-
மறு வெளியீடுகளிலும் மாபெரும் பிரம்மாண்ட வெற்றி கண்டு கொண்டே வந்த காவியம் வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் " தேடி வந்த மாப்பிள்ளை"... தயாரிப்பாளர் பி. ஆர். பந்துலு குடும்பத்தினருக்கு அருமையான ராயல்டி வருமானம் தந்தது... " சொர்க்கத்தை தேடுவோம்" பாடல் காட்சிக்கு முன் நடிகை விஜயஸ்ரீ இடம் தலைவர் பேசும் வசனமும், நடிப்பும் அஹ்ஹா... அட்டகாசம்... பின் பாடல் காட்சியில் பாவனையும், ஸ்டைலும் செம சூப்பர்...
-
-
அசால்ட் சாதனை படைத்த அந்த காலத்து தல எம்ஜிஆர்... பாக்ஸ் ஆபீசில் பண்ணிய மரணமாஸ் சம்பவம்!!
By Sathish K
Chennai, First Published 29, Aug 2019, 4:33 PM IST
HIGHLIGHTS
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல், போல் விஜய் - அஜித் ரசிகர்கள் இடையேயும் எப்போதுமே மோதலும், சண்டையும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. அதுவும் இன்றைய டிஜிட்டல் உலகில், டிரெண்டிங் சண்டை தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இன்று ட்விட்டரில் வலுக்கும் சண்டை *அப்போதே இருந்துள்ளது அதற்க்கு சாட்சி அந்தக்காலத்து தல எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து வெளியான போஸ்டரிலேயே அப்பட்டமாக தெரிந்தது.
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல், போல் விஜய் - அஜித் ரசிகர்கள் இடையேயும் எப்போதுமே மோதலும், சண்டையும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. அதுவும் இன்றைய டிஜிட்டல் உலகில், டிரெண்டிங் சண்டை தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இன்று ட்விட்டரில் வலுக்கும் சண்டை *அப்போதே இருந்துள்ளது அதற்கு சாட்சி அந்த காலத்து தல எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து வெளியான போஸ்டரிலேயே அப்பட்டமாக தெரிந்தது.
எம்.ஜி.ஆர் இயக்கி, நடித்த நாடோடி மன்னன் *தமிழ் சினிமாவிற்கும் சரி, எம்.ஜி.ஆருக்கும் சரி மிகப்பெரிய திருப்புமுனை தந்த படம். இது வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், பல நடைமுறை யதார்த்தங்களையும் அரசியல் சித்தாந்தங்களையும் மக்கள் மத்தியில் பேசவைத்த *படம்.
பல்வேறு சிக்கல்கள் பிய்த்தல்களுக்கு நடுவே ஒருவழியாக 1958ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 22ஆம் நாள் வெளியான நாடோடி மன்னன், படம் ரிலீசான தியேட்டர் முழுக்க கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்தது. படமம் பிரமாண்ட வெற்றி பெற்றது. தமிழ் சினிமா ஹிஸ்ட்ரியில் நாடோடி மன்னன் பெற்ற இடத்தை இதுவரை இன்னொரு படம் இடம் பெறவில்லை என்பதே உண்மை.*
அந்தக் காலகட்டத்தைப் பொறுத்த வரையில் வசூலில் இமாலய சாதனை செய்த படமாக பார்க்கப்பட்டது *இந்த படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர் தான். இப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி எழுதியிருந்தனர். எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி, சரோஜாதேவி மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தார்கள்.*
தோல்வி அடைந்தால் நாடோடி'- "நாடோடி மன்னன்' *வெளியானபோது எம்.ஜி.ஆர். உதிர்த்த வார்த்தைகள் *தமிழக திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆகி, முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியில் வந்த ரசிகர்கள் எம்.ஜி.ஆர். போஸ்டரைப் பார்த்து சொன்ன வார்த்தைகள்: தலைவா நீங்க நாடோடியும் அல்ல. மன்னனும் அல்ல. "மன்னாதி மன்னன்" அப்போது ரசிகர்கள் *வார்த்தைகள் பொய்க்கவில்லை. நாடோடி மன்னன், வெற்றி பெற்று எம்.ஜி.ஆரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில், *எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன் இணைந்து *எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தார்கள். *1 கோடியே 80 லட்சத்தில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபீசில் 11 கோடி வசூலைக் குவித்தது *சம்பவத்தை நிகழ்த்தியது. இந்த வசூல் எம்.ஜி.ஆரின் அரசியல் எழுச்சிக்கும் மாபெரும் துணையாக இருந்தது.*
நாடோடி மன்னன் படம் வெளியாகி 60 ஆண்டுகளாகிற நிலையிலும் அந்தப் படத்தின் வெற்றிச் சப்தம் மட்டும் இன்னும் ஓயவே இல்லை என்று தான் சொல்லணும், இப்போதும் சமீபத்தில் *தொழில்நுட்பத்தில் நாடோடி மன்னன் தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் மீண்டும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. வெளியான முதல் நாளே ஹவுஸ் புஃல்லாகி பலர் பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்துள்ளனர். பாக்ஸ் ஆபீஸிலும் புதிய படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. தற்போது ரஜினி, அஜித் படங்களை போலவே 60 ஆண்டுகளுக்கு முன் வெளியான போதும், அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த படங்களிலேயே வசூலில் முதல் இடத்தைப் பிடித்ததும் இந்தப் படம்தான். கோடி ரூபாய் வசூலை ஈட்டிய முதல் தமிழ் படம்!*
தமிழக சினிமா வரலாற்றிலேயே முதல்முறையாக என பல சுவாரஷ்ய சம்பவங்கள் இடம்பெற்றது. பிரம்மாண்டமான செட்டுகள், கண்ணதாசனின் எழுச்சியூட்டும் வசனங்கள், விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள், சந்திரபாபு உள்ளிட்டோரின் நகைச்சுவைக் காட்சிகள், 'தூங்காதே தம்பி தூங்காதே' போன்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் எந்தக் காலத்திலும் நம்மைத் தூங்க விடாத பாடல்கள்... என பல சிறப்பம்சங்கள் இந்தப் படத்திற்கு உண்டு. *
நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறீர்கள், நான் மக்களிடம் இருந்து மாளிகையைப் பார்க்கிறேன்' *"என்னை நம்பிக் கெட்டவர்கள் கிடையாது - நம்பாமல் கெட்டவர்கள்தான் உண்டு' *ஒரு எம்.ஜி.ஆர். நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரை மற்றொரு எம்.ஜி.ஆர் சுற்றி வந்தபடியே பேசுகிற வசனம் பயங்கர க்ளாப்ஸ் அள்ளும். தொழில்நுட்பம் அவ்வளவாக வளராத அந்தக் காலத்திலேயே இரட்டை வேடக் காட்சியை அசால்ட்டாக எடுத்திருந்தார் தல எம்ஜிஆர்.
கடைசியாக க்ளைமேக்ஸ் காட்சி. சூப்பரோ... சூப்பர்... என எத்தனை தடவை சொன்னாலும் தகும். தீவைச் சூழ்ந்திருக்கும் வெள்ளம். அந்த வெள்ளத்தின் மீது கயிற்று நடைப்பாலத்தில் எம்.ஜி.ஆரும், பி.எஸ்.வீரப்பாவும் சண்டை போடுகிறார்கள். இவருக்கு அவர், அவருக்கு இவர் சளைத்தவர் இல்லை என்பது போல விறு விறு சண்டை. திடீரென கயிற்று பாலம் அறுந்துவிடுகிறது. தொங்குகிற கயிற்றை பிடித்துக்கொண்டு எம்.ஜி.ஆரும், சரோஜா தேவியும் தப்பிக்கிறார்கள். அப்பாடா...இக்காட்சியின்போது திரையரங்கில் இருப்பவர்களுக்கு உயிர்போய் உயிர் வருகிறது. இப்படி கண்முன்னே பார்ப்பதைப் போல பயங்கர மாஸாக இருக்கும்.
டபுள் எம்.ஜி.ஆர், *பல டிவிஸ்ட்டுகள், பல ரொமான்ஸ் சீன்கள், இதற்கு நடுவில் வயிறு குழுங்கச் சிரிக்க வைத்த சந்திரபாபுவின் காமெடிகள், மாஸ் ஃபைட் சீன்கள் எம்ஜி ஆர் வைத்திருக்கும் வாளை விட கூர்மையான வசனங்கள் என கொட்டிக்கிடந்த பிரமாண்டங்களால் 3 மணி நேரம், 20 நிமிஷம், 17 செகண்ட் படம் ஓடியும் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்ற சோகத்தில் சீட்டை விட்டு எழுந்து செல்லும் திருப்தியடையாத ரசிகனின் முணுமுணுப்பே படத்தின் மாஸ் வெற்றியை கொடுத்தது.
இந்த பிரமாண்ட வெற்றியை அறிவிக்கும் போஸ்டரில் "போலிகளுக்கு புத்தி புகட்டும் புள்ளிவிவரங்கள் இரண்டே வாரங்களில் 15 தியேட்டர்களில் 10,35,665 *பேர் கண்டுகளித்தனர். மொத்தம் வசூலான தொகை ரூபார் 6,295,79.88 "ஓஹோ என்று ஊர் முழுவதும் சொல்கிறார்கள் நல்லவர்களால் பாராட்டப்படும் வெற்றிச் சித்திரம்" என போஸ்டர் வெளியிட்டிருந்தார்கள்.*
இப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன சனிக்கிழமையை தியேட்டரில் ஈ ஓட்டுவார்கள், மூணு நாள் படம் ஓடினாள் வெற்றி விழா, தங்க செயின், காரு, பைக் கிப்ட்டாக கொடுக்கும் இந்த நிலையில்,அப்போதெல்லாம் ரிசர்வேஷன் சிஸ்டம் கிடையாது,முன் கூட்டியே டிக்கெட் வாங்குவதோ இயலாத காரியம், ஏகப்பட்ட தடவை டிக்கெட்
கிடைக்காமல் திரும்பி, சுமார் ஒன்றரை மாதம், இரண்டு மாதங்கள் கழித்து பார்த்ததாக தாத்தாக்கள் சொல்வார்கள்.*
அந்த காலத்தில் வசூலில் தாறுமாறு பண்ண நாடோடி மன்னனை, அப்போதைய பிரமாண்டத்தை மிஸ் பண்ண இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு, *60 ஆண்டுகளுக்குப் பிறகு, டிஜிட்டல் தொழிற்நுட்பத்தில் புதுப்பித்து வெளியிட்டனர். *எதிர்பார்த்ததைப் போலவே *ரீ-ரிலீசிலும் எம்.ஜி.ஆர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு 25 நாட்கள் வரை வெற்றிபெற்று சாதனை படைத்தது. *நாடோடி மன்னன்' படத்தில், நாடாள வந்தால் ஏழைகளுக்காக எல்லாம் செய்வேன்' என்று எம்.ஜி.ஆர்., வசனம் பேசினார். அவர் முதல்வர் ஆனதும் படத்தில் சொல்லிய அத்தனையும் மக்களுக்கு செய்தார். ஒரு அரசியல்வாதி எளிதாக முதல்வராகிவிடலாம். ஆனால், ஒரு நடிகர் முதல்வராவது கஷ்டம். எம்.ஜி.ஆர்., தமிழகத்தை ஒரு ஆண்டு அல்ல இரண்டாண்டு அல்ல, பதினொரு ஆண்டுகள் ஆண்டார். மக்களுக்கு எவ்வளவோ உதவிகளை செய்தார்.
Last Updated 29, Aug 2019, 4:33 PM IST
MGRNadodi Mannan......... Thanks to Asia Net...
-
இன்று 30-08-2019 முதல் தாராபுரம் - வசந்தா. DTS தினசரி 4 காட்சிகள் மக்கள் திலகம் தயாரித்த பிரம்மாண்ட வசூல் காவியம் "அடிமைப்பெண்" வெற்றி பவனி.......... Thanks...
