http://i57.tinypic.com/2vbpjdd.jpg
Printable View
so many greetings to mr. ravichandran tiruppur, for his best registers of makkalthilagam thread- contributions& 3001 milestones jumped...
ஒரு சாதாரண நாடக நடிகர் ஒருவர் ..மக்கள் திலகத்தின் ரசிகராக திரை உலகில் நுழைந்து ரிக்ஷாக்காரன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை மக்கள் திலகத்தின் படங்களில் நடித்தும் , 1977 தமிழ் நாடு சட்ட சபை தேர்தலில் சென்னை நகரில் ஒரே தொகுதியில் வெற்றி பெற்ற அண்ணா திமுக வேட்பாளர் என்ற பெருமை பெற்றவரும் 1978 தமிழக மந்திரி சபையில் துணை அமைச்சராக இடம் பெற்றவருமான திரு ஐசரி வேலன் அவர்களின் நினைவு நாள் இன்று .
video courtesy - thanks sailesh sir
http://youtu.be/iHgMRHoW-5M
http://youtu.be/XvMZDtFRipk
thanks sailesh sir
http://youtu.be/kUdXd4xvJbo
thanks sailesh sir
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்த ''தேவிபாரடைஸ் ''.
1960களில் சென்னை நகரிலே மிகப்பெரிய அரங்கமாக திகழ்ந்த குளிர்சாதன அரங்கமான சாந்தி - ஆனந்த் - சபையர் போன்ற திரை அரங்குகளில் சில படங்கள் வெள்ளிவிழா ஓடி வசூலில் அதிகம்
பெற்று முன்னிலையில் இருந்தது .மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை -1965 படம்தான் முதன் முதலில் சென்னை நகரில் காஸினோ அரங்கில் அதிக நாட்கள் ஓடி அதிக வசூல் பெற்ற படமாகதிகழ்ந்தது .
1971ல் மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் படம் தேவி பாரடைஸ் அரங்கில் வந்து பல சாதனைகள்
புரிந்து முந்தைய சாதனைகளை முறியடித்து முதலிடம் பெற்று இருந்தது .தொடர்ந்து 100
காட்சிகள் - 125 நாட்கள் - கடந்து 142 நாட்கள் ஓடி இருந்த சாதனையை மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் -1973 வெளியாகி தொடர்ந்து 67 நாட்கள் அரங்கம் நிறைந்து வெள்ளிவிழா ஓடி வசூலில் தன்னிகரற்ற சாதனையாக 1977 வரை தக்க வைத்து கொண்ட பெருமை 'தேவிபாரடைஸ் அரங்கிற்கு உண்டு . மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் நீண்ட நாள் கனவும் நிறைவேறியது .
பின்னர் பல்லாண்டு வாழ்க - இன்று போல் என்றும் வாழ்க - மீனவ நண்பன் போன்ற படங்கள் 100
நாட்கள் ஓடியது .
நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் சமீபத்தில் திரையிடப்பட்டு
இரண்டு வாரங்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது .
ரசிகர்களால் மறக்க முடியாத சென்னை அரங்கம் - ''தேவிபாரடைஸ் ''.
http://i60.tinypic.com/10h3zv5.jpg
தங்களின் உழைப்பிற்கு ஈடிணை இல்லை
திரு. ரவிச்சந்திரன் சார். வாழ்த்துக்கள்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
AYIRATHIL ORUVAN - THE ONLY ONE PAPER CUTTING [ 100TH DAY FUNCTION - CANCEL ] IS AVAILABALE.
http://i61.tinypic.com/330wy84.jpg
முத்தான 3001 பதிவுகள் முடித்து வெற்றி கண்ட இனிய நண்பர் திரு.
ரவிச்சந்திரன் அவர்களின் கடின உழைப்பிற்கு ஈடு இணை இல்லை.
உங்களுடைய பதிவுகளில் புரட்சி தலைவரின் நிழற்படங்கள், புகைப்படங்கள் அவற்றின் வண்ண வர்ண ஜாலங்கள், செய்திகள் ,விவரங்கள் எண்ணிலடங்கா!.
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும், என் சார்பாகவும்
இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்களின் சீரிய பணி.
