ஸ்டாரில் 'ஆண்டவன் கட்டளை' புகைப்படத்துக்கு ராகவேந்திரன் சாருக்கும், நௌ சாருக்கும் நன்றி!
டியர் ஷிவ்ராம்,
தங்களின் பாராட்டுக்கு நன்றி! தங்களது பதிவுகள் மட்டும் சளைத்ததா என்ன?! தகவல்களை அள்ளி அள்ளித் தருகின்றனவே!
அன்புடன்,
பம்மலார்.
Printable View
ஸ்டாரில் 'ஆண்டவன் கட்டளை' புகைப்படத்துக்கு ராகவேந்திரன் சாருக்கும், நௌ சாருக்கும் நன்றி!
டியர் ஷிவ்ராம்,
தங்களின் பாராட்டுக்கு நன்றி! தங்களது பதிவுகள் மட்டும் சளைத்ததா என்ன?! தகவல்களை அள்ளி அள்ளித் தருகின்றனவே!
அன்புடன்,
பம்மலார்.
டியர் ஷிவராம்.Quote:
Originally Posted by SHIV
தங்கள் பாராட்டுக்கு நன்றி.
நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். இது பற்றிய விரிவான செய்தி நமது திரியின் ஆறாவது பாகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 122
கே: நடிகர் திலகம் நடிக்கும் படங்களைப் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி, மற்ற நடிகர்கள் நடிக்கும் போது ஏற்படுவதில்லையே, ஏன்? (கே.எல்.கன்னியப்பன், சிலியாவ், மலேசியா)
ப: அவர் நடிகர்களுக்கெல்லாம் திலகம் போன்றவர் என்பதால் தான். அவர் நடிக்கப் பிறந்தவர். மற்ற பலர் நடிக்க வந்தவர்கள்.
(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1971)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 123
கே: சிவாஜி கணேசன் தர்மம் செய்வதில்லை என்று கூறுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (வ.மு.சுந்தரவதனம், மாயூரம்)
ப: அவருக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்வதற்கு சமமாக.
(ஆதாரம் : பேசும் படம், ஜூலை 1964)
அன்புடன்,
பம்மலார்.
"என்னுடைய இத்தனை வருட கலைப் பயணத்தில் எனக்கு மிகப் பெரிய முன்னோடியாக, என்னை பாதித்தவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். ஒளி கொடுக்கும் ஒரு சூரியன் மாதிரி அவர் இருந்தார்."
- 'சினிமா எக்ஸ்பிரஸ்' 16-31 ஆகஸ்ட் 2010 இதழில் கலைஞானி கமல்.
அன்புடன்,
பம்மலார்.
டியர் முரளி சார், பம்மலார், சகோதரி சாரதா மற்றும் நண்பர்கள்,
பாலும் பழமும் சாதனை புரிந்த விவரமும் அது புரிய விடாமல் செய்யப் பட்ட விவரமும் விவரமாக விவரமறிந்தவர்களால் விவரமறிய வேண்டியவர்களுக்கு தெரிவித்திருக்கிறீர்கள். தங்களுக்கு அனைத்து சிவாஜி ரசிகர்களும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
நடிகர் திலகத்தின் படங்களுக்கு அவர் படங்களே வில்லன் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. இதற்கு மற்றொரு உதாரணம் தங்க சுரங்கம்.
இதில் ஒரு சோகம் என்னவென்றால் ஒரு படத்தைத் தூக்கிவிட்டு வெளி வரும் அடுத்த படம் அதைவிட அருமையான படமாய் அமைவது தான். வளர் பிறை மிகச் சிறந்த படம். காட்சிக்கு காட்சி நடிகர் திலகத்தின் நடிப்பு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். கே.வி.மகாதேவனின் இசையில் பாடல்கள் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும். குறிப்பாக சலசலக்குது காத்து பாடல். இதுவும் நன்கு ஓடியிருக்க வேண்டிய படமே. Method Acting, Subdued Acting என்று நடிப்பில் எத்தனை விதம் உண்டோ அத்தனையும் செய்து காட்டியிருப்பார்.
