The Hindu - Trichy - 23-06-2012
http://www.thehindu.com/news/cities/...cle3562285.ece
Printable View
The Hindu - Trichy - 23-06-2012
http://www.thehindu.com/news/cities/...cle3562285.ece
Dear Vasudhevan Sir,
Raja Stills super. Raja - Rajaathaan.
கோபால்ஜி,
நம்மகிட்டயே டபாய்க்கிறீங்களே... நீங்க கோச்சிக்கிட்டு போய்ட்டா அன்பு பம்மலாருக்கு ரெண்டு வேலை இல்லன்னுதான் நான் சொல்லுவேன். உங்க மெயில திரியில் பதிவு செய்யிறது பம்மலாருக்கு ரொம்ப ஈஸி. ஏன்னா ஒரு வரி ரெண்டு வரியை காப்பி, பேஸ்ட் பண்ணி திரியில் போடுறது ரொம்ப சுலபம்தானே அண்ணாச்சி!... என்னை ஏமாத்த மாட்டீங்கன்னு நெனைக்கிறேன். சொல்லுறத சொல்லிப்புட்டேன்.
டியர் சந்திரசேகரன் சார்,
தங்கள் ராஜ ரசனைக்கு மிக்க நன்றி! திருச்சி கர்ணன் நூறாவது நாளையொட்டி பள்ளி மாணவ மணிகளுக்கு அகராதிகள் வழங்கப் பட்டது மிகவும் பாராட்டப் பட வேண்டிய விஷயம். நன்றி!
Dear Gnanaguruswamy sir,
Thanks and very kind of u.
கர்ணன் இன் இமாலய வெற்றி, நமக்கு பெருமையை தருகிறதுஇதன் மூலம், அண்ணன் சிவாஜி இன் படங்கள் எல்லா காலத்துக்கும்
பொருத்தமாக, ஒரு போற்ற படகூடிய பொக்கிஷம் என்ற ஒரு கருத்து
இங்கே கர்ணன் மூலம் நிலை நாட்ட படிருக்கிறது
ஞான ஒளி கண்ட எங்கள் 'ஆண்டனி'
http://img823.imageshack.us/img823/1435/gnanaoli21.jpg
'ஞான ஒளி' சற்றே கவிதை நடையில் (நிழற்படங்களோடு)
http://3.bp.blogspot.com/_ZxB6aHS1OL...0/Goli0001.jpg
ஆண்டனி...
முரடன் ஆனால் முத்தானவன்
பாதிரியார் மேல் பக்தி உள்ளவன்...
மாதா கோவில் மணியடித்து
சனம் இறந்தால் சவப்பெட்டி செய்பவன்
கண்டதே காட்சி
கொண்டதே கோலமென
பாதிரியே தெய்வமென
பாங்காய் பணி செய்து வந்தான்
காதலித்தான் ஒரு பெண்ணை
கல்யாணமும் செய்தான் பாதிரி உதவியினால்
சொல்லொணா அன்புகொண்டு கணவன் மனைவி சொர்க்கத்தில் மிதந்தனர்
அன்பின் அடையாளமாக கர்ப்பம் தரித்தாள் மனைவி
பெண் குழந்தையை ஈன்று கணவன் முகம் பாராமல்
விண்ணுலகம் சென்று விட்டாள்.
துடித்தான் துவண்டான் ஆண்டனி
துன்பம் குறைத்தார் பாதிரி.
மகளை வளர்த்து மனக்கவலை சற்று மறந்தான்
பெண்ணைப் படிக்க வைக்க பெருமுயற்சி எடுத்தான்
பால்ய வயது நண்பன் லாரன்ஸ் வந்தான்
காவல்துறை அதிகாரியாய்.
கண்டுகொண்டான் சிறுவயது நண்பனை
களிப்புடன் நட்பைத் தொடர்ந்தான்
பாதிரிக்கு ஒரு லட்சியம்
பூண்டி மாதாவுக்கு ஒரு கோவில்,
மழலையர் கல்வி பயில ஒரு பள்ளி
பிணி தீர்க்க ஒரு மருத்துவமனை
பாதிரியின் மூன்று கனவுகள்
கனவுகளை நனவாக்க முடிவெடுத்தான்
தன் பெண் மூலம் நிறைவேற்ற உறுதியளித்தான்.
ஆனால்...
மகளோ மதிகெட்டாள் மானமிழந்தாள்
மாசு பட்டாள் காதலன் என்ற கயவனுடன்.
கண்டுவிட்டான் மகளை கயவனோடு படுக்கையில்.
கொலை வெறி கொண்டான்
கொடுவாள் எடுத்து கொன்று விடத் துணிந்தான்
தடுத்தான் லாரன்ஸ்
மூன்று உயிர்களையும் காத்தான் தோழன்
அதிகாரியாய் ஆண்டனி முன்னிலையில்
இருவருக்கும் தன் மோதிரத்தால் திருமணம் செய்து வைத்தான்.
