கர்ணன் திரைப்படத்தின் 60வதுஆண்டை,
திரைப்பரபலங்கள் மற்றும் சிவாஜி ரசிகர்கள்
கொண்டாடும் பிரமாண்ட நிகழ்ச்சி.
Attachment 6068
Printable View
கர்ணன் திரைப்படத்தின் 60வதுஆண்டை,
திரைப்பரபலங்கள் மற்றும் சிவாஜி ரசிகர்கள்
கொண்டாடும் பிரமாண்ட நிகழ்ச்சி.
Attachment 6068
HOUSEFULL HOUSEFULL HOUSEFULL. நாலு மாத வறண்ட உதயம் அரங்கை அதிர செய்த சிவாஜியின் வசந்த மாளிகை
HOUSEFULL உதயம் அரங்கை அதிர வைத்த வசந்த மாளிகை. அசோக் நகர் ஏரியா குலுங்கிய விடியோ காட்சிகள்
நேற்று மாலை அசோக் நகர் எரியாவே குலுங்கியது வசந்த மாளிகை வரவேற்பில்.
இதுவரை உதயம் அரங்கில் இந்த மாதத்தில் இப்படி ஒரு மக்கள் வெள்ளம் வந்தேதே இல்லை என மனேஜேர் பெருமை பொங்க கூறினார்.
https://youtu.be/yACQV1gJZIg?si=15BC9RxSOzUJwzqz
Thanks Nadigarthilagam sivajitv
ஆரவாரத்திற்கொரு ஆனந்த்! வசந்தமாளிகை - திரையரங்க கொண்டாட்டத்தின் நிழற்படங்கள்.
சென்னை உதயம் திரையரங்கில் திரையிடப்பட்ட 'வசந்தமாளிகை' திரைப்படக் கொண்டாட்டத்தின் நிழற்படத் தொகுப்பு.
https://youtu.be/HwCnKY5xXCQ?si=m23uZFC_8bQC682x
Attachment 6069
Attachment 6070
Attachment 6071
Attachment 6072
Attachment 6073
Thanks. Nilaas Thiraikkoodam
ஆரவாரத்திற்கொரு ஆனந்த்! வசந்தமாளிகை - திரையரங்க கொண்டாட்டத்தின் நிழற்படங்கள்.
Attachment 6077
Attachment 6078
பொன் விழாவை(50) முன்னிட்டு
சென்னை ஆல்பர்ட் திரையரங்கில்
22-03-2024 வெள்ளி முதல்
சிவகாமியின் செல்வன்.
Attachment 6079
இளைஞர்களுக்கே சவால் | கூட்டம் கூட்டமாய் வந்த சிவாஜி ரசிகர்கள் | Sivaji Ganesan
https://youtu.be/yg--CeY9-MA?si=PotjsoOpoCSP7gTk
Thanks Voice of Madras
கெத்து காட்டிய சிவாஜி ரசிகர்கள் | வசந்தமாளிகை 25TH DAY - Rerelease |
https://youtu.be/lMo2ezqCn84?si=sJKomi4O5k12nGHe
Thanks Annamalai yaan Youtube
வசந்தமாளிகையும், ஆல்பர்ட் திரையரங்கமும்
https://youtu.be/sOfNiPotVOg?si=HKGBQKXU-F8VNER-
Thanks nilaas thiraikkoodam
மதுரை ராம் திரையரங்கில் 29/03/2024 முதல்
வியட்நாம் வீடு.
Attachment 6081
4 years ago #sivajiganesan #cinemareview #வசந்தமாளிகை
புதிய தொழில்நுட்பத்தில் வசந்தமாளிகை 2.0 | Vasantha Maligai New Digital Release | Sivaji Ganesan
https://youtu.be/XYckmmkR-zw?si=H-jYyIrgxvdCYTe1
Thanks THE ROOSTER NEWS
4 years ago
வசந்த மாளிகை வசூல் மழை ரசிகர்கள் கொண்டாட்டம் உற்சாகம் #vasanthamaaligai #sivaji #actorsivaji
https://youtu.be/Ji2j8u7wa2I?si=KxCkLnokC9sIf9iZ
Thanks G5 media
நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் புரிந்த சாதனைகளை ஊடகங்கள் மற்றும் பத்திரிகை செய்திகள் மூலம் அறிந்து கொள்வதை காட்டிலும் தீவிர ரசிகர்கள் நாங்கள் பெற்ற அனுபவத்தை பதிவிடுவோமாயின் அந்தப் பதிவுகள் தெளிவு படுத்திவிடும், அந்த வரிசையில் 28 ஆண்டுகளுக்கு முன் நான் நடிகர்திலகத்தின் திரைப்படம் காண சென்ற நினைவு பகிர்ந்து கொள்கிறேன்,
அப்போது பத்தாம் வகுப்பு படிக்கிற சின்சியரான காலம் வருடம் 1987, கிராமத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள பேரூராட்சி செங்கம் நகரத்தில் விடுதியில் தங்கிப் படித்த நாட்கள், டூரிங் கொட்டகையில் படம் பார்த்து வந்த நமக்கு தியேட்டர்களில் படம் பார்க்க சான்ஸ் தொடங்கியது,
பக்கத்தில் திருவண்ணாமலை நகரம் 35 கிமீ தொலைவு அங்கு மட்டுமே புதிய படம் ரிலீஸ், புதிய படம் ரிலீஸ் என்றால் கூட அது நம்ம படமா இருந்தாகனும் என்ற ஒரு சுய நலம் இருக்கவே செய்தது, அப்படிப்பட்ட தருணத்தில் விடுதியின் எதிரே இருக்கும் உயரமான நீண்ட சுவரில் புதிய ரிலீஸாகும் படத்தின் வால் போஸ்டர் ஒட்டுவது வழக்கம் அந்த குறிப்பிட்ட சுவரில் திருவண்ணாமலையிலிருக்கும் ஸ்ரீபாலசுப்ரமனியர் திரையரங்கில் திரையிடப்படும் படங்களுக்கு மட்டுமே, அந்தத் திரையரங்கில் தான் திரிசூலம் 200 நாட்களையும் முதல் மரியாதை 150 நாட்களையும் கடந்து சாதனை புரிந்தன.
