திரு .முத்தையன் அவர்களே,
என் ஒன்று விட்ட அண்ணனும் ,ஒன்று விட்ட அக்காவும் அவர்களது மக்களும் ,நான்கு நாட்கள் முன்பு ஒரு சாலை விபத்தில் இயற்கை எய்திய துன்பத்தில் ஆழ்ந்திருந்தேன். (இதை பற்றி ரவிசந்திரன் திரியில் பதித்திருந்தேன்). கவலை சிறிதே மறக்க திரியை நோட்டமிட்டேன். முத்தையன் அண்ணன் பதித்திருந்த படங்கள் ,என் துன்ப நெஞ்சை பஞ்சாக்கி பறக்க செய்து விட்டது. ரொம்ப நன்றி அண்ணா.
சிறு வயதில் நெய்வேலி, திருவிடை மருதூர் ,கடலூர் ஆகிய இடங்களில் பல மக்களுடன் பழகியுள்ளேன். நான் மதங்களை மதியாதவன். கடவுள் நம்பிக்கை குறைவு. என் இன மக்களின் மீது சிறிதே கோபம் கொண்டவன். மேல்தட்டு மக்களுடன் பரிச்சயம் கொள்ள விழையாதவன். அதனால் எனது நண்பர்கள் அனைவரும், உழைக்கும் வர்க்கம் சேர்ந்த ,அடிப்படை அப்பாவி மக்களே. நானும் அவர்களுக்கு இன்று வரை ஒரு அடிப்படை பலமான ,அவர்கள் நேசிக்கும் நண்பனாகவே தொடர்ந்துள்ளேன். கல்லூரி நாட்களில் இடதுசாரி கொள்கைகளால் ,பரீக்ஷா குழுவில் இருந்த போது ,பரிச்சயமான அனைவரும் உழைக்கும் மேன்மக்களே.
தங்களை எனக்கு பிடித்துள்ளது. நண்பராக்கி கொள்ள மனம் விழைகிறது. இந்த திரியை தங்களுக்கே சமர்ப்பிக்கிறேன். நான் முன்னூறு பக்கம் எழுதுவதற்கு சமம் ,தாங்கள் போடும் நடிகர்திலகத்தின் ஒரு படம். ஓராயிரம் கதை பேசி விடாதா நடிகர்திலகத்தின் முகபாவங்களும்,உடல் மொழியும்?தூள் பரத்துங்கள் , உத்தம புத்திரன், புதியபறவை, நவராத்திரி, தில்லானா மோகனாம்பாள்,உயர்ந்த மனிதன்,தெய்வ மகன் , சிவந்த மண் ,ராஜா,வசந்த மாளிகை ,கவுரவம் படங்களில் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். என் எழுத்துக்கள் புத்தகமாகும் நாளில், என் நண்பரென்ற விதத்தில் ,படங்களுக்காக தங்களையே நாடுவேன்.
தங்களை நான் மட்டுமல்ல. அந்த தமிழ் நடிக மேதையை வணங்கும் அனைத்து உள்ளங்களும் ,பேரன்போடு இரு கரம் கூப்பி வரவேற்கின்றன.