http://i65.tinypic.com/hx6lqd.jpg
Printable View
இந்த பேனரில் உள்ள சிறப்பு என்னவென்றால் , மக்கள் திலகத்துடன் நடித்த
ஜெ.ஜெயலலிதா (குற்றவாளி என்று உச்சநீதி மன்ற அறிவிப்பால் ) புகைப்படம் கடைசி நேரத்தில் இடம் பெறவில்லை .என்று விழா குழுவினர் தெரிவித்து இருந்தனர் .
http://i63.tinypic.com/8zmdrl.jpg
http://i65.tinypic.com/ngc9hk.jpg
தொடரும் ..............!!!!!!!!
இரண்டு நாட்கள் முன்பாக நான் இந்தப் பதிவை இட்டிருந்தேன். சிலைக்கு எதிராக வழக்கு போட்டவர் (சீனிவாசன் என்பவர்) இறந்துவிட்டாராம். அது எனக்குத் தெரியாது. அவர் இறந்துவிட்ட தகவலை என் பதிவை பார்த்த நண்பர்கள் என்னிடம் தெரிவித்தனர். பிறகுதான் தெரிந்து கொண்டேன்.
இது விஷயத்தை சத்தம் போடாமல் அந்தப் பதிவிலேயே திருத்தம் செய்யவோ, அல்லது விஷயத்தை நமக்குள்ளேயே அமுக்கவோ செய்யாமல் நண்பர்கள் மூலம் எனக்கு கிடைத்த தகவலை நேர்மையாக பதிவு செய்கிறேன். எனக்கு தகவல் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி.
மற்றபடி, நான் பதிவிட்டிருந்த கருத்துகளில் மாற்றம் இல்லை.
http://i68.tinypic.com/2uenv34.jpg
பொதுவாக, கிருஷ்ணன் -பஞ்சு இயக்கும் படத்தின்
'செட்' இல் நுழைபவர்கள், இயக்குனர்கள் இல்லாமல், அவர்களுக்காக காத்திருப்பர். ஆனால் அவர்கள் "செட்' க்குள் நுழைவதை கண்டால் எழுந்து நின்று அந்தஇயக்குனர்களுக்கு மரியாதை செய்யும் பழக்கம் உண்டு
ஆனால் "பெற்றால்தான் பிள்ளையா " படத்தின் "செட்'இல் இரடை இயக்குனர்களில் ஒருவரான கிருஷ்ணனுக்கு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது . இயக்குனர் கிருஷ்ணன் வந்து படப்பிடிப்பை கவனித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மக்கள்திலகம் எம்ஜிஆர் உள்ளே நுழைந்தார்
எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்திவிட்டனர் !
இயக்குனர் கிருஷ்ணன் ? அவருக்கு நிற்பதா அல்லது உட்கார்ந்து கொண்டே இருப்பதா என்று குழப்பம் ! என்ன பண்றது......ஒன்றும் தோன்றாமல் மெதுவாக எழுந்து நின்றார் !
எம்ஜிஆர், கிருஷ்னன் எழுந்து அவருக்கு மரியாதை செலுத்துவதைக்
கொண்டு , பெரும் சினம் கொண்டார் ![
நேராக, அவர் கிருஷ்ணனை நோக்கி வந்து
" நீங்கள் செய்த காரியம் உங்களுக்கே நன்றக இருக்கிறதா ? "
என்று கோபமாக கேட்டார் !
எல்லோருக்கும் எம்ஜிஆர் கோபம் கொண்டு பேசியதைப் பார்த்து
" டென்ஷன்" ஆயினர் !
" என்ன நடக்குமோ ! "
என்கிற அச்சம் அங்கே நிலவியது !
உடனே கிருஷ்ணன் , எம்ஜிஆரிடம் ஏஏதோ காதில் கூறினார் அதனைக் கேட்டு
எம் ஜிஆர் பலமாக சிரித்து விட்டார்......மீண்டும் சிரித்தார் !
எல்லோருக்கும் குழப்பம் !
என்ன சொன்னார் கிருஷ்னன், எம்ஜிஆர் இடம் ?
இதுதான் :
" எனக்கு நானே மரியாதை கொடுக்கத்தான் எழுந்து
நின்றேன் ! "
( இந்த அளவு இயக்குனர் கிருஷ்ணன் மீது மக்கள் திலகம்
எம்ஜியார் பெரு மதிப்பு வைக்கக் காரணம் , மக்கள் திலகத்தில்
முதல் படமான ' சதி லீலாவதி ' யில் துணை இயக்குனராகப்
பணியாற்றிவர் கிருஷ்ணன் )
நன்றி ;சந்திரன் வீராசாமி அவர்கள் முகநூல்
சந்திரபாபு நடவடிக்கையை நாசுக்காக சொல்லியிருக்கிறார் ராமகிருஷ்ணன்.
அப்படியும் பின்னாளில் அவருக்கு உதவினார் புரட்சித் தலைவர்.
