tfm nga "சரோஜாதேவி நெற்றியில் Oriental Express சின் சின்ன சக்கரங்களை வைத்து இருக்கிறார்கள்" padithu vitu orey siripu enaku :noteeth: :noteeth:
Printable View
tfm nga "சரோஜாதேவி நெற்றியில் Oriental Express சின் சின்ன சக்கரங்களை வைத்து இருக்கிறார்கள்" padithu vitu orey siripu enaku :noteeth: :noteeth:
அன்புள்ள TFM LOVER அவர்களுக்கு
இந்தப் பேராசிரியரின் காலை வணக்கம் .
இன்று உங்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு சிறந்த, மாஸ்டர் வேணுவின் இசையமைப்பில் , காலம் மாறிப் போச்சு என்ற படத்தில் இடம் பெற்ற
'' இனிதாய் நாமே இணைந்திருப்போமே ''
என்ற திருச்சி லோகநாதன் , ஜிக்கி பாடிய
ஒரு பாடலின் ஒளிப் பதிவினை இங்கு வழங்குகிறேன் .
நான் ஆண்டாண்டு காலமாக ரசித்த, இன்றும் மெய் மறந்து கேட்கும் ஒரு பாடல் .
http://www.youtube.com/watch?v=LN4WnshRBYk
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
ப்ராப். அவர்களே,
நன்றிகள் பலப்பல இந்த எவர்க்ரீன் "காலம் மாறிப்போச்சு" படப்பாடலின் வீடியோ தந்ததிற்காக.
அன்புடன்
ராமஸ்வாமி
காலம் மாறிப் போச்சு (1956 May )
Rojulu Marayi (Telugu: రోజులు మారాయి)
தமிழ் தெலுங்கு இரண்டிலும் பிரபலமானது !
K L நாராயணா C V R பிரசாத் தாபி சாணக்யா கூட்டணியில்
ஜெமினி கணேசன் அஞ்சலி தேவி நடித்து 1956 இல்
அதிரடி வெற்றி பெற்ற தமிழ்திரைப்படம்
கிராமியப் பின்னணியில்
சமுதாயக் கருத்துக்களும் காதலும் சொல்லப்பட்ட குடும்ம்பச்சித்திரம்
அஞ்சலிதேவி ஆர் கணேஷ்
கூடவே எஸ் வி சுப்பையா டி எஸ் பாலைய்யா கே ஏ தங்கவேலு துரைராஜ்
எம் ஆர் சந்தானலஷ்மி நடிப்பில்
தமிழில் ,விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவரும்
பிரபல எழுத்தாளரும் கவிஞருமான முகவை ராஜமாணிக்கம் வசனம் பாடல்களில் வெளிவந்தது
மாஸ்டர் வேணுவின் இசையமைப்பில்
டி எம் எஸ் , திருச்சி லோகநாதன் ,எம் எல் வி , ஜிக்கி ,ராணி , S C கிருஷ்ணன்
பாடிய பாடல்கள் இருந்த போதும்
இனிதாய் நாமே இணைந்திருப்போமே வும்
ஏரு ஒட்டி போவாயே அண்ணே ...
இரண்டும் அபிமான ரசிகர்களால் இன்றும் நினைவு கூறப்படும் பாடல்கள்
காதல் மன்னன் பட்டம் சூட்டப்படுவதற்கு முன்னர்
மிக பொறுப்பான கதாபத்திரத்தை ஏற்று திறம்பட நடித்திருந்த ஆர் கணேஷ்
( அப்படித்தான் டைட்டிலிலும் வரும்)
அதுவும் , ஜெமினி கணேசனுக்கு A M ராஜா பின்னணி வழங்க ஆரம்பித்த காலத்தில்
அவருக்காக திருச்சி லோகநாதனை பாட வைத்திருப்பதுவும் பொருத்தமான புதுமைத்தெரிவு
எழில் வரிசையிலே நிறை குணமதிலே முதலிடம் நீயே உணர்ந்து கொள்வாயே வாழ்வதனின் மேன்மை காட்டுவாய் ....
என்கிற போது அவருடைய முகபாவத்தை பாருங்கள்
அலட்டிக் கொள்ளாமலேயே ஹிட் தந்த மன்னன் அல்லவா !