அந்தச் சுவற்றில் முதல் மரியாதை வால் போஸ்டர் நீண்ட நாள் காட்சி தந்தது,
தினமும் காலை எழுந்தவுடனே சுவற்றில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என காண்பது வழக்கம்,
அன்று நான் காணும் போது வசந்த மாளிகை போஸ்டர் பளிச்சென்றது, ஏற்கனவே டூரிங் கொட்டகையில் இரு முறை பார்த்தது தான் ஆனாலும் வசந்த மாளிகையாச்சே அன்றைய நாள் ஞாயிறு விடுதியில் ஊருக்கு சென்று வர அனுமதி உண்டு அது போதாதா நமக்கு, நானும் எனது நண்பர் மகாலிங்கமும்( சங்கிலியின் DSP சரவணன் பக்தர்) காலை 11 மணிக்காட்சியில் பார்த்து விட்டு திரும்பலாம் என்ற திட்டத்துடன் புறப்பட்டு தி.மலைக்கு பேருந்தில் சென்று தியேட்டருக்கு அருகில் இறங்கினோம், இங்கு தான் நமக்கு டர்னிங் பாருங்கள், பார்க்க வந்தது வசந்த மாளிகையை ஆனால் எங்களை வரவேற்பு கொடுத்து பரவசப் படுத்தியது நடிகர் திலகத்தின் ஐந்து திரைப்படங்கள் முறையே ஸ்ரீ பாலசுப்ரமணியரில் வசந்த மாளிகை, சக்தி தியேட்டரில் அன்னையின் ஆணை, அன்பு தியேட்டரில் குலமகள் ராதை , கிருஷ்ணா தியேட்டரில் சம்பூர்ண ராமாயணம், புகழ் திரையரங்கில் குடும்பம் ஒரு கோயில்,
திக்கு முக்காடி விட்டோம் அந்த ஊரில் இருந்த ஆறு தியேட்டரில் ஐந்து தியேட்டரில் நடிகர் திலகத்தின் ஐந்து படங்கள் எதை பார்ப்பது எதை விடுவது, எங்களுக்கு இருக்கும் சான்ஸ் மூன்றுக்கு மட்டுமே இரவு 10 மணிக்கு கடைசி பஸ்சை பிடித்து ஊருக்கு சென்றாக வேண்டும் அதன்படி வசந்த மாளிகை, அன்னையின் ஆணை, குல மகள் ராதை ஆகியவற்றை கண்டு வீடு வந்து சேர்ந்தாலும் சம்பூர்ண ராமாயணம், குடும்பம் ஒரு கோயில் மிஸ்ஸிங் என்பதை நீண்ட நாட்கள் மறக்க இயலாத சூழலில் வருந்தியது இப்போதும் பசுமையான நிகழவாகவே இருக்கிறது..
இங்கு நாம் சொல்லும் செய்தி
அன்றைய கால கட்டத்தில் எத்தனையோ புதிய படங்கள் வந்த வண்ணம் இருந்தாலும் ஒரு சில பிரபலமான நடிகர்கள் இருந்தும் கூட ஒரு நகரின் ஒட்டுமொத்த தியேட்டர்களும் நடிகர்திலகம் மயமாகவே இருந்தன,
மக்கள் நடிகர் திலகம் படம் ஓடுகின்ற தியேட்டரில் மட்டுமே கூடினார்கள்,
*திரையுலக வரலாற்றில் எந்த நடிகராலும் இது போன்ற சாதனையை இனி நிகழ்த்த முடியாது என்பதை சுட்டிக் காட்டிடவே இந்த அனுபவ பதிவு.