ஜெமினி கணேசன் துப்பாக்கியை துடைக்கும்போது சுட்டுக் கொண்டதாக செய்திகள் வந்தது. முதல்வர் புரட்சித் தலைவர் பிரச்சினையை முடித்து வைத்தார்.
இதேபோல பலருக்கும் உதவியிருக்கிறார்.
நன்றி கெட்ட உலகம்டா.
எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து…
தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை.
எதோ நடித்தோம், பணம் சம்பாதித்தோம், மறைந்தோம் என வாழும் நடிகர்களுக்கு மத்தியில் அவரின் சிந்தனையே சொல்லானது.. சொல்லே செயலானது.. அந்த செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார்.
தமிழ் நாட்டையும் தாண்டி மேல் நாடுகளில் அவரைப் பற்றித் தெரியும். இது ஒரு நடிகனாக இருந்ததால் மட்டுமலா.. அவர் செய்த ஒவ்வொரு நல்ல செயலும் அங்கும் எதிரொலித்தது. நடிப்பதைத் தொழிலாகவும், கொடுப்பதைக் கொள்கையாகவும் கொண்டவர் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் எலும்பிலும் தசையிலும் உடல் இருக்கும். ஆனால். இவருக்கோ தங்கத்தால் வார்த்த உடம்பு….அதனால்தான் எமனையும் ஒரு முறை வென்றார்.
புரட்சித் தலைவர் பள்ளியில் படிக்காவிட்டாலும் பல்கலைக் கழகமாக தன்னை மாற்றிக் கொண்டவர். அதனால்தான் அவர் தியாகரஜ சட்டக் கல்லூரியில் சேர்மேனாக அமர முடிந்தது.
மனிதன் உயிர் வாழத் தேவையானது உணவு. மனிதனாக வாழ வைப்பது கல்வி. இந்த இரண்டையும் தான் பிறருக்காக அள்ளி வழங்கிய வள்ளல். அவரது சத்துணவு திட்டம், அவர் காலத்தில் திறக்கப்பட்ட அரசு பள்ளிகளும் சாட்சி.
முடியாது.. இல்லை.. என்ற இரண்டு வார்த்தைகளையும் தமிழில் உள்ள அனாவசிய வார்த்தைகள் என அப்புறப்படுத்தியவர் பொன் மனச் செம்மல்.
எம்.ஜி.ஆர்.
அரிதாரம் இட்டு அடையாளமாகி ..
அகம் நுழைந்து ஜகம் ஆண்டவன்..
மக்கள் மனதில் குடியிருந்த கோவில்
என்றென்றும் ஊருக்கு உழைப்பவன்
அள்ளிக் கொடுப்பதில் அவர் மன்னாதி மன்னன்
மொத்தத்தில் என்றென்றும் அவர் எங்க வீட்டுப் பிள்ளை..
காலத்தை வென்றவர் அவர்..
காவியமானவர் அவர்..
courtesy - vallamai
நான் அறிந்த எம்.ஜி.ஆர்!
குடும்ப உறவுகளுக்கிடையே பிரியம் காட்ட முடியாத உலகத்தில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பிரியம் செலுத்திய மனிதர்(மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்) ம.கோ.ராமசந்திரன். நடிப்பில் மட்டுமல்லாமல் அதே போல் வாழ்ந்து நடப்பிலும் மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.
வாழ்ந்தவர் கோடி,
மறைந்தவர் கோடி,
மக்களின் மனதில் நிற்பவர் யார்!
என்ற பாடல் வரிகள் கூட அவருக்கே பொருந்துவதாய்!
வாழ்க்கையில் பல மனிதர்கள் சரித்தில் தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த நாட்களை விடவும், இறந்த பின்னே அவர்களுக்கு உலகம் புகழாரம் சூட்டவும், பாராட்டவும் செய்தது. வாழ்ந்த நாட்களில் சரித்திரம் படைத்தவர்கள் ஒரு சிலரே அவர்களில் ஒருவர் தான் ம.கோ.ராமசந்திரன். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் தொழில் எனும் பொழுது ஒரு மாதிரியாகவும், அதுவே நிஜ வாழ்க்கை எனும் பொழுது வேறாக இருக்கும். ஆனால் ம.கோ.ராமசந்திரன் அவர்களோ தொழில், வாழ்க்கை என்றெல்லாம் வேறு படுத்திப்பார்க்கத் தெரியாதவர்.
எல்லோரிடமும் திறமைகள் உண்டு, ஆனால் அந்த திறமைகள் தன்னிடம் இருப்பதை அறிந்து செயல் படுத்துபவர் ஒரு சிலரே, அப்படி தன்னிடம் இருந்த எல்லா திறமைகளையும் தெரிந்துக் கொண்டு இயக்குனர், தயரிப்பாளர் மற்றும் நடிகர் என அனைத்து பணிகளையும் செவ்வனே செய்து திரை உலகில் மிகப்பெரிதாக சாதித்துக் காட்டியவர். ஒரு மனிதன் அவனுடைய வாழ்நாளில் சேமிக்க வேண்டிய ஒரே பெரிய சொத்து நண்பர்களும், உறவினர்களும் தான், அப்படி ஒரு மாநிலத்திலிருக்கும் அனைவரையும் உறவினராய் சம்பாதித்தவர்.