-
எம் ஜி ஆர் குறள்
எம் ஜி ஆர் வாத்தியாராய் தன் தத்துவபாடல் வழி கூறாத கருத்தே இல்லை எனலாம்
தெய்வம்
பெற்று எடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவா அவள் பேசுகின்ற தெய்வம் அல்லவா
வளர்ப்பு
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்பதிலே
கல்வி
கற்றவர் சபையில் உனக்காக தனி இடம் தரவேண்டும்
உன்னை பெற்றதினால் மற்றவராலே போற்றி புகழ வேண்டும்
உழைப்பு
உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
வாழும் முறை
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆடிபாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
உண்மை
உண்மை என்பது தெய்வத்தின் மொழி ஆகும்
நாடு
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி
கடவுள்
ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே கடவுள் என்று கூறுவோம்
ஜாதி
ஒரு தாய் மக்கள் நாம் என்போம் ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டில் நீதி மறையட்டுமே தன்னால வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் கலங்காதே
திருட்டு
திருடாதே பாப்பா திருடாதே சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தெரிந்து தெரியாமலும் மீண்டும் வராமல் பார்த்துக்கோ
பெண்கள்
இப்படி தான் இருக்கணும் பெண்கள்
இங்கிலீஸ் படிச்சாலும் இன்ப தமிழ் நாட்டிலே
தவறான ஆட்சிக்கு
ஒரு நாள் இந்த நிலைமைக்கு மாறுதல் வரும் அதை மாற்ற தேர்தல் வரும்
புகழ்
இருந்தாலும் மறைந்தாலும் இவர்போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
இன்னும் மனித வாழ்வின் அத்தனை கட்டங்களிலும் வாழ பாமரனின் குறளாக எம் ஜி ஆர் பாட்டு உள்ளது பக்தி பாடலாய் தினம் காலை இல்லங்கள் தோறும் ஒலிக்கட்டும் நல்ல சமூகம் உருவாகட்டும்
வாழ்க எம் .ஜி .ஆர் ., புகழ்........... Thanks...
-
தலையாய அறிவு ஜீவி ஒன்று கண்டு பிடிச்சிருக்கு... என்னன்னு... புரட்சி நடிகர் ஒரு ஸ்டண்டு நடிகர் ன்னு... அட பொறம்போக்குகளா! ஏன் நீங்கல்லாம் வாய்ப்பு வசதிகள் இருந்தும் தேறாம (உருப்படாம) பொன்னேங்கன்னு இப்ப தெரியுது, அட... நடிகர் நடிகை அப்டிங்கிற கூத்தாடிகள் என சொல்லப்பட்ட தொழிலாளர்கள் வம்சத்துக்கே மரியாதை... மதிப்பு... பெருமை...பெருமிதம் உண்டாங்கினது யாரால?!... ஒரு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., அவர்களால் மட்டுமே... அதை தெரிந்து அறிந்து ( இனிமேலாவது) பேசுங்க... எழுதுங்க... Thanks...
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் நம்மை விட்டு பிரிந்து 31 ஆண்டுகள் கடந்து விட்டாலும் 1988 முதல் 2019 இன்று வரை அவர் புகழ் தினமும் வளர்ந்து கொண்டே செல்லுகிறது . உலக வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை எம்ஜிஆர் ஒருவருக்கே கிடைத்துள்ளது
1988 முதல் 2019 எம்ஜிஆர் அவர்களுக்கு கிடைத்த பெருமைகள் - சாதனைகளின் சிகரம் .
1988ல் மத்திய அரசின் ''பாரத ரத்னா '' விருது .
மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடம்.
மெரினாவில் எம்ஜிஆர் அருங்காட்சியகம் .
மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு தூண்.
அண்ணா சாலையில் எம்ஜிஆர் சிலை
எம்ஜிஆர் நினைவு இல்லம் .
ராமாவரம் எம்ஜிஆர் தோட்டம்
சென்னை - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்ட்ரல் ஸ்டேஷன்
சென்னை - கோயம்பேடு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் .
சென்னை தரமணி எம்ஜிஆர் பிலிம் சிட்டி
சென்னை - எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழகம்
சென்னை - மாதவரம் எம்ஜிஆர் நிகர் பல்கலை கழகம் .
சென்னை போரூர்- பூந்தமல்லி எம்ஜிஆர் சாலை .
எம்ஜிஆர் ஸ்டாம்ப் வெளியீடு
எம்ஜிஆர் உருவம் பதித்த நாணயம் .
1989ல் ஒன்று பட்ட அதிமுக - இடைத்தேர்தலில் வெற்றி
1989ல் அதிமுக பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி
1991ல் அதிமுக ஆட்சி .
2001ல் அதிமுக ஆட்சி.
2011ல் அதிமுக ஆட்சி .
2016ல் அதிமுக ஆட்சி .
2019ல் அதிமுக ஆட்சி தக்க வைத்தது .
2000ல் ராஜ் டிவி நடத்திய 2000ல் ஒருவன் - எம்ஜிஆர் நிகழ்ச்சி
2016ல் விஜய் டிவி நடத்திய மன்னாதி மன்னன் எம்ஜிஆர் நிகழ்சி
பாராளுமன்றத்தில் எம்ஜிஆர் சிலை .
எம்ஜிஆர் புகழ் பாடும் உரிமைக்குரல் - இதயக்கனி மாத இதழ்கள்
எம்ஜிஆர் புகழ் பாடும் எம்ஜிஆர் தொடர் விழாக்கள்
ஆல்பட் அரங்கில் நடந்த நாடோடிமன்னன் விழாவில் பங்கு பெற்ற முன்னணி அந்த கால நடிகர்கள் - நடிகைகள் .
கலைஞர் டிவி நடத்திய மறக்க முடியுமா ? எம்ஜிஆர் சிறப்பு ஒளி பரப்பு .
டிஜிட்டல் - ஆயிரத்தில் ஒருவன் சென்னையில் வெள்ளிவிழா .
டிஜிட்டல் - அடிமைப்பெண் 300 அரங்கில் வெற்றி பவனி .
டிஜிட்டல் - ரிக்ஷக்காரன்
டிஜிட்டல் - நினைத்ததை முடிப்பவன்
டிஜிட்டல் - எங்கவீட்டுப்பிள்ளை
எம்ஜிஆர் படங்கள் மறு வெளியீடுகளில் முதலிடம் - கோவை
எம்ஜிஆர் படங்கள் மறு வெளியீடுகளில் 2வது இடம் - மதுரை .3வது இடம் - சென்னை
எம்ஜிஆரின் 73 பழைய படங்கள் மறு வெளியீடுகளில் வெற்றி பவனி தொடர்ந்தது .இனி தொடரும் .
புதிய தமிழ் படஙக்ளில் எம்ஜிஆர் பாடல்கள் - எம்ஜிஆர் காட்சிகள் இடம் பெற்றது .
திரை உலக பிரமுகர்கள் எம்ஜிஆரை நினைவு கூர்ந்து வருகிறார்கள் .
ஜெயா டிவியில் தினமும் எம்ஜிஆர் பாடல்கள் 1 மணி நேரம் ஒளிபரப்புகிறார்கள் .
உலகம் முழுவதும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது .
திராவிடர் கழகம் - எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது .
மதிமுக வைகோ - காமராஜர் அரங்கில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடினார் .
வேலூர் வி ஐ டி கல்லூரி வளாகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது .
எம்ஜிஆர் உலக பேரவை மாநாடு வேல்ஸ் வளாகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது .
எம்ஜிஆர் சிலையை ஏ.சி. சண்முகம் நடிகர் ரஜினி வைத்து எம்ஜிஆர் நிகர் பல்கலை கழகத்தில் திறந்தார் .
பி ஆர் ஓ -பொன்விழா நடத்திய நிகழ்ச்சியில் எம்ஜிஆரை பாராட்டிய நடிகர்கள் - நடிகைகள் .
டிஜிட்டலில் வெளிவர தயாராக உள்ள எம்ஜிஆர் படங்கள் . அன்பே வா . அலிபாபாவும் 40 திருடர்களும் .மாட்டுக்கார வேலன் .
எம்ஜிஆரின் காவல்காரன் படம் வண்ணத்தில் உருவாக உள்ளது
டாக்டர் பெரியசாமி - எம்ஜிஆர் புத்தகம் வெளியிட்டார் .
டாக்டர் ஹண்டே - எம்ஜிஆர் புத்தகம் வெளியிட்டார் .
இந்து பத்திரிகை வெளியிட்ட காலத்தை வென்ற எம்ஜிஆர் புத்தகம் . 25000 புத்தகங்கள் விற்று சாதனை .
பம்மல் சாமிநாதன் வெளியிட்ட எம்ஜிஆர் பட ஆல்பம் .
உரிமைக்குரல் இதழ் வெளியிட்ட எம்ஜிஆர் ஆல்பம் .
சத்யா வெளியிட்ட எம்ஜிஆர் ஆல்பம் ,
31 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் எம்ஜிஆர் பற்றிய புத்தகங்கள் .
பெங்களூரில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா தலைமயில் நடிகை சௌகார் ஜானகி ஜானகி கலந்து கொண்ட எம்ஜிஆர் விழா .
பெங்களூரில் நடிகை சரோஜாதேவி கலந்து கொண்ட எம்ஜிஆர் விழா .
சமூக வலை தளங்களில் எம்ஜிஆர் பற்றிய செய்திகள் முதலிடம் வகிக்கிறது .
வல்லமை - இனைய தளத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டுரை போட்டி - மிகவும் அருமை .
எம்ஜிஆர் - REMEMBERED தொடர் கட்டுரை 7 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது .
தமிழகத்தில் எல்லா ஊடகங்களும் ,பத்திரிகைகளும் எம்ஜிஆர் -100 சிறப்பித்தார்கள் .
அமெரிக்கா , இங்கிலாந்து , சவூதி ,மலேசியா , சிங்கப்பூர் , இலங்கை போன்ற நாடுகளில் எம்ஜிஆர் -100 கொண்டாட்டம் .
மய்யம் இணைய தளத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற தலைப்பில் விரைவில் ஒரு லட்சம் பதிவுகளை கடக்க போகிறது .
எம்ஜிஆர் ரசிகர்கள் பல தலை முறைகள் கடந்து புதிய தலை முறை எம்ஜிஆர் ரசிகர்களோடு இணைந்து எம்ஜிஆரை நேசித்து கொண்டாடி வருகிறார்கள் .
டிஜிட்டல் -எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் இந்த ஆண்டில் எதிர்பார்க்கலாம் .
சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் எம்ஜிஆர் பெயர் சுழன்று கொண்டு வருகிறது .
எம்ஜிஆர் உருவாக்கிய இரட்டை இலை ஒட்டு வாங்கி நிலைத்து விட்டது .
எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் 2022ல் பொன்விழாவை நிறைவு செய்கிறது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு அன்றும் வெற்றி . இன்றும் வெற்றி . என்றென்றும் வெற்றி ............... Thanks.........
-
மக்கள் திலகத்தின் " திரையுலக சாதனைகள் " புரட்சித்தலைவரின் அரசியல் பிரவேசத்தால் நடிக்க முடியாமல் நின்று போன பல படங்களின் பெயர்கள் மட்டும்.
60 வயதில் ஒரு நடிகர் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த படங்களின் எண்ணிக்கை 25ஐ தாண்டுகிறது என்றால், இதுவும் ஒரு புரட்சி ! ஒரு உலக, கின்னஸ் சாதனையே !
இந்த படங்கள் அனைத்தும் புரட்சித்தலைவரின், 1972க்கு பிறகு தீவிர அரசியல் பிரவேசத்தால், கைவிடப்பட்ட படங்கள் என்பதை திர்யின் பார்வையாளர்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் !
துரதிருஷ்டம் செய்த நம் கண்கள், திரையில் காண முடியாத, சாதனைகளின் சிகரம் பொன்மனசெம்மலின் பொற்காவியங்கள் :
1. நம்மை பிரிக்க முடியாது :
நாஞ்சில் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படவிருந்த படம். ஒரு சர்க்கஸ் காரியின் சாகஸமிக்க வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு அமைந்த இந்த படத்தில் தலைவருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. உரையாடல் சொர்ணம் எழுத இயக்க்விருந்தது ப. நீலகண்டன்.
