http://i63.tinypic.com/qocahw.jpg
Printable View
படத்தில் திருவாளர்கள் :கணபதி தாஸ் , கமலக்கண்ணன், ரவிச்சந்திரன் சேகர் மற்றும் ஒருவர்.-கோவை திரு.துரைசாமி அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தியபின்
அவரது இல்லத்தருகே அமர்ந்து சோகத்துடன் பேசிக் கொண்டிருந்தபோது
http://i64.tinypic.com/30mtqua.jpg
தினமணி -03/06/18
http://i68.tinypic.com/29y5c1k.jpg
https://s15.postimg.cc/zd1f3v4gr/IMG_9094.jpg
திரு துரைசாமி அவர்கள் இல்லத்தில் இருந்த தலைவர் படங்கள்
நடிகர் வி.சி.கணேசன் ரசிகர்களுக்கு தங்கள் நடிகர் நடித்த படங்கள் பற்றி பொய்யான தகவல்கள் கூறுவதே வழக்கம்.
சென்னையில் டிஜிட்டலில் வெளியான வி.சி. கணேசன் நடித்த ராஜா படம் படுதோல்வி அடைந்திருக்கிறது.
முதல் வாரம் ஆல்பட் தியேட்டரில் ஒரு காட்சி கூட ஹவுஸ் புல் ஆகவில்லை. படத்துக்கு கூட்டமே இல்லாததால் படத்தை போன வியாழக்கிழமை மாற்ற தியேட்டர் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
உடனே நடிகர் வி.சி.கணேசன் ரசிகர்கள் கெஞ்சி கூத்தாடி 2 வது வாரம் பேபி ஆல்பட்டிலாவது ஓட்டுங்கள். அப்பதான் எங்கள் மானம் காப்பாற்றப்படும் என்று தியேட்டர் நிர்வாகிகளிடம் கெஞ்சி உள்ளனர். நஷ்டம் ஏற்படாமல் இருக்க தியேட்டர் வாடகையை தருவதாகவும் கூறி உள்ளனர்.
வாடகை வந்தால் சரி என்று தியேட்டர் நிர்வாகம் போன 1-ம் தேதி முதல் ராஜா படத்தை ஆல்பட்டில் இருந்து பேபி ஆல்பட்டுக்கு மாற்றி உள்ளது. அதுவும் ஆல்பட்டில் மதியம் மற்றும் மாலை காட்சி என்று இருந்ததை பேபி ஆல்பட்டில் மாலை 6.30 காட்சி மட்டும் என்று ஒரு காட்சியாக சுருக்கிவிட்டது.
ஆனால், ராஜா படம் 2வது வாரம் ஆல்பட்டில் ஓடுவதாக விளம்பரம் வெளியிட்டுள்ளனர்.
அந்த பொய் பெருமையை அவர்கள் திரி பாகம் 19 பதிவு 2573 & 2574 ல் போட்டு பொய்யான திருப்தி அடைந்துள்ளனர்.
இவர்கள் சாதனைகள் அந்தக் காலத்தில் இருந்தே இப்படித்தான் பொய்யாக இருக்கிறது.
நான் சொல்வது பொய் என்றால் வி.சி.கணேசன் ரசிகர்கள் தாராளமாக மறுப்பு
சொல்லட்டும்.
முக்கிய தகவல்; பேபி ஆல்பட்டிலும் ராஜா படம் காத்து வாங்குகிறது. 3-ம் தேதி மாலை 6.30 மணி காட்சிதான். 300 சீட் உள்ள பேபி ஆல்பட் தியேட்டரில் 150க்கும் குறைவாகவே டிக்கட் விற்றுள்ளது என்று தகவல் வந்திருக்கின்றது.
பொய்தான் கணேசன் ரசிகர்களின் சாதனை.
சூப்பர். சிவாந்த மண்ண விட நம்நாடு வசூ்ல் எங்கேயோ உச்சத்தில் உள்ளது. இந்த சாதனையாவது எல்லாருக்கும் கண்ணை திறக்க வேண்டும்.
கடைசியில் வசூல் ஒப்பீடுதல் அபாரம். மற்ற நடிகரின் புதுப்பட சாதனையை மறுவெளியீட்டில் வந்த நாடோடி மன்னன் முறியடித்துள்ளது. நன்றி நண்பா.
