அஞ்சல் பெட்டி-520 மலரும் நினைவுகளாக புகைப்படங்களை திரியில் அஞ்சல் செய்த திரு ராகவேந்திரன் அவர்களுக்கு நன்றி.
Printable View
அஞ்சல் பெட்டி-520 மலரும் நினைவுகளாக புகைப்படங்களை திரியில் அஞ்சல் செய்த திரு ராகவேந்திரன் அவர்களுக்கு நன்றி.
இன்று ஜூலை 1 - நடிகர் திலகத்தின் இரு பெறும் திரைக்காவியங்கள் வெளியான 50வது ஆண்டு நிறைவு -
எல்லாம் உனக்காக - 01.07.1961
ஸ்ரீ வள்ளி - 01.07.1961
ஸ்ரீ வள்ளி
நரசு ஸ்டூடியோஸ் தயாரித்து டி.ஆர் ராமண்ணா அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த திரைச் சித்திரம். சில திட்டமிட்ட பிரச்சாரங்களால் பெரும் விமர்சனத்தை சந்ததித்தது. என்ன இருந்தாலும் டி.ஆர். மகாலிங்கம் படம் போல் இல்லை என்ற மேம்போக்கான விமர்சனம் பரவலாக பரப்பப்பட்டதால் பாதிப்பு அடைந்தது. போதாக்குறைக்கு மிகப் பெரும் வெற்றி பெற்ற பாசமலரின் ஆரவார நடைக்கு முன் ஈடு கொடுக்க முடியாமல் போனது. அது மட்டுமன்றி போட்டிக்கு நடிகர் திலகத்தின் இன்னொரு படமும் அதே நாளில் வெளியானதும் இதனுடைய வெற்றிக்கு தடை போட்டது.
ஆனால் படத்தைப் பார்த்தால் இந்த விமர்சனங்கள் சற்று நியாயக் குறைவை நோக்கி செல்வதாக நமக்கு தோன்றுவது தவிர்க்க இயலாதது. ஜி.ராமநாதனின் அருமையான பாடல்களே இதற்கு கட்டியம் கூறும். தன் பங்கிற்கு சற்றும் குறை வைக்காமல் நடிகர் திலகம் உழைத்துள்ளது நன்கு தெரிகிறது. மேம்போக்கான விமர்சனமே இப்படத்தின் வெற்றியை தடை செய்தது என்பதே என் தாழ்மையான எண்ணம்.
இப்படத்தின் விளம்பரங்கள்
http://i872.photobucket.com/albums/a...iAd01forPB.jpg
http://i872.photobucket.com/albums/a...iAd02forPB.jpg
ஹிந்து நாளிதழில் வெளியான இப்படத்தைப் பற்றிய குறிப்புக் கட்டுரைக்கான இணைப்பு
இப்படத்தின் ஒளிக்காட்சியாக இணையத்தில் ஒரு பாடல் மட்டுமே கிடைத்துள்ளது. அதுவும் டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் கம்பீரமான குரலில் சிறந்த பாடல்
http://www.youtube.com/watch?v=_DKeeOQAoYk
இப்படத்தின் பாடல்களைக் கேட்டு மகிழ
http://www.jointscene.com/tamil-movi...li_-_1961.html
எல்லாம் உனக்காக
இதுவும் மிகப் பெரும் வெற்றியைக் கண்டிருக்க வேண்டிய படம். தொழிற் சங்க ஈடுபாட்டினால் சொந்த வாழ்க்கையில் சங்கடங்களை சந்திக்கும் ஒரு தொழிலாளியின் கதை. பாச மலர் திரைப் படத்தின் மாபெரும் வெற்றியினால் பாதிப்படைந்த படம். பாடல்கள் இசை நடிப்பு என அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். எஸ்.வி.ரங்காராவ், சாவித்திரி இவர்களுடன் நடிகர் திலகம் என்ற மாபெரும் கலைஞனின் சிறந்த உழைப்பை வெளிப்படுத்திய படம். சென்டிமென்ட என்ற காரணத்தினால் திரைப்படங்கள் பாதிப்படையக் கூடும் என்ற கூற்றுக்கு உதாரணம் காட்ட வேண்டுமானால் இப்படத்தை சொல்லலாம்.
http://i872.photobucket.com/albums/a...Ads/EUAd01.jpg
http://i872.photobucket.com/albums/a...Ads/EUAd02.jpg
இப்படத்தின் பாடல் அல்லது காட்சி யாவும் கிடைக்க வில்லை. பாடல்களை கீழ்க்காணும் இணைய தளத்தில் கேட்கலாம்.
http://www.jointscene.com/movies/kol..._Unakkaga/4296
ராகவேந்தர் சார்,
அஞ்சல்பெட்டி 520 படத்தில் நான் குறிப்பிட்ட அந்தக்காட்சியை உடனுக்குடன் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. படங்கள் யாவும் மிக அருமையாக உள்ளன.
