//ராஜேஷ்,
மற்ற படி நீ உண்டு ,வாசு உண்டு.//
இப்போது குறைவுதான் :) ரொம்ப :)
Printable View
//ராஜேஷ்,
மற்ற படி நீ உண்டு ,வாசு உண்டு.//
இப்போது குறைவுதான் :) ரொம்ப :)
வாசு,
//உன்னை நான் பாராட்டுவதோ, திட்டுவதோ, எனக்கு நானே செய்து கொள்ளும் அர்ச்சனை. நாம் வேறு வேறா?(அதற்கென்று உன் எல்லா செயல்களுக்கும் நான் பொறுப்பேற்க மாட்டேன்.ஆனால் என் எல்லா செயல்களுக்கும் நீ பொறுப்பேற்க வேண்டும் )//
உத்தரவு மகராஜா:)
//கேட்பவர் கேட்கட்டும் ,உரியவர் பயன் பெறட்டும்.//
Kill Bill? :)
//யார் தர்மலிங்க பூபதி, யார் நாகலிங்க பூபதி என்பது மற்றவர் யூகத்திற்கு//
:):):)
//ஆனால் என் எல்லா செயல்களுக்கும் நீ பொறுப்பேற்க வேண்டும் )//
அதிலும் சுயநலமா?:)
மாயன் என்றால்... தேவர் மகன் நாசரா... ஆஹா.. நாசர் நம் தலைவரின் சிஷ்யனாயிற்றே.. சந்தோஷம் .... ஆஹா வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி.. இதைவிட வேறென்ன வேண்டும்...Quote:
நான் சக்தி போல சூது வாது அறியாத தேவர் பக்தன். நீங்கள் கொஞ்சம் மாயன் போல மாறி வருகிறீர்கள்.
Quote:
முரளியை மதன் பாப் போல வக்கீலாக மாற்ற முயல்வது கண்கூடு
https://www.youtube.com/watch?v=U6evVV067ewQuote:
கௌரவ நடிகர். அதுவும் ராகவேந்தர் இவரை இன்னொரு கோபுவாக மாற்ற முயன்ற பின் ரேஞ்சே வேறு
ஆஹா.. நான் சொல்கிறபடியெல்லாம் முரளி சார் கேட்கிறாரே.. முரளி சார்.. உங்கள சொத்தில் பாதி எனக்கு எழுதித் தந்து விடுங்களேன்...
என்ன இருந்தாலும் முரளிக்கு இந்த பாராட்டு டூ மச்... இல்லையா கோபால்..
ஹ்ம்..ஜமாயுங்க ...இன்னிக்கி கோபால் காட்டுலே அடை மழை...
கோபால்..
இது உங்களுக்காக..
https://www.youtube.com/watch?v=b3ku7VgUi30
ஆஹா! கோபாலை எம்.ராதாவாகவும் ஆக்கிக் காட்டி விட்டார் ரசிக வேந்தர்.:)
//முதலில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டவனின் அதிர்ச்சி, அடுத்து sorry sorry என கண்களால் சொல்வது, பிறகு மன்னிக்க மாட்டாயா என்ற கெஞ்சலை கண்களில் வெளிப்படுத்துவது, பிறகு உன்னிடம் எனக்கு என்ன பயம் என்று முகபாவத்தை மாற்றுவது, செய்த தவறினால் தோன்றும் குற்ற உணர்வை மறைக்க சிகரெட்டை புகைப்பது, நடக்க முடியாமல் பின்னுகின்ற கால்களை நான் நார்மலாக இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக நடப்பது, சோபாவின் நுனியில் அமர்வது, மனைவியின் கோவமான பார்வையை எதிர் கொள்ள முடியாமல் முகத்தை திருப்ப முயற்சிப்பது, நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே என்ற வரிக்கு வலது கையை மொத்தமாக மூடி உள்ளே இருக்கும் சிகரெட்டை ஆழமாக இழுப்பது என்று அடித்து தூள் கிளப்பியிருப்பார் நடிகர் திலகம்.//
முரளி சார்!
இந்த நான்கே வரிகளில் 'சொர்க்கம்' என்னவென்றால் என்னவென்று காட்டி விட்டீர்கள். அம்சம். நடிகர் திலகத்தின் இப்பாடலுக்கான வெளிப்பாட்டு உள் உணர்வுகளை இதைவிட ஆழமாக விவரிக்கவே முடியாது. அதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு உங்கள் இந்தப் பதிவைப் படிக்கும் போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே...அதுதான் நிஜ சொர்க்கமே! இதயம் மகிழ்ந்த நன்றி கூறி மீண்டும் படிக்கப் போகிறேன் உங்கள் நான்கு வரி திருக்குறளை.