ஆர். லோகநாதன்.
நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
தங்களின் பதிவுகள் வரவேற்கபடுபவை.
புகைப்படங்கள் பதிவிடும்போது நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் ,புகைபடத்தில் உள்ளவர்கள் விவரங்கள் தெரிவித்தால் படிப்பதற்கு சுவையாக இருக்கும்.
உங்களுடைய உழைப்பிற்கு எல்லையே இல்லை. நேரம், காலம் பாராது
பதிவிடும் தாங்கள் சற்று முயற்சித்தால் நல்லது.
ஆர். லோகநாதன்.
https://www.youtube.com/watch?v=hjSJwgUMTVA
VERY REALISTIC
http://i59.tinypic.com/avk9w5.jpg
இப்போதுள்ள நடிகர்கள் எம்.ஜி.ஆரை பின்பற்ற வேண்டும் என்று 'யான்' பத்திரிகையாளர் சந்திப்பில் கவிஞர் தாமரை தெரிவித்தார்.
ஜீவா, துளசி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துவரும் 'யான்' படத்தினை இயக்கி வருகிறார் ரவி கே.சந்திரன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மண்ட் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் இசை வெளியீடு முடிந்து, பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஜீவா, துளசி, இயக்குநர் ரவி கே.சந்திரன், பாடலாசிரியர் தாமரை மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
இச்சந்திப்பில் கேள்வி நேரத்தில் ஜீவாவிடம் "உங்களது படங்களில் டாஸ்மாக் காட்சிகள் நிறைய இருக்கிறது, டாஸ்மாக் வியாபாரமும் 25000 கோடியைத் தொட்டுவிட்டது என்கிறார்கள், உங்கள் படங்களில் அப்படிப்பட்ட காட்சிகளை குறைக்கலாமே" என்றார்கள். அதற்கு ஜீவா "அதை நீங்கள் இயக்குநர் ராஜேஷிடம் கேட்க வேண்டும். நான், எங்க போனாலும் ‘மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லுன்னு…’ சொல்றாங்க. கல்யாண வீட்டுக்குப் போனாலும் சரி, சாவு வீட்டுக்குப் போனாலும் சரி…அந்த படமும் வசனமும் அவ்வளவு ரீச்சாகிடுச்சி. நான் என்னங்க பண்றது?" என்றார்.
உடனே "அப்ப உங்களுக்குலாம் சமூகப் பொறுப்பே இல்லையா" என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அப்போது மைக் வாங்கி பேசிய பாடலாசிரியர் தாமரை "இப்போது வெளிவரும் படங்களில் பெரும்பாலான காட்சிகளை டாஸ்மாக்கை மையமாக வைத்துதான் எடுக்கிறார்கள். மது அருந்திக் கொண்டேதான் வசனம் பேசுகிறார்கள். மது அருந்திக் கொண்டுதான் பாட்டு பாடுகிறார்கள். இது படம் பார்க்கிற இளைஞர்களின் மனதை பாதிக்கும்.
இந்த விஷயத்தில், இப்போதுள்ள நடிகர்கள் எம்ஜிஆரை பின்பற்ற வேண்டும். அவர் ஒரு படத்தில் கூட புகை பிடிக்க மாட்டார், மது அருந்த மாட்டார். அதனால் அவரைப்போலவே இன்றைய நடிகர்களுககும் சமுதாயத்தின் மீது அக்கறையும், பொறுப்பும் இருக்க வேண்டும். அதேபோல் டைரக்டர்களும் சமுதாய நலன் கருதி கதை மற்றும் காட்சிகளை அமைக்க வேண்டும்" என்று கூறினார்.