2. மரகத சிலை :
ஆடலழகி ஒருத்தியின் வாழ்க்கையை மையமாக கொண்டு, குமரி பிலிம்ஸ் தயாரிப்பில், மக்கள் திலகத்துடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் மஞ்சுளா மற்றும் லதா. வெளி நாட்டிலும் படப்பிடிப்பு நடைபெற திட்டமிட்டிருந்தனர்.
3. வாழு வாழ விடு :
எம். ஜி. ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த இப்படத்திலும் லதா மற்றும் மஞ்சுளா ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். விளம்பரத்துடன் .நின்று போன படம்.
4. ஆண்டவன் கட்டிய ஆலயம்
எம். ஜி. ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த மற்றொரு படம் இது. தத்துவக் கருத்துக்களை உள்ளடக்கிய இப்படத்தில் நாயகியர் முடிவாகாத நிலையில், படம் தயாரிப்பது கைவிடப்பட்டது.
5. “ கொடை வள்ளல்"
திருமகள் என்ற படத்தை தயாரித்தளித்த கோவை கோவிந்தராஜன், தனது நந்தகுமார் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படவிருந்த அடுத்த படம் : “ கொடை வள்ளல்" இப்படத்தில் ஒன்பது மாறுபட்ட கதா பாத்திரங்களில் பொன்மனச்செம்மல் நடிப்பதாக இருந்தது. புரட்சித் தலைவருடன், லதா, மஞ்சுளா உட்பட 9 நாயகியர் நடிக்கவிருந்தனர். உரையாடல் ஏ.கே. வில்வம் எழுத ப நீலகண்டன் இயக்க விருந்தார்.
6. தந்தையும் மகனும்
தேவர் பிலிம்ஸ் சார்பில், எம். ஏ. திருமுகம் இயக்கத்தில், எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பத்மினியும், கே. ஆர். விஜயாவும் நடிக்க விருந்தனர். " தினத்தந்தி " நாளிதழில் முழு பக்க விளம்பரத்துடன் வெளிவந்தது
7. மக்கள் என் பக்கம் :
தயாரிப்பாளர் - இயக்குனர் என். எஸ். மணியம் மற்றும் முசிறிப்புத்தன் இனைந்து எம். எம். மூவிஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த இப்படத்தில் ஜோடியாக நடிக்க நடிகைகள் முடிவாக இருந்த நிலையில் புரட்சித் தலைவரின் அரசியல் பிரவேசத்தால் கைவிடப்பட்டது. இயக்கம் என். எஸ். மணியம்.
8. நானும் ஒரு தொழிலாளி :
சித்ரயுகா கண்ணையன் தயாரிப்பில், புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில், மக்கள் திலகமும், நடிகை லதாவும் நடித்த ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டது. .
9. சமூகமே நான் உனக்கே சொந்தம் :
லட்சுமி பிலிம்ஸ் சார்பில், இயக்குனர் கே. ராகவன் இயக்கத்தில், லதா ஜோடியாக மக்கள் திலகம் சில காட்சிகளில் நடித்தார். வழக்கம் போல் இந்த படமும் புரட்சித் தலைவரின் அரசியல் பிரவேசத்தால் கைவிடப்பட்டது.
10. தங்கத்திலே வைரம் :
இயக்குனர் கே. எஸ். ஜி. என்றழைக்கப்படும் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், சித்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த திரைப்படம். மக்கள் திலகத்துடன் முதன் முறையாக கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இணைந்து தரவிருந்த படம் இது. திரு. கே. எஸ். கோபாலகிருஷ்ணன், நடிகர் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து "குலமா குணமா", நடிகர் ஜெமினி கணேசனை வைத்து "பணமா பாசமா", நடிகர் ஜெய்ஷங்கரை வைத்து "உயிரா மானமா" போன்ற படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. " தினத்தந்தி " நாளிதழில் முழு பக்க விளம்பரத்துடன் வெளிவந்தது.
11. புரட்சிப்பித்தன் :
ரங்கநாயகி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் டி. ஆர். ராமண்ணா அவர்கள் தயாரிக்க விருந்த இப்படத்தில் பொன்மனச்செம்மல் புதுமையான கதா பாத்திரத்தில் தோன்றும் காட்சி சில படம் பிடிக்கப்பட்டது. ஜோடியாக நடிகை லதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். " தினத்தந்தி " நாளிதழில் முழு பக்க விளம்பரத்துடன் வெளிவந்தது.
12. மண்ணில் தெரியுது வானம் :
உதயம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இதயம் பேசுகிறது மணியனும், வித்வான் வே. லட்சுமணனும் இணைந்து தயாரிக்க விருந்த இப்படத்தில் நடிகை லதா அல்லது புதுமுக நடிகை ஜோடியாக நடிக்கலாம் என்று பேசப்பட்டது.
13. தியாகத்தின் வெற்றி (முன்னர் வைக்கப்படிருந்த பெயர் " அமைதி ")
மக்கள் திலகம் பங்கு பெறும் சில காட்சிகள், ஜோடியாக நடிக்கும் லதாவுடன் சேர்ந்து எடுக்கப்பட்டன. கே. சங்கர் இப்படத்தினை இயக்குவதாக இருந்தது.
14, உங்களுக்காக நான் :
செந்தில் மூவிஸ் சார்பில் ஜெமினி கணேசன் - பத்மினி நடித்த "தேரோட்டம்" படத்தினை தயாரித்த வி. டி. அரசு தனது அடுத்த தயாரிப்பாக புரட்சித் தலைவர் ராணுவ கேப்டனாக நடிக்கும் "உங்களுக்காக நான்" படத்தை தயாரிக்க விருந்தார்.
15. எல்லைக்காவலன் :
விளம்பர அறிவிப்புடன் நின்று போன மற்றொரு படம் இது. இந்த படத்தினையும் எம். ஜி. ஆர். பிச்சர்ஸ் சார்பில் தயாரிக்க திட்டமிருந்தனர்.
16. கேப்டன் ராஜு :
" இன்று போல் என்றும் வாழ்க " காவியத்தை தயாரித்த சுப்பு புரொடக்ஷன்ஸ் தங்களது அடுத்த தயாரிப்பாக " கேப்டன் ராஜு" படத்தை தயாரிக்கவிருந்தனர். இதற்கான ஆதாரபூர்வமான அறிவிப்பும் வெளியாயிற்று. தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டையில், விளம்பரமும் செய்திருந்தனர் சுப்பு புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினர்கள் திரு. கருப்பையா மற்றும் வி. டி எஸ். லஷ்மண் ஆகியோர்.
17. எங்கள் வாத்தியார் :
" என் அண்ணன் " வெற்றிக்காவியத்தை தொடர்ந்து வீனஸ் பிச்சர்ஸ் சார்பில் திரு. கோவிந்தராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி தயாரிக்கவிருந்த அடுத்த படம் " எங்கள் வாத்தியார் ". இதில், மக்கள் திலகத்துடன் நடிகை ஜெயலலிதா தோன்றும் சில வெளிப்புறப்படப்பிடிப்பு காட்சிகள் (வைகை அணை என்று கருதுகிறேன்) படமாக்கப்பட்டன.
18. கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு :
" உலகம் சுற்றும் வாலிபன் " வெற்றிக் காவியத்தை தொடர்ந்து, எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் சார்பில் அடுத்த தயாரிப்பாக " கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு" என்ற படத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டது. இந்த படத்தில், முதன் முறையாக, மக்கள் திலகத்துடன் நடிக்க நடிகை ஜெயசுதா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் என்பது பலரும் அறியாத செய்தி.
19. கங்கை முதல் கிரெம்ளின் வரை :
இந்திய - ஆஸ்திரேலிய கூட்டு தயாரிப்பில் உருவாக விருந்த படம் இது. இது குறித்து மேற்கொண்டு ஏற்பாடுகளை செய்ய ஆஸ்திரேலிய பிரபல இயக்குனர் ஜான் மெக்காலம் சென்னை வந்து நம் ஒப்பற்ற இதய தெய்வம் புரட்சித்தலைவரையும் சந்தித்து பேசினார். செய்தித்தாள்களில் இது பற்றிய செய்தி பிரசுரமானதில் இருந்து தமிழ் திரை உலகினர் மத்தியில் ஒரு புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டது.
20. நினைத்ததை முடிப்பவன் காவியத்தை தொடர்ந்து, ஓரியண்டல் பிக்சர்ஸ் நிறுவனத்தாரின் அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நம் மக்கள் திலகமே ! விளம்பர அறிவிப்புக்களுடன் நின்று போன படங்களில் இதுவும் ஒன்று.
21. அண்ணா பிறந்த நாடு :
ஜெயப்பிரதா கம்பைன்ஸ் சார்பில், ஒப்பனையாளர் பீதாம்பரம் (இயக்குனர் பி. வாசு அவர்களின் தந்தை) தயாரிப்பில் உருவாகவிருந்த இப்படத்தின் விளம்பரத்துக்காக புரட்சித் தலைவர் அவர்கள், வழக்கறிஞர் வேடத்தில் அருமையான ஸ்டைலான போஸ் அளித்து அசத்தியிருநத்தார். அப்போதைய நாளிதழ்களில் இந்த புகைப்படம் வெளிவந்து, பரபரப்பை ஏற்படுத்தியது.
22. நல்லதை நாடு கேட்கும் :
பிரபல மேக்கப்-மேன் நாராயணசாமி அவர்கள் தயாரிப்பில், இயக்குனர் கர்ணன் இயக்கத்தில், நடிகை பத்மபிரியா ஜோடியாக நடிக்க சில காட்சிகள் டமாக்கப்பட்டன. பின்னர், இந்த படம் திரு. ஜேப்பியார் அவர்களால் தொடரப்பட்டு, வெள்ளித்திரைக்கு வந்தது.
23. ஆளப் பிறந்தவன் :
விளம்பரத்துடன் கை விடப்பட்டது. எம். ஜி. சக்கரபாணி அவர்களுடன் வேறு ஒரு நிறுவனம் இணைந்து தயாரிப்பதாக விருந்தது. மக்கள் தலைவரின் அரசியல் பிரவேசத்தால், இந்த படமும் தயாரிப்பிலிருந்து கைவிடப்பட்டது.
24. இதுதான் பதில் :
எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய இரண்டு பாடல்களுடன் பதிவு செய்யப்பட்ட இப்படம், புரட்சித் தலைவரின் அரசியல் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை சம்பந்தப்படுத்தி, அன்றைய ஆளுங்கட்சினருக்கு பதிலடியாக, சவாலாக திகழவிருந்தது. பொன்மனசெம்மலின் தீவிர அரசியல் ஈடுபாடு காரணமாக தயாரிப்பு பின்னர் கைவிடப்பட்டது.
25. உன்னை விட மாட்டேன் :
சிவாஜி கணேசன் நடித்த இளைய தலைமுறை படத்தை தயாரித்த ஜி. கே. தர்மராஜன் தனது அடுத்த படத்தை ஜி. கே. பிலிம்ஸ் சார்பில் புரட்சி தலைவரை வைத்து தயாரிக்க திட்டமிருந்தார். இப்படத்துக்காக, இசை ஞானி இளைய ராஜா இசையமைப்பில் ஒரு பாடல் பதிவானது. இதில் மக்கள் திலகத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகை சத்யகலா.
26. வேலுத்தேவன் :
மோகன் புரொடக்ஷன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் மோகன் ராம் அவர்கள் தயாரிப்பதாக இருந்த படம் "வேலுத்தேவன்". இப்படத்துக்காக, " தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் " என்று மக்கள் திலகம் பாடும் பாடல் காட்சியும் எடுக்கப்பட்டது. இந்த காட்சி, பின்னர், தனது தயாரிப்பில் உருவான " காலத்தை வென்றவன் " காவியத்தில் இடம் பெறச் செய்தார்.