ஹாய் குட்மார்னிங்க் ஆல்
என்ன ஆச்சுன்னே தெரிலை.. நேத்துக்கு ரொம்ப்ப்ப வேலை, உடம்புல்லாம் அசதின்னு எழுதியிருந்தேனா பட் ஒரு விஷயம் சொல்ல மறந்தேபுட்டேன்..
என்னன்னா.. எனது வலதுகண் இடைவிடாது அப்பப்ப த் துடித்துக்கொண்டே இருந்தது அசோகவனத்தில் சீதைக்கு இடதுகண் துடித்தாற்போல
நல்லது நடக்குமே நாளெலாம் என்றுதான்
துள்ளித் துடித்ததே கண்
இப்படியே நெனச்சுக்கிட்டிருந்தேனா (என்ன நல்ல விஷய்ம்..டூர் போறச்சே டூர் புக்பண்ண கரிஷ்மாங்கற டெல்லி ப் பொண்ணும் கூட வருமா, அல்லது சென்னையில் எக்ஸ் கேர்ள்ஃப்ரண்டை மீட் பண்ணுவேனா,அல்லது போங்க எல்லாத்தையும் சொல்ல முடியாது) வந்தா இன்ப அத்த்திர்ச்சி...:)
யாரோ கிரகங்கள் எல்லாத்தையும் பேர்த்துட்டாங்களோ என்ன.. ஒட்டுக்க எல்லாரையும் பாராட்டி விட்டார் நம்ம ஹெட்மாஸ்டர்கோபால்.. நன்றி ஸ்ஸார்..(லீவ் சாங்க்*ஷன் பண்ணுங்கண்ணா ப்ளீ ஸ் :) )
//அலுக்கவில்லை// நன்றி அகெய்ன். பட் கொஞ்சம் பாணியை மாற்ற்ப் பார்க்கிறேன்..
பாருங்க கோ.. சாரதா பாட் யாருமே கண்டுக்கலை.. நீங்க தான் ஒரு படம் பெயர் போட்டிருந்தீங்க.. அதுவும் மறந்து போச் பட் நான் மறக்காதது..
ஆகப் பலவிஷயம் அற்புதமாய்க் கோர்த்துதரும்
கோபாலே நீரொரு கோ..
(ஹெட்மாஸ்டர்னு நீங்களே கொடுத்துக்கிட்டது :) )
ஹெட்மாஸ்டரிடம் ஒரு சின்ன ரெக்வஸ்ட்.. உங்கள் பட அலசல்களைத் தொடருங்கள் நான் திரும்பி வருவதற்குள் குறைந்தது 25 படங்கள் பற்றி எழுதியிருக்கவேண்டும் நீவிர்.
அப்புறம் ரவியின் பாடல்கள் பற்றி என்னமோ போங்கவில் எழுதியதை ரவியின் இழையில் போஸ்ட் செய்தமைக்கு மிக்க நன்றி.. (இது முன்னாலேயே செய்திருக்க வேண்டியது ஆனால் இந்த Courtesy சின்னதாகப் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்த பிறகு தான் உரைத்தது.. மன்னிக்க :) )
கடைசியில ஒரு பஞ்ச் வச்சீங்க பாருஙக்
//ஒன்று நான் புரிந்து கொண்டேன்.இது அரட்டை மேடை. என்னால் முடிந்த வரை ஆழமான விஷயங்களை இலகுவாக தர முயல்வேன். கேட்பவர் கேட்கட்டும் ,உரியவர் பயன் பெறட்டும். வேறென்ன சொல்ல?// இது தான் “தான்” கோபால்.. இங்க நின்னுட்டீங்க.. எப்படியும் மாறமாட்டேன் என்று..
(பட் ஜாலியா ப் பேசறது எழுதிப்பாக்கறது எழுத்துல தப்புல்லாம் இல்லை தானே.. இதுக்கெல்லாம் பெஞ்ச் மேல நிக்கச் சொல்லாதீங்க :) )
*
மரகத ரவி, மரகத மேகப் பாடல் கொடுத்த ராகவேந்தருக்கு(அந்தப் பாட்டைக் கேட்டதில்லை சார், பட் பக்கெட்லாம் காப்பிரைட் வாசு, க்ருஷ்ணா) நன்றி.. ஹோம் ஒர்க் பண்ணிட்டு ஈவ்னிங்க் வர்றேன்
*
வாஸ்ஸூ சார்.. வாவ் .. நீராழி மண்டபத்தில் எனக்குமிகப் பிடித்த பாடல்களில் ஒன்று அப்போல்லாம் இரட்டை இலைச் சின்னம் தோன்றவில்லை என நினைக்கிறேன் இல்லியோ.. ம.தி. வாணி இந்த ஒரு படம் தானே ஜோடியாக நடித்தார்கள்.. நான்பார்த்த்தில்லை..