MAKKAL THILAGAM M.G.R WAVE IS STILL ALIVE.
http://i59.tinypic.com/2nljb8.jpg
http://i60.tinypic.com/14aetjt.jpghttp://i58.tinypic.com/15ebcqd.jpg
COURTESY - NET
http://i58.tinypic.com/r7tc78.jpg
இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்குக் காரணம் திரைப்படங்கள்தாம். ஆனால் அவரின் அரசியல் செல்வாக்கு எம்ஜிஆர் என்ற முன்னாள் முதல்வரின் செல்வாக்கிலிருந்து வந்ததேயாம். சந்தேகமிருப்பவர்கள் ஜெயலிதா சந்தித்த முதல் தேர்தலை நினைத்துப்பாருங்கள். அதில் ஏன் அவரால் வெற்றி பெறமுடியவில்லை?. ஏனென்றால் எம்ஜிஆரின் அரசியல் பின்புலம் அன்று இரண்டாய்ப் பிரிந்திருந்தது, அதுவே தோல்விக்குக் காரணம். ஆனால், ஜெயலலிதாவின் அடுத்த தேர்தல் வெற்றிக்கு அவருக்குக் கிடைத்த எம்ஜிஆரின் இரட்டை இலையும், அதிமுக என்ற எம்ஜிஆரின் கட்சிப் பெயரும்தான் அடிப்படை. இன்று அவர் அரசியலில் ஆழ வேருன்றியதால் அவருக்கு எம்ஜிஆரின் பெயர் தேவையில்லை. ஆனாலும் இந்த அதிமுக என்ற பெயரும், இரட்டை இலை என்ற சின்னமும் மிக முக்கியம்.
இதே ஜெயலிதா அதிமுக என்ற பெயரில்லாமல், எம்ஜிஆர் என்ற பின்புலமில்லாமல் தனிக்கட்சி ஆரம்பித்திருந்தால் அவரின் நிலை என்னவாயிருக்கும்?. சந்தேகமே வேண்டாம். மற்ற நடிகர்களுக்கு ஏற்பட்ட கதிதான். அவரின் அரசியல் வெற்றிக்குச் சினிமா காரணமில்லை, எம்ஜிஆரின் பின்புலம்தான் காரணம் என்பது இப்போது நன்றாகவே விளங்கும்.
Courtesy- valiyin pakkam
1964-ல் வாலி தம்மை ஒரு முழுமையான கவிஞராக நிரூபித்த படம் படகோட்டி. படகோட்டியின் அத்தனைப் பாடல்களுக்கும் சொந்தக்காரர் வாலிதான். வாலியின் மிகவும் சிறந்த பாடலாகப் பேசப்படும் ‘தரைமேல் பிறக்கவைத்தான்’ பாடலும் ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ பாடலும் படகோட்டியில்தான் வந்தன. அதிலும் ‘தரைமேல் பிறக்கவைத்தான்’ தனித்து நின்றது.
இது வெறுமனே சினிமாவுக்கான ஒரு பாடல் என்பதைத்தாண்டி தினமும் கடலில் மீன்பிடிக்கச் சென்றுவரும் ஒரு மீனவனின் உடலுக்குள் புகுந்து அவனுடைய உதிரமாய் உணர்வுகளாய் வெளிவந்த ஒரு பாடலாகத்தான் இந்தப் பாடலைச் சொல்லவேண்டும். இந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களும் வாலியை இன்னமும் பல படிகளுக்கு மேலே உயர்த்தின. பி.சுசீலாவின் குரலில் ‘என்னை எடுத்து தன்னைக்கொடுத்து போனவன் போனாண்டி’ பாடல், மனதின் ஏக்கங்களைக் கடல் அலைகள் போல் வாரி வாரி அடித்தது.
‘அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம்’ பாடலும் சற்றே கொண்டாட்ட லாகிரியுடன் இசைக்கப்பட்டிருந்தது.
ஆனால் படகோட்டி படத்தின் பாடல்கள் டிஎம்சௌந்தரராஜனுக்கானவை. ‘தரைமேல் பிறக்கவைத்தான்’ தொடங்கி ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ மற்றும் ‘நானொரு குழந்தை நீயொரு குழந்தை’ ஆகிய பாடல்கள் கிறங்கடித்தன (இப்போதும் எனக்கு மிகவும் பிடித்த பத்து பாடல்களை வரிசைப்படுத்தினால் தவறாமல் இடம்பெறும் பாடல், ‘நானொரு குழந்தை நீயொரு குழந்தை’). ‘கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்’ பாடலில் கொண்டாட்டத்தையும் குதூகலத்தையும் தம்முடைய அற்புதக் குரலில் அனாயாசமாகக் கொண்டுவந்திருப்பார் டிஎம்எஸ். ‘தொட்டால் பூ மலரும்’, ‘பாட்டுக்குப் பாட்டெடுத்து’ ஆகிய இரண்டு பாடல்கள் டிஎம்எஸ்ஸூம் பி.சுசீலாவும் சேர்ந்து மறக்கமுடியாத பாடல்களாகச் செய்திருந்தனர்.
