'தட்ஸ்டமில்' இணையதளம் எப்போதுமே செய்திகளை வெளிடுவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், இது போன்ற குசும்பு வேலைகளையும், குதர்க்க வேலைகளையும் கூடவே சேர்த்துக்கொள்வதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளது. (எல்லா பிரபலங்களைப்பற்றியுமே).
இவ்வரிகள் அந்த செய்திக்கு தேவைதானா?. இதைப்படிப்பவர்களில், விவரம் தெரியாத சிலர் நடிகர்திலகம் ஏதோ கன்னட மாநிலத்திலிருந்து வந்தவர் என்பது போல புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது.
விழுப்புரத்தில் பிறந்து, தஞ்சையில் வளர்ந்து, சென்னையில் வாழ்ந்து மறைந்த பச்சைத்தமிழனான நடிகர்திலகத்தை, கன்னடியர் போல சித்தரிக்க முயலும் 'தட்ஸ்டமில்' தளத்தின் குசும்பை, நடிகர்திலகத்தின் ரசிகர்/ரசிகைகள் வன்மையாக கண்டிக்கிறோம்.