வாய்ப்புக்கு நன்றி
அன்புடன்
ராகவேந்திரன்
வசூல் சக்கரவர்த்தி - 5
'பாலும் பழமும்' முதல் வெளியீட்டில் (9.9.1961) சென்னை சாந்தி மற்றும் மதுரை சென்ட்ரல் ஆகிய திரையரங்குகளில் பெற்ற வசூல் விவரம்:
[ஊர் - அரங்கம் - ஓடிய நாட்கள் - மொத்த வசூல்(ரூ.- பை.)]
1. சென்னை - சாந்தி - 127 நாள் - 3,06,167-68
2. மதுரை - சென்ட்ரல் - 127 நாள் - 2,50,528-76
இந்த இரண்டு பிரிண்டுகள் மட்டுமன்றி, 'பாலும் பழமும்' திரைக்காவியத்தின் ஒவ்வொரு பிரிண்டுமே வசூல் பிரளையம் தான்!
அன்புடன்,
பம்மலார்.
The following is taken from a blog of one Mr.Ravichandran, who hails from Mannargudi. Thanks to Joe for pointing it out.
-------------------------------------------------------------------------------------
நான் பார்த்த திரைப்படஙகளிலேயே என்னை மிகவும் பாதித்த படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ”முதல் மரியாதை”.
நான் பள்ளியில் படித்த பதினேழு வயது வரை பார்த்த படங்களின் எண்ணிக்கை ஒரு பதினைந்து இருக்கும் அவ்வளவுதான். காரணம்.. அப்பா எங்களை படம் பார்க்க அனுமதிக்க மாட்டார். படம் பார்த்தால் படிப்பு கெட்டுவிடும் என்பது அவருடைய நம்பிக்கை. நானும் நல்ல பிள்ளையாக பள்ளியில் படித்து வந்ததால் அண்ணன் மாதிரி அப்பாவிற்கு தெரியாமலோ அல்லது பள்ளியை கட் அடித்து விட்டோ சினிமாவிற்கு சென்றது கிடையாது. பள்ளியில் படித்தபோது எல்லோரையும் போல் எனக்கு M.G.R மற்றும் ரஜினி படங்கள்தான் பிடிக்கும். காரணம்.. சண்டைக் காட்சிகள் மற்றும் மசாலா. குறிப்பாக சிவாஜி படங்கள் பிடிக்கவே பிடிக்காது. நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் சிவாஜி படம் “தெய்வ மகன்”... அந்த படத்தில் கோர முகத்துடன் நடித்த சிவாஜியை பார்த்து படம் பார்க்கும்போதே அழுதுவிட்டேன். இனிமேல் இந்த அழுமூஞ்சி சிவாஜி படம் பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்தேன். அதற்குப் பிறகு பார்த்த படங்கள் உரிமைக்குரல், விவசாயி, முரட்டுக்காளை, பில்லா... போன்ற பெரும்பாலும் M.G.R, ரஜினி படங்கள்தான்.
1985-ஆம் ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன பிறகு நானும் என் நண்பன் ராஜாராமும் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஏதோவொரு புகழ்பெற்ற புதிய ஆங்கிலப்படம் பார்க்கலாம் என்ற பிளானுடன் தேவி தியேட்டருக்கு மேட்னி ஷோ போனோம். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. வேறு வழி இல்லாமல் பக்கத்திலிருந்த சாந்தி தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த “முதல் மரியாதை” படத்திற்குச் சென்றோம்.