அப்படி அனைவரின் அன்பை சம்பாதிக்க என்ன செய்யலாம். நல்லவனாக நடிக்கலாம், அதற்கு சிறந்த நடிகர் என பெயரும் வாங்கலாம்.ஆனால் சிறந்த நடிகர் என்று பெயர் வாங்குவதால் ஒருவரை ஒரு மாநில மக்களே விரும்புவர்களா என்ன? விரும்பினார்கள் அதற்குக் காரணம் அவர் நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாதவர். நன்றாக சாப்பிட்ட ஒருவனிடம் “பசிக்கிறதா என்பதை விட, பசிக்கிற ஒரு மனிதனுக்கு அன்னமிடுவதே” சாலச் சிறந்தது.
அதைத்தான் அவர் “பசிக்கிற ஒருவனுக்கு மட்டுமல்லாமல் பசி என்கிற ஒவ்வொருவனுக்கும் உணவினை வாரி வழங்கினார்” அட்சய பாத்திரம் போல. அரசு கொடுக்கும் பொருட்களை சுரண்டல் இல்லாமல் அதை மக்களிடம் சேர்த்தார். அவர் அறிமுக படுத்திய திட்டங்கள் தான் எத்தனை? சத்துணவுத் திட்டம், விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி, தாலிக்கு தங்கம் வழங்குதல், மகளிருக்கு சேவை நிலையங்கள் இன்னும் எத்தனையோ அடுக்கிக் கொண்டே போகலாம்.
அவர் கொடுத்த இலவச ஓட்டைக் கொண்டு வீட்டை அமைத்து, அதில் வாழ்கிற எத்தனையோ பெயரில் நானும் ஒருத்தியாய். சிலருடைய பெருமைகள் சொல்லி மாளாது எனினும் இவருடைய பெருமைகள் சொல்ல சொல்ல மாளாதவைகளாய்! நாம் தியாகிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் எத்தனையோ பேர் உலகிற்கு மட்டுமே தியாகிகளாய், ஆனால் எப்போது தன் மனைவி குழந்தை பிறக்க இயலாமல், பிரசவத்தில் இறந்தாளோ அப்போதே தன்னால் இரண்டு உயிர் போனதே என்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். இப்படி ஒரு தியாக உள்ளத்தை மீண்டும் எங்கே காண்பது?
சிறு எறும்புக்கும் தீங்கு இழைக்காதவர், செல்ல பிராணிகளிடம் கூட உயிரையே வைத்திருந்தார். அவர் வளர்த்து வந்த செல்ல பிராணிகளான இரண்டு சிங்கங்களில், ஒன்று இறந்து விட அதனுடைய தனிமை துயரை காண சகியாதவராய் கொண்டு சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டுவிட்டார். எம்.ஜி.ஆருடைய பல படத்தின் பாடல் வரிகளுமே அவரையும், அவருடைய செய்கையையும் பிரதிபலிப்பனவாக, அதற்கோர் உதாரண பாடல் இங்கே.
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்,
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்
சிலர் அல்லும், பகலும்
வெறும் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்
தொண்டையில் துப்பாக்கி சூடுப்பட்டு, குரல் உடைந்த பிறகும் கூட நடித்து வெளிவந்த படமான காவல்காரன், பெரிய வெற்றியை தேடித்தந்தது. இதைத்தான் சாதிப்பதற்கு வயதோ, உடல் குறையோ தடை கிடையாது என்பதோ. இந்த காலத்தில் வீடுவீடாக சென்று லஞ்சம் கொடுத்தாலும் கூட வாங்க முடியாத வாக்குகளை, உடல்நிலை முடியாமல், பிரசாரத்திற்கே வரமால் பெற்று முதல்வர் ஆன மாமனிதர்.
அந்த மாமனிதருக்கு
கிடைத்தது தான்
என்ன
எல்லோரையும் போல
சிறுவயதில் வறுமைதான்.
கல்வியும் கூட காசு இருப்பவனுக்கே!
வறுமையில் வாழ்க்கையை
எப்படி வாழ வேண்டும்
என்று மட்டுமல்ல,
எப்படி மாற்ற வேண்டும்
என்றும் கற்றுக் கொண்டாயா!
அதனால் தான் வறுமையில்
வாழ்ந்தவர்களுக்காக
வாழ்நாள் முழுவதும் போரடினாயா!
அத்தனை இலவச திட்டங்களையும் அறிமுகப்படுத்தினாயா!
உனக்கு பாரத ரத்னா விருது கூட சிறிதே!
அன்பை சம்பாதிப்பவனே ஆண்டவனை சம்பாதித்தவன், அனைத்தையும் சம்பாதித்தவன். அனைத்தையும் சம்பாதித்த அந்த மாமனிதனுக்காகவே இன்றுவரை அவர் வளர்த்த கட்சிக்கு வாக்களிக்கும் மக்கள் தான் எத்தனை!