//காதலி வெட்கப்படும் போது நமக்கு இங்கே என்ன வேலை? மேகத்துக்குள் ஒளிந்து கொள்வோம்... வெளிச்சம்தானே தடை...இருட்டில் அவள் வெட்கம் கொள்ளாமளிருக்கட்டும்... காதலனும் ஜமாய்க்கட்டும்'...
என்று நிலவு மேகத்துக்குள் போய் ஒளிந்து கொள்கிறதாம். நல்ல வளமான சுவைமிகுந்த கற்பனை நயம். எஸ்.எம்.எஸ். இசை வழக்கம் போல் வளமை! இனிமை!// அடுத்த லைன் தான் ஹைலைட்டே
மேகமது வெண்ணிலவின் மேனி மறைத்திடவும்
தேகஞ் சிலிர்க்கவைத்த தென்றலினால் - வேகமாய்
பெண்ணிலவை அள்ளியவன் பேதமை தூண்டிவிட்டு
தந்தனன் முத்தங்கள் தான்..
அதான் மேகம் மறைச்சுடுத்துங்கறதால் இருள் வந்துடுச்சு இருள் வந்தா என்ன..இருள் இருக்கே அது வெட்கங்கெட்ட ஒரு விஷயம்..எல்லா இளமனங்களின் வெட்கங்களையும் கட்டவிழச் செய்யும் தன்மை அதற்கு உண்டு..அப்புறம் இன்னொரு மோசமான விஷயம் தனிமை.. காதலியோட இருக்கறச்சே.. ஸோ இருள் தனிமை இருந்துச்சுன்னா என்ன அம்புட்டுத் தான்..
அணைத்தான் ஆரணங்கை ஆர்வமாய் அங்கே
இணைந்தான் இனிதாக வே...
என ஆன்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். :) அதையே அழகாக வாலியும் சொல்லியிருக்கிறார்..
ம்ம் காலங்கார்த்தல இப்படியாக்கும் பண்றது ம்க்கும் :).
அப்புறம் வாரேன் :)
சின்னா!
பின்னூட்டத்தில் உம்மை மிஞ்ச யார்! சின்னா பின்னமாக்கி விட்டீர். இருட்டு என்றால் எகிறிக் குதித்துக் கொண்டு ஓடி வருவீரே!
//அணைத்தான் ஆரணங்கை ஆர்வமாய் அங்கே
இணைந்தான் இனிதாக வே...//
என்ன வே!:) தாய் நாட்டைப் பார்க்கப் போகும் குஷியா?:)
நிலவையாவது மேகம் மறைத்தது.
'நிலவு முகத்திலே முக்காடு போடும் மேகத்தை விலக்கடி லைலா' என்று எனது சலீம் பாடினாரே மஞ்சு(நி)லா(ளா) அனார்கலியிடம். அது இன்னும் அமர்க்களம் இல்லையோ!
உங்கள் பதிவுக்கு சலாமு சின்னா!
வூட்டாண்ட சொல்றேன்னு என்னைய தூங்க விடாம பண்ணீரே!:) இப்போ வகையா மாட்டுனீரா?:) எப்படி? எப்படி?...கரிஷ்மாவா வேணும் உமக்கு? எக்ஸ் கேர்ள்ஃப்ரண்டை மீட் பண்ணனுமா? எங்க வாய் இன்னா வெறும் அவல் மெல்லுமா?:)
அடங்காமல் ஆடும் அலையின் படகாய்
மடக்கினீர் எம்நெஞ்சை ஆம்
ஓய்..அது என்னா பாட்டுங்க
படகு படகு ஆசைப் படகு படகு படகு பார்த்துப் பழகு
போவோமா பொன்னுலகம்
பாட் நியுசினிமாலபார்த்தப்போ ஒண்ணும் புரியலை..அப்புறம் பார்த்தப்ப தான் புரிஞ்சுதாங்காட்டியும்..(அதாவது சந்தோஷமாப் பாடி பின் சோகமா வர்ற சீன்ஸ்..பின்னால் வரப்போகும் காட்சிகளுக்கான பில்டப் இந்தப் பாட்டுஙக்றது)
நிலவு முகத்திலே முக்காடு போடும்
மேகத்தை விலக்கடி லைலா
உன் அழகுக்கு சலாமு லைலா
ஆடவர் உலகில் ஆண்மகன் நீயே
அடிமையன்றோ நான் உனக்கு
கயஸ் அரசன்ன்றோ நீ எனக்கு..
**
அனாரு என்றால் மாதுளம்
ஆசை கொண்ட மாதுளம்
சலீம் என்னும் மன்னவன் சலாமு வைத்தான் உன்னிடம்..
அக்பர் என்னும் பாதுஷா அரசை ஆளும் பாதுஷா
கண்ணின் முன்னே வந்த்து காதல் நெஞ்சைத்தந்த்து..
