Originally Posted by
Gopal,S.
நமக்குள் பகை வளர்ப்பது எந்த விதத்திலும் பயன் தராது. நாம் ஒருவரையொருவர் குறைத்து பேசுவது, எந்த விதத்திலும் நமது லட்சிய புருஷர்களுக்கு பெருமை சேர்க்காது. ஏனென்றால் ஒவ்வொரு துர்ப்ரசாரமும் ,பொய்யுரையும், இன்னொரு எதிர்விளைவை கொடுத்து டொமினோ சுழற்சியையே கொடுக்கும்.
ஒரு நல்லெண்ணத்தின் விளைவாக நானே ஆரம்பிக்கிறேன். இது மாற்று திரியிலும் தொடருமானால் நன்மைக்கே.
இன்று இந்த வாரம் பிறந்த நாள் காணும் நாடோடி மன்னனுக்கு வாழ்த்துக்கள்.
ஒரு கலவையான மூன்று படங்களுக்கு ,சுவை குன்றாத திரைக் கதை அமைத்து நீளத்தை உணராத அளவு செய்த திரைகதை குழுவுக்கு முதல் வாழ்த்து.
சுருக்கமான ,பொருள் பொதிந்த ஆனால் சுவாரஸ்யமான வசனங்கள்.கண்ணதாசன்-ரவீந்திரன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.
ஜி.ராமநாதன் போல ,மேல்தட்டு ,உயர் ரக இசையை போல இல்லாமல்,எளிய கருத்துக்களுக்கு ஏற்ற எளிய,ஜனரஞ்சக,ஈர்ப்பான இசை தந்த சுப்பையாவிற்கு வாழ்த்துக்கள்.
இதன் இயக்குனர் பன் முக திறமை கொண்டவர்(Editing sense ,Camera sense, Direction). ஒரு அணியை circus ring master போல வேலை வாங்கி தன் பணியை செய்திருப்பார். பல காட்சிகளை நன்கு technical ஆக conceptualise செய்து நேர்த்தியாக execute செய்த திறமைக்கு வாழ்த்துக்கள்.
சொந்த படத்தில் ,இருந்ததையெல்லாம் கொட்டி ,இழப்பதற்கு எதுவுமில்லை என்ற வகையில் , இவ்வளவு ஆடம்பர செலவு செய்து எடுத்த துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.
முதல் முதலில் கருத்துக்கள்,எண்ணங்கள்,பொழுது போக்கு,ஜனரஞ்சகம் எல்லாம் சரி விகிதமாக கலந்த வெற்றி படம்.
நடிப்பு ,இந்த மாதிரி படங்களுக்கு எது குறைந்த பட்ச தேவையோ அது வழங்க பட்டது.(என்ன ,இருவர் தோன்றும் ஐந்து நிமிட காட்சியில் 17 முறை மூக்கு தேய்ப்பதை இயக்குனர் தடுத்திருக்கலாம்). ஆனால் சுவாரஸ்யமான விறுவிறுப்பான சண்டை காட்சிகள்.
நல்ல உச்ச காட்சி.
சரோஜாதேவி ஆஹா... வண்ண காட்சிகள் நல்ல படமாக்கம்.
சுவாரஸ்ய படம் .