27. இமயத்தின் உச்சியிலே :
விளம்பர அறிவிப்புடன் நின்று போன படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று.
28. " பைலட் ராஜா "
தயாரிப்பாளர் - இயக்குனர் ஏ. பி. நாகராஜன் அவர்களின் சி. என். வி. மூவிஸ் சார்பில் " நவரத்தினம் " காவியத்தை தொடர்ந்து, " பைலட் ராஜா " என்ற பெயரில் மக்கள் திலகத்தை வைத்து தயாரிக்கவிருந்தார். விளம்பர அறிவிப்புடன் நின்று போனது.
29. அண்ணா நீ என் தெய்வம் : நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்து வெளிவந்த "எங்கா மாமா" படத்தினை அடுத்து, ஜே. ஆர். மூவிஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட அண்ணா நீ என் தெய்வம், மக்கள் திலகத்தின் நடிப்பில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர், நடிகர் திரு.பாக்கியராஜ் அவர்கள் தொடர்ந்து "அவசர போலிஸ் 100" என்ற புதிய தலைப்பிட்டு நடித்து வெள்ளித்திரைக்கு கொண்டு வந்தார்.
குறிப்பு : மேற்கண்ட படங்களை தவிர,
1. அப்போதைய பிரபல விநியோகஸ்தர் சுந்தர்லால் நஹாதா அவர்கள் தனது நஹாதா புரொடக்ஷன்ஸ் சார்பில் மக்கள் திலகத்தை வைத்து படம் ஒன்றை தயாரிக்க அவரை அணுகி, ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில், அன்றைய ஆட்சியாளர் கலைஞர் திரு. கருணாநிதி அவர்களின் மிரட்டலால் (நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ என்பது தெரியவில்லை) இத்திட்டம் கைவிடப்பட்டது.
2. அதே போன்று, இந்தி மொழியில் வெற்றி பெற்ற, நடிகர் ராஜேஷ் கன்னா நடிப்பில் உருவான "பேவார்ச்சி" என்ற திரைப்படத்தினை தழுவி தமிழில் மக்கள் திலகத்தை வைத்து "சமையல் காரன்" என்ற தலைப்பில், ஏ. ஏல். சீனிவாசன் அவர்கள் படம் தயாரிக்கவிருந்தார். ஆட்சியாளரின் மிரட்டலால் கைவிடப்பட்ட படங்களில் இதுவும் அடக்கம்.
3, நம் இதய தெய்வம் 1972ல் தனிக்கட்சி தொடங்கும் முன்பு, ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ. வி. எம். மெய்யப்ப செட்டியார் அவர்கள், அன்பே வா வெற்றிக்காவியத்தை தொடர்ந்து, மக்கள் திலகத்தை கதாநாயகனாக கொண்டு புதிய படம் ஒன்றை தயாரிக்க முற்பட்டார். இப்படத்தில் அவருக்கு இணையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை ஜெயலலிதா. அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களுடன் கொண்ட நல்லுறவு காரணமாகவும், தொடர்ந்து தயாரிப்பில் ஈடு பட்டால் ஒரு வேளை கலைஞர் கருணாநிதி அவர்களின் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்குமோ என்ற அச்சத்தின் காரணமாகவும், செட்டியார் அவர்கள் இந்த பட திட்டத்தை கை விட்டார்.
4. மேற்கூறிய படங்களில் சில பாடல் காட்சிகளுடனும், சில நடிப்புக் காட்சிகளுடனும், சில விளம்பர அறிவிப்புக்களுடனும், தொடர முடியாமல், நின்று போயின............ Thanks...
-
மதுரை மாவட்டம் நத்தம் சென்ட்ரலில் நாளை முதல் (31/08/2019)வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர்.இரு வேடங்களில் கலக்கலாக நடித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி .மதுரை நண்பர் திரு .எஸ்.குமார்........ Thanks...
-
#நினைத்தது #நடந்தது...
#அட்வான்ஸ் #வாழ்த்துக்கள் #லதாம்மா
கட்சியில் ஓரங்கட்டப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர். விசுவாசிகளுக்கு முக்கியத்துவம் தருவதன் மூலம்தான் வலிமையடைய முடியும் எனவும் கருதுகிறார் எடப்படி பழனிச்சாமி.
அந்த வகையில், கட்சிக்கு ஒரு பெண் பிரபலம் தேவை என நினைக்கும் அவர், திரையுலகில் ஜெயலலிதாவுக்கு மாற்றாக புரட்சித்தலைவரால் அடையாளம் காட்டப்பட்ட லதாவை மீண்டும் பரபரப்பு அரசியலுக்கு கொண்டு வந்து அவர் மூலம் எம்.ஜி.ஆர்.விசுவாசிகளை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளார்.
அதற்கு அச்சாரமாக, வெளிநாட்டிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் திரும்பியதும், லதாம்மாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கி எம்.ஜி.ஆர். விசுவாசிகளை ஒருங்கிணைக்கும் அசைன்மெண்ட் அவரிடம் தரப்படலாம் ‘’ என்கிறார்கள் அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள்......
திரு.பொன்னையன் அவர்கள் புரட்சித்தலைவரின் நம்பிக்கைக்குரியவர்...மூத்த தலைவர்...
திரு பொன்னையன் அவர்களின் காணொளியை பதிவு செய்துள்ளேன்...
Please watch...
https://www.nakkheeran.in/special-ar...adi-palanisamy........... Thanks............
-
மறு வெளியீட்டு பழைய காவியங்களின் எண்ணிலடங்கா முறைகள் திரையீடு காண்பதில் ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அளிக்கும் "ரிக்க்ஷாக்காரன்" நாளை 01-09-2019 முதல் மதுரை - ஜெயம் dts தினசரி 3 காட்சிகள் ... வெற்றி வலம் காண்கிறார்........ Thanks...
-
24.3.1973ல் கோவை-கர்னா டிக்கில் & நாஸில் ' ரிலிஸ்' ஆன இப்படம் பாரத விலாஸ் 56 நாட்கள் மட்டுமே ஓடியது. முன்பெல்லாம் படம் ஓடி எடுத்த பிறகு மீண்டும் 2, 3 மாதங்களுக்கு பிறகு சிட்டிக்கு வெளியே போடுவார்கள். அப்படி 'சிவசக்தி'ல் போட்டபோதுதான் அந்த படம் 100 நாளை சென்னை, மதுரை, திருச்சியில் மட்டுமே தொட்டுள்ளது. மேற்கண்ட , விளம்பரம் நிச்சயமாய் 100 கிடையாது. திருத்தி உள்ளது அப்பட்டமாக வே தெரிகிறது. கோவையில் ஓடிய naatkal56மட்டுமே!............. Thanks mr. Kamala kannan, Covai...
-
மக்கள்திலகம், விழுப்புரம் வழியாக காரில் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு பெட்ரோல் பங்க் அருகில் காரை நிறுத்தச்சொன்னார். தன் உதவியாளரை அழைத்து, இடதுபுறமாக இருபது கடை தாண்டி ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருப்பார்...அவரிடம் வடை வாங்கிக்கொண்டு நில். உனக்கு நேராக காரை நிறுத்துகிறோம்...காரில் ஏறும்போது அந்தப் பாட்டியின் கையில் கொடுக்காமல் அந்த வடை வைத்திருக்கும் ட்ரேயில் போட்டுவிட்டு வந்துவிடு என்று கூறினார்... அந்த உதவியாளரும் அப்படியே செய்தார்...காரும் புறப்பட்டுவிட்டது...
தனக்கு திடீரென இருநூறு ரூபாய் கிடைத்ததும் வடை சுடும் பாட்டி திகைத்தார்.
அதைக்கண்ட நம் வள்ளல் புன்வுறுமல் பூத்தார்...
உதவியாளர், எம்ஜிஆரிடம், " ஏன் அந்தப்பாட்டிக்கு 200 ரூபாய் கொடுத்தீர்கள் ? என வியப்புடன் கேட்க ...
அதற்கு எம்ஜிஆர், "அந்த 200 ரூபாய் வடைக்கு இல்லை.. #அந்தப் #பாட்டியோட #தன்னம்பிக்கைக்கு, #தளராத #முயற்சிக்கு, இந்த வயதில் சுயமாக உழைச்சுப் பிழைக்கிற, அந்த #வயதான #தாயை #கௌரவிக்க ஆசைப்பட்டேன்" என்றார்...
இப்படியே ஒவ்வொரு முறை விழுப்புரத்தைத் தாண்டும் பொழுதும் வடை வாங்குவதும், 200 ரூபாய் போடுவதும் ஒரு வழக்கமாகவே இருந்து வந்தது...
இந்த மாயாஜால வித்தையால் குழம்பிய பாட்டி, "யார் மூலம் பணம் வருகிறது? " என்பதை கண்டறிய எண்ணினார்...
ஒருநாள்...இதே போல உதவியாளர் பாட்டியிடம் வடை வாங்கி, பணத்தைப் போட யத்தனித்து, பாட்டி அந்த இருப்பிடத்தில் இல்லாததைப் பார்த்து திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்த்தார்...
அங்கே...எம்ஜிஆரை காரில் பார்த்து அடையாளம் கண்டுகொண்ட அந்த மூதாட்டி கண்ணீர் மல்க பேசினார்...
" #என் #மவராசா ! நீ தான் இத்தனை வருசமா நான் சுட்ட வடையை விரும்பி சாப்பிடறியா ? தங்கபஸ்பம் சாப்பிடுற ராசாவா இந்த ரோட்டோரம் விக்கிற வடையை வாங்கித் தின்னே ! #தினம் #ஆயிரம் #குடும்பங்களுக்கு #படியளக்கிற #மகராசா, நான் சுட்ட வடையை நீ தின்னதுக்கு, நான் கோடிப்புண்ணியம் பண்ணியிருக்கணும். ஆனா நீ லாட்டரி சீட்டுல பணம் விழுற மாதிரி ஒவ்வொரு முறையும் இருநூறு ரூபாய் கொடுத்து என்னைப் பாவியாக்கிட்ட " என்றார்.
அதற்கு எம்ஜிஆர், "#நான் #உங்களுக்கு #கொடுத்ததை, #உங்க #மகன் #கொடுத்ததா #நினைச்சுக்குங்க. சீக்கிரமா நான் அரசாங்கத்திடம் சொல்லி இதே பணத்தை மாசாமாசம் உங்களுக்கு பென்சனா தரச் சொல்றேன் " என்று சொல்லி விடைபெற்றார்...
தனது வாக்குறுதிக்கேற்ப, தான் முதலமைச்சரான பிறகு "முதியோர் பென்சன் திட்டத்தை" அமலாக்கி அதன் மூலம் மாத உதவித்தொகை, நாள்தோறும் மதிய உணவு, ஆண்டிற்கு இருமுறை இலவச உடை, ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி வரலாறு படைத்தார்
அந்தப் பாட்டியும் தனது இறுதிக்காலம் வரை இத்திட்டத்தினால் பயன் பெற்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது...
இப்படி மக்களின் குறைகளைப் பார்த்துப் பார்த்து திட்டங்களை செயல்படுத்தி பொற்கால ஆட்சி தந்தவர் தான் பொன்மனச்செம்மல்!............. Thanks..........
-
✌மொரிஷியஸ் தீவில் அரசு சார்பில் எம்ஜிஆர் சிலை திறக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக மக்கள் தலைவர் ஒருவருக்கு சிலை திறக்கப்பட உள்ளது. இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பேறு. .......... Thanks..........
-
கலைவாணர் N. S. K. அவர்களின் நினைவு நாள் நேற்று என்று, இன்றுதான் படிக்க நேரிட்டது. கலைவாணர் போன்ற வள்ளல் பெருமான்களை தினமும் நினைத்து, வணங்கி அஞ்சலி செலுத்தலாம். தமிழ்த்திரை உலகி ல் மனிதாபிமானத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து வரலாறு படைத்தவர்கள் பெருமதிப்பிற்குரிய கலைவாணர் அவர்களும், இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்களும்தான். இவர்கள் இருவரையும் தமிழ்த்திரை உலகத்தை சார்ந்தவர்களும், சினிமா ரசிகர்களும் என்றும் நினைவில் வைத்துப் போற்ற வேண்டும். யார் மறந்தாலும்,
நம் புரட்சித்தலைவர் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த ஐயா கலைவாணர் அவர்களை நாம் மறக்காமல் என்றும் மனதில் வைத்து வணங்கி வழிபடுவோம்.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை........ Thanks...