கனவு சிதைந்ததே என்று கலங்கினான் ஆண்டனி
கனவை விட மகளின் கற்பு கவலையை அதிகமாக்கியது
கலங்கிய மனத்துடன் அவள் காதலன் வீடு சென்றான்
கண்மணிக்கு வாழ்வுப் பிச்சை கேட்டான்.
கெஞ்சினான் கால் பிடித்தான் கதறினான்
காதலனோ காமுகன் காலால் எட்டி உதைத்தான்
கண்டபடி பேசினான் உன் மகளுக்கு நான் மட்டுமா
என்று ஏளனம் செய்தான் எள்ளி நகையாடினான்.
பொறுத்துப் பார்த்த சிறுத்தை பொங்கி எழுந்தது
நரசிம்மம் ஆனது இழிசொல் தாங்காது இடியென தாக்கியது
ஒரே அடி மருமான் மாண்டான். அறியான் ஆண்டனி
தூக்கினான் உடலை கொண்டு வந்தான் பாதிரியிடம்
மகளும் உடன் இருந்தாள் மருமகன் பிணமாய்க் கிடந்தான்
உண்மை தெரிந்தது
விபரீதக் கோபத்தால் விதவை ஆக்கி விட்டான் தன் செல்வத்தை
எல்லாம் முடிந்தது
கையில் விலங்கு கண்ணெதிரில் லாரன்ஸ்
சிறைத்தண்டனையில் சிதில் சிதிலாய் போனது வாழ்க்கை
அடிபட்ட இடத்திலே மேலும் ஒரு கொடுவாள் வெட்டு
ஆம் மகள் மாண்டாள் என்ற செய்தி
ஒரே உறவும் பறி போனது இப்போது தெய்வம் மட்டுமே பாதிரி வடிவில்
பாதிரிக்கு முடியாத முதுமை தன்
பாலகனைப் பார்க்க ஆசை
வேண்டுகோள் விடுத்தார் லாரன்ஸிடம்
குரு கேட்டதால் தட்சணையைக் கொண்டுவந்தான்
தன் மனத்தை சிறை கொண்டவன்
சிறைக் கைதியாய் எதிரே
பாசமகனைப் பார்த்த மகிழ்ச்சி
பாழ்பட்டுப் போனதில் நெகிழ்ச்சி
சாகும் தருவாயிலும் தன் கனவை எண்ணி
ஆண்டனியின் கை பிடித்தபடி
ஆண்டவனை அடைந்தார்.
கடவுளுக்கு கல்லறை வெட்ட அனுமதி கேட்டான்
மறுத்தான் இன்ஸ்பெக்டர் நண்பன்.
கோபமுறுக்கால் அவனைத் தாக்கி
தப்பி ஓட்டமெடுத்தான் தந்தையின்
தங்கக் கனவை நிறைவேற்ற...
(இடைவேளை)
காதலி, பாதியாருடன் ஆண்டனி
http://i1098.photobucket.com/albums/...naOli00002.jpg
கூரையேறிக் காதல் டூயட் பாடும் ஆண்டனி
http://i1098.photobucket.com/albums/...naOli00003.jpg
காதலி மனைவியாக
http://i1098.photobucket.com/albums/...naOli00004.jpg
அன்பான மனைவி
http://img196.imageshack.us/img196/1793/gnanaoli08.jpg
மனைவி இறந்த அதிர்ச்சியில் ஆண்டனி
http://i1098.photobucket.com/albums/...naOli00006.jpg
மனைவியின் சவப்பெட்டி அருகே கதறும் ஆண்டனி
http://i1098.photobucket.com/albums/...naOli00007.jpg
ஒரே உறவான மகளுடன் ஆண்டனி
http://img214.imageshack.us/img214/4...naoli00014.png
உயிர் சிநேகிதன் லாரன்ஸுடன் ஆண்டனி
http://img690.imageshack.us/img690/3...naoli00016.png
அன்புடன்,
வாசுதேவன்.
நண்பர்கள் பாதிரியாருடன்
http://i1098.photobucket.com/albums/...naOli00008.jpg
மதியிழந்த மகள்
http://img839.imageshack.us/img839/18/gnanaoli16.jpg
http://i1098.photobucket.com/albums/...naOli00010.jpg
கயவனான காதலன்
http://img232.imageshack.us/img232/6898/gnanaoli27.jpg
http://i1098.photobucket.com/albums/...naOli00009.jpg
அதிர்ச்சியில் ஆண்டனி
http://img90.imageshack.us/img90/910...3231104wp6.jpg
அறியாமல் உயிர் பறித்த அதிர்ச்சியில் ஆண்டனி
http://img600.imageshack.us/img600/7290/gnanaoli33.jpg
சிறையில் இருந்து வந்து பாதிரியாரைப் பார்க்கும் ஆண்டனி
http://i1098.photobucket.com/albums/...naOli00011.jpg
ஞான ஒளி பெறும் ஆண்டனி
http://2.bp.blogspot.com/_ZxB6aHS1OL.../s1600/235.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
அன்புள்ள பம்மலார் சார்,
இரண்டு நாட்களாக இண்ட்டெர்நெட் வேலை செய்யவில்லை. அய்யய்யோ... நம்ம பம்மலார் பாசமலர் ஆவணங்களை அள்ளித்தந்திருப்பாரே, அதைத்தொடர்ந்து என்னுடைய பணிவான வேண்டுகோளையேற்று (பம்மலார் அவர்கள் சொன்னதுபோல கட்டளை அல்ல) 'ராஜா'வின் வெற்றி பவனியை உலவ விட்டிருப்பாரே என்று ஆதங்கப்பட்டு இன்றைக்குத்தான் நெட் இணைப்பு சரியானதும் முதல்வேலையாக நான் செய்தது நமது நடிகர்திலகத்தின் திரிக்கு ஓடோடி வந்ததுதான்.