Attachment 6082
Attachment 6083
Thanks Sekar Parasuram
52 ஆண்டுகளுக்கு முன்பு ...... (ஏப்ரல் 16/1972)
.
அன்றைய இந்தியாவின் மிகப்பிரபலமான ஆங்கில வார ஏடு "The illustrated Weekly of india" வில் நடிகர்திலகம் பற்றி வெளியான கட்டுரை.
"Sivaji Ganesan-A Acting Institution (சிவாஜி கணேசன் - நடிப்பின் நிறுவனம்) என்ற தலைப்பில் கிரிஜா ராஜேந்திரன் அவர்கள் எழுதியது.
.
கட்டுரையில் இறுதியில் அவர் குறிப்பிடுகிறார்.
Good Artistes there will always be. but, there can never be another Sivaji in indian Screen industry.
(நல்ல கலைஞர்கள் எப்போதும் இருப்பார்கள். ஆனால், இந்தியத் திரையுலகில் இன்னொரு சிவாஜி இருக்கவே முடியாது)
.
எத்தனை சத்தியமான வரிகள்.
வாழ்க சிம்மக் குரலோனின் புகழ் !!
Attachment 6084 Attachment 6085
Thanks K Singaravel (Nadigarthilakam Fans Face book)
SIVAJI GANESAN'S TRENDING VIDEO | SIVAJI GANESAN | FILMS | MOVIES #trending
https://youtu.be/8KPQ4fxNxME?si=EnJZeASjBWCUTJkf
Thanks ONLY SIVAJI GANESAN Youtube
சிவாஜியின் எந்த படங்கள் வெள்ளிவிழா ஓடியது
https://youtu.be/Y8BNhJoA0RE?si=L4qtvSZt41UvTbb7
Thanks SIVAJI MURASU Youtube
சிவாஜி-MGR படங்களின் மோதல்! சிவாஜி படம் தியேட்டரில் போகாதா? MGR பெயரில் நடக்கும் அரசியல்
https://youtu.be/w7ti2ldWPdw?si=SI_yx6yLiwTspD0f
Thanks Naadhas Media
சிவாஜி செய்ததை மறைக்கத்தான் இருந்தார்கள் இங்கே?
https://youtu.be/0jix-st2_X8?si=QxmuU7eQkk-FaDuE
Thanks SIVAJI MURASU Youtube
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நன்கொடை அளித்த சிவாஜி
https://youtu.be/HxToPJFGTnM?si=hUQOCo-SRkenTEKu
Thanks ONLY SIVAJI GANESAN youtube
கூடுதல் சம்பளத்தை வாங்க மறுத்த நடிகர்: யார் தெரியுமா?
நடிகர் திலகம் சிவாஜி,கணேசன் அவர்கள் இயக்குனர் முக்தா சீனிவாசன்
ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் முக்தா சீனிவாசன் நிறைகுடம்; ஒரு நடிகராக, இயக்குநரின் நண்பராக நடிகர் திலகம் சிவாஜி,கணேசன் அவர்கள் ஒரு நிறைகுடம்.நன்றிகள் வி.ராம்ஜி
படம் 'மாயா' முக்தா சீனிவாசன் அவர்கள் திருமணத்தில் நடிகர் திலகம் சிவாஜி,கணேசன் அவர்கள், கமலா அம்மையார் அவர்கள்
முதலில் குறைவாகச் சம்பளம் கொடுத்துவிட்டு, பிறகு நடிகர் கேட்காமலேயே சம்பளத்தை அதிகப்படுத்தி தருகிற தயாரிப்பாளர்கள் அதிசயம். அந்தப் பணத்தை வாங்கவே மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிற நடிகர்கள் பேரதிசயம். தமிழ் சினிமாவில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்தது. சம்பந்தப்பட்ட இரண்டுபேர் யார் தெரியுமா? தயாரிப்பாளர்... முக்தா வி.சீனிவாசன். நடிகர்... நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.அவர்கள்
நடிகர் திலகம் சிவாஜி,கணேசன் அவர்களை வைத்து படங்களைத் தயாரித்த முக்தா பிலிம்ஸ், 60 ஆண்டைக் கடந்து இன்றைக்கும் மக்கள் மனங்களில் நீங்காத நிறுவனமாகத் திகழ்கிறது.