வாவ்
சோஓஒகம்லாம்வேணாமே..
ந.தி, மஞ்சுளா கனகச்சிதமாக இருக்கும்..( இருந்தாலும் தேவன் வந்தாண்டி எனக்கு இன்னும் பிடிக்கும்)
//அவல் மெல்லுமா// ஹி ஹி..சமர்த்தோன்னோ..டீல் நானும் மறக்கறேன் நீங்களும் மறந்துடுங்க.. :)
Pink kullaa, pink midi manju.. ஓய் நீர் அடி வாங்கப் போறீர்..இப்படி நினைவு படுத்தியதற்கு :)
இந்தாங்க பாட்..
https://youtu.be/ruUSzvl1TME
//டீல் நானும் மறக்கறேன் நீங்களும் மறந்துடுங்க..//
அது...:)
//அக்பர் என்னும் பாதுஷா அரசை ஆளும் பாதுஷா//
அரசை ஆளும் வாரிசா...
ஹெட் மாஸ்டர் கிட்டே கொஞ்சமும் பயமில்ல. 'அந்த' ஹெட் மாஸ்டர் கிட்டே.:)
மன்னவரும், மன்னவியும்:) (கோபாலுக்கு வழக்கம் போல குருவி மிட்டாய்):)
http://i.ytimg.com/vi/4Xc5MxPM6Cs/hqdefault.jpg
கோபால் சித்திரப் பூவிழி பற்றி முன்பு எழுதியது..
http://www.mayyam.com/talk/showthrea...%AE%AE/page327
டியர் ரவி சார்,
மாணிக்கத்தை முடித்துக்கொண்டு மரகதத்துக்கு வந்துவிட்டீர்கள்.
பணக்காரப் பிள்ளை படத்தில் இடம்பெற்ற
"மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள் மகாராணி"
பாடலை சேர்த்தீர்களா என்று தெரியவில்லை.
கோபால் அவர்களுக்கு பிடிக்கும், ரவிச்சந்திரன் இருப்பதால்.
கலைவேந்தன், வினோத் ஆகியோருக்கும் பிடிக்கும், ஜெயலலிதா இருப்பதால்.
ராகவேந்தர் அவர்களுக்கும் பிடிக்கும் சுப்பையா நாயுடு இசை என்பதால்.
ஹி.. ஹி... எனக்கும் பிடிக்கும், பாடல் நன்றாக இருப்பதால்.
ஆதிராம் மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள் ரவி கொடுத்துவிட்டார்..
http://www.inbaminge.com/t/t/Thennam...amani.eng.html
மாணிக்க மாமணி மாலையில் மங்கையவள் தங்கமுகம் இது கொடுக்கலை..:)
தென்னங்கீற்று விஜயகுமார் சுஜாதா (இதுபற்றி வாசு எழுதுவார்..!)
டியர் கோபால் சார்,
நன்றி,... ஏதோ திருக்குறள் என்று பெரிய வார்த்தையெல்லாம் சொல்கிறீர்கள். பயமாகத்தான் இருக்கிறது. அதே சமயம் கோபால் சார் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பங்கம் வராமல் பதிவிடனும் என்ற எச்சரிக்கை மணியும் அடிக்கிறது.
நீங்கள் பதிவிட்டு இருக்கும் வேற்றுமொழி படங்களை நான் பார்த்ததில்லை. அதனால் எதிர்வினை / பின்னூட்டம் இட முடியவில்லை. எங்கள் சார்பில் வாசு அந்தப்படங்களை அலசோ அலசென்று அலசிவிட்டார். அவருக்கும் நன்றிகள்.
சி.க ஆமாம் சாரதாவிற்கு 70 வயசாம். நம்பத்தான் முடியவில்லை. இன்றும் கண்ணில் அதே அழுத்தப்பார்வை. அந்த சின்னச் புன்முறுவலுடன் அழகாகத்தான் இருக்கிறார்
ஆதிராம் அவர்களே!
நேரிடையாகக் கேட்கிறேன்? உங்களுக்கு என்ன வேண்டும்?
ஏன் தேவையே இல்லாமல் சதா எப்போதும் வம்பு பேசிக் கொண்டு இதே வேலையாய் அலைகிறீர்கள்?
உங்களுக்கு இதே பிழைப்பாய் போயிற்று. திருக்குறள் என்று முரளி பதிவிற்கு நான்தானே பதில் சொன்னேன். கோபால் எங்கு சொன்னார்? ஏன் தேவையே இல்லாமல் புறம் பேசுகிறீர்கள்?
அன்று ரவி போட்ட ஜாலி பதிவிற்கு கேலி பேசினீர்கள். அப்புறம் சின்னக் கண்ணன் பெயர் சொல்லி புலம்பினீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?