-
மலேசியா நாட்டில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் பாடும் ரத்த உறவுகள் மட்டுமின்றி மற்ற நல் உறவுகள் அனைவருக்கும் இன்றைய "மலேசியா மண்ணின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் "
வாழ்த்துக்களுடன்....
அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை (பெங்களூர்)
பொறுப்பாளர்கள்... எம்ஜிஆரின் காலடி நிழல்
கானா க. பழனி
எம்ஜிஆர் பித்தன் அ. அ. கலீல்பாட்ஷா
மு. தமிழ்நேசன்
சம்பங்கி GSR
க. ராஜசேகர்
பிரகாஷ் @ முருகன்
ந. பாஸ்கரன்
சார்லஸ் மூர்த்தி......... Thanks...
-
அது அண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்ற காலம்.
ஓராண்டுக்குள் திடீர் என அண்ணா மறைந்து விட
'அடுத்த முதலமைச்சர் யார்?' என நாலா திசைகளிலிருந்தும் கேள்வி வர..
நாவலர் நெடுஞ்செழியன் பெயரும் இடையில் வர..
உடனே ஓடோடிச் சென்று ராஜாஜியைச் சந்திக்கிறார் கருணாநிதி.
அதற்கு ராஜாஜி, "உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டுமானால் அது ஒரே ஒருவரால்தான் முடியும்.
M.G.இராமச்சந்திரனைப்
போய் பார்” என்று அனுப்பி வைக்கிறார்.
உடனடியாக கருணாநிதி MGRயை சந்தித்து..
“எனது பேச்சும் மூச்சும் தமிழ் தமிழ் என்றுதானே ஒலித்துக் கொண்டிருக்கிறது.
எனது மனைவி மக்களை மறந்து, இரவு-பகல் பாராது இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பட்டி தொட்டியெல்லாம் மேடையேறிப் பேசிவருகிறேன்."
-என்று எதுகை மோனையுடன் MGRரிடம் பேச...
இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த புரட்சித்தலைவர் MGR இப்படி சொன்னார்..
“நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்.”
உடனே அன்றைக்கு அரசியலில் மிகுந்த செல்வாக்கில் இருந்த
S.S.ராஜேந்திரனுக்குப் போன் செய்த பொன்மனச்செம்மல்..
“ராஜேந்திரா! மதியச் சாப்பாட்டுக்கு உன் வீட்டுக்கு வருகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடு ” என்று மட்டும் சொல்லி விட்டுப் போனை வைத்து விடுகிறார்.
சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு SSR இல்லம் வருகிறார் MGR
இலை போட்டு இனிய முகத்துடன் SSR தாய் , இருவருக்கும் பரிமாற, இந்த நேரத்தில் SSR MGR ரிடம்
“அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும் . என்னன்னு சொல்லுங்க” என்கிறார்.
“கருணாநிதி முதலமைச்சர் நாற்காலியில் அமர விரும்புகிறார்.நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள MLAக்களை கருணாநிதிக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்.” என்று MGR விளக்குகிறார்.
திகைத்துப் போன SSR நிறைய விளக்கங்கள் சொல்லி, “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.
MGR வாதம் செய்யவில்லை ;
வற்புறுத்தவில்லை. SSRரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறார்..
“நான் இப்ப சாப்பிடட்டுமா ? வேண்டாமா ?”
SSR வெகு நேர யோசனைக்குப் பின் வேறு வழியின்றி சொல்கிறார்..
“சரி. நீங்க சாப்பிடுங்க.”
இப்படித்தான் முதலமைச்சர் பொறுப்பேற்கிறார் கருணாநிதி.
அதன் பின் நடந்ததை
நாடே அறியும்.
“யானைக்கு பாகனைவிட சிறந்த நண்பன் யாருமில்லை.
ஆனால் மதம் பிடித்தால்,யானைக்கு பாகனை விட மோசமான எதிரி யாரும் இல்லை.
சில நட்புகளும் அப்படி மாறுவதுண்டு!”
*இந்த உண்மை எத்தனை திமுக காருக்கு தெரியும்.ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் கருணாநிதி. அதனுடைய பலனை அவரது குடும்பத்தார் அனுபவித்தே தீர வேண்டும்*........ Thanks...
-
கோவைத் தம்பி தயாரித்த பயணங்கள் முடிவதில்லை" படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர். எதுவும் பேசாமல் எழுந்து சென்றதால், கோவைத்தம்பி பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
"பயணங்கள் முடிவதில்லை'' கோவைத்தம்பியின் முதல் படம். தன்னுடைய "தலைச்சன்'' குழந்தையை, தன் தலைவர் எம்.ஜி.ஆர். பார்த்து வாழ்த்துக் கூறவேண்டும் என்று விரும்பினார்.
எம்.ஜி.ஆரை சந்தித்தார். "அண்ணே! ஒரு சினிமாப் படம் தயாரித்திருக்கிறேன். "பயணங்கள் முடிவதில்லை'' என்பது படத்தின் பெயர். தாங்கள் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
"குடும்பத்தோடு வரலாமா?'' என்று சிரித்துக்கொண்டே எம்.ஜி.ஆர். கேட்டார்.
கோவைத்தம்பி அசந்துவிட்டார். "என்ன அண்ணா இப்படிக் கேட்கிறீர்கள்? இது எனக்கு எவ்வளவு பெருமை! எல்லோரும் வாருங்கள்!'' என்றார்.
1982 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் சென்னையில் அரங்கண்ணலுக்கு சொந்தமான ஆண்டாள் பிரிவிï தியேட்டரில், எம்.ஜி.ஆருக்காக "பயணங்கள் முடிவதில்லை'' படம் திரையிடப்பட்டது. மனைவி ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர். வந்திருந்தார். அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.
படம் ஓடத்தொடங்கியது. படத்தைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர். என்ன சொல்வாரோ என்று கோவைத் தம்பியின் மனம் `திக் திக்' என்று அடித்துக்கொண்டது.
`கிளைமாக்ஸ்' வந்தபோது, அரங்கத்தில் பூரண அமைதி நிலவியது. ஆனால், லேசாக விம்மல் ஒலியும் கேட்டது. அது ஜானகி அம்மாளிடம் இருந்து வந்த விம்மல் ஒலிதான்.
இதன்பின் என்ன நடந்தது என்பதை கோவைத்தம்பி கூறுகிறார்:
"படம் முடிந்து, தியேட்டரில் லைட் போடப்பட்டது. தலைவர் எம்.ஜி.ஆர். உடனடியாக எழவில்லை. சிறிது நேரம் மவுனமாக அமர்ந்திருந்தார்.
பின்னர் எழுந்தார். தன்னைப் பார்த்து கும்பிட்டவர்களுக்கெல்லாம், அமைதியாக பதில் வணக்கம் செலுத்தினார். மவுனமாக காரில் வந்து ஏறினார். கார் புறப்பட்டது.
எல்லோரையும் பார்த்து கும்பிட்டவர், என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படியே திகைத்துப்போய் நின்றேன்.
அருகில் நின்ற சில அமைச்சர்கள், "நாங்கள் அப்போதே சொன்னோமே, கேட்டாயா? தலைவரைக் கூப்பிடாதே, இந்தப்படம் எல்லாம் அவருக்குப் பிடிக்காது என்று சொன்னோமே கேட்டாயா!'' என்று என்னிடம் கூறினார்கள்.
சற்று தூரம் சென்ற தலைவரின் கார் நìன்றது. செக்ïரிட்டி மட்டும் இறங்கி எங்களை நோக்கி ஓடிவந்தார். "கோவைத்தம்பியை மட்டும் வரச்சொல்லுங்கள். சி.எம். கூப்பிடுகிறார்'' என்று அமைச்சர்களைப் பார்த்து சொன்னார்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பதற்றத்துடன் ஓடினேன். எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கும்பிட்டேன்.
"இந்தப் படத்தின் மூலம், இன்னும் ஒரு வாரத்தில் புகழின் உச்சிக்கு சென்று விடுவாய். அந்த அளவுக்கு படம் சிறப்பாக இருக்கிறது. வரப்போகிற புகழைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டியது உன் பொறுப்பு. ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக எடுத்து வை. வெற்றியும், புகழும் நிரந்தரமல்ல. அதை, உன் விவேகத்தால் தக்க வைத்துக் கொள்'' என்று கூறினார்.
என் கண் கலங்கி விட்டது. எம்.ஜி.ஆரின் கார் புறப்பட்டு, பார்வையில் இருந்து மறையும் வரை, அதையே பார்த்துக் கொண்டு நின்றேன்.
தலைவர் கூறிய வார்த்தைகளை வேதவாக்காகக் கொண்டேன். கலைத்துறையில் என் பயணத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்தேன்
நன்றி
சென்றாஸ்.......... Thanks...
-
-
https://i.postimg.cc/DwTZrMQm/474ebf...6716e8c9da.jpg
திருச்சி கெயிட்டி திரையரங்கம்
மக்கள் திலகத்தின் பக்தர்கள்
ராமன் தேடிய சீதை திரைக்காவியத்தை காண வந்தபோது
-
-
என்னைய்யா பெரிய ஸ்டார்னு சொல்றீங்க , ஹீரோன்னு சொல்றீங்க , மாஸ்னு சொல்றீங்க .... அதை எல்லாம் அனாயிசமாக கடந்தவர் இருந்தார் என்பதையே தெரியாம ஆடறீங்க ....
ஜெயந்தி பிக்ச்சர்சின் உரிமையாளர் கனக சபைச் செட்டியார் தயாரிப்பில் உருவானது தான் மாட்டுக்கார வேலன் திரைப் படம் . அந்தப் படத்தின் 100 வது நாள் விழா சேலத்தில் நடந்தது , மக்கள் திலகமும் வந்திருந்தார் . சேலத்தில் விழா நடந்த திரையரங்கத்தின் முதலாளி , ஒரு மூதாட்டியை அழைத்து வந்தார் மேடையருகே மக்கள் திலகத்திடம் ....
" படம் ஓடிய நூறு நாட்களும் விடாமல் இந்தம்மா டிக்கெட் வாங்கி வந்து பார்த்தார்கள் அவர் உங்களை நேர்ல பாக்கணுமாம் " என்று சொல்ல ... மக்கள் திலகம் எழுந்து கை கொடுத்து அவரை மேடையில் ஏற்றி தன் அருகில் உட்கார வைத்தார் ....
வந்திருந்தவர்களை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் , அந்த மூதாட்டியிடம் குசலம் விசாரிக்கத் துவங்கினார் ,
" விதவையாகி 30 வருஷம் ஆச்சு , பிள்ளைங்க இருந்தும் , இல்லை . கீரை வித்து வித்தை களுவரேன் . அந்த கூடையைச் சுமந்தால் ஒரு நாளைக்கு மூணு ரூபாய் கிடைக்கும் அதிலே ஒரு ரூபாய் உங்க படம் பார்க்க செலவழிச்சேன் " என்றார்
எதுக்கும்மா 100 தடவை பார்க்கணும் ? என்று மக்கள் திலகம் வினவ ...
" உன் பால் முகத்தை எத்தனை தடவை பார்த்தாலும் ஆவல் அடங்காதுப்பா , அதோடு உன்னை பெத்த புண்ணியவதி எப்படி அதிர்ஷ்டமானவள்னு நினைச்சுப் பார்கிறேன் அது மட்டுமல்ல எங்க சேரியிலே ஆணும் பெண்ணும் வேதனை நீங்குறதா சொல்லி கண்டப் படி ஆடுவாங்க , எனக்கு அந்தப் பழக்கமெல்லாம் இல்லே என் வேதனை மறக்க நான் படம் பார்க்குறேன்பா " என்றார் .