முக்தா பிலிம்ஸின் ‘நிறைகுடம்' படத்தில் நடிக்க நடிகர் திலகம் சிவாஜி,கணேசன் அவர்களி டம் சம்மதம் வாங்கினார் முக்தா சீனிவாசன். அவரும், “உனக்கு இல்லாத கால்ஷீட்டா. கொடுத்துட்டாப் போச்சு” என மளமளவென தேதிகள் கொடுத்தார். அப்போது முக்தா சீனிவாசன் கொஞ்சம் தயங்கியபடியே, “இந்தப் படம் கொஞ்சம் லோ பட்ஜெட் படம்தான். அதனால கொஞ்சம் சம்பளம் குறைச்சிக்கலமா?” என்று கேட்க, “இதுக்கு ஏன் தயங்கறே சீனு... எவ்ளோ தந்தாலும் பரவாயில்ல” என்று சட்டென்று சொன்னார் நடிகர் திலகம் சிவாஜி,கணேசன் அவர்கள்
படம் எடுக்கப்பட்டது. 1969-ல் இதே நாளில் வெளியானது. ‘இந்தப் படம் இவ்வளவுதான் வசூலாகும்’ என்று நினைத்ததையும் கடந்து, நல்ல வசூலைக் கொடுத்தது. தமிழகத்தின் பல ஊர்களில், 50 நாட்களைக் கடந்தும் ஓடியது. சில ஊர்களில், 75 நாட்களைக் கடந்தும் ஓடியது. தமிழகம் முழுக்க வந்த வசூல் கணக்கையெல்லாம் பார்த்துவிட்டு, முக்தா வி.ராமசாமியும் முக்தா வி.சீனிவாசனும் மிகவும் திருப்தியடைந்தார்கள்.
அதையடுத்து நடந்ததுதான் அதிசயம். முக்தா சீனிவாசனின் மகன்களில் ஒருவரும் தயாரிப்பாளருமான முக்தா ரவி நம்மிடம் இந்த விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார். அந்தத் தகவல் இதுதான்.
’நிறைகுடம்’ வெற்றிக்குப் பிறகு முக்தா சீனிவாசன் நடிகர் திலகம் சிவாஜி,கணேசன் அவர்கள் ப் பார்க்க அவரின் வீட்டுக்குச் சென்றார். “வா சீனு, வா சாப்பிடலாம்” என்று எப்போதும் போலவே வரவேற்றார் நடிகர் திலகம் சிவாஜி,கணேசன் அவர்கள் . “இதைப் பிடிங்க...” என்று முக்தா சீனிவாசன் ஒரு கவரை அவரிடம் கொடுத்தார். “என்ன இது?” என புருவம் உயர்த்தி, குழப்பத்துடன் கவரை வாங்கிய நடிகர் திலகம் சிவாஜி,கணேசன் அவர்கள் , கவரில் துருத்திக் கொண்டிருந்த கடிதத்தைப் பார்த்தார். எடுத்தார். படித்தார்.
அந்தக் கடிதத்தில், சென்னை, செங்கல்பட்டு, தென்னாற்காடு மாவட்டம், வட ஆற்காடு மாவட்டம் (அப்போது அப்படித்தான் விநியோக ஏரியா பிரித்துப் பார்க்கப்பட்டது), திருச்சி, கோவை, சேலம், மதுரை, ராமநாதபுரம் என தமிழக விநியோக ஏரியாக்கள், ‘நிறைகுடம்’ திரையிடப்பட்ட தியேட்டர்கள், ஒவ்வொரு தியேட்டரின் வசூல் நிலவரம், ஏரியாக்கள் விற்ற விவரம் என அனைத்தும் குறிக்கப்பட்டிருந்தது. அத்துடன், ‘நிறைகுடம்’ படம் எடுப்பதற்கான செலவுக் கணக்கும் எழுதப்பட்டிருந்தது. செலவெல்லாம் போக, எதிர்பார்த்த வசூல் இவ்வளவு என்று ஒரு தொகையும் கிடைத்த வசூல் இவ்வளவு என்று ஒரு தொகையும் குறிப்பிடப்பட்டிருந்தது. நடிகர் திலகம் சிவாஜி,கணேசன் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி. புன்னகை.
அந்தப் பேப்பரைக் கடந்தும் கவரில் கனமாக ஏதோ இருக்க, எடுத்துப் பார்த்தார். பணம். “என்ன இது?” என்பது போல் முக்தா சீனிவாசனைப் பார்வையாலேயே கேட்டார் நடிகர் திலகம் சிவாஜி,கணேசன் அவர்கள் . “படத்துக்கு குறைவான தொகைதான் சம்பளமா கொடுத்தேன். ஆனா, நாம எதிர்பார்க்காத வசூல் வந்து, நல்ல லாபமே கிடைச்சிருக்கு. அதனால, மார்க்கெட் நிலவரப்படி, உங்களுக்கான மீதமுள்ள சம்பளம் இது” என்றார் முக்தா சீனிவாசன்.