படகோட்டிக்கு அடுத்து வாலி ஸ்கோர் செய்தது ‘எங்க வீட்டுப் பிள்ளை’யில்தான். அதற்கும் முன்னதாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கண்ணதாசன் மற்ற பாடல்களை எழுதியிருக்க வாலியின் “பருவம் எனது பாடல்” பாடலும், “ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை” பாடலும் புகழ்பெற்றன. அடுத்து வந்த படம்தான் எங்க வீட்டுப் பிள்ளை. 1965-ல் வந்த இந்தப் படம்தான் வாலியை இன்றுவரை நினைக்கும் அளவுக்குத் தூக்கி நிறுத்தியது.
http://i59.tinypic.com/j98pe1.jpg
அதுவரை வசூல் மன்னனாகவும், மக்களை வசீகரிக்கிற நடிகராகவும் மட்டுமே விளங்கிய
எம்ஜிஆர் என்ற அந்த மனிதர் அரசியல் அந்தஸ்து பெறவும் அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களின் குறைகள் யாவும் தீர்க்கப்பட்டு சுபிட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்கவும், மனதுக்கு உகந்தவராக இருந்த ஒருவரை மக்கள் தலைவராக மாற்றவும் முதன் முதலாக வெற்றிகரமாக ஊன்றப்பட்ட விதையாக வாலியின் ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ பாடல் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றது.
"மதுரை வீரன்" மூலம் வசூல் சக்ரவர்த்தி ஆனார்.
எம்.ஜி.ஆர்.- பல ஊர்களில் வெள்ளி விழா
மலைக்கள்ளனுக்குப் பிறகு எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும் இணைந்து நடித்த "கூண்டுக்கிளி" வெளிவந்தது. டி.ஆர். ராமண்ணா டைரக்ஷனில், ஆர்.ஆர்.பிக்சர்சார் தயாரித்த படம் இது. விந்தன் வசனம் எழுதினார்.
இருபெரும் நடிகர்கள் சேர்ந்து நடித்த படம் என்பதால், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அது எம்.ஜி.ஆர். படமாகவோ, சிவாஜி படமாகவோ அமையாதது மட்டுமல்ல, ஒரு நல்ல படமாகவும் அமையவில்லை. முக்கியமாக கதை சரியாக இல்லாததால், படம் தோல்வி அடைந்தது.
இந்த தோல்வியை ஈடுசெய்யும் வகையில் 1955_ல் "குலேபகாவலி"யை தயாரித்தார், ராமண்ணா. எம்.ஜி.ஆருடன் டி.ஆர். ராஜகுமாரி, ஜி.வரலட்சுமி, ஈ.வி.சரோஜா, ராஜசுலோ சனா, சந்திரபாபு ஆகியோர் நடித்தனர். ஜனரஞ்சக படமான "குலேபகாவலி" வெற்றிகரமாக ஓடியது.
இதன்பின் தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படமான "அலிபாபாவும் 40 திருடர்களும்" படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இப்படம், 1956 பொங்கல் தினத்தில் வெளிவந்து, வெற்றி முரசு கொட்டியது.
பழம் பெரும் படத்தயாரிப்பாளரான லேனா செட்டியார், தமது கிருஷ்ணா பிக்சர்ஸ் சார்பில் "மதுரை வீரன்" கதையை பிரமாண்டமாகத் தயாரித்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பானுமதி, பத்மினி ஆகிய இருவரும் நடித்தனர்.
மற்றும் டி.எஸ். பாலையா, ஓ.ஏ.கே.தேவர், ஆர்.பாலசுப்பிரமணியம், டி.கே.ராமச்சந்திரன், ஈ.வி.சரோஜா, எம்.ஆர்.சந்தான லட்சுமி, "மாடி" லட்சுமி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோரும் நடித்தனர். கர்ண பரம்பரைக் கதையான மதுரை வீரனுக்கு, திரைக்கதை _வசனம் எழுதினார், கவிஞர் கண்ணதாசன்.