மாமனிதரே இன்னொரு முறை தமிழ்நாட்டில் பிறப்பீராக… நாட்டின் தலையெழுத்தை மாற்ற!
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது
முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்!
என்று உலகிற்கு வாழும் போதே சொல்லிவிட்டு போய்விட்டார்.
வாழ்க்கையில் வறுமை மனிதனுக்கு இருபாதையைக் காட்டி விடுகிறது.
ஒன்று நல்வழி, மற்றொன்று தவறான பாதை!
நாமும் வறுமையை ஒழிப்போம் நல்வழியில் நடந்து எம்.ஜி.ஆர் போல.
courtesy - vallamai
பல சோதனைகளுக்கு இடையே “நாடோடி மன்னன்” படத்தைச் சொந்தமாகத் தயாரித்து திரையிட்ட போது எம்.ஜி.ஆர் சொன்னாராம்.
“படம் வெற்றியடைந்தால் நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி” என்று.
படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலைக் குவித்தது இவர் வாழ்வில் ஒரு திருப்பு முனை!
இப்பட வெற்றி விழாவில், பேரரறிஞர் அண்ணா, “நடிக மணிகளிலே எம்.ஜி.ஆர். ஒரு வீரர். விவேகம் நிரம்பிய தோழர். இல்லாதோரிடம் கருணை சுரக்கும் இயல்புடையவர். இந்தக்கனி தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர்பார்த்தார்கள். அது என் மடியில் வந்து விழுந்தது. அதை என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்” என்று புகழாரம் சூட்டினார். அன்று முதல் அண்ணாவின் இதயக்கனியானார்.
துவக்கத்தில் மக்கள் திலகம் நடித்தவை வரலாற்றுப் பின்னணி கொண்ட படங்கள் என்றாலும், இவர் ஏற்ற கதாபாத்திரங்கள் பெரும்பாலும், ஏழை எளிய மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் பிரதிபலிப்பதாகவும், அம்மக்களின் நல்வாழ்வுக்காக அநீதியை எதிர்த்துப் போராடி எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்வதுமாக அமைந்திருந்தன. நாளாக நாளாக நிஜ வாழ்விலும் தங்களுக்காகப் போராடும் நாயகன் கிடைத்து விட்டான் என மக்கள் நம்பத் தலைப்பட்டனர்.
செருப்புத் தைக்கும் சமூகத்தால் வளர்க்கப்படும் பாத்திரத்தில் நடித்த ‘மதுரை வீரன்’ படம் இவர் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். இது திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைத் தாண்டி ஓடி சாதனை படைத்தது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது இதில்தான். மக்களுக்குக் கேடு விளைவிக்கும் என்பதால், மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் இவர் நடித்ததேயில்லை. பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் ஓடி வந்து வில்லனுக்கு நடுவே குதித்து பெண்கள் மானம் காப்பார். எப்போதுமே ஏழைப்பங்காளன்! எதிரிகள் பத்து பேர் என்றாலும் இவர் ஒருவர் மட்டும் தனியாக நின்று சுழன்று சுழன்று பந்தாடி துவம்சம் செய்வார். அநீதிக்கு அடிபணியாமல் தீரத்துடன் தீயசக்திகளை எதிர்த்து முறியடிப்பார். இப்படிப் படங்களில் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் இவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும், இவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன. என்பது மறுக்க முடியாத உண்மை.
எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட பிறகு இவர் குரல் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இவர் வசன உச்சரிப்பு தெளிவாக இல்லாதபோதும், ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். வாள் சுழற்றுதல், சிலம்பம், சுருள்கத்தி சுழற்றுதல், போன்ற பலவகை சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். “படகோட்டி” படம் மீனவ சமுதாயத்திடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் மக்களிடையே உண்டாக்கிய பிம்பம், இவருடைய அரசியல் செல்வாக்கை அதிகப்படுத்தி வாக்கு வங்கியாக நிலைபெற்றது. மக்கள் இவரைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாக எண்ணத் தலைப்பட்டனர். திரைப்படங்களைத் தம் பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர் என்று சொல்வது மிகச்சரி. இவர் படப்பாடல்கள், இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன், கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் திகழ்கின்றன
courtesy - vallamai
எம்ஜிஆர்! மூன்றெழுத்தில் ஒரு மந்திரம்!
சாதிமத பேதம் கடந்த ஒரு மந்திரம்! மந்திரங்கள்கூட சமயத்தில் உச்சரிப்பை மட்டுமே ஆட்கொள்ளும்! இந்த மூன்றெழுத்து மந்திரமோ ‘அதுக்கும் மேலே’ என்றும் உள்ளத்தை ஆட்கொள்ளும். இதன் திறம், இறைவன் அளித்த வரம்!
எம்ஜிஆர் மனதில் நிறைந்தவர் மட்டுமா? பலர் மனதை வென்றவரும்கூட என்பதில் இருவேறு கருத்தில்லை! வரையறுக்க முயல்கிறேன் வரிகளில், வள்ளல் என வாழ்ந்த இப்பெருந்தகையை! எம்.ஜி.இராமச்சந்திரன் – நாடுவிட்டு நாடு வந்து நாட்கள் பல காத்திருந்து நாடகங்களில் கால் பதித்து இன்று நிலைத்து நிற்பதோ நம் அனைவரின் நெஞ்சங்களில்!