இதைக் கேட்டதும் சட்டென்று முகம் மாறியது நடிகர் திலகம் சிவாஜி,கணேசன் அவர்கள் க்கு. “என்ன பழக்கம் இது. இந்தப் படத்துக்கு இவ்ளோ சம்பளம் தரேன்னு நீ பேசினே. நானும் சரின்னேன். அதையும் கொடுத்துட்டே. இப்போ என்ன இது? எனக்குப் பிடிக்கல சீனு. இதை நீயே வைச்சுக்கோ” என்று கொஞ்சம் கோபத்துடன் சொன்னார் நடிகர் திலகம் சிவாஜி,கணேசன் அவர்கள்
ஆனால் முக்தா சீனிவாசன் விடாப்பிடியாய் பணத்தைப் பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்திக் கொண்டே இருந்தார். நடிகர் திலகம் சிவாஜி,கணேசன் அவர்கள் யும், வாங்கமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். இப்படியே தொடர்ந்து கொண்டிருக்க, சீனு சொன்னதைச் செய்யாம விடமாட்டான். இதை கொடுக்காம நகர மாட்டான் என்பதை உணர்ந்து கொண்டார் நடிகர் திலகம் சிவாஜி,கணேசன் அவர்கள்
ஒரு நிமிடம் அமைதியாக முக்தா சீனிவாசனையே பார்த்தார். “சரி சீனு, இந்தப் பணத்தை நான் வாங்கிக்கணும். அவ்ளோதானே... சரி, வாங்கிக்கிறேன். ஆனா ஒரு நிபந்தனை...” என்று சொல்ல, முக்தா சீனிவாசன் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி, “சொல்லுங்க, செஞ்சிருவோம்” என்றார்.
இந்தப் பணத்தை நான் வாங்கிக்கிறேன். ஆனா இதை ‘நிறைகுடம்’ படதுக்கான சம்பளமா நான் வாங்கிக்க மாட்டேன். என்னை வைச்சு அடுத்தாப்ல நீயொரு படம் பண்ணு. அந்தப் படம் எப்போ பண்றியோ, அந்தப் படத்துக்கான அட்வான்ஸா இதை நான் வைச்சிக்கிறேன்” என்று நடிகர் திலகம் சிவாஜி,கணேசன் அவர்கள் சொல்லியபடி, முக்தா சீனிவாசனின் கைகளை இறுகப்பற்றிக்கொண்டார். நெகிழ்ந்து நெக்குருகிப் போனார் முக்தா சீனிவாசன்.
ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் முக்தா சீனிவாசன் நிறைகுடம்; ஒரு நடிகராக, இயக்குநரின் நண்பராக நடிகர் திலகம் சிவாஜி,கணேசன் அவர்கள் ஒரு நிறைகுடம்.
Attachment 6086
Thanks Devakottai Dolphin AR Ramanathan (Nadigarthilagam Fans face book)
இந்தியாவில் சிவாஜியைத் தவிர யாருமில்லை -சத்யஜித்ரே
https://youtu.be/F1o-AUmiiFU?si=TkLntkrcrg4D9YBr
Thanks
SIVAJI MURASU youtube
மதுரை காசி திரையரங்கில் 26/06/2024 முதல்
முதல் மரியாதை வெற்றிநடை..
Attachment 6087
உலகில் கொடுத்தும் பெயர் வாங்காத வள்ளல் இவர் ஒருவரே!
https://youtu.be/V2Yt7BSvU1M?si=JM-VHOB1kimI3JPg
Thanks
SIVAJI MURASU youtube
திருச்சி பேலஸ்ஸில் 13/07/2024 முதல்
ராஜா
Attachment 6088
மதுரை அண்ணாமலை அரங்கில் 19/07/2024 முதல்
ராஜா
Attachment 6089
சென்னை பேபி ஆல்பட் திரை அரங்கில்
19/07/2024 முதல்
எங்கள் தங்க ராஜா
நல்லவரை மதிப்பேன்
துதிப்பேன்
வல்லவரை எதிர்ப்பேன்
ஜெயிப்பேன்
ஊரெங்கும் என் பேரை கேட்டுப்பாரு.
Attachment 6090
Attachment 6091
சொல்வது பொய் எனத்தெரிந்தும் கூச்சமின்றி பொய்யான தகவல்களை பரப்பிக்கொண்டு திரிகிறார்கள் எம் ஜீ ஆர் ரசிகர்கள்.
ஆரம்ப காலங்களில் யார் பொய் தகவல்களை பரப்பத் தொடங்கினார்கள் என்பது தெரியவில்லை . ஆனால் பிற்காலங்களில் காலம் சென்றவர்களான உரிமைக்குரல் பத்திரிகை நடாத்திய ராஜூஎன்பவரும் பல பழைய பத்திரிகைகளை வைத்திருந்து பல சினிமா சம்மந்தப்பட்ட பதிவுகளை வெளியிட்டு வந்தவருமான ஜெயபாபு என்பவரும் பல தவறான பொய்யான தகவல்களை தங்கள் வசதிக்கு ஏற்றால்போல் வெளியிட்டு வரத் தொடங்கினார்கள்.