இது ஒரு பொதுத் திரி என்ற சாதாரண விஷயம் கூட உங்களுக்குத் தெரியாதா? மற்றவையெல்லாம் நன்றாகத் தெரிகிறதே. இல்லை வம்பு பேசுவதற்கு தெரியாதது போல் நடிக்கிறீர்களா?
இப்போது சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள். எங்கள் மனதிற்கு சரியென்று பட்டதைத்தான் நானும், இங்குள்ள அன்பர்களும் எழுதிக் கொண்டிருக்கிறோம் ஹப்பின் வரைமுறைகளுக்குக் கட்டுப்பட்டு. இங்கு யாரும் ஒருவருக்கு ஒருவர் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டு எழுத வரவில்லை. அனைவரும் ஒரு மன நிம்மதிக்காக, ரிலாக்சுக்காக, தங்களுக்குத் தெரிந்த நல்ல விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ள வருகிறார்கள்.
இதில் முட்டுக்கட்டை போட நீங்கள் யார்? இப்படி போட வேண்டும்... இப்படிப் போடக் கூடாது என்று நேரிடையாகவோ மறைமுகமாகவோ கட்டளையிட நீங்கள் யார்? உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
கோபால் பேச்சுக்குக் கட்டுப்பட்டு, அவர் எச்சரிக்கை மணிக்குக் கட்டுப்பட்டு நான் பதிவிடும் கட்டாயத்தில் இருக்கிறேன் என்பது போல உங்கள் இஷ்டத்திற்கு அள்ளி விடுகிறீர்கள். கோபாலாயிருந்தால் என்ன... யாராய் இருந்தால் என்ன.... யாரும் யாரையும் இங்கே கட்டுப்படுத்த முடியாது அவர்கள் தவறு செய்யாத வரையில். கோபாலின் நம்பிக்கையைக் காப்பற்ற எங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒன்றும் அதை சொல்லித்தர வேண்டாம். கோபாலையும் உங்கள் கைப்பிள்ளையாக்கி அவர் முதுகில் சவாரி செய்து அவரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம்.
இது பாடல்கள் திரி. இங்கு அவர் இவர் என்ற பேதமில்லாமல் எல்லா நடிகர்களின் பாடல்களும் அலசப்படுகின்றன. இங்கு அவர் பாடல்களைப் போடக்கூடாது... இவர் பாடல்களைப் போடக் கூடாது என்று நேரிடையாகவோ மறைமுகமாகவோ, சுற்றி வளைத்தோ நீங்கள் சொல்ல வேண்டாம். திரிக்கு வரம்பை நீங்கள் உருவாக்காதீர்கள். வீணே வம்புக்கும் அலைய வேண்டாம்.
இங்கு நடிகர் திலகம், திரு எம்.ஜி.ஆர், ரவி, ஜெய், சிவக்குமார் முத்துராமன், கமல், ரஜினி என்று அத்தனை பேருடைய பாடல்களும் அலசப்படுகின்றன. நான் எம்.ஜி.ஆர் பாடல் எழுதிப் பதிவிட்டால் நான் எம்.ஜி.ஆர் அடிவருடியாக ஆகிவிட முடியாது. கலைவேந்தன் சார் வினோத் சார் ஆகியோர் நடிகர் திலகம் பாடல்கள் போட்டால் அவர்கள் நடிகர் திலகம் பக்தர்களாகி விட முடியாது. இந்த சின்ன கான்செப்ட் கூடவா உங்களுக்குப் புரியவில்லை? நான் எம்.ஜி.ஆர் பாடல் எழுதினால் நான் என்னவோ நடிகர் திலகத்திற்கும் அவர் குடும்பத்திற்கும் பெரும் துரோகம் இழைத்து விட்டது போல புறம் பேசுகிறீர்கள். அதனால் நானென்னவோ நடிகர் திலகம் பக்தன் என்பதே சந்தேகம் என்பது போல ஒரு மாயையை கிரியேட் செய்கிறீர்கள். உங்களுக்கே அருவருப்பாக இல்லை? சே! நீங்கள் நடிகர் திலகம் ரசிகர்தானா என்று இப்போது எனக்கு சந்தேகம் வருகிறது.
இப்போது சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள். நாங்கள் எங்கள் மனதிற்கு சரியென்று பட்டதைத்தான் பதிவு செய்கிறோம். பதிவு செய்வோம். உங்களுக்குத் தைரியம் இருந்தால் என்னை நேருக்கு நேர் கேள்வி கேளுங்கள். அதை விடுத்து அங்கங்கே போய் புலம்பி புலம்பி சீரியல் மருமகள் போல அழாதீர்கள். பதிவுகளில் தவறிருந்தால் சொல்லுங்கள். சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்கிறேன். அதை விடுத்து இவருக்கு கட்டுப்பாடு, எச்சரிக்கை மணி என்றல்லாம் சீண்டிப் பார்க்காதீர்கள். இங்கு யாருமே எல்லை மீறி, விதிகளை மீறி எதுவும் செய்யவில்லை. ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாய், ஜாலியாய், சகோதரர்களாகத்தான் அனைவரும் பழகுகிறோம். மதுர கானங்களின் ஒற்றுமையும், வெற்றியும் பிரிக்க முடியாது. ஏன் வயிறு எரிகிறீர்கள்?