பாடல்களை கண்ணதாசனுடன் உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் எழுத ஜி.ராமநாதன் இசை அமைத்தார். டைரக்ஷன் யோகானந்த்.
கழுத்தில் மாலையுடன் குழந்தை பிறந்ததால், நாட்டுக்கு ஆகாது என்கிறார், ஜோதிடர். அதைக் கேட்டு, குழந்தையை காட்டில் விட்டு விடுகிறார், அரசர். குழந்தையை, செருப்பு தைக்கும் தொழிலாளியும், அவர் மனைவியும் (என்.எஸ்.கிருஷ்ணன் _ டி.ஏ.மதுரம்) எடுத்து "வீரன்" என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள்.
வீரன் வளர்ந்து வீரம்மிக்க இளைஞன் (எம்.ஜி.ஆர்.) ஆகிறான். ஒரு சமயம் அரசகுமாரி பொம்மியை (பானுமதி) காப்பாற்றுகிறான். அவள் வீரனைக் காதலிக்கிறாள். பொம்மியின் முறைமாமன் நரசப்பன், பொம்மியை காவலில் வைத்து, கட்டாய திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால், வீரன் தக்க தருணத்தில் பொம்மியைக் காப்பாற்றி, சிறை எடுத்துச் செல்கிறான். அவனுடைய வீரத்தை மெச்சிய விஜயரங்க சொக்கன், பொம்மி வீரனுக்கே உரியவள் என்று தீர்ப்பு கூறுகிறான்.
பொம்மியை மணக்கிறான், வீரன். திருமலை நாயக்கனுக்கு தளபதியாக நியமிக்கப்படுகிறான். அரசவை நர்த்தகி (பத்மினி) வெள்ளையம்மாள் வீரனைக் காதலிக்கிறாள்.
வீரனுக்கு எதிராக நரசப்பனும், குடிலனும் சதி செய்கிறார்கள். அவனைப் பற்றி, மன்னரிடம் பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். இதனால் வீரனை குற்றவாளி என்று மன்னர் தீர்மானித்து, மாறு கால், மாறுகை வாங்க உத்தரவிடுகிறார்.
கொலைக்களத்துக்கு இழுத்துச் செல்லப்படுகிறான், வீரன். அவனுடைய ஒரு கையும், காலும் துண்டிக்கப்படுகின்றன. அவன் இருக்கும் இடத்துக்கு பொம்மியும், வெள்ளையம்மாளும் ஓடி அவனுடன் உயிர் துறக்கிறார்கள்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் காலம் காலமாக மதுரை வீரனை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். மதுரை வீரன் கதை ஏற்கனவே வி.ஏ.செல்லப்பா _ டி.பி.ராஜலட்சுமி நடித்து 1939_ல் படமாக வெளிவந்து வெற்றி பெற்றது.
எனினும், எம்.ஜி.ஆர். நடித்த "மதுரைவீரன்" 13_4_1956_ல் வெளிவந்து பல ஊர்களில் 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா கண்டு, வசூலில் புரட்சி செய்தது. குறிப்பாக மதுரையில் இமாலய வெற்றி பெற்றது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன், பட அதிபர் லேனா செட்டியாருக்கும், எம்.ஜி.ஆருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது.
உடுமலை நாராயணகவி எழுதிய "பார் கடல் அலை மேலே" என்ற பக்திப் பாடல், இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. அந்தப் பாடலுக்கு பத்மினி நடனம் ஆடியிருந்தார்.
தி.மு.கழகத்தில் சேர்ந்து விட்ட காரணத்தால், இப்பாடல் தன் கொள்கைக்கு முரண்பட்டது என்று எம்.ஜி.ஆர். கருதினார். எனவே, பாடல் காட்சியை நீக்கிவிடும்படி பட அதிபரிடம் எம்.ஜி.ஆர். வற்புறுத்தினார்.
பாடலை விட, பத்மினியின் நடனம் அருமையாக அமைந்திருந்தது. அதை நீக்கிவிட பட அதிபர் லேனா செட்டி யாருக்கு மனமில்லை. எம்.ஜி.ஆர். எதிர்ப்பை மீறி படத்தை வெளியிடவும் விரும்பவில்லை.