பல நேர்மையான எம் ஜீ ஆர் ரசிகர்களே அவற்றை நம்பவில்லை ஆனால் கூச்சமின்றி பொய் தகவல்களை தொடர்ந்து பரப்பி வரும் பேரரசர் குழு என்ற பெயரில் இணையத்தளத்தையும், youtube சேனலையும் நடாத்தி வரும் தூத்துக்குடியை சேர்ந்த சங்கர் என்பவர் ,அவர்கள் சொன்ன பொய்களையும் தவறான தகவல்களையும் சரியா பிழையா என சீர்தூக்கி பார்க்காமல் அந்தப் பொய்களை அப்படியே தொடர்ந்து பரப்பி வருகின்றார். இவரை அடியொற்றி சிந்திக்கும் திறன் இல்லாத பல எம் ஜீ ஆர் ரசிகர்கள் இவர் சொல்லும் பொய்களை நம்பி உண்மையென நினைத்து புளகாங்கிதம் அடைந்து கற்பனையில் மிதந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த புளகாங்கிதம் அடையும் எம் ஜீ ஆர் ரசிகர்களும் அவர்கள் சொன்ன பொய்யை உண்மையென நம்பி மேலும் மேலும் பல இடங்களில் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
நேர்மையான சில எம் ஜீ ஆர் ரசிகர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களில் ஒரு சிலர் உண்மையை சொல்கிறார்கள், பலர்
தெரிந்தும் வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் எவ்வளவுதான் பொறுமையாக இருந்தாலும் மாற்றுமுகாம் கூட்டம் எங்களை சீண்டிக்கொண்டே இருக்கிறது.
நடிகர் திலகத்தை இழுக்காமல் அவர்களால் ஒன்றுமே எழுதமுடிவதில்லை.காரணம் நடிகர் திலகம் பெற்ற வெற்றிகள் சாதனைகள் அவர்களது நடிகனை நித்திரையில்லாமல் தவிக்கவிட்டதோ அதேபோன்று இவர்களையும் தூங்கிடாமல் தவிக்கவிட்டு வாழ்நாள்முழுவதும் பிதற்றவைத்துவிட்டது. இவர்களுக்கு இனி விமோசனம் என்பது கிடையாது.வாழ்நாள் முழுவதும் பிதற்றிக்கொண்டு போய்ச்சேரவேண்டியதுதான்.
இவர்கள் தங்கள் நடிகரைபற்றிமட்டும் எழுதுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை .தங்கள் நடிகருக்கு போட்டியாக யாரும் கிடையாது என வாயச்சவடால் விடுவார்கள் ஆனால் நடிப்புச்சரவர்த்தி கொடைவள்ளல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை சீண்டாமல் அவர்களால் ஒன்றுமே எழுதமுடிவதில்லை.உங்கள் நடிகரை பற்றி மட்டும் நீங்கள் எழுதவேண்டியதுதானே . அவர்கள் அப்படி நடிகர் திலகத்தை பற்றி பொய்களை தொடர்ந்து எழுத நாங்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கமுடியாது, எனவே எங்கள் பதிலடி தொடரும்.......
தற்பொழுது youtube சேனலில் யாரும் தங்கள் பதிவுகளை வெளியிடலாம் என்ற நிலையில் பலரும் ,
ஏதோ ஒரு பெயரை தங்கள் செனலுக்கு வைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த விடயத்தை
பதிவிட்டு வருகிறாகள்.சோதிடர்கள் ஒரு பக்கம், வைத்தியர்கள் ஒரு பக்கம் ,காமெடி ஒருபக்கம், பொது அறிவு என ஒருபக்கம் ,
பஸல் ஒருபக்கம் , சிளிமா ஒரு பக்கம் என பலரும் பலவிதமாக சேனலில் பதிவிட்டு பணம் பார்க்கிறார்கள்.
பலரும் பார்ப்பதால் அவர்களுக்கு ஒருவிதத்தில் பணம் கிடைக்கிறது.
இதில் என்ன விடயமென்றால் ஒரு செனல் வெளியிடும் ஒரு விடயத்தை வேறொரு சேனல்
அதே விடயத்தை காப்பி அடித்து தலைப்பை மாற்றி தாங்கள்தான் இதன் காப்பி ரைட்டர்போல,
செய்திகளை மாற்றி இடைச் சொருகல்கள் செய்து வாசிக்கிறார்கள்.
காப்பி அடிக்கும்பொழுது அந்தச்சேனல் சொன்ன பொய் இங்கேயும் தொடர்கிறது.
சொல்லப்படும் பொய்களை ஆதாரத்துடன் youtube சேனல் நிர்வாகத்திற்கு
தெரியப்படுத்தினால், பொய்செய்தியை வெளிப்படுத்தும் சேனல்கள்
முடக்கப்பட சந்தர்ப்பம் உண்டு .
