டியர் பம்மலார்,
சீற்றம் கொண்ட சிங்கம் போல் ஏறு கொண்டு எழுந்து எழுத்தினை ஆயுதமாக்கி எழுத்துப் பிழையினை எடுத்துரைத்த தங்களின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. நன்றிகள். வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் பணி.
அன்புடன்
Printable View
டியர் பம்மலார்,
சீற்றம் கொண்ட சிங்கம் போல் ஏறு கொண்டு எழுந்து எழுத்தினை ஆயுதமாக்கி எழுத்துப் பிழையினை எடுத்துரைத்த தங்களின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. நன்றிகள். வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் பணி.
அன்புடன்
http://i45.tinypic.com/33erj94.jpg
காலத்தில் அழியாத காவியம் தர வந்த மாபெரும் கலை மன்னனே..
காளி தாஸ் என்னும் கவிஞனை வடித்த மாபெரும் கலைச் சிற்பியே
என்று அந்தத் திரைக்காவியத்தைப் பற்றியும் நடிகர் திலகத்தைப் பற்றியும் பேசிக் கொண்டே எழுதிக் கொண்டே இருக்கலாம்.
அப்பாவி இடையனாக தேங்காயச் சில்லுகளை எடுத்து மாறு வேடத்தில் வந்திருக்கும் காளியிடம் நீட்டும் காட்சியா, அல்லது சென்று வா மகனே பாடல் காட்சியில் தான் மிகப் பெரிய உயரத்தை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதை அறியாத அந்த கள்ளங்கபடமற்ற முகத்தையும் அந்த நடையினையும் சொல்வதா, தன்னுடைய திருமணத்தைப் பற்றிய விவரம் அறியாமல் முதலிரவு அறையில் பழங்களை ருசிக்கும் குணத்தை மெச்சுவதா, தனக்கு காளியின் அருள் கிடைத்ததும் கோயிலில் யார் தருவார் அந்த அரியாசனம் என்று கணீரென்று பாடுவதை சொல்வதா
தர்பாரில் சைகையிலேயே ஒவ்வொரு கேள்விக்கும் அப்பாவியாக கையைக் காட்ட, அதற்கு மனோகர் தனி வியாக்கியானம் செய்ய, தன் முகத்தில் அப்பாவித்தனத்தையும் பெருமிதத்தையும் ஒரு சேர காட்டும் அந்த பாவத்தை சொல்லுவதா, புலவரான பின் தன்னுடைய உடல் மொழியிலேயே அந்தப் பாத்திரத்தின் சிறப்பினைக் கொண்டு வந்த பாங்கை சொல்வதா....Quote:
நடிகர் திலகம் ராஜ்ய சபா உறுப்பினராய் நியமனம் செய்யப் பட்டு, பதவியேற்ற நாளையொட்டி, தூர்தர்ஷனில் வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியு்ம் நிகழ்ச்சியில் ஒளிபரபப் பட்ட முதல் பாடல், யார் தருவார் இந்த அரியாசனம் என்பது குறிப்பிடத் தக்கது
ஒவ்வொரு காட்சியும் பல முறை பார்த்து ஆய்வு செய்ய வேண்டிய திரைக்காவியம் மஹாகவி காளிதாஸ்...
இப்படிப் பல்வேறு பரிணாமங்களில் தன் நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் திலகத்தின் புகழ் மகுடத்தில் மற்றோர் வைரக்கல், மாணிக்கக் கல், மஹாகவி காளிதாஸ்.Quote:
இன்னும் சொல்லப் போனால் வேறொரு திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானாலும் மிகவும் நெகிழ வைக்கும் காவியமாக நடிகர் திலகத்தின் நீலவானம் திரைப்படம் மூலமே தன் உண்மையான திறமை வெளிப்பட்டது, அதுவும் மற்றொரு சிறந்த இயக்குநர் மூலமாக, என்பதை பாலச்சந்தர் அவர்களின் மனசாட்சியை விட அதிகமாக உணர்ந்தவர் வேறுயார் இருக்க முடியும். இதன் படி பார்த்தால் பாலச் சந்தர் என்கிற இயக்குநரை நன்கு உருவகப் படுத்திக் கொள்ள முதல் படி அமைத்துக் கொடுத்தது நீலவானம் என்பது தானே உண்மையாக இருக்க முடியும்.