'எல்லாம் உனக்காக' மற்றும் 'ஸ்ரீ வள்ளி' படங்களின் பொன்விழா நாளையும் தவறாமல் நினைவுகூர்ந்துள்ளீர்கள். ஆகா ஓகோ என்று ஓடிய படங்களை மட்டுமல்லாது இப்படிப்பட்ட, நன்றாக அமைந்தும் வெற்றி வாய்ப்பினை இழந்த படங்களையும் நினைவுகூர்வதே நடிகர்திலகத்துக்கு செய்யும் சேவை.
இவற்றில் 'எல்லாம் உனக்காக' பார்த்திருக்கிறேன். 'மலரும் கொடியும் பெண்ணென்பார்' பாடல் மிகவும் பசுமையாக நினைவில் உள்ளது. டி.எம்.எஸ்.மிக அமைதியாகப்பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று.
ஸ்ரீ வள்ளி பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அது கலர்ப்படம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் முழுநீள கலர்ப்படம் என்று நீங்கள் அளித்துள்ள விளம்பரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது என்ன வகை கலர்?. நான் இதைக்கேட்கக்காரணம், தமிழில் முதல் கேவா கலர்ப்படம் 'அலிபாபா' என்பதும், முதல் டெக்னிக் கலர் படம்' வீரபாண்டிய கட்டபொம்மன்' என்பதும் (இர்ண்டாவது டெக்னிக் கலர்ப்படம் 'கொஞ்சும் சலங்கை'), முதல் ஈஸ்ட்மென் கலர்ப்படம் 'கர்ணன்' என்பதும் நமக்குத்தெரியும். இவற்றுக்கு இடையே 1961-ல் வெளியான ஸ்ரீ வள்ளி கேவா கலரா அல்லது டெக்னிக் கலரா?. (இப்போது டி.வி.டி. வெளியாகியிருக்கிறது. வேறு மாநிலத்தில் இருப்பதால் இன்னும் பார்க்கவில்லை).
http://www.hindu.com/lf/2004/12/26/i...2610580201.jpg
இன்று 03.07.2011 அன்று பிறந்த நாள் காணும் அன்பு சகோதரர் ராம்குமார் கணேசன் அவர்களுக்கு நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்
http://www.youtube.com/watch?v=i7rJ_HATYZE
இப்பாடலை ராம்குமார் அவர்களுக்கு அன்புப் பரிசளிப்போம்
அன்புடன்
ராகவேந்திரன்
சவாலே சமாளி மாணிக்கத்திற்கு 41வது ஜெயந்தி[3.7.1971 - 3.7.2011]
சாதனைப் பொன்னேடுகள்
First Release Ad : The Hindu : 3.7.1971
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3796.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 3.7.1971
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3793.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 10.10.1971
http://i1094.photobucket.com/albums/.../GEDC3798a.jpg
அன்புடன்,
பம்மலார்.
இதயதெய்வம் நடிகர் திலகத்தின் அருந்தவப்புதல்வர் தளபதி ராம்குமார் அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் [ஜுலை 3] நல்வாழ்த்துக்கள் !