இதனை பொய்யான தகவல்களை பரப்பும் செனல்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.
நடிகர்திலகம் பகழ் பரப்பும் சேனல்கள் நிலாஸ் திரைக்கூடம், சிவாஜி முரசு ,மற்றும் நடிகர்திலகம் ரிவிஆகியன
எம் ஜீ ஆர் சார்பாக நடிப்புபேரரசர்குழு , மற்றும் சில பெயர்கள் ஞாபகத்தில் இல்லை.
இவற்றில் நிலாஸ் திரைக்கூடம் கூடியவரை சரியான தகவல்களை வெளியிட்டு வருகின்றது.
அத்துடன் நடிகர் திலகத்தின் படங்களை விமர்சிக்கும்பொழுது வேறு நடிகர்களை இழுப்பதும் இல்லை
வேறு நடிகர்களின் படங்களை ஒப்பிட்டு எழுதுவதும் இல்லை.
அதே போன்றே சிவாஜி முரசு சேனலும் வேறு நடிகர்களை தொடுவதுமில்லை சிவாஜி படங்களுடன் ஒப்பிடுவதுமில்லை.
நடிகர்திலகம் ரீவி சேனல் மட்டும் மாற்று குழுவிற்கு பதில் கொடுக்கும்பொழுது மட்டும்
ஒப்பிட்டு பதில் கொடுக்கிறார். பதிலில் கௌரவமாக பேசுகிறார். அவர்களைப்போல் கீழ்த்தரமாக பதிலளிப்பதில்லை.
எம் ஜீ ஆர் சேனல் நடிப்புபேரரசர் குழு தங்கள் நடிகருக்கு பகழ் சேர்க்கிறேன் என்ற பெயரில்
முன்னாள் எம் ஜீ ஆர் ரசிகர்கள் சொன்ன பொய்களை சரி பார்க்காமல் அவர்கள் சொன்னதெல்லாம
உண்மையென நினைத்து அப்படியே வெளிப்படுத்துகிறார்கள் .தன் நடிகர் படத்தின் விபரத்தை சொன்னால
பரவாயில்லை நடிகர் திலகத்தை வம்புக்கு இழுக்காமல் அந்த சேனலை நடாத்தும்
தூத்துக்குடி சங்கருக்கு எதுவுமே எழுதமுடியாது. அவருக்கு கண்முன்னே கனவிலும் நினைவிலும்
நிழலாடுவது சிவாஜி கணேசன் மட்டுமே.
சிவாஜி கணேசனை மட்டம் தட்டுவதாக நினைத்து தங்கள் நடிகரின் படங்களை உயர்த்தி எழுதுவதற்காக
இல்லாத பொய்களை பரப்பிவரும் பேரரசர் குழு வெளியிடும் பொய்கள் ஆதாரத்துடன் மிக விரைவில் வெளிக்கொணரப்படும்.
நடிகர் திலகத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு
19-07-2024
வெள்ளி முதல்
தினசரி 4 காட்சிகள்
கரூர் லட்சுமி திரையரங்கில்
சிவகாமியின் செல்வன்.
Attachment 6092
தகவல் Chandrasekaran Veerachinnu (முகநூல்)
அம்பலமான பொய் ! #சிவாஜியால் #பந்துலு க்கு என்றும் லாபமே! ஆதாரத்துடன் விளக்கம் #சிவாஜி 10 #எம்ஜிஆர்
https://youtu.be/5wCrSezZCVU?si=AVHjBUgE6zUX55P6
Thanks Nadigarthilakamtv
சிவாஜி மட்டுமே பிரம்மாண்ட வெற்றிகள் அதிகம் கொடுத்தவர் #Boxoffice king அவரே ! இதோ ஆதாரங்கள் !.
youtube இல் சமீப காலமாக ஒரு சிலரால் தவறாகவும் , ஒரு சிலரால் பொய்யும், புரட்டும், புளுகும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பதிவுகளுக்கான ஆவண, ஆதாரங்களுடன் விளக்கமளித்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வீடியோ.
தமிழ் திரை உலகில் தாம் நடிக்க துவங்கிய 1952 ஆம் ஆண்டு பராசக்தி காலம்தொட்டு இன்றுவரை அதிக அளவில் பிரம்மாண்ட வெற்றி வசூல் கொடுத்த பிரம்மாண்ட நாயகர் சிவாஜி என்பதே நிரூபணம்.
https://youtu.be/e9mPT4BGIQQ?si=hY8Mm-2YY_tsPL8k
Thanks Nadigarthilakamtv
சிவாஜியின் மூளை 360 டிகிரியில் வேலை செய்யும் - Muktha Ravi Sivaji Ganesan Memories, Nadigar Thilagam
https://youtu.be/4KRRDxgVzKg?si=f0LUGJE5viZVZsCt
Thanks Wow tamizhaa
கர்ணவள்ளல் திரு சிவாஜி கணேசன்
23 வதுநினைவு தினம் யூலை 21.