கூடவே உச்சரிப்புத திலகம் திருச்சி லோகநாதனின் குரலைக் கேளுங்கள்
திருமணத்திற்கு பின்னரே நடிக்கத தொடங்கி
இவ்வளவு பிரபலமான நடிகை அஞ்சலி தேவி ஒருவராகத்தான் இருக்க முடியும்
அவருக்காக ஜிக்கி அதிகம் பாடிய காலம்
ஏரு ஒட்டி போவாயே அண்ணே .. - ஜிக்கி .
http://www.dailymotion.com/video/xeil5r_yeru-pootti_creation
http://www.raaga.com/player4/?id=154...72435106150806
இந்தப் பாடலுக்கு வஹீதா ரஹ்மான் மின்னலாகத்த் தோன்றி
ஒரு காட்சியிலே ஆடிவிட்டு இந்திக்கு பறந்து போனாலும்
அவர் கிள்ளி விட்டுப் போன அந்த இன்பரணம்
இன்னும் நெஞ்சங்களை விட்டு நீங்கவில்லை போலும்
டிவி யில் யூ டுப்பிலும் இன்றும் வலம் வருகின்ற
காமரா முன்வந்த முதல் படம்தானா ? என்று வியக்க வைக்கும்
அவர் கூடவே தட்டி தட்டிக் கொண்டு ஆடுகிற (பெயர் கூடத் தெரியவில்லை )
துணை நடிகர்களைப பாருங்கள்
அமோக கலைத்திறன் !
பாடல் மெட்டு மட்டுமென்ன சாதரணமா ??
மிகப் பிரபலமான கிராமிய மெட்டு என்று நம்புகிறேன்
மதுரை வீரனில்(1956 April ) சும்மா இருந்தா நஷ்டம் சோத்துக்கு
ஜி ராமநாதன் + உடுமலை நாராயண கவி பாடல்
http://www.raaga.com/player4/?id=155...38044566940516
மாஸ்டர் வேணுவின் இசையமைப்பில் வந்த எங்க வீட்டு மகாலட்சுமியில் (1957 ) வந்த
பட்டணம் தான் போகலாமடி
http://www.raaga.com/player4/?id=154...09604042489082
அத்தனையும் இதே மெட்டை அடிப்படையாக வைத்து வந்த பாடல்கள்
இன்னும் வேதாவின் இசையமைப்பில் கூட கேட்டிருக்கிறேன்
இத்தனையும் சொல்லிவிட்டு காலம் மாறிப் போச்சு முதன் முதலாக வெளிவந்தபோது வந்த விளம்பரத்தையும் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்
இப்பொழுது நடை பெறுகிறது
சென்னை ஸ்ரீகிருஷ்ணா வெலிங்டன் உமா
தென்னாடெங்கும்
அமோக வெற்றியுடன்
நடை பெறுகிறது
சாரதியின்
காலம் மாறி போச்சு
புதுமை உதயத்தின் விடிவெள்ளி
ஸிடி ரிலீஸ்
ஸ்ரீ கிருஷ்ணா பிலிம்ஸ்
http://i871.photobucket.com/albums/a...7147977068.gif
நன்றி
அன்பு மிக்க tfmlover அவர்களுக்கு நம் அனைவரின் சார்பாக நன்றிகள். காலம் மாறிப் போச்சு பாடல்கள், காலம் மாறினாலும் நெஞ்சை விட்டு நீங்காத பாடல்கள். 78 கிராமபோன் ரிக்கார்டின் இருபக்கங்களிலும் இடம் பெற்ற பெரிய பாடல், ஏரு பூட்டிப் போவாயே பாடலாகும். படத்தில் அப்பாடலின் நீளம் சற்றுக் குறைவு. ரிக்கார்டு வடிவத்தில் டேப் ஒலி இன்னும் சற்று நேரம் கூட, தனியாக இசைக்கும். அந்த இசைத்தட்டு வடிவம் கிடைத்தால் நாம் அந்த வித்தியாசத்தை அறியலாம். குறிப்பாக என்னை மிகவும் கவர்ந்த பாடல் இனிதாய் நாமே இணைந்திருப்போமே என்கின்ற பாடலாகும்.
வாய்ப்புக்கும், விளம்பர பிரதிக்கும் நன்றி.
ராகவேந்திரன்
80களின் பிற்பகுதி மற்றும் 90களின் முற்பகுதியில் திரு முகவை ராசமாணிக்கம் அவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம் அவர் 50களின் இசையமைப்பாளர்களை, பாடகர்களை, பாடலாசிரியர்களை, சிலாகித்து பாராட்டுவார். சுய விளம்பரம் செய்யாத மாமனிதர். அவ்வளவு பெரிய ஹிட் பாடலைக் கொடுத்தவரா இவர் என்னும் அளவுக்கு மிகவும் எளிமையாக இருப்பார். அதற்குப் பிறகு அவரைக் காணும் வாய்ப்புக் கிட்டவில்லை.