வந்து பார்த்தால்..... அடேயப்பா ஆவண மழையாகப்பொழிந்து தள்ளி விட்டிருக்கிறீர்கள்.
'பாசமலரின்' வாசம் கமழும் ஆவணப்பொன்னேடுகள் என்ன....
'ராஜா' வின் வெற்றி நடைக்கான சாதனைச்சரித்திரம் என்ன.....
தமிழகத்தை, குறிப்பாக சென்னையை கலங்கடித்த 'ஞான ஒளி'யின் காணக்கிடைக்காத வரலாற்று ஏடுகள் என்ன......
வாய்பிளந்து மலைத்துப்போய் நிற்பதைத்தவிர வேறொன்றும் தோன்றவில்லை. எனது வேண்டுகோளையேற்று 'ப்ரம்மாஸ்த்திரத்தை' என் கையில் தந்து, அதை மறந்து போகாமலும் இருக்க ஆசீர்வதித்த நவீன பரசுராமரே தங்களூக்கு எண்ணிலடங்கா நன்றிகள். இந்த ப்ரம்மாஸ்திரத்தில் என் நண்பரின் தவறான பிரச்சாரம் அழிந்து மண்ணாகப்போவது திண்ணம்.
சஸ்பென்ஸ் பதிவு என்றதும், என்னவாக இருக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கையில் எதிர்பாராத விதமாக 'ஞான ஒளி'யை வீசச்செய்து, திரியை ஒளிவெள்ளமாக்கி விட்டீர்கள். ஞான ஒளியின் சென்னை விநியோகஸ்தர்களான ஜெயராமன் பிக்சர்ஸார், ஏதோ கடனே என்று விளம்பரம் செய்யாமல், டிஸைன் டிஸைனாக யோசித்து, யோசித்து, ரசித்து ரசித்து புதுமையான முறையில் விளம்பரங்களைச் செய்துள்ளனர். குறிப்பாக 'ஞான ஒளி' வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும்போது, சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் ஓடிக்கொண்டிருந்த படங்களின் பட்டியலை விளம்பரத்திலேயே தந்தது புதுமையான உத்தி மட்டுமல்ல, காலத்திற்கும் அழியாத ஆவணமும் ஆகும். இதுபோல எந்த நடிகரின் படங்களாவது சென்னையில் ஒரே நேரத்தில் 80 சதவீத திரையரங்குகளை ஆக்ரமித்தது உண்டா என்று சவால் விடுகிறோம். பதில் 'இல்லை'யென்பதைத்தவிர வேறொன்றும் இல்லை. 1972 - நடிகர்திலகத்தின் புகழ் மகுடத்தில் ஒளிவீசும் கோகினூர் வைரம் அல்லவா.
தாங்கள் தந்த பாசமலர், ராஜா, ஞான ஒளி வெற்றி ஆவணங்களில் சென்னை சாந்தி தியேட்டர் இல்லையென்பது கூடுதல் ஆனந்தம், திருப்தி, மகிழ்ச்சி.
ஒவ்வொரு நண்பரின் பதிவுகளையும் தனித்தனியே நினைவுகூர்ந்து பாராட்டுவதும், நன்றி சொல்வதும் தங்களின் தனிச்சிறப்பு. உங்கள் மந்திர ஜாடிக்குள் இன்னும் என்னென்ன அதிசயங்கள் ஒளிந்திருக்கின்றன என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்று.
நீங்கள் வாழிய பல்லாண்டு.
கலக்கல் வாசு அவர்கள் கவிஞர் வாசுவாகவும் கலக்குகிறாரே....
அவர் 10 வரி எழுதினால் நாம் 100 வரி பாராட்ட வேண்டும். அந்த அளவிற்கு அவருடைய திறமையும் புலமையும் ஒளிர்கின்றன. அவர் அளவிற்கு தமிழ் நமக்கு வரவேண்டும் என்பதே நம் அவா.
வாசு சார் சூப்பர்...கலக்குங்கள்..
http://www.myspacehippo.com/files/co...hippo37915.jpg