http://i1094.photobucket.com/albums/...ammalar/S9.jpg
பாசத்துடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
நான விரும்பிய காட்சி [தொடர்ச்சி]
நடாத்தூர் நரசிம்மாச்சாரி ஆச்சார அனுஷ்டானமான ஒரு அந்தணர். அவருடைய பார்யாள் வேதா என்ற வேதவல்லி. அவர்களுடைய ஒரே செல்லப் புத்திரன் வரதுக்குட்டி என்கிற வரதராஜன். மிகவும் அப்பாவியாக வளரும் வரதுக்குட்டி ஒரு தேர்வுக்கு செல்லும் போது விபத்தில் சிக்கி இறந்து விடுகிறான். இந்த செய்தி கேட்டு மூர்ச்சையான வேதா நினைவு தப்பிய நிலையிலேயே வாழ்கிறாள். நரசிம்மாச்சாரியின் நிலையோ மிகவும் பரிதாபத்திற்குரியது. ஒரு பக்கம் மகனை இழந்த துயரம், மற்றொரு புறம் மனைவியின் நிலைமை.. இந்த நேரத்தில், எதேச்சையாக அவர்கள் வீட்டுக்கு வருகிறான் ஆனந்த் என்கிற ஒரு ரௌடி. அவன் அச்சு அசலாக வரதுக்குட்டியைப் போலவே இருக்க, அவனைப் பார்த்த வேதாவிற்கு நினைவு திரும்புகிறது. ஆனால் ஆனந்தை வரதுக்குட்டி என்றே நம்பி விடுகிறாள். நரசிம்மாச்சாரி-வேதா தம்பதியினரின் அன்பிற்கும் வேண்டுகோளுக்கும் பணிந்து ஆனந்த் அவர்கள் இல்லத்திலேயே தங்குகிறான். ஆனால் அவனுடைய குடிப்பழக்கம், அசைவ உணவில் நாட்டம் போன்றவற்றை அவனால் ஒதுக்க முடியவில்லை. தனக்காக தன் இல்லத்தில் தங்க இணங்கிய ஆனந்திற்காக நரசிம்மாச்சாரி, தன்னுடைய சுதர்மத்தை விட்டு அசைவ உணவை அவனுக்காக வாங்கி வருகிறார். அவருடைய அன்பிலும் பாசத்திலும் நெக்குருகும் ஆனந்த் நெகிழ்ந்து போய், அசைவ உணவை உதறித்தள்ளி விட்டு தொடர்ந்து அவருடைய புதல்வனாகவே மாறி விடுகிறான்.
வித்யா மூவீஸ் தயாரித்து வி.ஸ்ரீனிவாசன் இயக்கி 14.11.1982ம் தேதி வெளிவந்த பரீட்சைக்கு நேரமாச்சு திரைப்படம் நடிகர் திலகத்தின் திரையுலக வரலாற்றில் மிகவும் முக்கியமான படமாகும். இப்படம் தொலைக்காட்சிகளில் அதிகம் விவாதிக்கப் படாதது வருத்தமே. இருந்தாலும் நாம் விவாதிக்க தடையில்லையே. குறிப்பாக இக்காட்சி, அசைவ உணவை ஒரு அந்தணர் வாங்கும் போது எந்த சூழ்நிலையில் இருப்பாரோ, அதனை அப்படியே தத்ரூபமாக சித்தரித்துள்ளார் நடிகர் திலகம். அது மட்டுமன்றி அதுவே படத்திற்கு ஒரு முக்கியமான திருப்பமாகவும் அமைவது சிறப்பு. இக்காட்சியின் முடிவில் தான் அசைவ உணவை வாங்கி வந்ததற்காக தலைக்கு தண்ணீர் ஊற்றிக் கொள்வது, அதற்கு முன் அந்தக் குடையின் மேலும் தன் மேல் துண்டின் மேலும் மறக்காமல் தண்ணீர் ப்ரோக்க்ஷணம் செய்வது, தன் தலையில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளும் போது மறக்காமல் மந்திரம் சொல்வது....
பிறவிக் கலைஞரய்யா நடிகர் திலகம்.
இப்படத்தில் திரு ஒய்.ஜி.மகேந்திராவின் நடிப்பைக் குறிப்பிடாவிட்டால் ஒரு நல்ல கலைஞனை நாம் இருட்டடிப்பு செய்யும் பாவத்திற்கு நாம் ஆளாவோம். நீங்கள் ஏன் சார் இதையெல்லாம் வாங்கி வர்றீங்க என்று கேட்கும் போது அவருடைய குரலில் மாடுலேஷன், மாறும் முகபாவம், இவையெல்லாம் அவர் நடிகர் திலகத்தின் ரசிகர் என்பதற்கும் மேலே போய் அவருக்குள் நடிகர் திலகம் ஜீவனாய் உள்ளார் என்பதைக் காட்டுகிறது என்றால் அது உண்மை.
இநத்க் காட்சி என்றென்றும் என் நெஞ்சை விட்டு அகலாது. உங்களுக்கும் கூடத் தான்...
இதோ நீங்களும் காணுங்கள்
http://www.youtube.com/watch?v=BPsRQnqMc64
அன்புடன்
பம்மலார் மற்றும் ராகவேந்திரன்
டியர் பம்மலார்,
மாணிக்கத்தின் வெளியீட்டு விவரங்களை மாணிக்கப் பதிவுகளாய் இட்டு அசத்திவிட்ட தங்களுக்கு அனைவரின் சார்பிலும் உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்