அட... சில நாட்கள் ஊருக்குப் போயிட்டு வர்ரதுக்குள்ளாற என்னென்னமோ ஆகிப் போச்சே !
எத்தனை பாட்டுகள் ? எத்த்னை படக்காட்சிகள் ?
யானைப்பாகன் முதல் காலம் மாறிப் போச்சு வரைக்கும்...
ஒவ்வொண்ணா ரசிக்க கொஞ்சம் அவகாசம் தேவை.
Tfml... கண்ணதாசன் திரைப் பாடல்களில் மருத நாட்டு வீரன் பாடல்களில், "எங்கே செல்கின்றாய்","பருவம் பார்த்து", "அரும்புதிர முத்துதிர" ஆகியவற்றுடன் "விழியலை மேலே" பாடலும் இருக்கிறது. ( என் நண்பர் ஒருவரிடம் அந்தப் புத்தகம் இருக்கிறது. அவர் சரிபார்த்து சொன்னாரு ) அதனால் அது அவர் இயற்றியது என்றே வைத்துக் கொள்ளலாமா ?
hi Thiru ராகவேந்திரன் !
இனிதாய் நாமே ஒரு பொக்கிஷப் பாடல்
வேணுவின் முத்திரையை இனிதாய் இலகுவாக உணர்ந்து கொள்ளலாம்
யூ டியூப் ஒலி அவ்வளவு தெளிவாக இல்லை
என்னிடம் இருப்பதும் அது போன்றுதான்
http://www.thiraipaadal.com/album.ph...D01052&lang=en
முகவை ராஜமாணிக்கம் அவர்கள் 2002 இல் மறைந்தார் என்றும் அறிந்தேன்
அவர் எழுதிய நூல்கள் பரவலாக இருக்கின்றன
இன்னும் சில திரைப்படங்களிலும் பணியாற்றி இருக்கிறார்
விபரம் முற்றாக அறியப்படவில்லை
thanks !
Regards
hi மது !
பருவம் பார்த்து அருகில் வந்து வெட்கமா ?
என்னுடைய dvd யில் இணைக்கப்படவில்லை
இங்கேயும் யூடியூப்பிலும் போட்டதால் பார்த்து ரசிக்கும் பாக்கியம் கிடைத்தது
எம்மை வாட்டி வதைப்பதென்று வடிவமான கலைவண்ணம் !
விழியலை மேலே செம்மீனும் மருதகாசி எழுதியதாகவே அறிந்தேன்
ஆனாலும் can't say for sure !
அந்தக்காலத்தில் காதல் , தத்துவ பாடல்களுக்கிடையே
உணர்ச்சி பூர்வமான தாலாட்டுப் பாடல்கள் வேண்டுமானால்
அதற்கு அ .மருதகாசியைத்தான் அழைப்பார்களாம்
அந்த வகையில் அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது அவர் எழுதியது
பாடலைக் கண்டு மகிழ
http://www.dailymotion.com/video/xi8ada_arumbudhira-muththudhira_creation
Regards
Pangaaligal S Dhakshinamoorthy A Maruthakasi -Trichy Loganathan - P Susheela
அது போலவே மருதகாசியின் சின்ன அரும்பு மலரும் ...மிகவும் பிரபல்யமான ஒன்று
பங்காளிகள் திரைப்படத்தில் எஸ் தட்சிணாமூர்த்தி இசையில்
திருச்சி லோகநாதனின் குரல் அபூர்வமாக நடிகக்கவேள் M R ராதாவுக்காக
அற்புதமான நடிகர் இன்னும் நிறைய மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்க வேண்டும்
நெஞ்சை நெகிழ வைக்கும் கானமும் காட்சியும் !
http://www.youtube.com/watch?v=7dC-FnF_mXI
பி சுசீலா அஞ்சலி தேவிக்காக
http://www.dailymotion.com/video/xfc112_chinna-arumbu-malarum_school
Regards
tfml: There is a reason for that disorganized sequence. Threads with the latest posts move to the top to make it convenient to view the new posts(if the current hub has that feature). If there is no new post in a thread that thread will move to the bottom with time. If you are interested in a few key threads you can ask for a sticky in those threads to keep it at the top ( if sticky is available in the new hub.)