http://i62.tinypic.com/imta8h.jpg
Printable View
நடிகர் சந்திரபாபு அவர்களுக்கு, நம் புரட்சித்தலைவர் அவர்கள் வீட்டை மீட்பதற்கு மட்டுமா பண உதவி செய்தார். அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புக்களை "பறக்கும் பாவை",, "கண்ணன் என் காதலன்" மற்றும் "அடிமைப்பெண்" காவியங்கள் மூலம் வழங்கி , நடிகர் சந்திரபாபு அவர்களுக்கு மறு வாழ்வு அளித்தார் நம் மக்கள் திலகம்.
ஆனால், சந்திரபாபு போதிய நிதி இல்லாத காரணத்தினாலும், இதர காரணங்களாலும், "மாடி வீ ட்டு ஏழை" திரைப்படத்தை தொடர முடியாமல் போனதற்கு, நமது பொன்மனசெம்மலின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல், காழ்ப்புணர்ச்சி கொண்டு சில இழி பிறவிகள் அவர் மீது புழுதி வாரி தூற்றினர்.
உண்மை நிலையை பலரும் அறியும் வகையில், இந்த கட்டுரை மூலம், பதிவிட்டு, அந்த அநாகரீகவாதிகளை வாயடைக்க செய்த திரு.வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு நன்றி !
இந்த திரியினில் அருமையான நற் பதிவுகளை வழங்கி வரும் திரு. வி..பி. சத்யா அவர்களின் தந்தையார் நேற்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். அன்னாரது பூத உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நம் ஆண்டவன் எம். ஜி.ஆர். அவர்களை வேண்டிகொள்கிறேன்.
தந்தையாரை இழந்து வாடும் திரு. வி..பி. சத்யா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
திரு,. முத்தையன் அம்மு அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
http://i61.tinypic.com/xbwxtg.png
தாங்கள் அளித்து வரும் பதிவுகள் மிகவும் அருமை. நமது புரட்சித்தலைவரின் பல்வேறு நிழற்படங்களை தரவேற்றம் செய்யும் தங்களின் பணி மிகவும் பாராட்டத்தக்கது.
ஒரு சிறு வேண்டுகோள் : எந்தெந்த காவியங்களிலிருந்து எந்தெந்த நிழற்படங்கள் இடம் பெற்றிருக்கிறது என்பது நமக்கு தெரியும். ஆனால், இந்த திரியினை இன்றைய தலைமுறையினரும் பார்த்து வருவதால், அவர்கள் அறியும் பொருட்டு, அக்காட்சிகள் இடம் பெற்ற காவியங்களின் பெயரை குறிப்பிட்டால் மிக்க நன்றாக இருக்கும்.
மீண்டும் எனது வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் கலந்த நன்றி !
Thanks for the remainder. And Happy returns of the day to Mr.Muthaian Sir.
http://i125.photobucket.com/albums/p...psa0ajfuwv.jpg
http://www.mgrroop.blogspot.in/2015/...tumes-iii.html
http://i125.photobucket.com/albums/p...psshah7y2d.jpg
Costumes from the movie Indru Pol Endrum Vazgha.
http://www.mgrroop.blogspot.in/2015/...tumes-iii.html
http://i125.photobucket.com/albums/p...psdobl37ha.jpg
The article is given in the link below.
http://www.mgrroop.blogspot.in/2015/...tumes-iii.html
திரு முத்தையன் அம்மு - உங்கள் பிறந்த நாள் இனிதாக அமையட்டும் - இது எங்கள் உளமார்ந்த ப்ராத்தனை - திரு ஆதிராம் சொன்னதைப்போல தேக ஆரோக்கியத்திற்கும் முதலிடம் கொடுத்து , பிறகு பதிவுகள் இடுங்கள் - உங்கள் ஆரோக்கியமான சேவை இந்த இரு திரிகளுக்கும் பல யுகங்கள் தேவை . இரு திலகங்களின் இடங்களை யாருமே , என்றுமே நிரப்ப முடியாது .