இவருடைய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடமாய் நற்கல்வியாய் பலருக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பது இன்றளவும் கண்கூடான உண்மை! அழகிய தமிழ்மகன் இவர்! அழகென்ற சொல்லுக்குப் பொருத்தமானவர்! பொதுவாக கவிஞர் கூட்டம் கதாநாயகிகளையே வர்ணித்து பாடல்கள் புனைந்து வந்த நிலையில், இவரது வரவால் கதாநாயகனை, இவரது தேக்குமர தேகத்தை, பொன் தந்த நிறத்தை விரும்பி,
‘தேக்குமரம் உடலைத் தந்தது,
சின்னயானை நடையைத் தந்தது,
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது,
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது என்று வர்ணித்துப் பாட வைத்தது.
புகழ்ந்து பலர் பாடினாலும் அதற்குப் பொருத்தமாய் வாழ்ந்து காட்டிய தோற்றம் மட்டுமா? அவரின் மன ஏற்றமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது! இந்த வள்ளல் திருக்குறளை நிறையப் படித்திருப்பார் நிச்சயமாக! எவரெவர் எப்படியெப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்து காட்டிய நேர்த்தி சொல்லி மாளாது! சொற்களில் அடங்காது!
இவருக்காக எழுதிய பாடல்கள் வியப்பின் உச்சம்! திரைப்படத்தை மீறி உண்மையாகவே இவருக்கெனப் பிறந்த அந்த வார்த்தைகள் இவருக்கு மட்டுமே பொருத்தமான அவ்வரிகள் இவரால் வளம் பெற்றன, சாகாவரம் பெற்றன! கற்புக்கரசி பெய்யென்று சொன்னால் பெய்யுமாம் மழை! இலக்கியத்தில் படித்திருக்கிறோம். அப்படி இவருக்கு திரைப்படத்திற்கு எழுதிய வரிகள் நிஜமானது வியப்பின் உச்சம். ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ பாடலில்,
மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழவேண்டும்! ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!
கவிஞரின் கற்பனையில் பிறந்த வரிகள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது எப்படி?
‘மனிதனென்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்’
என்கிற வரிகளுக்கேற்ப வாரி வாரி வழங்கி வள்ளலானார், பின் மக்கள் மனங்களில் தெய்வமானார்.
‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்.
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்’
என்று பாடியவர், ஆணையிட்டு ஏழைகளின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டார். ஏழைகளை மனதில் தாங்கி அவர்களுக்கான திட்டங்கள் வகுத்தார்.
அதனால்தான், மக்கள் பாடி வாழ்த்தினர்,
‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’ என்று!
இந்த வாழ்த்து அவர் நோய்வாய்ப்பட்டிருந்த போது வேண்டுதலாக மாறி,
‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரால் நீராட்டுவேன்
இந்த ஓருயிரை நீ வாழவிடு என்று உன்னிடம் கையேந்தினேன்’
என்னும் வேண்டுதலுடன் சேர்த்து ஒவ்வொரு திரையரங்கிலும் கூட்டுப் பிரார்த்தனையாய் தமிழ்நாட்டு மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாய் ஒலித்துக் கொண்டிருந்தது, அவர் நலம்பெற்று திரும்பி காலடி வைக்கும்வரை!
இவையனைத்துமே அவரே அறியாமல் அவருக்காகப் பாடப்பட்டு பின் உண்மையாய் மாறிய வரிகள்!
மக்கள் திலகம்! மகளிர் மனதில் மிக நெருக்கமான உறவுகளாய் பாசமிகு மகன், அன்பு அண்ணன், ஆசைத் தம்பி என பதிந்ததோடு உதாரணக் காதலனாகவும் இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. திரையுலகம் என்பது சக்திமிகுந்த ஊடகம், அதில் கதாநாயகன் என்பவன் மூன்று மணி நேரம் காண்போர் மதியை ஈர்ப்பவன் என்ற பொறுப்பை உணர்ந்து சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து பாசம், வீரம், விடுதலை, வேட்கை, கடமை என நல்ல விஷயங்களையே கையாண்டு காண்போருக்குக் கருத்தில் பதிய வைத்தவர். பல கலைகளில் தேர்ந்த இந்த சகலகலா வல்லவர், படிப்பதைவிட பார்ப்பது மக்கள் மனதில் பதிந்துவிடும் என்ற மனோதத்துவத்தை அறிந்து, அதிலும் படிப்பறிவில்லா பாமர மக்களையும் மனதில் கொண்டு நன்மை விதையைத் தூவி அனைவரின் மனதிலும் வேரூன்றிய இந்த எம்ஜிஆர் எனும் பயிர் சற்று துறை மாறி அரசியலில் நுழைந்தது, தமிழ்நாட்டு வரலாற்றில் பொற்காலம் என்பது வியப்பேதுமில்லை.