இதில் உள்ளே நுழைந்து கட்டுப்பாடு விதிக்க, இதைப் போட வேண்டும்... அதைப் போடக் கூடாது என்று சொல்ல உங்களுக்கு எந்த அதிகாரமோ, உரிமையோ இல்லை. என்ன புரிந்ததா?
உங்கள் கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி பேச்சையெல்லாம் வேறு திரிகளில் வைத்துக் கொள்ளுங்கள். ஒழுங்காகப் பதிவுகள் போடுவதாய் இருந்தால் இங்கு தாராளமாகப் போடுங்கள். கிண்டி விட்டு வேலை பார்ப்பதாய் இருந்தால் அதை மறந்து விடுங்கள்.
உங்கள் அநாகரீகமான கிண்டல் என்ன கேலி என்ன....
பண்பாக, நாகரீகமாக நாங்கள் ஒருவரை ஒருவர் ஜாலியாக அடுத்தவர் மனம் புண்படாதபடி கேலி, நையாண்டிகள் செய்து கொண்டு ரொம்ப நாளாகிறது. உங்கள் ஜிகினா வித்தையெல்லாம் இங்கே காட்டாதீர்கள்.
எடுபடாது.
நல்ல விதமாகவே சொல்கிறேன். இது போன்ற புறம் பேசுதல்கள், அடுத்தவரை நோகச் செய்யும் கேலி பேசல்கள், பதிவிட முடியாமல் எழுத விடாமல் மறைமுகமாக தடை செய்தல் (ரவி சார் உங்கள் கேலிப் பதிவால் திரியை விட்டு விலகுகிறேன் என்று சொன்னார்) போன்ற வேலைகளில் ஈடுபட்டால் ஹப்பின் விதிகளின் கீழ் மாடரேட்டர்களிடம் இது பற்றி முறையாகப் புகார் செய்வோம் என்று இதன் மூலம் கூறுகிறேன்.
இந்தப் பதிவிற்கு பதில் பதிவு கூட உங்களுடையது புலம்பல் பதிவாகத்தான் இருக்கும் என்பது தெரியும். அது பற்றி இனி எனக்குக் கவலையில்லை. உங்களுடைய கேலிக் கூத்துக்களுக்கு இனி இங்கே இடமில்லை. உங்களை ஒரு பொருட்டாகவும் இனி மதிக்கப் போவதில்லை.
இங்கிருப்பவர்களின் சார்பாகத்தான் உங்களுக்கே இந்த எச்சரிக்கை மணி. புரிந்து நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அப்படியே திருந்தியும்.
நல்ல மனுஷனுக்கு ஒரு சொல்லு.
Memento - Christopher Nolan -2000.
ஒரு கடினமான complex variable M .S c maths கணக்கு போட்டிருக்கிறீர்களா? Integration ,Differentiation பண்ணியதுண்டா? அதற்கு சற்றும் குறையாத புதிர் இந்த படம். சும்மா உட்கார்ந்து பார்த்து விட்டு கடக்க முடியாது.இந்த நூற்றாண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக நான் கருதும் புத்திசாலி படைப்பு. திரைக்கதை,எடிட்டிங் இரண்டிலும் வெளுத்து வாங்கிய Neo Noir வகை Psychological thriller .
கதாநாயகன் Antero Grade Amnesia என்ற மறதி நோய். எதையுமே ரொம்ப நேரம் ஞாபகம் வைத்து கொள்ள முடியாமல் புகை படம் ,குறிப்புகள்,நிரந்தர விஷயங்களை பச்சை குத்தி கொண்டு.(ஞாபகம் வந்து தொலைக்கிறது. இதைத்தான் உருக்குலைத்து கஜினி பண்ணி கழுத்தறுத்தார்கள். சிரிப்பு காப்பாற்றியது தமிழை. மூல இயக்குனருக்கு insult இந்த copy ) கருப்பு-வெள்ளை முன்னோக்கி விரிய, வண்ணம் பின்னோக்கி செல்ல., சந்திக்கும் மைய புள்ளியை புரிந்து கொள்ளும் அறிவை பெற எனக்கே தலை சுற்றியது. என் பையனிடம் விளக்கம் கேட்டேன். (அவன் என்னை விட தேர்ந்த அற்புத சினிமா ரசிகன்) இதுவும் நேர்கோட்டில் பயணிக்காமல் வெட்டி வெட்டி பயணிக்கும் வகையே. ஒரு துண்டு துண்டு கிழித்து போட்ட காகிதத்தை ஒட்ட வைத்தது போல நினைவுகள்,மாயைகள்,துக்கம் நிறைந்த சுய -பிரமைகள் ,கொஞ்சமே கொஞ்சமாய் நடப்பு நிஜம் என்று புகை நடுவே பிம்பமாய் படம் விரியும். புரியும்-ஆனால் புரியாது. இதுதான் என கையில் பிடிக்க முடியாது.(நமக்கே குறிப்புகள் வேண்டும் தொடர)
இந்த படத்திற்கு எனக்கு மூன்று முறை பிடித்தது புரிய. ஆனால் தொடர்ந்தால் கிடைப்பது ஒரு புதிரை விடுவித்து பரிசு வாங்கிய பரவசம்.
