramakrishnan.
http://cinema.dinamalar.com/tamil-tv...-7-channel.htm
Nandri ; Dinamalar.
Cenima Padal Paadiya chinnathirai Natchathirangal.
chinnathirai Natchathirangal Cenimavil nadikathaan sendru kondirundhaargal.Ipodhu paaduvadharkum sella aarambithirukiraargal.
http://cinema.dinamalar.com/tamil-tv...for-kakapo.htm
Nandri.Dinamalar.
Raj Tvyil Pudhiya Thodar Indira
Varugira 15aam thedhi mudhal RajTvyil Indira endra Pudhiya Thodar oliparapaagiradhu.
http://cinema.dinamalar.com/tamil-tv...-in-Raj-tv.htm
Nandri.Dinamalar.
Titeel vedangalil nadikka veandum;Nadigai Shamli.
Paasamalar thodaril paasakaara thangaiyaga nadithu varubavar Shamli.ivar shrikanth nadithulla om shanthi om padathilum nadithulaar.
http://cinema.dinamalar.com/tamil-tv...Title-role.htm
Nandri.Dinamalar.
cenimavil naayagiyana serial nayagi Jeevitha.
chinnathiraiyil office serial,vairakyam mulam nadithavar.......
http://cinema.dinamalar.com/hindi-ne...as-heroine.htm
Nandro.dinamalar.
Quote:
சீரியலுக்கு பிரேக் கொடுத்தது ஏன்? - லதாராவ்
திருமதி செல்வம், செல்வி, மகாபாரதம் உள்பட சுமார் 30 சீரியல்களில் நடித்தவர் லதா ராவ். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை. அதேசமயம் சில படங்களில் நடித்து வருகிறார். அவரிடத்தில், மீண்டும் சின்னத்திரைக்கு வருவீர்களா? இல்லை சினிமாவில் மட்டும்தான் நடிப்பீர்களா? என்று கேட்டபோது...
சின்னத்திரைதான் என்னை மக்களுக்கு அடையாளம் காட்டியது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறேன். ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு விதமான வேடங்களில் நடித்ததால் இப்போது எந்த மாதிரியான வேடம் கொடுத்தாலும் என்னால் நடிக்க முடியும் என்கிற அளவுக்கு தேர்ச்சி பெற்று விட்டேன். சீரியல்களில் நடித்து வந்தபோதே, தில்லாலங்கடியில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தேன். அந்த காமெடி காட்சிகள் டிவியிலும் அடிக்கடி வந்து கொண்டிருப்பதால் அந்த படம் சினிமாவில் என்னை பிரபலப்படுத்தி விட்டது. பின்னர் பல படங்களில் நடித்து வந்த நான், இப்போது கே.எஸ்.ரவிக்குமார் சுதீப்பை வைத்து இயக்கியுள்ள முடிஞ்சா இவனை புடி என்ற படத்திலும் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் கதாநாயகி நித்யாமேனனின் அண்ணியாக நடித்திருக்கிறேன். அதோடு கடிகாரமுள் என்ற படத்திலும் நடித்துள்ளேன்.
அந்த வகையில், நான் சின்னத்திரையில் நடித்து இரண்டு வருடமாகி விட்டது. இப்படி சின்னத்திரைக்கு பிரேக் கொடுத்ததின் முக்கிய காரணம் நேரம் இல்லாததுதான். எனது முதல் மகன் 2-ஆம் வகுப்பும், இரண்டாவது மகன் யுகேஜியும் படிக்கிறார்கள். அதனால் அவர்களை கவனிக்க எனக்கு நேரம் தேவைப்படுகிறது. மேலும், டிவி சீரியல்களில் நடித்தால் அதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியதிருக்கும். ஆனால் சினிமாவைப் பொறுத்தவரை அதிகபட்சம் 10 நாட்கள்தான் படப்பிடிப்பு இருக்கும். அதனால்தான் தற்போது சினிமாவில் மட்டுமே நடித்து வருகிறேன். அதேசமயம், இப்போதைக்கு நேரம் இன்மை காரணமாக டிவி சீரியல்களில் நடிக்காத நான் எதிர்காலத்தில் நேரம் அதிகமாக கிடைக்கும்போது மறுபடியும் சீரியல்களில் நடிப்பேன் என்கிறார் லதாராவ்.
http://img1.dinamalar.com/cini//CNew...1524000000.jpg
நன்றி: தினமலர்
Quote:
"திறமைக்கு தீனி போடும் வாய்ப்புகள் தேவை! -மதுமிலா
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் மற்றும் தாயுமானவன், அக்னி பறவை போன்ற தொடர்களில் நடித்தவர் மதுமிலா. அதோடு, பூஜை, ரோமியோ ஜூலியட், மாப்ள சிங்கம் என பல படங்களிலும் நடித்திருக்கும் அவர், எனது திறமைக்கு தீனி போடும் சரியான வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன் என்கிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
சீரியலில் உங்களது என்ட்ரி?