" அம்மா என்னைப் பார்க்க நீங்க நூறு நாட்கள் என்று நூறு ரூபாய் செலவழிச்சீங்க இல்லியா ? நான் அதுக்கு ஆயிரம் ரூபாய் தரேன் வாங்கிக்குங்க , " என்றார் மக்கள் திலகம்
" யப்பா , உனக்கு அம்மான்னா உசிராமே , தாய் , தன் பிள்ளையைப் பார்க்க கூலி வாங்கனுமா என்ன ? வச்சுக்கோ , ஆண்டவன் கொடுக்குறது போதும் " என்றார் அந்த மூதாட்டி ...
சுருக்கம் மிகுந்த அந்தக் கையை மக்கள் திலகம் முத்தமிட்டப் பொழுது அரங்கமே அதிர்ந்தது ....
அவர் தானைய்யா எவர்க்ரீன் ஹீரோ........... Thanks...
-
#நடிப்புக்கு #மட்டுத்தான் #சம்பளம்
#அன்பே #வா படப்பிடிப்பிற்காக மக்கள்திலகம் கோவை செல்வதற்காக, சென்னை விமானநிலையத்திற்கு வருகிறார். அங்குள்ள விமானநிலைய அதிகாரி ஜெயக்குமார் என்பவர் எம்ஜிஆர் அவர்களின் நண்பர்...
அவர் எம்ஜிஆர் வைத்திருந்த சூட்கேஸை எடைபோட்டு அதற்கு ரூ.7000/- பணம் கட்டச்சொன்னார்...
அதற்கு எம்ஜிஆர் ..."பெட்டிக்குத் தான் மதிப்பா ? அதிலிருக்கும் 40000/- ரூபாய்க்கு மதிப்பில்லையா ? எனக்கேட்டார்...
அதற்கு ஜெயக்குமார்..."நீங்கள் பணத்தை சூட்கேஸில் வைக்கவேண்டாம். கையிலுள்ள "பேக்" ல் வைத்துக்கொள்ளுங்கள்...என்று பணத்தை எடுத்துக்கொடுத்து ... அது சரி, "ஷூட்டிங்கிற்குத் தானே போகிறீங்க.? அதுக்கு இவ்வளவு பணம் எதுக்குக் கொண்டு போகணும் ? " என்று கேட்டார்.
அதற்கு எம்ஜிஆர் ... "நான் ஊட்டி, கொடைக்கானல் போனால் அங்கு உடன் வரக்கூடிய அலுவலர்களுக்கும், நான் தங்குகிற இடத்தில் வேலை செய்யறவங்களுக்கும் மப்ளர், ஸ்வெட்டர் வாங்கித் தருவேன். அப்புறம் கொஞ்சம் பணம் என் சொந்த தேவைகளுக்காகவும் " என்று சொன்னார்...
அதற்கு ஜெயக்குமார்..."#அதெல்லாம் #புரொட்யூஸர் #தானே #பாத்துக்குவாங்க..#நீங்க #ஏன் #கொடுக்கணும் ? "
எனக்கேட்டார்.
"#அவங்க #என் #நடிப்புக்கு #மட்டும்தான் #கொடுப்பாங்க...#என் #சௌகர்யத்துக்கெல்லாமா #கொடுக்கச்சொல்லணும்...? #நான் #கொடுப்பதற்காகத்தான் #சம்பாதிக்கிறேன், #சேர்த்துவைக்க #அல்ல..."
என்றார் நம் வள்ளல்பெருந்தகை
ஆனால் இன்றைக்கு...?.......... Thanks.........
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த படங்கள் தொடர்ந்து 1947 - 1977 வரை 31 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடி வசூலில் புதிய சாதனைகள்படைத்தது . தொடர்ந்து 1977 முதல் 2019 இன்று வரை அவருடைய பழைய படங்கள் ஓடிக்கொண்டு வருகிறது .
1947 - ராஜ குமாரி மக்கள் திலகத்தின் முதல் கதாநாயகன் படம்
1948 - மோகினி
1949 - ரத்னகுமார்
.புரட்சிகரமான படஙகளில் புரட்சி நடிகர் எம்ஜிஆர் நடித்து திரை உலகில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்
1950 - மந்திரகுமாரி
1951- மர்மயோகி
1952 - என்தங்கை
1953 - ஜெனோவா
1954 - மலைக்கள்ளன்
1955 -குலேபகாவலி
1956 - மதுரை வீரன்
எம்ஜிஆரின் ஆளுமைகள் மிக திறம்பட ரசிகர்களால் கவரப்பட்டது .
1957 - சக்கரவர்த்தி திருமகள்
1958 - நாடோடி மன்னன்
1959 - தாய் மகளுக்கு கட்டிய தாலி .
எம்ஜிஆர் ரசிகர்களை தீவிர எம்ஜிஆர் ரசிகர்களாக மாற்றிய வெற்றி படைப்புகள் . வசூலில் பிரமாண்டம் .
1960 -மன்னாதி மன்னன்
1961 - திருடாதே
1962 - தாயை காத்த தனயன்
1963 - பெரிய இடத்து பெண்.
எம்ஜிஆரின் புகழ் உச்சத்தை தொட்ட காலம்
1964 - பணக்கார குடும்பம்
1965 - எங்க வீட்டுப்பிள்ளை
1966 - அன்பே வா
அரசியல் மற்றும் சினிமாவில் வெற்றி பவனி .
1967 - காவல்காரன்
1968 - குடியிருந்த கோயில்
1969 அடிமைப்பெண்
காவல்காரன் தமிழக அரசின் சிறந்த படமாக தேர்வு . குடியிருந்த கோயில் - சிறந்த நடிகருக்கான விருது .அடிமைப்பெண் - பிலிம் பேர் விருது
மாட்டுக்கார வேலன் வெள்ளிவிழா . ரிக் ஷாக்காரன் 21 வாரங்கள் . நல்ல நேரம் - சென்னை நகரில் 4 திரை அரங்கில் 100 நாட்கள்
வசூலில் பிரமாண்ட சாதனைகள்
.
1970 - மாட்டுக்கார வேலன்
1971 - ரிக் ஷாக்காரன்
1972 - நல்ல நேரம்
மக்கள் திலகத்தின் தீவிர அரசியல் மற்றும் ஆட்சி அமைத்த கால கட்டங்களில் வெளிவந்த வெற்றி படைப்புகள் .
1973 - உலகம் சுற்றும் வாலிபன்
1974 - உரிமைக்குரல்
1975 - இதயக்கனி
1976 - நீதிக்கு தலை வணங்கு
1977 - மீனவ நண்பன்
1978 - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்........... Thanks...
-
த*லைவ*ர் வெளிப்புற ஷூட்டிங்கில் இருந்த ச*மய*ம் வ*ழக்கம்போல் கூட்ட*ம் கூடிவிட்ட*து. அதில் வ*யதான அம்மாள் ஒருவ*ர் எம்ஜிஆரைக்காண சிர*மப்ப*ட்டு கொண்டிருந்தார். அந்த அம்மாவை பாதுகாவ*லர் மூலம் அருகே அழைத்து ஏன் அம்மா இப்ப*டி சிர*மப்ப*ட்டு வ*ருகிறீர்க*ள்? எந்த ஊர்? எனக்கேட்டார்.
அந்த தாயோ என மகராச*னைப் பார்க்க புதுக்கோட்டையிலிருந்து வ*ருகிறேன் என்றார். உட*னே த*லைவ*ர் உங்க*ள் ஊரில்தானே ஏற்கெனவே ஒரு மகாராஜா இருக்கிறாரே! என்று கூற அந்த தாயோ, நீங்க*ள்தான் எங்க*ளுக்கு என்றும் ம*காராசா என்று த*லைவ*ரின் க*ன்ன*த்தை திருஷ்டி க*ழித்து கூறினார்.
த*லைவ*ரோ, அம்மா! இப்ப*டியெல்லாம் என்னை சிரமப்பட்டு பார்க்க வ*ர*வேண்டாம்! உங்க*ள் ஊர் திரைக்கு நான் அடிக்க*டி வ*ருகிறேனே! அதில் பார்த்தால் போதும்! உங்க*ளைப்போன்றோர் நினைவு எனக்கு எப்போதும் உண்டு என்று கூறி கையில் ஆயிரம் ரூபாயை கொடுத்து ப*த்திர*மாக ஊர்போய்ச் சேருங்க*ள் என்று அனுப்பிவைத்தார். இந்நிக*ழ்ச்சி தேர்த்திருவிழா ப*ட ஷூட்டிங் கும்ப*கோணம் அருகே ந*ட*ந்தபோது நிக*ழ்ந்தது!.......... Thanks...........
-
தமிழ்நாடு வரலாறு தெரியாதவர்கள் பல செய்திகளை சொல்கிறார்கள். திராவிடம், திராவிட கொள்கை, திராவிடத்தை வளர்த்தவர் யார்? என்பதை எடுத்துக் கூறுவது என் கடமை. 1952-ம் ஆண்டு MGR தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் இணைந்த பிறகுதான், தி.மு.க. வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்தது.
1952-ம் ஆண்டு MGR தி.மு.க.வில் இணையும் வரை தேர்தலில் போட்டியிடவில்லை. 1957-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது. அந்த தேர்தலின் போது MGR குறிப்பிட்ட தலைவர்களுக்காக பிரசாரம் செய்தார். அப்போது 15 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது.
தி.மு.க. என்ற கொடி பாமர மக்களிடம் சென்றடைவதற்கு காரணம், ‘நாடோடி மன்னன்’ திரைப்படம் தான். MGR படத்தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கிய போது, அந்த நிறுவனத்தின் ‘லோகோ’வில் தி.மு.க.வின் இருவர்ண கொடியை இடம்பெற செய்தார். அந்த லோகோவை வெளியிட தணிக்கைத்துறை தடைசெய்தது. அந்த தடையை MGR தகர்த்து எறிந்தார்.
60 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க.வின் இருவர்ண கொடியை அடையாளப்படுத்தி பட்டித்தொட்டி எங்கும் MGR கொடி என்று அறிமுகப்படுத்தப்பட்டதுஅந்த இருவர்ணத்திலான 1¼ அடி துண்டை அப்போது கழுத்தில் போடுவதில் பெருமை அடைந்தோம். MGR ரின் திரைப்பட பாடலில் இருவர்ண கொடி, உதயசூரியன் பற்றி எழுதப்பட்டது.
1962-ம் ஆண்டு தேர்தலில் 50 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. 1967-ம் ஆண்டில் ஆட்சி கட்டிலில் ஏறியது. 1967-ல் ஆட்சி பிடித்ததும் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை அணிவிக்க எல்லோரும் சென்றனர்.அப்போது பேரறிஞர் அண்ணா அந்த மாலையை வாங்க மறுத்துவிட்டார். இந்த வெற்றிக்கு காரணமானவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு சென்று மாலை அணிவியுங்கள் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்.
பேரறிஞர் அண்ணாவே 1967-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு காரணமானவர் MGR தான் என்று சொன்னதற்கு அடிப்படை காரணம், அவர் துப்பாக்கியால் சுடப்பட்ட கட்டுடல் போடப்பட்ட படம்தான் நாட்டு மக்கள் மத்தியில் அனுதாபத்தை பெற்று வெற்றிக்கு வித்திட்டது. பெரும்பான்மையை பெறுவதற்கு மூலக்காரணமாக MGR இருந்தார்.
பேரறிஞர் அண்ணா தான் MGR ரை சரியான முறையில் அடையாளம் கண்டவர். MGR ரை இதயக்கனி என்று அழைத்தார். ஒருமுறை தேர்தலுக்காக MGR நிதி கொடுக்க வந்த போது, உன்னுடைய நிதி வேண்டாம், உன் முகத்தை மட்டும் காட்டு, 30 லட்சம் வாக்குகள் கிடைக்கும் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்.