சிவானந்தம்*
** * * *
எம்ஜிஆர்* படங்கள் வசூல் பற்றியும் , தனிப்பட்ட முறையில்* எம்ஜிஆரை கீழ்த்தரமாக தாக்கி வெளியிட்ட* சிம்மக்குரல்* பத்திரிகையை* பதிவிட்டு* * * பேரானந்தம்* கொண்டாடும் அயல்நாட்டு* முதியவர்* ஒன்றை* மறந்து விட்டார் . வயதாகி விட்டதல்லவா ?* இந்தியா* மட்டுமல்ல இலங்கை மட்டுமல்ல*
உலகளவில்* எம்ஜிஆர்* திரைப்படங்களின்* சாதனைகள்* இன்றளவிலும்* பேசப்பட்டு* வருகிறது .1947- 1977 காலகட்டத்தில்* எம்ஜிஆர்* படங்கள்* உருவாக்கிய சாதனைகள்* எண்ணிலடங்கா .மறு* வெளியீடுகளில்* 1977- 2018* இன்றுவரை* எம்ஜிஆரின்* படங்கள்* மகத்தான பல்வேறு* *சாதனைகள்* நிகழ்த்தப்பட்டுள்ளது .முதியவரின்* மனம் சாந்தி* அடைய* என்றுமே* வாய்ப்பு இல்லை .விரைவில்* *பொறாமை என்ற தீயிலிருந்து* விடுபட்டு நலம் பெற வாழ்த்துகிறோம் ... 👍
பொய்யும், புரட்டும் மட்டுமே ஆதாரமாக கருதி நடக்கும் கருத்து குருடர்களுக்கு எதை சொல்லியும் விளங்க வைக்க முடியாது... இப்போதாவது புரிகிறதா அவர்களின் அபிமான நடிகர் எப்படி இந்தளவு பீஸ் வாங்கியுள்ளார் என்று?! இன்னும் எவ்வளவு நாளானாலும் மக்கள் திலகம் சாதனை, சரித்திரத்தை நினைத்து கூட பார்க்க முடியாது...
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர் மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு
நினைத்தேன் வந்தாய்
நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது
இது ஒரு சிறப்பு பதிவு
கவிஞர்கள் தங்களது தனிப்பாடல்களாயினும் சரி, திரைப்பட பாடல்களாக இருந்தாலும் சரி. அவற்றில் அறிந்தோ அறியாமலோ, அறச்சொற்கள் அமைந்துவிடில், பைந்தமிழ் பாடிய புலவனின் வாக்கு பலித்து விடும் என்பது நெடுங்காலமாக நிலவி வரும் நம்பிக்கை.
கவியரசு கண்ணதாசன் அவர்களின் கேள்வி பதிலில் கூட இதைக் குறிப்பிட்டுள்ளார். கவிஞர் காளமேகப்புலவர் சினம் கொண்டு அறம் பாடிய செய்திகள் பல உண்டு.
பொய்யாமொழி எனும் புலவன் தொண்டை மண்டலத்து மன்னன் காளிங்கராயன் குதிரையை அறம் பாடி வீழ்த்திய வரலாறு பழந்தமிழ் நூல்களில் காணப்படுகிறது.
தன் மகன் அம்பிகாபதியைக் கொன்ற சோழமன்னரை ,அவர்குலமே பூண்டற்றுப் போக கம்பர் அறம் பாடியதால் மணல் மாரி பொழிந்து இன்றும் 'மணல்மேடு' என்ற ஊர் தஞ்சை மாவட்டத்தில் இருப்பதாக கூறுவார்கள்.
புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் ஒரு முறை கவிஞர் வாலியிடம் "உங்க வாயாலே யாரையும், எந்த ஸ்தாபனத்தையும், வாழ்த்தித்தான் பாடனுமே தவிர, கண்டிப்பா வசைபாடி பாடவே கூடாது" என்று அன்புக் கட்டளையிட்டு விட்டார்.
இது போல் பல முறை வாலியிடம் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார் மக்கள் திலகம்.
"என் பாட்டுக்கு அவ்வளவு சக்தி இல்லண்ணே"
என்றார் வாலி சிரித்துக் கொண்டே. .
" உங்க தமிழின் சக்தி எனக்கு தெரியும் "
என்று வாலியின் தோளில் தட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆனால்
எம் ஜி ஆர் அவர்கள் கூறியது எவ்வளவு உண்மை என்பதை வெகு விரைவிலேயே புரிந்து கொண்டார் வாலி.
காவல்காரன் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். படத்திற்கு தேவையான பாடல்களை எழுதி முடித்திருந்தார் வாலி. படத்தின் பாடல் காட்சி படமாக்க வேண்டிய சமயம் அதிர்ச்சி செய்தி வருகிறது. மக்கள் திலகம் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார் என்ற செய்தி. .