இடது கைக்கு தெரியாமல் கொடைகொடுத்த வள்ளல் சிவாஜி கணேசன் ,1953 ஆம் ஆண்டு திரை உலகில் நுழைந்த மறுவருடமே இலங்கைக்கு சென்று யாழ் மூளை வைத்தியசாலை கட்டிட நிதிக்காக உதவியவர். முதன் முதலாக எந்த ஒரு கட்சியிலும் சேராத தனிநபர் ஒருவர் இலங்கை தமிழ் மக்களுக்கெனஉதவியவர் என எடுத்துக்கொண்டால் அது சிவாஜி கணேசன் அவர்களாகத்தான் இருப்பார். தமிக பாடசாலைகளுக்கான மதிய உணவுத் திட்டத்திற்கு 1959 ல் 1 லட்சம் கொடுத்தவர் (இன்றைய மதிப்பு பல கோடிகள்) சிவாஜி கணேசன். மதிய உணவுத் திட்டத்திற்கு சிவாஜி கணேசனின் பெயரை சூட்டுவதற்கு அன்றைய முதல்வர் காமராஜர் விரும்பிய பொழுது தன்னடக்கத்துடன் மறுத்துவிட்டவர் பெருமைக்குரி வள்ளல் சிவாஜி அவர்கள்.இவை சிறு துளி மட்டுமே, பாடசாலை மதிய உணவுத்திட்டத்திற்கு மேலும் மேலும் கொடுத்தார்.பேரிடர் காலங்களில் கணக்கின்றி கொடுத்தார். அப்படிப்பட்ட வள்ளலின் இருபத்து மூன்றாவது நினைவு தினம் யூலை 21 ல் அவரின் நினைவுகளை போற்றுவோம்.
Attachment 6095
Attachment 6093
Attachment 6094
கரூர் லட்சுமிராம் அரங்கில் 5 வது நாளாக
வெற்றி நடைபோடுகிறது சிவகாமியின் செல்வன்.
Attachment 6097
மதுரை அண்ணாமலை அரங்கில்
வெற்றிகரமான 5 வது நாள்
நடிகர் திலகத்தின் ராஜா.
Attachment 6098
சென்னை ஆல்பர்ட் அரங்கில்
எங்கள் தங்க ராஜா.
Attachment 6099
பத்திரிகையில் வெளிவந்த செய்தி
எங்கள் தங்க ராஜா
நடிகர் திலகத்தின் நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள பேபி ஆல்பர்ட் திரையரங்கில் கடந்த 19 ம் தேதி எங்கள் தங்க ராஜா திரையிடப்பட்டது.
தினசரி இரண்டு காட்சிகளாக திரையிடப்பட்ட இந்த படம் தற்போது இரண்டாவது வாரமாக வெற்றி நடை போடுகிறது.
இத்தனைக்கும் படம் Digital லில் வெளியாகாமல் சாதாரண 35mm பிரிண்ட் வடிவில் தான் திரையிடப்பட்டுள்ளது.
புதிய படங்கள் இரண்டுநாள் முன்று நாள் என்று தள்ளாடும் போது ஐம்பது வருடங்களுக்கு முன்பு வந்த படம் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைப்பது மிகப்பெரிய விஷயம்.
இத்தனைக்கும் நடிகர் திலகம் மறைந்து 23 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் இன்றும் Box Office Emperor ஆக திகழ்வது அவருக்கு மட்டுமே சாத்தியம்.
Attachment 6100
Attachment 6101
Thanks Vasudevan Srirangarajan (face book)
Dr. Kantharaj Interview about How is the relationship between MGR and Sivaji Ganeshan | OLD is GOLD
https://youtu.be/9hqNB-tKR_0?si=F9YUt8jewvltFeyC
Thanks Tamilmint
நடிகர் திலகம் சிவாஜி பற்றி ஏன் இவ்வளவு பொய்கள் YouTube இல் ? கேள்வியும் பதிலும் BINOCULAR
https://youtu.be/EyVA1LiFfRI?si=I3G47ExAErlwugJa
Thanks
NADIGARTHILAGAMTV Youtube
உண்மை என்கிற வார்த்தையாவது இருப்பது புழுகுமூட்டைகளுக்கு தெரியுமா? புதிய பொய் -நவராத்திரி ஓடவில்லை
https://youtu.be/T_Ls1DG6LlQ?si=DmMSnRZIOiIopXWb
Thanks
NADIGARTHILAGAMTV Youtube
அது தான் சிவாஜியின் பொற்கால ஆண்டு! | Sivaji Ganesan | Thiruvilayadal | Nadigarthilagam | Savitri
https://youtu.be/kjfC7bOCHbk?si=FX-n-aJw0tvD1VJh
Thanks
The Rise Nalla Cinema