Originally Posted by
KALAIVENTHAN
நமது மக்கள் திலகம் திரியில், பேராசிரியர் செல்வகுமார் அவர்களால் பதிவிடப்பட்ட கலைவேந்தன் எம். ஜி. ஆர். சாதனைகளை தாங்க முடியாத அறிவு ஜீவி ஒருவர் தனது அபிமான நடிகர் பெயரில் இருக்கும் மற்றொரு திரியில் புலம்பி தீர்த்திருக்கிறார்.
முதலில் இதை நான் ஒரு பொருட்டாகவே கருத வில்லை. ஆனாலும், அந்த நண்பர் அடிக்கடி "வரலாற்று பிழை" ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் ஒரு பொய்யான மறுப்புரை வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருப்பதால், நானும் உண்மை நிலவரத்தை இந்த திரியினை பார்வையிடுபவர்கள் அறியும் வண்ணம் ஒரு விளக்கம் அளிக்கலாம் என்ற எண்ணத்தில் பதிவிடுகிறேன்.
மக்கள் திலகம் திரியில், தனது அபிமான நடிகருடன் நம் பாரத் எம். ஜி. ஆர். அவர்களையும் சேர்த்து பொதுவான புகழாரம் சூட்டுவது, பின்னர் தனது அபிமான நடிகரின் திரியில் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் நடித்த படங்களையும், அவரையும் எதிர்மறையாக விமர்சிப்பது ஏன் இது போன்ற கபட நாடகத்தை அரங்கேற்றி அதில் இரட்டை வேடம் தாங்கி நடிப்பது என்று புரிய வில்லை.
நம் தலைவனின் திரைப்படங்கள் புரிந்து வருகின்ற மறு வெளியீட்டு சாதனைகள் பற்றி நாம் எழுதக்கூடாதாம். உங்கள் அபிமான நடிகரின் திரைப்படங்கள், மறு வெளியீட்டில் ஏதேனும் ( ? ) ஒன்றிரண்டு சாதனைகள் புரிந்திருந்தால் அதை பதிவிட்டு அற்ப சந்தோசம் அடைவது தானே ? முதல் வெளியீட்டில் மட்டும் என்ன சாதனைகள் வாழுகிறதாம் என்று நம் திரி அன்பர்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
தனது அபிமான நடிகர் நடித்த படங்கள் பல இருக்கிறதாம் அதில் எதை பதிவிடுவது என்று தெரிய வில்லையாம் - எதை எடுப்பது எதை விடுப்பது என்ற தொலைக்காட்சி விளம்பர பாணியில் ஒரு பிதற்றல். ஆடத் தெரியாதவள் கூடம் பத்தாது என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.
மற்றொரு அறிவு ஜீவி பாரகன் தியேட்டர் சென்னை திருவல்லிக்கேணியில் தானே இருந்தது என்று ஒன்றும் தெரியாத பாப்பா போல் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளார். உண்மையிலேயே எனக்கொரு சந்தேகம் .... தாத்தா சாஹிப் பால்கே விருது என்ன நம் இந்திய அரசாங்கம் வழங்கும் "பாரத்" , " பாரத ரத்னா" பட்டங்களை விட உயரந்ததா என்ன ? அவ்வப்போது இதை ஒரு தேய்ந்து போன ரெக்கார்ட் போல ஊளையிடுவது.
பத்மஸ்ரீ பட்டமோ ஆண்டுதோறும் சுமார் 70க்கும் மேற்பட்ட நபர்களுக்கு, கலை, சமூகப் பணி, விஞ்ஞானம் - பொறியியல், வியாபாரம் - தொழில், மருத்துவம், இலக்கியம் - கல்வி, விளையாட்டு போன்ற துறைகளின் வல்லுனர்களுக்கு அளிக்கப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் கலைத்துறையை சார்ந்த 24 நபர்களுக்கு ஆந்திரா மாநிலம் கஜம் அஞ்சையா வில் தொடங்கி ராஜஸ்தான் மாநிலம் ஷகிர் அலி வரை மொத்தம் 24 பேருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பாரத் - பாரத ரத்னா பட்டம் என்ன வருடந்தோறும் இத்தனை நபர்களுக்கு அளிக்கப்படும் பட்டமா ?
பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதும் ஒரு தொகை கட்டினால் கிடைக்கக் கூடிய பட்டமே என்று நண்பர் ஒருவர் கூறினார். அது உண்மையாக இருக்கக் கூடும். ஏன் என்றால் சென்னையிலேயே செவாலியர் விருது அளிக்கப்பட்ட நபர்கள் பலர் இருக்கின்றனாராம்.
அலெக்ஸ் என்ற நடிகர் (அதிகம் கேள்விப்படாத நடிகர்) கூட செவாலியர் விருது பெற்றிருக்கிறார் என்று தகவல்.
1997ல் கொடுக்கப்பட்ட தாத்தா சாஹிப் பால்கே விருதுக்கே இப்படி ஒரு அவல கூக்குரல் என்றால் 1972லேயே பாரத் பட்டம் பெற்ற கலைவேந்தன் எம். ஜி. ஆர். ரசிகர்களாகிய நாங்கள் எவ்வளவு கர்ஜிக்க வேண்டும் ? நாட்டிலேயே உயர்ந்த விருதான பாரத ரத்னா பட்டம் பெற்ற இதய தெய்வம் எம். ஜி. ஆர். பக்தர்கள் எவ்வளவு குதிக்க வேண்டும். ஆனாலும் எங்கள் தலைவன் பாணியில் அடக்கத்துடன் அமைதியாக இருக்கிறோம்.
ஒடாத ராஜபார்ட் ரங்கதுரை, ராஜ ராஜ சோழன் (இத்தனைக்கும் முதல் ஸ்கோப் படம்), விளையாட்டு பிள்ளை, சுமதி என் சுந்தரி, மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற படங்களையெல்லாம் 100 நாட்கள் பட்டியிலில் சேர்த்து அற்ப சந்தோசம் அடைந்தீர்கள்.
விட்டால், அன்பளிப்பு, பாதுகாப்பு, வாழ்க்கை அலைகள், நாம் பிறந்த மண், கவரிமான், வெற்றிக்கு ஒருவன், அமர காவியம், மோகனப்புன்னகை, ஊருக்கு ஒரு பிள்ளை, கருடா சவுக்கியமா, ஊரும் உறவும், மிஸ்டர் மகேந்திரா , இரு மேதைகள், நாம் இருவர், சுமங்கலி, சிம்ம சொப்பனம், சரித்திர நாயகன் (பட டைட்டில் எங்கள் இதய தேய்வத்துக்குத் தான் பொருந்தும்), குருதட்சனை, காவல் தெய்வம், அஞ்சல் பெட்டி 520, திருடன், எதிரொலி, தேனும் பாலும், தர்மம் எங்கே, மூன்று தெய்வங்கள், பொன்னூஞ்சல், மனிதரில் மாணிக்கம், மனிதனும் தெய்வமாகலாம் , அன்பைத்தேடி அன்பே ஆருயிரே சித்ரா பௌர்ணமி, இளைய தலைமுறை, நிறைகுடம், வம்ச விளக்கு, [படிக்காத பண்ணையார்), நேர்மை, லட்சுமி வந்தாச்சு, குடும்பம் ஒரு கோயில், ராஜ மரியாதை, வீர பாண்டியன் அன்புள்ள அப்பா, என் தமிழ் என் மக்கள் உட்பட பல 50 நாட்கள் கூட ஒடாத படங்களைக் கூட ஓடியதாக கதை விடும் பலே அண்டப் புளுகு ஆகாசப் புளுகர்கள் நீங்கள். ஒரு சாம்பிளுக்கு தான் இந்த படங்கள். 1952 முதல் பட்டியலிட்டால் தோல்விப்படங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும்.
உங்கள் திரியில், இது போல் நீங்கள் அள்ளி விடும் சரடுகளை நாங்கள் ஏதேனும் விமர்சனம் செய்கிறோமா ? அதுதான் எங்கள் தலைவர், தனது காவியங்கள் மூலம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த நாகரீகம், பண்பாடு.
எது ஒன்றுக்கும் ஒர் எல்லை இருக்கிறது. எங்களை சீண்டினால் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.