அன்புடன்
திரு. வி..பி. சத்யா
ஈடு கட்டமுடியாத இழப்பு . தந்தை - தாய் இந்த இருவருக்கும் சமமாக ஆண்டவனாலேயே யாரையும் படைக்க முடியவில்லை - இன்று வரை இறைவனுக்கு இது ஒரு பெரிய தோல்வியே !! - உங்களுக்கு நல்ல மனதிடம் கிடைத்திட எல்லாம் வல்ல அந்த பரம்பொருளை வணங்குகிறேன் .
http://i58.tinypic.com/j8i0cg.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.( புகழ் )"இன்று போல் என்றும் வாழ்க "- திரைப்படம்
வெளியாகி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
படம் வெளியான முதல் நாளன்று (05/05/1977), தேவி பாரடைசில் மாலை காட்சி
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., அவரது துணைவியார் திருமதி வி.என்.ஜானகி,
ஆகியோருடன் பார்த்து ரசித்தது பசுமையான மலரும் நினைவுகள்.
பாடல் காட்சிகள் , பல முக்கிய திருப்பம் நிறைந்த காட்சிகள், ரயில் சண்டை காட்சிகள் ஆகியவற்றிற்கு ரசிகர்களின் கைதட்டலும், ஆரவாரமும் அரங்கை
அதிரவைத்தன.
இந்த இனிய நாளில் பிறந்த நாளை காணும் நண்பர் திரு. முத்தையன் அவர்களும்
எல்லா வளமும் , நலமும் பெற்று , " இன்று போல் என்றும் வாழ்க ".
நண்பர் திரு. வி.பி. சத்யா அவர்களின் தந்தையார் காலமானார் என்கிற செய்தி
அறிந்து மிக்க துயருற்றேன். அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல
இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தந்தையை இழந்து வாடும் நண்பர் திரு. சத்யா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது சார்பாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல
சங்கத்தின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆர். லோகநாதன்
http://i57.tinypic.com/2u8j86x.jpg
7000 பதிவுகள் முடித்து , திரியில் தொடர்ந்து பயணிக்கும் எனக்கு வாழ்த்துக்கள் /
பாராட்டுக்கள் நல்கிய அனைத்து நல்ல இதயங்களுக்கும் எனது இதயங்கனிந்த
நன்றி.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி
மக்கள் மனதில் நிற்பவர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவரே.
ஆர். லோகநாதன்.
சென்னை சைதாபேட்டை , கோடம்பாக்கம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில்
பண்டிகை மற்றும் கால சூழ்நிலைக்கு ஏற்ப வியாபார ரீதியில் புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய பேனர்கள் வைப்பது, உரிமையாளரின் வழக்கம்.
அந்த வகையில், உழைப்பாளர் தினத்தினை முன்னிட்டு தற்போது வைக்கப்பட்டுள்ள
பேனர் நமது நண்பர்களின் பார்வைக்கு.
http://i61.tinypic.com/nvd2d3.jpg
மாபெரும் கருத்தரங்கம். நன்றி : ஒலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழ்
https://www.youtube.com/watch?v=zJglBrUvaVA
திரு லோகநாதன் - ஏழாயிரம் பதிவுகள் !! - அடேயப்பா !!! - இதில் எவ்வளவு பூஜ்யங்கள் உள்ளன என்பது எனக்குத்தெரியாது - தெரிந்தாலும் என்ன பயன் - உங்கள் இலக்கை அடைய இன்னும் 100 ஆண்டுகள் எனக்கு தேவைப்படலாம் ...
ஏழாயிரம் பதிவுகளுக்குபின் இருக்கும் உங்கள் உழைப்பு - என் கண்களில் தெரிகின்றது - அந்த அசுர உழைப்பிற்கு என் பணிவான வணக்கங்கள் .
அன்புடன்
ரவி
Congrats Loganathan Sir for crossing 7000th milestone. Since, I was more involved in reading your postings, I did not notice that you have crossed 7000.
Thanks.