படக் குழுவினர் மட்டுமல்ல. உலகத் தமிழர்களே நிலை குலைந்து போயினர்.
ஆனால் ஆண்டவன் கருணையால் மயிரிழையில் குண்டு தொண்டையில் பாய்ந்து மருத்துவமணை சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்தார்.ஒய்வுக்குப் பின் மீண்டும் காவல்காரன் படப்பிடிப்பில் தான் முதலில் கலந்து கொண்டார்.
ஸ்டுடியோவே விழாக்கோலம் பூண்டிருந்தது. மறுபிறவி எடுத்த மகத்தான மனிதரைக் காண அனைவரும் படப்பிடிப்பு அரங்கில் கூடி இருந்தனர்.
எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்துக் கொண்டே வந்தார் மக்கள் திலகம். அப்போது அங்கிருந்த கவிஞர் வாலி ஆனந்தக் கண்ணீருடன்,
"அண்ணே உடம்பு இப்ப பூரணமா குணமாயிடுச்சா ?"
என்றார். அதற்கு மக்கள் திலகம்
" நான் தான் சொன்னேனே, கவிஞர் வாக்கு பொய்க்காதுன்னு"
என்றார்.
"எண்ணண்ணே சொல்றீங்க"
என்று புரியாமல் கேட்டார் வாலி.. அதற்கு
மக்கள் திலகம்
"நீங்க தான் எழுதிட்டிங்களே, எனக்கு நூறு வயசுன்னு இந்தப் பாட்டுல , உங்க வாக்கு பொய்க்குமா"
என்றாராம்.
மக்கள் திலகம் மனம் மகிழ்ந்து கவிஞர் வாலியைப் பாராட்டிய பாடல்
"நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது."
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் டி.எம்.செளந்திரராஜன், சுசீலா குரலில் இனிய பாடல்... 👌 Thanks WhatsApp friends...
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் தயாரித்து நடித்த மாபெரும் வசூல் சாதனை படைத்து வெற்றி கண்ட வெள்ளி விழா திரைப்படம் "அடிமைப் பெண் " இதில் மக்கள் திலகத்திற்க்காக முதன் முதலில் பாடிய பாடல் "ஆயிரம் நிலவே வா" அதனைப் பாடி அதன் மூலம் மக்கள் திலகத்தின் அன்பையும் ஆதரவையும் பெற்ற பாடு நிலா பாலு என்று அழைக்கப்படும் பின்னணிப் பாடகர் திரு.SP பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் " Thanks to Mr.RK..
சாதனை என பிதற்றுபவருக்கு சகாப்த சரித்திர சாதனை எனப்படுவது......... சென்னை- சரவணா திரையரங்கில் வசூலுக்கு(திரைப்படம்) இலக்கணம் படைத்த வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் "முகராசி" மறு வெளியீடு காண்டு கொண்டிருப்பதே முத்திரை பதித்த நிகழ்வுகள், இது போன்ற பற்பல அரிய நிகழ்வுகள் கொண்டாட்டங்கள் புரட்சி நடிகருக்கே மட்டும் உரித்தானது...
மறைந்த திரு.எம்.ஜி.ஆர். விஜயன் அவர்களின் 10வது நினைவு நாள் சென்னை
ராமாவரம் தோட்டத்தில் இன்று காலை சிறப்பாக அனுசரிக்கப்பட்டது .
சென்னையில் இருந்து பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்தவர்கள்
மற்றும், சேலம்திரு. குப்புசாமி,திருவண்ணாமலை திரு கலீல் பாட்சா, பெங்களூரு
திரு.கா. நா. பழனி , ஆகியோரும், மதுரையில் இருந்து திரு.தமிழ்நேசன் தலைமையில் சுமார் 20 பக்தர்களும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர் .
திருமதி சுதா விஜயன் அனைவரையும் வரவேற்று குளிர்பானம் அளித்தார் .
பின்னர் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது .
http://i68.tinypic.com/242771t.jpg
அதன் புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
மறைந்த திரு.துரைசாமி, கோவை, அவர்கள் 2009 ம் ஆண்டில் முதலாவது நினைவு நாளில் அஞ்சலி செலுத்த வந்தபோது .
http://i67.tinypic.com/1035vo1.jpg
திரு.எம்.ஜி.ஆர். விஜயனின் மலரும் நினைவுகள் .
http://i68.tinypic.com/21zwa9.jpg