படம் ஆரம்பித்தவுடன் அப்படியே எங்கள் கிராமத்தில் நடக்கும் உண்மை சம்பவங்கள் போல் என் கண் முன்பே காட்சிகள் நடக்கின்றன. படத்தில் வரும் சிவாஜி மாதிரியேதான் என் அப்பாவின் தோற்றம் இருக்கும். படத்தில் சிவாஜி கொஞ்சம் பருமனாக இருப்பார். அப்பா சற்று மெலிந்த தேகம்...சிவாஜியின் உடல்மொழி அப்படியே அப்பாவின் உடல்மொழி! முதன் முறையாக ஒரு படத்தை அதன் கதைக்காவும், சிவாஜி என்ற நடிகரின் நடிப்புக்காவும், இயக்குநரின் திறமைக்காவும், இசைக்காவும், பாடல்களுக்காவும் ரசித்து பார்த்த படம். படம் முடிந்தவுடன் படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து விடுபட்டு உடனே என்னால் எழ முடியவில்லை.
ராஜா என்னைப்பார்த்து “ஏன்டா... ஒரு மாதிரி இருக்கிறாய் என்றான்”. அவன் ஒரு சினிமா புலி. மன்னார்குடியில் செண்பகா தியேட்டருக்கு எதிரில்தான் அவன் வீடு. வாரத்திற்கு ஒரு படம் பார்த்தவன் அவன். ஆனால்... இந்த படம் என் முகத்தில் அறைந்து படம் என்பது சண்டை காட்சிகள் மற்றும் மாசாலாவிற்காக மட்டும் பார்ப்பது கிடையாது என்று உணர்த்திய படம். சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிகரையும், பாரதிராஜா என்ற கலைஞனையும், இளையராஜா என்ற இசை மேதையையும், வைரமுத்து என்ற கவிஞனையும் எனக்கு அறிமுகப் படுத்திய படம்.
படம் பார்த்துவிட்டு விடுதிக்கு திரும்பி வந்ததிலிருந்து எந்நேரமும் படத்தைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். படத்தின் காட்சிகள், பாடல்கள் என் மணக்கண்ணில் ஓடிக்கொண்டேயிருந்தன. இரண்டு வாரங்கள் கழித்து ஒரு நாள் தைரியாமாக பஸ்ஸில் தனியாக சாந்தி தியேட்டர் சென்று இரண்டாவது முறையாகப் பார்த்தேன். நான் வாழ்க்கையில் இரண்டாவது தடவைப் பார்த்த முதல் படம்!
அப்பா இறந்தவுடன் அப்பா ஞாபகம் வரும்போதெல்லாம் இந்த படத்தைப் பார்ப்பேன். இதுவரை கிட்டத்தட்ட 25 தடவைக்கு மேல் இந்தப் படத்தைப் பார்த்திருப்பேன்.
- மிகையான நடிப்பு, செட் போட்டு ஸ்டியோக்களில் எடுக்கப்படும் படங்கள் என்றிருந்த தமிழ் சினிமாவிற்கு உண்மையான கிராமம், யதார்தமான நடிப்பு, நல்ல ஒளிப்பதிவு என்பதன் மூலம் புதிய சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப் படுத்தியவர் பாரதிராஜா. சிவாஜி இறக்கும் தருவாயில் இருக்கும் காட்சியில் ஆரம்பித்து.. பிளாஸ்பேக்கில் கதை சொல்லி நம்மை படத்துடன் கட்டிப் போட்டு விட்டிருப்பார் பாரதிராஜா
- சிவாஜி கணேசன் என்ற கலைஞன் ஒரு “அட்சய பாத்திரம்” என்று சிவாஜியின் தீவிர ரசிகரான நண்பர் ஜோ கூறுவார். அது முற்றிலும் உண்மை. யதார்த்தமான நடிப்பு, மிகையான நடிப்பு என்று டைரக்டர் தனக்கு தேவைப்பட்டதை அந்த அட்சய பாத்திரத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த படத்தில் பாரதிராஜா எதிர்பார்த்த பெரிய மனிதர் மலைச்சாமி தேவர் என்ற கதாபாத்திரத்திற்கான யாதார்தமான நடிப்பை கொடுத்திருப்பார் நடிகர் திலகம். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இறுதி காட்சி, “உன் கை பக்குவத்தை சாப்பிடும்போது என் ஆத்தா ஞாபகம் வந்திடுச்சி” என்று கண்கலங்கி ராதா வீட்டில் மீன் குழம்பு சாப்பிடும் காட்சி. “பூங்காற்று திரும்புமா” என்ற பாடலுக்கு காட்டும் முகபாவணைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்....