பேரறிஞர் அண்ணா பொதுக்கூட்டங்களுக்கு சென்றுவரும் நேரங்களில், அவருடைய காரில் இருக்கும் கொடியை அங்குள்ள பாமர மக்கள் பார்த்து, அண்ணாவிடம், MGR கட்சியா? என்று கேட்கும் அளவுக்கு MGR மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். அதை பேரறிஞர் அண்ணா பெருமையாகவே கருதினார்.
படித்தவர்கள் மத்தியில் என் எழுத்தும், பேச்சும், கருத்தும் சென்றடைகிறது என்றால், படிக்காத பாமர மக்களிடம் என்னுடைய கருத்தை, சிந்தனையை கொண்டு சென்றவர் என்னுடைய தம்பி MGR என்று அண்ணா சொல்வார். தி.மு.க. வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குகிறவர் MGR என்றும் அண்ணா சொல்வார். அவரால் திராவிட இயக்கம் வளர்ந்தது என்று பேரறிஞர் அண்ணா மிகத்தெளிவாக பதிவு செய்தார்.
1971-ல் கருணாநிதி தலைமையில் ஆட்சி நடந்தபோது, அப்போது தேர்தல் வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக பட்டித்தொட்டி எங்கும் பிரசாரம் செய்தார். இந்த ஆட்சிக்கு உத்தரவாதம் தருகிறேன், தவறு நடந்திருந்தால் அதை திருத்தியமைக்க போராடுவேன் என்று சொன்னார். என்னை நம்பி வாக்களியுங்கள் என்றும் கேட்டார். அதை தமிழக மக்கள் ஏற்றார்கள் என்பதற்கு வெளிப்பாடு, 183 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது. அதன்பின்னர், தி.மு.க.வை விட்டு MGR வெளியேறி, 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார்.
அதன்பிறகு, 1972-ம் ஆண்டு முதல் 1987 வரை MGR ரை யாராலும் வெற்றிபெற முடியவில்லை. எத்தனை சூழ்ச்சிகள், சதிகள் செய்தாலும் MGR உயிரோடு இருக்கும் வரை தமிழக மக்கள் தலைவர் MGR தான் என்று நாட்டு மக்கள் நிரூபித்தனர். திராவிட இயக்கத்தை வளர்த்தவர் MGR தான்.
பேரறிஞர் அண்ணாவை நாட்டின் முதலமைச்சராக உட்காருவதற்கு காரணமாக இருந்தார். அதன்பிறகு கருணாநிதி ஜெயலலிதா ஆட்சியில் அமருவதற்கு காரணம் MGR தான். இப்போது தமிழ்நாடு முதலமைச்சராக
எடப்பாடி.K.பழனிச்சாமி இருப்பதற்கும் MGR தான் காரணம். MGR இல்லை என்றால் திராவிடம் என்ற பேச்சு தமிழகத்தில் இருந்திருக்காது.......... Thanks...
-
எம்.ஜி.ஆர் ஒரு முற்றுப் பெறாத புத்தகம் தான். ஒவ்வொரு பக்கத்தையும் புரட்ட புரட்ட, பக்கங்கள் வளர்ந்து கொண்டே போகும். அவரைப் பற்றி எத்தனையோ வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் வந்தபோதும், அந்த புத்தகங்களில் இல்லாத, ஏதாவது ஒரு சுவராஸ்யமான விசயத்தை யாராவது தினசரி சொல்லிக்கொண்டும், அது பற்றிய செய்திகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் அன்றாட வாடிக்கைதான். அது மாதிரி தான் இன்றைக்கு வாட்ஸ்அப்பில் வந்த ஒரு செய்தி. அதை நம்முடைய ஃபிலிமி பீட் வாசகர்களுக்கு தெரிவிப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.
mgr பற்றிய செய்திகளும் அள்ள அள்ள குறையா 'அக்ஷயபாத்திரமே'!........ Thanks...
-
வருகின்ற 6-09-2019 வெள்ளிக்கிழமை முதல் திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் " ரிக்க்ஷாக்காரன்" டிஜிட்டல் திண்டுக்கல்- NVGB dts தினசரி 4 காட்சிகள் வெற்றி உலா... Thanks...
-
எம். ஜி.ஆர் ., வாழ்த்திய 2 சிறுமிகள்..! ஒருவர் ஆளுநர்...! இன்னொருவர் மக்களவை எம்.பி..! தெரியுமா இந்த சங்கதி..!
By Ezhil MozhiFirst Published 5, Sep 2019, 12:41 PM IST
HIGHLIGHTS
கனிமொழி மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் இவர்கள் இரண்டு பேருமே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம். ஜி.ஆர் வாழ்த்திய 2 சிறுமிகள்..! ஒருவர் ஆளுநர்...! இன்னொருவர் மக்களவை எம்.பி..! தெரியுமா இந்த சங்கதி..!
திமுக எம்பி கனிமொழி அவர்கள் சிறுவயதாக இருக்கும்போது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன் கையில் தூக்கி வைத்தவாறு உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜனும் சிறுவயதாக இருக்கும்போது தன் தந்தை குமரி அனந்தனுடன் கலைவாணர் அரங்கில் நடைபெறும் பல்வேறு அரசியல் சார்ந்த கூட்டத்திற்கு சென்று தலைவர்கள் பேசும் பேச்சை தொடர்ந்து கவனித்து வருவாராம்.
அப்போது எம்ஜிஆர் தமிழிசையை அழைத்து உன் தந்தையை போல் நீயும் அரசியலில் பெரும் தலைவராக வரவேண்டும் என வாழ்த்து கூறி ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார்.அந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.இந்த நிலையில் கனிமொழி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் என்ன ஒரு ஒற்றுமை என்றால் கனிமொழி மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் இவர்கள் இரண்டு பேருமே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர் ஆனார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தற்போது மிக உயரிய பதவியான தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகமொத்தத்தில் எம்ஜிஆர் வாழ்த்திய இவ்விரு அரசியல் புள்ளிகளின் மகளும் இன்று அரசியலில் பெரும் தலைவராக உருவெடுத்து உள்ளனர் என்பதற்கு இந்த இரு படங்களுமே சான்றாக அமைந்துள்ளது என்றால் யாராலும் மறுக்கவும் முடியாது.. மறைக்கவும் முடியாது...! எம். ஜி .ஆர் ., வாழ்த்து அப்படியோ...!
Last Updated 5, Sep 2019, 12:41 PM IST
TAGS
Lifestyle
tamilisai
kanimozhi
mgr wishes ......... Thanks..........
-
கோவை மாநகரில் தொடர்ந்து 3 மாதங்களாக பட்டையை கிளப்பி வரும் கலையுலக என்றும் ஏக சக்கரவர்த்தியாம் மக்கள் திலகம் " எங்க வீட்டுப்பிள்ளை" டிஜிட்டல் நாஸ் dts அரங்கில் தினசரி 4 காட்சிகள் மீண்டும், மீண்டும் அதிரடியாக ஆரம்பம்... இதுவல்லவா அஃக் மார்க் சாதனை உச்சம்.......... Thanks...
-
ஆசிரியர் தினம் ஆண்டுக்கு
ஒருமுறை தான் , எங்களுக்கோ
ஒவ்வொரு நாளும் ' வாத்தியார் தினம் '
தான் !.........எப்பொழுதும் வெல்க, வாழ்க ...மக்கள் திலகம் புகழும்... மாண்பும்... Thanks.......
-
"இரவும் பகலும் உண்டு வாழ்வில் இளமையும் முதுமையும் உண்டு உறவும் பகையும் உண்டு எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு"... "சிரிக்கத் தெரிந்தால் போதும் துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்"!. எக்காலத்திற்கும் ஏற்றதான இந்த பாடல், அற்புதமான சமூக திரைப் படமான 'மாடப்புறா' மக்கள் திலகம் காவியத்தில் இடம் பெற்றதாகும்............. Thanks...
-
"காண்பதெல்லாம் உன் உருவம் கேட்பதெல்லாம் உனது குரல் கண்களை உறக்கம் தழுவாது அன்புள்ளம் தவித்திடும் போது"... 'மாடப்புறா' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள எம்ஜிஆரும், வசந்தாவும் பாடும் இந்த சுகமான காதல் பாடல் என் உயிரோடு கலந்த பாடல். என்னால் மறக்க முடியாதது. வாத்தியார் எம்ஜிஆரை தவிர, வேறு யாருக்கும் இந்த பாடலை எழுத முடியாது........... Thanks...
-
காதலிலே கனி அமுதாய் கனிந்து, கனி ரசமாய் பொங்கி, ஜீவநதியாய் வழிந்தோடி, மதுர கானமாய் பறந்தோடி, தென்றல் எனும் காற்றில் உலவி, அன்பு நதியினில் நனைந்து, உறவாடி, களிப்படைந்து, வசந்தகாலத்தில் மிதந்து, இளவேனில் உதிர்கின்ற, மலர்களாய் மலர்ந்து, மையிட்ட கண்கள் பேசுகின்ற, போதையான, மயக்கமான, மதுரகானம். என்றென்றும் இளமை துள்ளுகின்ற, இரு உள்ளங்களின் தேன்சிந்தும் இன்பங்கள். 1953ல் எம் ஜி ஆர்- பி எஸ் சரோஜா நடிப்பில் வெளியான கிறிஸ்தவ சரித்திர காவியம் ஜெனோவா. "மானின் பார்வை பேசுதே இதழில் ஒளியை வீசுதே வண்ணப் பூவின் ரூபமே வானசந்திர தீபமே நாதமே கீதமே காதலில் காணும் போதை தானே வான லோகமே"........... Thanks...
-
அதிமுகவின் வீர வரலாறு பகுதி 2.
படுகொலை செய்யப்பட்ட பூலாவரி சுகுமாரன், பழனியப்பன் வழக்கு அதிகாரத்தை கொண்டு ஆடியவர்களால் மறைக்க பட்டது.இவர்கள் இறுதி அஞ்சலி ஊர்வலத்தில் புரட்சிதலைவர் கலந்து கொண்டார். தமிழகமெங்கும் இருந்து குவிந்தனர் தொண்டர்கள்.
1977 இல் பொன்மனம் முதல்வர் ஆக வழக்கு தீவிரம் அடைந்து வீரபாண்டியார் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வழக்கு விசாரணையில் போதிய சாட்சிகள் இல்லை, காவல் துறையின் முதல் தகவல் அறிக்கயில் தெளிவு இல்லை என்று தீர்ப்புகூறி அனைவரும் விடுதலை வாங்கினர்.
பொறுக்கமுடியவில்லை பொன்மனத்துக்கு.சட்டத்தில் இருந்து தப்பிய அவரை மக்கள் மூலம் தண்டிக்க முடிவெடுத்த நம் மன்னன் 1980 பொது தேர்தலில் வீரபாண்டியாரை எதிர்த்து கொலையுண்ட பழனியப்பன் மகள் பூலாவரி சுகுமாரன் தங்கை விஜய லட்சுமியை களம் இறக்கினார் கழகம் சார்பாக.
சேலம் மாவட்டம் எங்கள் கோட்டை அங்கு எங்கள் மாவட்ட செயலாளர் வெற்றி உறுதி என்று கொக்கரித்தது கூட்டம்.
அதிமுக வேட்பாளர் விஜயலட்சுமிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. வீரபாண்டிக்கு நீங்கள் கொடுக்கும் தண்டனைதான் என் வெற்றி உண்மையின் வெற்றி என்று முழக்கம் இட்டார் வாத்தியார்.
இரண்டு முறை தொகுதிக்குள் சுற்றி வந்தார். முடிவுகள் வந்தன.. பந்ததாடபட்டான் வீரபாண்டி....வென்றார் விஜய லட்சுமி பழனிசாமி
அவரை அமைச்சர் ஆக்கி அழகு பார்த்தார் எம்ஜியார்... நீதி மன்றம் வழங்க மறுத்த நீதியை மக்கள் மன்றத்தில் வாங்கி காட்டினார் வாத்தியார். பின்னர் சேலம் நகருக்கே சென்று அவர் திருமணத்தை மாப்பிள்ளை பழனிசாமி. நடத்தி வைத்தார் புரட்சிதலைவர். வீரபாண்டியன் கோழை பாண்டியன் ஆனார்.