வெற்றி இவரால் பேருவகை கொண்டது. தோல்வியோ தோல்வி கண்டே துவண்டது. தலைவன் என்ற சொல் தாழாமல் தனித்துவம் கண்டது. இவருடைய புதிய கட்சியின் கொடியும் பெயரும் இதயக்கனி என இவரை மனதில் தாங்கிய அண்ணாவை கொள்கைத் தலைவர் என ஏற்றுப் பெருமைப் படுத்தியது. இவருடைய மனதில் அண்ணாவிற்கு இருந்த பக்தியை ஒவ்வொரு மேடையிலும் ‘அண்ணா நாமம் வாழ்க!’ என்ற வாக்கியத்தால் பறைசாற்றியது. பிறருக்கு வாய்ப்பூட்டு போட்டது. அண்ணாவை மட்டுமே தலைவனாக ஏற்றதால், இவரது கட்சியில் அண்ணாவுக்கான தலைவர் நாற்காலி காலியாகவே வைக்கப்பட்டது. செயலாளராகவே இவரை செயல்பட வைத்தது.
வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டை ஆண்டவர் இல்லை, இவர் வசந்த பூமியாய் தமிழ்நாட்டை மாற்றியவர். மத்தியில் என்றும் இணக்கம் காட்டி தன் மதியால் தமிழ்நாட்டுக்குப் பல நல்ல திட்டங்களைப் பெற்றுத் தந்தவர். பொங்கலுக்குப் பரிசு தந்து எல்லோர் வீட்டிலும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனார். கல்வித்துறை, காவல்துறை, போக்குவரத்துத் துறை, வேலைவாய்ப்புகள் என்று இவரது ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி கண்ட துறைகள் பல. குறிப்பாக, 5ம் உலகத் தமிழ் மாநாடும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும், அன்னை தெரசா பல்கலைக்கழகம், தெலுங்கு கங்கை திட்டம் (கிருஷ்ணா நதிநீர்த் திட்டம்) ஆகியவை இவரது ஆட்சியின் அடையாளங்கள். மதுவுக்குத் தடை போட்டார். மகளிர் மட்டும் பேருந்துகளுக்கு விதையிட்டார். ஏழைக் குழந்தைகளின் கால்களுக்கு காலணி தந்து காத்திட்டார்.
அதேபோல், எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கைகளில் மாறுபட்டிருந்தாலும், அரசவைக் கவிஞர் என்னும் புதிய பதவியை உருவாக்கி, அதில் முதல் நபராக கவியரசர் கண்ணதாசனை அமரவைத்து அழகு பார்த்த இவரது பெருந்தன்மை மறுக்கவோ, மறக்கவோ முடியாதது. கல்லூரிகளில் அதிக மாணவர்களைச் சேர்க்க அனுமதியளித்து பல மாணவர்களின் வாழ்வில் ஒளி விளக்கானவர்.
எண்ணமே வாழ்வு என்பார்கள், தேர்தல் களத்தில் அனுதினமும் அல்லலுற்று ஓட்டு வேட்டையாடும் அரசியல்வாதிகளுக்கிடையில் தேர்தல் நடந்து முடியும்வரை ஆளே வராமல் ஆண்டிப்பட்டியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது மட்டுமின்றி, பெரும்பான்மையும் பெற்று முதல்வரானதிலிருந்தே இவர் மக்கள் மனதில் பதிந்த ஆழம் புரியும். நீள அகலங்கள் விரியும்.
தொண்டர்களை மதித்து அரவணைத்து ஒவ்வொருவரின் திறமையையும் உணர்ந்து பொறுப்பளித்து எண்ணித் துணிந்து செயலாக்கிய இவர் மின்னி மறையும் மின்னலல்ல, வான் உள்ளவரை தமிழ் உலகை ஆளும் பொன்மனச்செம்மல் ஆவார். அவரின் மனத்தைப் போலவே வெள்ளை உடையும், அவருடைய சுறுசுறுப்புக்கேற்ற கைக்கடிகாரமும், கதிர்வீச்சுக் கண்களைக் கட்டுக்குள் வைத்த கறுப்புக் கண்ணாடியும், அனைத்துக்கும் சிகரமாய் மெத்தென்ற தொப்பியும் நிலையாய்ப் பூண்டு வந்த இந்த இணையற்ற மக்கள் திலகம் மக்களின் மனங்களை விட்டு மறையவேயில்லை, நிறைந்தே இருக்கிறார். அதனால்தான் அவர் நடமாடிவந்த இந்தத் தனித்துவமான அற்புத அடையாளங்களோடு அவர் மெரீனா கடற்கரையில் ஆழ்ந்த நித்திரைக்கு அனுப்பப்பட்டார். அவரது பூவுடல்தான் அங்கே உறங்குகிறது. ஆனால் அவரது ஆன்மா என்றென்றும் தமிழ்மக்களின் இதயங்களிலேயே நிலைத்து நின்று வாழ்ந்துகொண்டிருக்கும்.
மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் வாழ்க.
courtesy - vallamai
மக்கள் திலகத்தை பற்றி வல்லமை இணைய தளத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் ரசிகர்களின் கட்டுரை தொகுப்பை வழங்கியுள்ளேன் . என்ன ஒரு அருமையான அலசல்கள் .யார் மனதையும் காயப்படுத்தாத பொன்னான வரிகள் . அத்தனையும் வைர வரிகள் .
எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் ஆளுமைகள் தமிழகம் தாண்டி , அந்நிய மண்ணிலும் இன்றும் ஆளுகின்றது .நூற்றாண்டு விழா நேரத்தில் உலகில் வாழும் அனைத்து தரப்பினரும் எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆர் என்று கொண்டாடி வருகின்றனர் .
எம்ஜிஆருக்கு இவ்வளவு புகழா ? இன்னும் அவருக்கு மக்கள் செல்வாக்கா ? என்று கேள்வி கேட்கும் முன் ஒரு முறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .
பரிணாம வளர்ச்சி
பகுத்தறிவு - சித்தாந்தம்
அரிதாரம்
மேல்தட்டு - கீழ் தட்டு - பிரித்தாளும் வர்க்கம்
இதை எல்லாம் மீறி எம்ஜிஆர் எப்படி புகழ் உச்சம் அடைந்தார் என்பதற்கு ஒரே பதில் .
உண்மையான தமிழ் சினிமா ரசிகர்கள் - அவர்கள் எம்ஜிஆர் பக்தர்கள் .
பின்னாளில் எம்ஜிஆரின் தொண்டர்கள் - மாற்று முகாமை சேர்ந்த பல நண்பர்கள் இன்று எம்ஜிஆரின் விசுவாசிகள் - அனுதாபிகள் . காலம் எல்லா கடமைகளை சரியாகவே செய்து வருகிறது .
எம்ஜிஆரின் புகழ் என்றுமே அழிவில்லை . காரணத்தை தேடி தேடி அலைபவர்களை பார்த்து காலம் சிரிப்பை ஒன்றை மட்டுமே பரிசாக தந்து கொண்டு வருகிறது .
1947 -- எம்ஜிஆர் ராஜகுமாரி - கட்டழகு கதாநாயகன் .
1951 - சூப்பர் ஸ்டார் - மர்மயோகி
1954- மலைக்கள்ளன் - வசூல் மன்னன் .
1956 - மதுரை வீரன் - வெள்ளிவிழா நாயகன்
1958 - நாடோடி மன்னன் - நாடாண்ட மன்னன் எம்ஜிஆர்
1960 - மன்னாதி மன்னன் எம்ஜிஆர்
1961 - சமூக புரட்சி சக்கரவர்தி எம்ஜிஆர்
1965 - எங்க வீட்டு பிள்ளை - நிலைத்து விட்டது .
1966 - மக்களின் 'அன்பே வா '' எம்ஜிஆர்
1967 - தமிழகத்தின் ''காவல்காரன் '' எம்ஜிஆர்
1968 மக்களின் குடியிருந்த கோயில் எம்ஜிஆர் . தமிழகத்தின் ஒளிவிளக்கு எம்ஜிஆர் .
1969 - நம்நாடு எம்ஜிஆர் தந்த அடிமைப்பெண் வெள்ளிவிழா
1970 - மக்கள் திலகத்தின் மாட்டுக்கார வேலன் -வெள்ளிவிழா
1971 - ''பாரத் '' எம்ஜிஆர் .
1972 புரட்சி நடிகர் எம்ஜிஆர் புரட்சித்தலைவர் ஆனார் .
1973- திண்டுக்கல் வீரர் . உலகம் சுற்றும் வாலிபன் - வரலாற்று வெற்றி நாயகர் .
1974- இடைத்தேர்தல்களிலும் வெற்றி மேல் வெற்றி . உரிமைக்குரல் -வெள்ளிவிழா
1975- மக்களின் இதயக்கனி .
1977 - நாளை நமதே - சொன்னதை செய்தார் .
திரியின் நண்பர்களுக்கு வணக்கம்.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் நான் இத்தனை நாள் திரியில் பதிவுகள் விடமுடியவில்லை. அதற்காக எம்ஜியார் பக்தர்கள் அனைவரும் என்னை மன்னிக்கவும். உலகம் போற்றும் உன்னத தலைவரின் நூற்றாண்டு விழாவை உலகமே கொண்டாடும் இவ் ளையில் இந்த திரியில் என் பதிவுகள் நிச்சயம் இருக்கும் என்று கூறிக்கொண்டு தொடர்கிறேன். தொடர்ந்து திரியை பிரகாசமாக்கிக் கொண்டிருக்கும் திரு. வினோத், திரு. ரவி, திரு.லோகநாதன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
புதுச்சேரியில் அகிலம் வியக்கும் அன்புத்தலைவரின் நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக ஆயிரம் பேருக்கு அன்னதானம் இடும் நிகழ்ச்சி பொன்மனச்செம்மல் அறக்கட்டளை சார்பிலும், மொரட்டாண்டி எம்ஜியார் வழிபாட்டு மன்றத்தின் தலைவரும், ப்ரத்யங்கிரா காளியின் ஆசிரம நிர்வாகியுமான நடாதூர் திரு. ஜனார்த்தன ஸ்வாமிகள் சார்பிலும் இனிதே நடைபெற்றது. அதனையொட்டிய சுவரொட்டிகள் உங்கள் பார்வைக்கு
http://i64.tinypic.com/11gjbba.jpg
http://i63.tinypic.com/2lx9zic.jpg
மிகவும் அரிய புகைப்படம்.