எனவே, அவர் ஒரு யுக்தி செய்தார். நடனக்காட்சியை மட்டும் தனியாக வெட்டி எடுத்தார். தனியாக சென்சார் சர்டிபிகேட் வாங்கினார். இடைவேளை முடிந்ததும், தனியாக இந்த நடனக் காட்சியைத் திரையிட்டு, நிலைமையை சாமர்த்தியமாக சமாளித்தார்.
"மதுரை வீரன்" வெற்றியைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆருக்கு ஒவ்வொரு ஊரிலும் ரசிகர் மன்றங்கள் தோன்றின. ஏற்கனவே மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த தி.மு.கழகத்தில், சக்தி வாய்ந்த தலைவராக எம்.ஜி.ஆர். உருவாகத் தொடங்கினார்.
courtesy- malaimalar
http://i62.tinypic.com/2qda2y1.jpg
வீரனுக்கு இணையேது இதுவரை.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
ABSOLUTELY CORRECT. THERE IS NO DOUBT. ALL MAGAZINES CONFIRM THAT STILL THE VOTE BANK OF MGR EXISTS TO THE LARGER EXTENT AND THUS THE POSSIBILITY OF SUCCESS BY AIADMK (Started by our beloved leader M.G.R., the Great) IS THERE. 90% OF THE VOTERS VOTED FOR AIADMK ONLY BECAUSE OF THEIR LIKING AND DEVOTION TOWARDS OUR BELOVED M.G.R.
AS USUAL, DURING THIS ELECTION TOO, THE NAME OF M.G.R. WAS ACCENTED TO GET VOTES.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
This election results - a fine victory for makkalthilagam MGR.,'s the greatest party of india AIADMK -CONFIDENCE for followers think good...
37/27- 2014
திரை உலகை விட்டு 37 ஆண்டுகள் ஆன பின்னரும் மறைந்து 27 ஆண்டுகள் பின்னரும் ஒரு தனி மனிதருக்கு அவர் சாந்திருந்த திரை உலகில் கடந்த 37 ஆண்டுகளாக அவரது பெயரும் , படங்களும் மக்கள் மத்தியிலும் , திரை உலகிலும்
தினமும் பேசப்படுவதும் ,அவரது படங்கள் தொடர்ந்து திரை அரங்கில் ஓடிகொண்டிருப்பதும் எம்ஜிஆர் என்ற மக்கள் திலகம் என்பது பெருமைக்குரிய வரலாறாகும் . உலகமெங்கும் வாழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு
கிடைத்த வெற்றியாகும் .
http://i62.tinypic.com/2mmydub.jpg
மக்கள் திலகம் மறைந்து 27 ஆண்டுகளில் அவரது இயக்கம் தொடர்ந்து அவருடைய பெயர் - கட்சி - இரட்டை இலை
சின்னம் என்ற மாபெரும் அரசியல் சக்தியினை ஜெயலலிதா சரியாக பயன் படுத்தி வெற்றி கண்டு தன்னை ஒரு
அரசியல் சக்தியாக மாற்றி கொண்டார் என்றால அதற்கு முழு காரணம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ்
மற்றும் அவர் தன்னுடைய கடுமையான உழைப்பினால் உருவாக்கி வைத்த ஓட்டு வங்கி . இந்த இரண்டு அடிப்படை
மூலம் ஜெயலலிதா வெற்றி மேல் வெற்றி கண்டு வருகிறார் .
2016 தமிழ் நாடு சட்ட சபை தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெற வேண்டுமானால் தன்னுடைய அணுகு முறையை மாற்றி கொண்டால் வெற்றி நிச்சயம் .
இந்த இனிய மகிழ்ச்சியான தருணத்தில் மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி காவியமான ''ஆயிரத்தில் ஒருவன் ''
11 வது வாரமாக ஓடிக்கொண்டிருப்பது இனிய செய்தியாகும் .
WILL JAYA RECALL THESE SONGS?
http://youtu.be/iiE2sQXP_rkhttp://youtu.be/K0kaOdXV21g