ஆபீஸ் சீரியலில்தான் நான் அறிமுகமானேன். அதுவே பெரிய ஹிட்டாக அமைந்தது. எனது நடிப்புக்கு நல்லதொரு அங்கீகாரத்தையும் அந்த சீரியல் கொடுத்தது. தொடர்ந்து தாயுமானவன், அக்னி பறவை போன்ற தொடர்களிலும் நடித்தேன். அதன்பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன். பூஜை படத்தில் விஷாலின் தங்கையாகவும், ரோமியோ ஜூலியட்டில் ஹன்சிகாவின் இரண்டு தோழிகளில் ஒருவராகவும் நடித்தேன். அதையடுத்து, விமல் நடித்துள்ள மாப்ள சிங்கம் படத்தில் செகண்ட் லீடாக நடித்திருக்கிறேன். இதுதவிர இன்னொரு படத்தில் மெயின் ஹீரோயினாக நடித்துள்ளேன். அந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்..
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தது ஏன்
சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆனபோதும் சின்னத்திரையில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டே சினிமாவுக்காக முயற்சி எடுத்தேன். சினிமாவில் தங்கை வேடத்தில் என்ட்ரி ஆனபோதும் தற்போது ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு படிப்படியாக வளர்ந்து வருகிறேன்.
அப்படியென்றால் அடுத்து டிவியில் நடிக்கும் ஐடியா இல்லையா?
அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை. என்னைப்பொறுத்தவரை என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, சினிமாவில் நடிப்பதே எனது நோக்கமாக இருந்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால் முழுநேர சினிமா நடிகையாகி விடுவேன். ஒருவேளை அவர்கள் சரியான ஆதரவு கொடுக்காதபட்சத்தில் சின்னத்திரைக்கு வந்து விடுவேன். அதற்காக நான் பீல் பண்ண மாட்டேன்.
எந்தமாதிரியான வேடங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறீர்கள்?
நன்றி: தினமலர்
Quote:
வம்சம் சீரியலில் என்ட்ரியான பிரியங்கா
கேப்டன் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் பிரியங்கா. இந்நிலையில், ராஜ் டிவியில் ஒளிபரப்பான என் இனிய தோழியே, சபீதா என்கிற சபாபதி ஆகிய தொடர்களில் நடித்து வரும் அவர் தற்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் என்ட்ரியாகி நடித்து வருகிறார்.
இதுகுறித்து பிரியங்கா கூறுகையில், கேப்டன் தொலைக்காட்சியில் நான் தொகுப்பாளினியாக இருந்தபோது சில சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு பொருத்தமான, பிடித்தமான கேரக்டர்களாக இருந்ததால் சீரியல் நடிகை யாக மாறினேன். அப்படி நான் முதன்முதலில் நடித்த என் இனிய தோழியே சீரியலில் நான் நடித்த கேரக்டரும், நடிப்பும் நன்றாக ரீச் ஆனது.
அதனால் அதைப்பார்த்து விட்டு சபீதா என்கிற சபாபதி சீரியல் வாய்ப்பு வந்தது. அதையடுத்து இப்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் நடிக்கிறேன். இந்த தொடரில் ஹீரோயினி பூமிகாவின் சகோதரியாக நடிக்கிறேன். நான் நடிக் கும் ஜோதிகா என்கிற வேடம் பாசிட்டீவானது. நல்லது மட்டுமே செய்யக்கூடிய வேடத்தில் நடிக்கிறேன். இதனால் சமீபத்தில்தான் எனது கேரக்டர் என்ட்ரியானபோதும் நேயர்கள் மனதில் இடம் பிடித்து விட்டேன். அந்த அளவுக்கு டச்சிங்கான வேடம். அதோடு எனக்குப் பிடித்தமான ரம்யாகிருஷ்ணன் மேடத்தின் சீரியலில் நடிக்கக் கிடைத்த இந்த வாய்ப்பை ரொம்ப பெருமையாக கருதுகிறேன் என்கிறார் பிரியங்கா.
நன்றி: தினமலர்
Quote:
வில்லனாக நடிக்க வந்த என்னை காமெடியனாக்கி விட்டனர்! - ஜெமினி மணி
சில படங்களில் நடித்திருக்கும் ஜெமினி மணி, ஆபீஸ் தொடரை அடுத்து இப்போது ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து வருகிறார். வில்லனாக நடிக்க வந்த என்னை காமெடியனாக்கி விட்டனர் என்று கூறும் அவர், வில்லன் வேடத்திற்காக காத்திருப்பதாகவும் சொல்கிறார்.
தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
குள்ளநரிக்கூட்டம், சண்டியர், சுண்டாட்டம், பாயும், புலி, கிருமி ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி ஆனேன். அந்த சீரியலில் முதலில் எனது ரோல் சிறியதாகத்தான் இருந்தது. எனது நடிப்பைப்பார்த்த விஜய் டிவி ரமணன் சார், பின்னர் எனக்கான கேரக்டரை பெருசுபடுத்தினார். அதனால் வாரத்தில் ஐந்து நாட்கள் வந்தேன். அந்த வகையில் ஆபீஸ் சீரியலில் 350 எபிசோடுகளில் நடித்தேன். பொதுவாக எனக்கு காமெடியே வராது. ஆனால் ஆபீஸ் சீரியலில் என்னை காமெடியாக நடிக்க வைத்தனர். வில்லனுக்கு முயற்சி செய்த என்னை காமெடியனாக்கி விட்டனர். அதற்கு காரணம் விஜய் டிவி ரமணன், இயக்குனர் பிரம்மா ஆகியோர்தான். அதற்காக அவர்கள் இருவருக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மேலும், ஆபீஸ் பண்ணிக்கொண்டிருக்கும்போதே ஆண்டாள் அழகர் சீரியல் வாய்ப்பு வந்தது. அந்த தொடரில் பூசாரி என்ற ரோலில் நடித்து வருகிறேன். ஹீரோவுடன் சீரியல் முழுக்க வருவேன். அவருக்கு ஒத்தாசையாக, பிரச்சினை என்றால் ஐடியா, அட்வைஸ் கொடுக்கும் நண்பனாக நடிக்கிறேன். நான் வெளியில் போனாலே பூசாரி போறார் என்று சொல்லும் அளவுக்கு நல்ல ரீச் கிடைத்தது. செம பாசிட்டீவான ரோல். மதுரை தமிழில் பேசித்தான் அனைவருமே நடிக்கிறோம். அந்த தொடரில் நாயகன் ஸ்டாலின் மதுரைக்காரர் என்பதால் அவருக்கு பிரச்சினை இல்லை. ஆனால் எனது சொந்த ஊர் தஞ்சாவூர். அதனால் பயிற்சி எடுத்துதான் மதுரை தமிழ் பேசி நடித்து வருகிறேன்.
அதோடு, தற்போதுவரை நான் எனக்கு கிடைக்கிற வாய்ப்புகளில்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் எதிர்பார்க்கிற மாதிரியான வேடங்கள் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. அதாவது என்னைப் பொறுத்தவரை நெகடீவ் வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆர்வமாக உள்ளது. காமெடி எனக்கு ஐடியாவே இல்லை. ஆனால் கிடைத்தது என்னவோ அதுதான். நான் எதிர்பார்க்கிற வில்லன் வேடம் கிடைத்தால் ரொம்ப மகிழ்ச்சியாக நடிப்பேன்
இணையதளங்களில் எனது நடிப்பு குறித்து கமெண்ட் கொடுக்கும் ரசிகர்கள், இயல்பாக, யதார்த்தமாக இருப்பதாக சொல்கிறார்கள். மற்றபடி இதுவரை யாருமே எனது நடிப்பு குறை சொன்னதில்லை என்று கூறும் ஜெமினி மணி, நான் ஜெமினி ஸ்டுடியோவில் ஒரு டிரைவராகத்தான் வேலை பார்த்தேன். அஜீத்தின் தீவிரமான ரசிகனாக இருந்தேன். அவரது பெயரை என் கையில் பச்சைக்குத்தியிருக்கிறேன். அஜீத் கிரீடம் படத்தில் நடித்து வந்தபோது அவரிடம் என்னை நேரில் அழைத்து சென்று, இவர் உங்களது தீவிரமான ரசிகன் என்று அஜீத்திடம் சொல்லி எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர் ஜெமினி ஸ்டுடியோவின் முதலாளி மனோ அக்கினேனி மேடம். அவர்தான் எல்.வி. பிரசாத்தின் பேத்தி. அவர்கள்தான் எனக்கு விலாசம். என்னை ஒரு டிரைவர் மாதிரி ஒருநாளும் நினைத்ததில்லை.
அப்படி அஜீத்திடம் அவர்கள் கொடுத்த அறிமுகம் காரணமாக, அன்றைய தினம் தனது வீட்டில் இருந்து வந்த பிரியாணியை எனக்கும் ஒரு பாக்ஸ் கொடுத்து சாப்பிட சொன்னார் அஜீத். அதையடுத்து கிரீடம் படம் முடிகிற வரைக்கும் அஜீத் சாரிடம் நான் டிரைவராக ஒர்க் பண்ணினேன். அப்போது நடிப்பெல்லாம் உனக்கு வேண்டாம். வேற வேலை பாரு. குடும்பத்தை நல்ல முறையில் கவனிச்சிக்கோ என்று அட்வைஸ் செய்தார். ஆனால் நான் அவர் பேச்சைக் கேட்காமல் நடிக்க வந்து விட்டேன்.
ஆக, இப்போது சினிமா, சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் நடிகராக இருக்கும் நான், தற்போது காக்கா குருவி கல்யாணம் -என்ற பெயரில் இயக்கியுள்ள டெலிபிலிமை மனோ அக்கினேனி மேடத்துக்கும் போட்டுக்காட்டினேன். அதனால் அவர்களது நிறுவனத்துக்கே நான் படம் இயக்கினாலும் ஆச்சர்யப்படு வதற்கில்லை என்று கூறும் ஜெமினி மணி, துரோகி உள்பட சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி யிருப்பதாகவும் சொல்கிறார்.
நன்றி: தினமலர்