இவரின் Prestige எனக்கு மிக மிக மிக மிக பிடித்த படம். இரு மந்திரவாதி நிபுணர்களின் போராட்டம் பற்றியது. Inception பற்றி குழந்தை கூட பேசும்.
1970 இல் பிறந்து 1998 முதல் இயங்கி வரும் அதி புத்திசாலி இயக்குனர்(தம்பியும் சேர்த்தே) பிரிட்டன் -அமெரிக்க பின்னணி. சிறு வயது முதலே கனவு-நினைவு அனைத்தும் சினிமாதான் இவருக்கு.
கோ,
ஆர்வமாய் இருக்கிறது. ஆனால் கேள்விப்பட்டதே இல்லை. அருமை. பார்க்க முயற்சி செய்கிறேன். Inception பற்றி இந்த குழந்தை கூட பேசும்.:)
கோ! இருங்கள்! இருங்கள்
பார்த்த ஞாபகம் இருக்கிறது. ஞாபகத்திற்கு வருதா என்று பார்க்கிறேன்.
என்ன வாசு சார் வம்பா போச்சு
கோபால் அவர்களின் மேற்கண்ட பதிவுக்கு தானே பதில் சொல்லியி ருக்கிறேன். இதில் உங்களை எங்கே இழுத்திருக்கிறேன். ஆகாத மருமகள் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்பது போல இருக்கிறதே.
நான் செய்த மடத்தனம் அப்பவே கோபால் சார் பதிவை 'கோட்' பண்ணாமல் விட்டது.
இந்த திரிக்கு நான் வரக்கூடாது என்றால் சொல்லி விடுங்கள். நான் வரவில்லை. ஆனால் உண்மையை தெரிந்து கொள்ளாமல் இப்படி தடிமனான பதிவுகள் போட வேண்டாம். கோபால் சார் எல்லோரையும் ஒன்றிரண்டு வரிகளில் பாராட்டியது போல என்னையும் பாராட்டியுள்ளார். அதற்கு நன்றிப்பதிவு போட்டதற்கு ஏன் இப்படி கோபப் படுகிறீர்கள். அவர் பதிவு இதற்கு முந்திய பக்கத்தில்தான் இருக்கிறது பார்த்துக் கொள்ளுங்கள். (Post No. 1120)
ராகவேந்தர் சார்.. கை கொடுங்க.. இதுவரை நானே ராஜா பார்த்ததில்லை..அதைப் பார்க்கும் ஆவலை க் கொண்டுவந்துவிட்டீர்கள் உங்கள் எழுத்தில்..ம்ம் ஊர் போய் டிவிடியில் பார்க்கிறேன்..
அப்புறம் மரகத மேகம் பாடலில் மேகம் ஒண்ணும் பச்சையாய் இல்லை..லோபட்ஜெட் படம் போல இருக்கு..பாட்டுமுழுக்க சரத்திற்கு ஒரேபாண்ட் சொக்கா, ஹீரோயின்(?!)க்கு நீல அல்லது கரு நீலப் புடவை..( நல்ல நிறங்க..அட புடவையைச் சொன்னேன் :) ) ஆமா யாராக்கும் அந்த நீலப் புடவைக் காரவுக..(இப்ப பக்கெட் வரும்!)
வாசு சார்
மேற்கண்ட பதிவு அவசரத்தில் போட்டது. சர்வர் மக்கர் பண்ணியதால் ரொம்ப நேரம் அவஸ்தைப்பட்டு அந்த விளக்கத்தை அளித்தேன். திரியை விட்டு போகும்போது கூட குற்றவாளியாக போகக்கூடாது. நம் தரப்பை விளக்கி விடவேண்டும் என்று தவித்து விட்டேன் என்பதே உண்மை.
கோபால் அவர்கள் என் பதிவுகளை திருக்குறள் போல சுருக்கமாக என்று சொன்னதற்கே அந்த பதிவை இட்டேனே அன்றி, நீங்களும் முரளி சாரும் பதிவிட்டதெல்லாம் என் கவனத்துக்கு வரவில்லை.
