http://i58.tinypic.com/311oqd0.jpg
Printable View
திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். முதன் முறையாக தென்னகத்து ஜேம்ஸ் பாண்டாக
நடித்த "ரகசிய போலீஸ் 115" வெளியாகி 47 ஆண்டுகள் நிறைவு ஆனது .
வெளியான நாள்: 11/01/1968.
பத்மினி பிக்சர்ஸ் நிறுவனம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த 2வது வண்ணப்படம்.
சென்னையில் 5 அரங்குகளில் வெளியான படம்.
அண்ணா சாலையில் அருகருகே, குளோப், மற்றும் பிளாசாவில் தினசரி 4 காட்சிகளில் வெளியானது. கட்டுக்கடங்காத கூட்டத்துடன் இரு அரங்குகளிலும்
அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிநடை போட்டது.
நான் குடும்பத்துடன் பிளாசாவில் பொங்கலன்று மிகுந்த சிரமத்திற்கு இடையே
டிக்கட் வாங்கி பார்த்து ரசித்தேன். பின்னர் அகஸ்தியாவில் ஒருமுறை பார்த்தேன்.
இப்போது மறுவெளியீடுகளில் அதிக அரங்குகளில் பார்த்துள்ளேன்.
நடிக மன்னன் எம்.ஜி.ஆர். வண்ண வண்ண உடைகளில் தோன்றும்போதெல்லாம்
கைதட்டலும், விசில் சத்தமும் காதைப் பிளந்தன .
தென்னகத்து ஜேம்ஸ் பாண்டாகவும், ரகசிய போலிஸ் அதிகாரியாகவும் , இளமை
துள்ளலுடன் வண்ணத்தில் ஜொலித்தார்.
பாடல்கள் இனிமையாகவும், படமாக்கிய விதம் புதுமையாகவும் இருந்தன .
வெண்ணிற ஆடை நிர்மலா முதன் முதலாக மக்கள் திலகத்துடன் காதல் பாடலில்
ஈடு கொடுத்து நடித்தார்.
முதல் சண்டை காட்சி -ஜஸ்டின் -எம்.ஜி.ஆர். மோதும் காட்சிகளில் பின்னணி இசை கேட்க முடியாத அளவிற்கு பலத்த கைதட்டல், விசில் சத்தம் . இந்த சண்டைகாட்சிகள் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்றன .
நம்பியாருடன் செய்யும் உரையாடல், சண்டை காட்சிகள் கூட பிரமாதம்.
நாகேஷ் -உசிலைமணி -புஷ்பமாலா நகைச்சுவை வித்தியாசமாக இருந்தது.
படத்தின் ஒரே குறை அடிக்கடி குமாரி பத்மினி தோன்றும் சோக காட்சிகள்.
வில்லன்கள் நம்பியார் மற்றும் அசோகன் பேசும் வசனங்கள் கூட சில இடங்களில் நகைச்சுவையாக இருந்தன.
குண்டடிபட்டு மறுபிறவி எடுத்த பின் நடிக பேரரசர் எம்.ஜி..ஆர். நடித்த முதல் வண்ணப்படம் . எனவே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது .அதை
நிறைவேற்றும் வகையில் முன்பைவிட, இளமையாகவும், சுறுசுறுப்பாகவும்
நடித்து ரசிகர்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டார் எனலாம்.
மக்கள் திலகம் நடித்த அற்புத சண்டை காட்சிகள் நிறைந்த படங்கள் எண்ணிக்கையில் இந்த படம் நிச்சயம் இருக்கும்.
சென்னையில் 4 அரங்குகளில் 50 நாட்கள் . பிளாசா,/குளோப் இணைந்த 94 நாட்கள்.
அகஸ்தியா, மேகலா 63 நாட்கள் ஓடியது. திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில்
100நாட்களுக்கு மேல் ஓடியது. மதுரையில்;92 நாட்கள் ஓடியது.
சென்னை உள்பட பல நகரங்களில் 100நாட்கள் ஓடும் வாய்ப்பை இழக்கக் காரணம்.
42 நாட்கள் இடைவெளியில் தேவரின் "தேர்த்திருவிழா ", மற்றும் 62 நாட்கள்
இடைவெளியில் சரவணா பிலிம்ஸ் பிரம்மாண்ட வெற்றிப்படமான "குடியிருந்த கோயில் " வெளியானதால் . ஆனால் எப்போது திரையிட்டாலும், மறுவெளியீடுகளில் குடியிருந்த கோயிலுக்கு இணையாக வசூலை வாரிக்
குவிக்கும் படமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
http://i62.tinypic.com/fmqcll.jpg
ஆர். லோகநாதன்.
http://i58.tinypic.com/1252vdy.jpg
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். வழங்கும் "தாய்க்கு தலை மகன் " வெளியாகி
48 ஆண்டுகள் நிறைவு ஆனது. வெளியான நாள் : 13/01/1967.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த
சூழ்நிலையில் , தமிழகமே பரபரப்பாக , பதட்டமாக இருந்த நிலையில் முதல்
வெளியீட்டில் பார்க்க வீட்டில் அனுமதி கிடைக்காததால் , மறுவெளியீடுகளில் தான்
பார்க்க முடிந்தது . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் குண்டடிபடுவதற்கு முன்பு
வந்த கடைசி படம்.
நல்ல திரைக்கதை. சில இனிமையான பாடல்கள் அமைந்தன.
1.அன்னை என்று ஆகுமுன்னே
2. வாழ வேண்டும் தினம் வளர வேண்டும் .
3. பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
தேவர் பிலிம்ஸ் தயாரித்த படங்களில் இந்த படத்தில்தான் சோகக் காட்சிகளில்
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தன் தாய் பாசத்தையும், சகோதர பாசத்தையும் நடிப்பில்
அதிக அளவில் காட்டி நன்கு சோபித்தார் எனலாம்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்பதில் ரசிகர்கள் /தொண்டர்கள் ஆர்வமாக இருந்ததால் , இந்த படத்திற்கு
எதிர்பார்த்த ஆதரவும், வெற்றியும் கிடைக்கவில்லை. இருப்பினும் அவ்வப்போது
மறுவெளியீடுகளில் அரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போடுகிறது .
ஆர். லோகநாதன்.