புரட்சித் தலைவருடன் இருப்பவர் யார் என்று தெரிகிறதா?
மக்கள் திலகத்தின் ரசிகன் என்று தன்னைக் கூறிக் கொண்டவர். இப்போதும் காரில் போகும்போது மக்கள் திலகத்தின் பாடல்களைத்தான் கேட்பேன் என்று சொன்னவர். சென்னைவாசியாக இருந்தவர்...
பின்னர், என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரைவாசியாகிவிட்டவர்..
இன்னுமா தெரியவில்லை. உற்றுப் பாருங்கள்.
தெரியவில்லையா? ...
நம் அரசியல் எதிரியின் மகன்...
இன்னும் புரியவில்லையா..
முன்னாள் பிரதமர் ஒருவர் என்று சொல்லி அவரது முதல் எழுத்து ... நே .... கடைசி எழுத்து... ரு.. நடுவில் ஒன்றுமில்லை என்ற ரேஞ்ச்சுக்கு க்ளு குடுத்தாச்சு.. இன்னுமா தெரியலை? அட.. போங்க சார்..
அழகிரி!
சாம்பமூர்த்தி சிவாச்சாரியார் என்பவர் (கோயில் பூஜாரியாராக இருந்தவர்... அய்யர்) அவரும் இன்னொருவரும் விபத்தில் அடிபட்டு இருப்பதைப் பார்த்து அந்த வழியே வந்த முதல்வர் புரட்சித் தலைவர் அவர் உயிர் பிழைக்க தேவையான உதவிகளை செய்திருக்கிறார். அதிகாரிகளிடம் சொல்லிவிட்டு சென்றுவிடாமல் தானே இறங்கி உதவி இருக்கிறார். சரி, இதுகூட பலர் செய்யக் கூடியதுதானே என்று சாதாரணமாய் தோன்றும்.
ஆனால், அப்போது அவர் முதல்வர். எத்தனை முதல்வர்கள் இம்மாதிரி செய்வார்கள். போன முறை திமுக ஆட்சியில் காயம்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த காவலரை அந்த வழியே வந்த எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் என்ற அமைச்சர், தன் காரில் காவலரை ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பாமல் ஆம்புலன்ஸ் வரும்வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். கடைசியில் அந்த காவலர் செத்துப் போய்விட்டார்.
புரட்சித் தலைவர் தானே இறங்கி செயலாற்றி சிவாச்சாரியாரையும் இன்னொருவரையும் காப்பாற்றியதோடு இன்னொன்றும் செய்தார். அதுதான் அவரது மனிதாபிமானம். காப்பாற்றியாகிவிட்டது என்று இல்லாமல் பின்னர் மருத்துவமனைக்கும் போய் தினமும் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். அவரின் எல்லா நடவடிக்கையிலும் நல்ல எண்ணமும் திட்டமும் இருக்கும். முதல்வரே வந்து பார்க்கிறார் என்றால் நோயாளிக்கு அக்கறையோடு நல்ல சிகிச்சை கிடைக்கும்.
பின்னர், புரட்சித் தலைவர் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது அந்த பூஜாரியார், புரட்சித் தலைவருக்காக வேண்டுதல் செய்திருக்கிறார். இதை பூஜாரியாரின் மகன் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
எல்லாருமே மனிதர்கள்தான். இதுபோன்ற மனிதாபிமான நடவடிக்கைகளால்தான் மனிதர் என்பதையும் தாண்டி புரட்சித் தலைவரை புனிதர் என்கிறோம்.
http://i68.tinypic.com/2yzcvev.jpg
http://i64.tinypic.com/fvuvky.jpg
எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்த மக்கள் திலகத்துக்கு சிறந்த நடிப்புக்காக (திரைக் கதிர் பத்திரிகை விருது) விருது வழங்குகிறார் முதல் அமைச்சர் பக்தவச்சலம்.
http://i65.tinypic.com/dg08zd.jpg
புதிய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே...
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று (05/03/2017) நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரங்கள் .
http://i67.tinypic.com/ipwqxc.jpg
சென்னை பாட்சாவில் (மினர்வா ) வெள்ளி முதல் (03/03/2017) தினசரி பகல் காட்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த " அவசர போலீஸ் 100"
நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/2yv2gy0.jpg
சென்னை மகாலட்சுமியில் கடந்த வெள்ளி முதல் (03/03/2017) மக்கள் தலைவர் எம்..ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " தினசரி 3 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது .
http://i68.tinypic.com/x2jx46.jpg