இந்த திரியின் 1120-வது பதிவில் கோபால் சார் சொன்னதைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இனி என்னை விளித்து வரும் பதிவுகளை 'கோட்' பண்ணியே பதிலளிக்கிறேன்.
என் விளக்கத்தைப் படித்து உங்கள் முந்தைய பதிவை நீக்குவீர்கள் அல்லது மாற்றம் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
இனி நான் திரியில் தொடர்வதும் விடைபெற்றுப் போவதும் உங்கள் முடிவு.
அன்புள்ள ரவி சார், வாசு சார், கோபால் சார், ராகவேந்தர் சார், கிருஷ்ணா சார், சின்னக்கண்ணன் சார், வினோத் சார், கலைவேந்தன் சார், ராஜேஷ் சார், கல்நாயக் சார், மற்றும் நண்பர்களுக்கு
இந்த திரியிலோ அல்லது வேறெந்த திரியிலோ தங்கள் மனங்கள் புண்படும்படியாகவோ வருத்தம்படும்படியாகவோ நான் பதிவிட்டிருந்தால் எல்லோரும் தயை கூர்ந்து என்னை மன்னியுங்கள்.
வாசு,
பாராட்டிற்கு நன்றி. இதை அங்கே பதிவதற்கு இன்னும் மனதளவில் நீங்கள் தயாராகவில்லை என நினைக்கிறேன். விரைவில் அந்த நாள் வரட்டும்.
அன்புடன்
ஆதிராம் சார்.
சிலர் மனம் புண்படும்படி பதிவு போடுவதும் தேவையில்லை பின் வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை
பாடல்கள் குறித்து நீங்கள் எழுதுங்கள் உங்கள் பார்வையில் சொல்லுங்கள் . நல்ல எழுத்தை ஊக்குவிக்கவும் ரசிக்கவும் இந்த திரியில் ஆட்கள் அதிகம்
ஆனால் ஏதோ பதிவிடுவதே சிலரை வம்பிழுக்கவோ இல்லை ஏதோ ஒன்று சொல்ல வேண்டும் என்றோ சொல்வது அழகல்ல
இதுவரையில் இந்த திரியில் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. அது பலருக்கு எரிச்சலாக கூட இருக்கலாம். அதற்கெல்லாம் அசையும் கூட்டமில்லை ..
ரவி, சி.க எல்லோருமே நல்ல பதிவாளர்கள். அவர்கள் யார் வம்புக்கும் கூட போகாதவர்கள் அவர்கள் கூட சங்கடப்படுமளவிற்கு நீங்கள் பதிவிட்டுள்ளீர்கள் என்பது ஆச்சர்யமாகவும் வேதனையாகவும் உள்ளது.
வெறுப்பில் திரியை விட்டு செல்லவும் வேண்டாம் வேண்டா வெறுப்பாக வந்து பதிவிடவும் வேண்டாம்.
உங்கள் இஷ்டம். ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியதை சொன்னேன் அவ்ளோதான்..
நான் சில விஷயங்கள் சொல்ல விழைகிறேன். ஆனால் நண்பர்கள் உஷ்ணம் வேண்டாமென்று சத்தியம் வாங்கி கொண்டனர். ராஜேஷ் பொறுமை இழப்பது தேவையில்லா ஒன்று. ஆதிராம், வாசு பார்த்து கொள்ளட்டும்.
என்னை உலக படம்,இசை மட்டோடு நிறுத்தி கொள்ள சொல்லியுள்ளனர்.
உண்மைதான் முரளி சார். உளமார ஒத்துக் கொள்கிறேன். நீங்கள் சொல்வது போல என் மனது எங்கே 'அலைந்து' கொண்டிருக்கும் என்று உங்களுக்கும், அனைவருக்கும் தெரியும்.
உங்கள் 'சொர்க்கப்' பதிவிலிருந்து இன்னும் மீளவில்லை நான். ஏறக்குறைய இருபது தடவைகளுக்கு மேல் படித்து விட்டேன். நண்பர்களிடமும் அலைபேசியில் சொல்லி மகிழ்ந்தேன்.
அது போல ராகவேந்திரன் சார் வேல்பாளையத்து வேந்தன், வில்லாள மன்னன் மூலம் விட்ட ஆய்வுக்கள அம்பு வேறு இன்ப அதிர்ச்சியாய் இதயத்துக்குள் இறங்கி விட்டது. இதற்கெல்லாம் நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது.
கோ,
அடுத்த படம் தொடருங்கள். காத்திருக்கிறேன். 'டாக்ஸி டிரைவர்' உங்கள் லிஸ்டில் வருமா? நான் தமிழ் டிரைவரை சொல்லவில்லை.:) அவார்ட் வின்னரைச் சொன்னேன்.