உடையிலும், நடிப்பிலும் கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்து நடித்த ராதாவிற்கு இந்த படம் ஒரு மைல் கல்.
ஒரு கிராமத்து அடங்காப் பிடாரி பெண்மணியாக இந்த படத்தில் வாழ்ந்திருப்பார் வடிவுக்கரசி. இந்த மாதிரி வேடத்தில் காந்திமதியை விட என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று நிரூபித்திருப்பார்.
- காமெடிக்கு ஜனகராஜ்... மக்கள் ஓட்டுவதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஜனகராஜ் போன்ற இளிச்சவாயன் இருப்பார்
- இளையராஜா பாடல்கள் + பிண்ணனி இசை இரண்டிலும் ஒரு இசை வேள்வியே நடதியிருப்பார். குறிப்பாக “பூங்காற்று திரும்புமா” என்ற பாடல். இந்தப் பாடல் என்னுடைய ஆல் டைம் பேவரைட் பாடல். இந்தப் பாடலைப் கேட்கும் போதெல்லாம் மனம் என்னவோ செய்யும். கவிஞர் வைரமுத்துவிற்கு தேசிய விருது வாங்கித் தந்த பாடல். வைரமுத்து வார்த்தைகளில் புகுந்து விளையாடிருப்பார். ”அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்”, “வெட்டி வேரு வாசம்” பாடல்களும் அருமையான பாடல்கள். இளையராஜா, வைரமுத்து என்ற இரண்டு மகா கலைஞர்கள் தங்களின் ஈகோவால் ரசிகர்களாகிய நமக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்றுதான் கூறுவேன்.
இப்படி இந்த படத்தைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்............
முதல் மரியாதை – ஒரு அருமையான கிராமத்து காவியம்!
-------------------------------------------------------------------------------------
Link to the blog - http://vssravi.blogspot.com/2010/09/10.html.
Regards
ராகவேந்தர் சார்,
நன்றி எதற்கு? இந்த பதிவுகள் இன்றைய மற்றும் நாளைய தலைமுறைகளுக்கு உண்மையை உணர்த்தவே!
இது நாள் வரை காண வாய்ப்பு கிடைக்காத வளர் பிறை படத்தைப் பற்றி ஆவலை தூண்டும் விதமாக எழுதியுள்ளீர்கள். பார்க்க வேண்டும்.
சுவாமி,
சென்னை மதுரை வசூல் விவரங்களை பாலும் பழமுமாக தந்ததற்கு நன்றி.
அன்புடன்
முரளி சார் மற்றும் பம்மலார் சார்,
தங்கள் பணி மேலும் மேலும் தொடர வேண்டும். மிக சிறப்பாக கருத்துக்களையும் சாதனை விவரங்களையும் சுட்டிக் காட்டி வருகிறீர்கள். பாராட்டுக்கள். நன்றி கூற அனைத்து சிவாஜி ரசிகர்களுமே கடமைப் பட்டுள்ளோம். பாலும் பழமும் வசூல் விவரங்கள் பிரமிக்க வைக்கின்றன ( பொதுவாக வசூல் சாதனைகளைப் பற்றி நான் அந்த அளவிற்கு ஆர்வம் காட்டாவிட்டாலு்ம் கூட, நாள் கணக்கிலும் விழா கணக்கிலும் நிச்சயம் ஆவலுண்டு).
அன்புடன்
ராகவேந்திரன்