நன்றி வாழ்க எம்ஜியார் புகழ்..வரலாறு தொடரும்.
பின் குறிப்பு.
பின்னாளில் அந்த விஜய லஷ்மி பழனிசாமி நிலை பின்னால் ஒரு நாள்............ Thanks...
-
*தலைவர் ஒரு மகான்*
MGR is really a blessed soul!!!
காஞ்சி சங்கரமடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது.
காரிலிருந்து இறங்குபவர் அன்றைய *முதலமைச்சர் எம்,ஜி,ஆர்!*
எந்தவித முன் அறிவிப்பும் இல்லை? அவர் வருகிறார் என்ற செய்தியும் இல்லை??
மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கும் இங்குமாக அலை பாய்கிறார்கள். காரணம்? அன்றைய மடாதிபதியான மஹா பெரியவர் அந்த சமயம் மடத்தில் இல்லை! முதல்வர் என்றால் முறைப்படி பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவழைக்கவேண்டுமே?
மடத்தில் உள்ளவர்களின் மருட்சியைப் பார்த்து பொன் மனம் கேட்கிறார்,
"ஏன் இந்தப் பரபரப்பு?"
அவரிடம் தயங்கிய படியே விபரம் சொல்லப்படுகிறது.
மஹா பெரியவர் மூன்று கி மீ தூரத்தில் ஒரு குடிலில் தியானத்தில் இருக்கிறார்.
*"இவ்வளவு தானே? அங்கே போய் அவரை தரிசித்துக் கொள்கிறேன்",* பதட்டமில்லாத பண்பட்ட வார்த்தைகளை உதிர்த்து விட்டு மீண்டும் காரில் ஏறிக் கொள்கிறார் மக்கள் திலகம்.
*மஹா பெரியவர் தங்கியிருந்த குடில் ஒரு குறுகிய சந்தில் இருந்ததால் காரிலிருந்து இறங்கியவர் எந்தவித பந்தாவும் இல்லாமல் செல்கிறார் குடிலை நோக்கி.*
முதல்வரை வரவேற்ற அந்த முதிர்ந்த கனி,
*"உன்னை உட்கார சொல்ல ஒரு இருக்கை கூட இங்கில்லை."*
*"அதனால் என்ன? இங்கே இந்த மடத்துக்கு நீங்கள் தானே முதல்வர்!"*
என்றபடி அவர்க்கு எதிரே மண் தரையில் உட்காருகிறார் இதயக்கனி.
இங்கே ஒரு விஷயம் சிலர் அறிந்திருக்க நியாயம் இல்லை, *தன் மனதுக்கு மிகவும் பிரியப்பட்ட ஒரு சிலரைத்தான் மஹா பெரியவர் ஒருமையில் அழைப்பார்கள்! அந்த ஒரு சிலரில் எம்.ஜிஆரும் ஒருவர்!*
ஆசி வழங்கிய பின் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அந்த அருள் ஞானி!
"நம்ம மனுஷா முருகனோட அறுபடை வீடுகள்---பழனி-- திருச்செந்தூர் திருத்தணி என்று ஒவ்வொன்றுக்கும் தனித் தனியா போகவேண்டியிருக்கு! அதுக்கு தேக சிரமம்--கால விரயம், பணச் செலவுன்னு ஆகிறது.
*ஆறுபடைகளையும் ஒரே இடத்துல பிரதிஷ்டை பண்ணும்படியா உன் ராஜ்யத்துல ஒரு இடம் கொடுத்தாய் என்றால் ரொம்ப நன்றாக இருக்கும்"*
இவ்வளவு தானே,
இந்த விஷயத்துக்கா என்னைக் கூப்பிட்டிங்க? ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா கூடப் போதுமே? நம் நெஞ்சமெனும் மடத்தில் இன்றும் தங்கற இந்த மடாதிபதி அந்த
சங்கர மடாதிபதியிடம் கனிவாகக் கேட்க,
*"உன்னை நேரில் பார்க்கணும்ன்னு ஆசை" என்று பதில் தருகிறார் எதிலும் ஆசை வைக்காத அந்த முனிவர்.*
"நீ எங்கே எப்போ எத்தனை மணிக்குப் போனாலும் ஜனங்க உன்னைப் பார்க்க ஆசையோட சூழ்ந்துக்கறா.
அதனால தான் இந்த இடத்துக்கு உன்ன வரச் செஞ்சேன்! அங்கப் பாரு அதற்குள் உன்னைப் பார்க்க ஜனம் திரண்டுடுத்து. நீ கிளம்பு ", என்று அன்புடன் விடை தருகிறார் அந்த ஆன்மிக அருங்கனி.
*இப்படியாக உருவானது தான் சென்னை பெஸன்ட் நகரில் உருவாகியுள்ள முருகன் அறுபடை வீடு கோயில்!*
*எம்,ஜி,ஆர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, யாராலும் விலைக்கு வாங்கப்பட முடியாத யாருக்கும் தனியாக பிரார்த்தனை செய்யும் பழக்கம் இல்லாத அந்தப் பெரியவர் எம்,ஜி,ஆர் ஒருவருக்காக மட்டுமே அவர் நலம் பெற வேண்டி பிரத்யேக பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது!*
*CHANDRAMOULI R.......... Thanks .....
-
இதயதெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழ் பாடும் விழா... காலத்தை வென்று காவியங்கள் மூலம் மனித வளர்ச்சியை வெள்ளித்திரை மூலம் அறிவு சார்ந்த நல்ல பழக்க வழக்கங்களை நமக்கும், நாட்டு மக்களுக்கும் உண்மையான, நேர்மையான இலட்சியவாதியாக இருந்து பாடம் சொன்ன மனிதபுனிதர் எம்.ஜி.ஆர். அவர்களின் மக்கள் ஆட்சி தத்துவத்தில் 1958 ம் ஆண்டு நாடோடி மன்னனை தந்து நாட்டு மக்களுக்கு நல்லதொரு ஆட்சியை மார்தாண்டன் வடிவில் வீராங்கன் நிறைவேற்றிய. சரித்திரப்படம் எப்படி சகாவரம் பெற்ற காவியமாக வரலாற்று காவியமாக திகழ்கிறதோ..... அதே போல் 11 ஆண்டு களுக்கு பின் 1969 ல் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவன் தான் நாட்டின் தலைவன் என்பதை நம்நாடு காவியம் மூலம் " துரை" கதாபாத்திரத்தில் சேர்மனாக வந்து சேரி வாழ் மக்களுக்கு ஏழை தொண்டனாக இருந்து மக்கள் பணியாற்றிய தொண்டன் துரை தான்..... 1977 ல் மக்களால் தேர்தலில் வெற்றி பெற்று உண்மையான மக்களின் முதல்வர் ஆனார்.. இந்த இரண்டு காவியங்களுமே என்றும் வரலாற்று பெரும் காவியங்களாகும்.... நமது தலைவரின் புகழ்பாடும் அன்பு உள்ளங்கள் தரும் ஒத்துழைப்பு மூலம் ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் ஒருங்கிணைந்து .... சென்ற ஆண்டு நாடோடி மன்னன் காவியத்தின் வைரவிழாவை ஒற்றுமையுடன் கொண்டாடி தலைவரின் புகழுக்கு புகழ் சேர்த்தது போல் 2019 செப்டம்பர் 08.09.2019 வரும் ஞாயிறு அன்று அதே சர். பிட்டி.தியாகராயர் அரங்கில் பல்வேறு நிகழ்ச்சியுடன் மக்கள் திலகத்தின் நம்நாடு திரைக்காவியத்தின் பொன்விழாவையும் ஒற்றுமையுடன்...... மனதில் எவ்வித கசப்பின்றி நாம் எந்நாளும் போற்றி புகழ்பாடும் பொன்மனச்செம்மலின் புகழ்பாடும் இனிய விழாவில்..... தாங்களும் பங்கெடுத்து கொண்டு மகிழ்ச்சியை, அன்பை, நட்பை தந்து நாம் என்றும் பிரிவிணைக்கு இம்மியும் இடம் தராது ஒன்றுபடுவோம்! வாருங்கள்....... மனதார அன்புடன் வரவேற்கும்! லட்சகணக்காண தலைவர் அபிமானிகளின் பக்தர்களில் நானும் ஒருவனாக இருந்து தலைவருக்கு புகழ் சேவை செய்யும் பக்தன் உரிமைக்குரல் ராஜு........... Thanks...
-
எம்.ஜி.ஆர் உடன் இருக்கும் இந்த சிறுமி இன்று MP..! யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்..!
By Ezhil MozhiFirst Published 5, Sep 2019, 3:28 PM IST
HIGHLIGHTS
எத்தனையோ நிகழ்ச்சிக்கு செல்கிறோம்... எத்தனையோ விஷயங்களை நேரில் பார்க்கிறோம்.. நாம் எதை நினைக்கிறோமோ எதை விரும்புகிறோமோ.. அதனுடன் போட்டோ எடுத்து வைத்துக்கொள்கிறோம். இது இன்றைய நிலைமை...
எம்.ஜி.ஆர் உடன் இருக்கும் இந்த சிறுமி இன்று MP..! யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்..!
ஒரு சிறிய கையடக்க போனிலேயே இந்த உலகம் அடங்கி விட்டது என கூறலாம். அந்த அளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்து உள்ளது. எதைவேண்டுமானாலும் அடுத்த நொடியே நம்மால் மொபைல் மூலமாக தெரிந்து கொள்ள முடியும்.
அவ்வளவு ஏன்? நம்மை அழகழகாக நாம் வைத்திருக்கும் மொபைல் போனிலேயே படம் பிடிக்க முடியும். எத்தனையோ நிகழ்ச்சிக்கு செல்கிறோம்... எத்தனையோ விஷயங்களை நேரில் பார்க்கிறோம்.. நாம் எதை நினைக்கிறோமோ எதை விரும்புகிறோமோ.. அதனுடன் போட்டோ எடுத்து வைத்துக்கொள்கிறோம். இது இன்றைய நிலைமை.
ஆனால் அன்றைய காலகட்டத்தில் இப்படியா? என்றால் கிடையாது.. அன்றைய காலகட்டத்தில் ஒரு புகைப்படம் எடுப்பது என்பது ஒரு அரிதான செயலாக பார்க்கப்பட்டது. மிகவும் சந்தோஷமான விஷயமாக கருதப்பட்டது. மிகவும் பொக்கிஷமாக காக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு சில போட்டோ இன்று அனைவரின் கவனத்தை ஈர்க்க தான் செய்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது.
இந்த புகைப்படம் உங்களுக்காக....
அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி அவர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர் உடன் எடுத்துக் கொண்ட ஓர் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கனிமொழி சிறு பெண்ணாக இருக்கும்போது எம்ஜிஆர் அவர்கள் அவரை ஆசையாக தூக்கி வைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறார்........... Thanks...
-
இந்த வாரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.காவிய படங்கள்
_---------------------------------
06/09/2019 முதல் கோவை
நாஸில் எங்க வீட்டு பிள்ளை-,தினசரி 4 காட்சிகள்
திண்டுக்கல்-என் .வி.ஜி.பி.யில்
ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள்
சென்னை பாலாஜியில்
விக்கிரமாதித்தன்
தினசரி 2 காட்சிகள்
(காலை11.30/,மாலை 6.30).......... Thanks mr. Loganathan Sir...
-
திருப்பூர் அனுப்பர்பாளையம் மணீஸ் dts அரங்கில் 6/09/2019 முதல் நடிக மன்னன் எம்.ஜி.ஆர்.இருவேடங்களில் நடித்த "நாடோடி மன்னன் " தினசரி 3 ,காட்சிகள் நடைபெறுகிறது
பண்ணைபுரம் தியாகராஜாவில் (தேனி மாவட்டம்)புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
ஆயிரத்தில் ஒருவன்
தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது.......... Thanks...