அன்புடன்
டியர் பம்மலார் சார்,
தங்களின் "கலைப் பிரம்மாவைப் படைத்தது பாலசந்தரா ?!" மின்னஞ்சல் தவறு செய்தவர்களுக்கு ஒரு சாட்டையடி, எங்கள் மனம் போல் உங்கள் மனமும் இன்னும் ஆறவில்லை என்று புரிகிறது. நாம் தவறைச் சுட்டிக் காட்டி விட்டோம். தவறைச் சரி செய்வார்கள் எனவும் நம்புகிறோம். அப்படி தகுந்த விளக்கம் அவர்கள் தரவில்லை என்றால் இது வேண்டுமென்றே, சம்பந்தப் பட்டவர்கள் சிலரால் தெரிந்தே செய்யப்பட்ட தவறாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள முடியும்.
மின்னஞ்சல்கள் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும், நமது திரியின் மூலமாகவும், கண்டனங்களைத் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நமது 'இதய தெய்வம்' ரசிகர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
http://www.sukumari.com/images/other..._Young_Age.jpg
யார் இவர்? யூகிக்க முடிகிறதா?
இவருக்கும் தற்போது நம் திரியின் விவாதத்திற்கும் என்ன தொடர்பு?
சற்றுப் பொறுத்திருங்களேன்..
http://www.thehindu.com/multimedia/d...pu_671112f.jpg
இவரை உங்களுக்குத் தெரியும்.
இவருக்கும் தற்போது நம் திரியின் விவாதத்திற்கும் என்ன தொடர்பு?
சற்றுப் பொறுத்திருங்களேன்..
இவர்கள் மட்டுமா
இயக்குநர் ஏ.சி. திருலோக்சந்தர்
கதை வசனகர்த்தா பாலமுருகன்
ஒளிப்பதிவு மேதை ஏ. வின்சென்ட்
இவர்களுக்கும் தற்போது நம் திரியின் விவாதத்திற்கும் என்ன தொடர்பு -
விடை காண சற்றுப் பொறுத்திருங்களேன்...
adhu sukumari
சூப்பர் ராஜேஷ், சொல்லப் போனால் அந்த நிழற்படத்தின் சுட்டியிலேயே அவருடைய பெயர் உள்ளது.
அன்புடன்
கலைநிலா சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தின் 11வது ஆண்டு விழாவும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழாவும் 02.10.2011 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை பெரம்பூர் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. விழாவில் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அன்றைய தினம் நண்பகல் சமபந்தி போஜனம் நடைபெற உள்ளது. விவரம் விரைவில்.
great pammalr sir
டியர் ராகவேந்திரன் சார்,
எனக்குப் புரிந்து விட்டது.......
சார், உங்களுடைய மகாகவி காளிதாஸ் பற்றிய சுருக்கமான சிறப்பாய்வு அற்புதம். சபாஷ்!.... நானும் என் பங்கிற்கு கொஞ்சம் டைப் செய்ய ஆரம்பித்தவுடன் பவர் கட்...
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
அன்பு முரளி சார்,
'மகாகவி காளிதாஸ்' பற்றிய தங்களது குறை திரு.ராகவேந்திரன் சார் மூலம் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் திருப்திக்காக இதோ என்னுடைய பங்கு....
'கல்லாய் வந்தவன் கடவுளம்மா....
அதில் கனியாய் கனிஞ்சவ தேவியம்மா...
புல்லாய் முளைச்சவ சக்தியம்மா....
அதில் பூவா மலர்ந்தவ காளியம்மா..ஆ..ஆ..ஆ...'
கையில் அந்த ஊதுகுழலென்ன..
தலையில் உச்சிக் குடுமி என்ன.....
இரு கைகளிலும் வளையங்கள் என்ன...
கருப்பு நிற கட்-பனியன் என்ன...
கையில் பிடித்துள்ள கொம்பு என்ன...
அதில் அழகாய்த் தொங்கும் சிறு மூட்டை தான் என்ன....
ஆடுகள் மேய்க்கும் அழகென்ன ....
ஊதுகுழல் ஊதும் உதட்டசைவுதான் என்ன...
நடந்து வரும் நடையழகுதான் என்ன....
நடிப்புச் சுரங்கத்தை வாரிக் கொடுத்த பாரியே!
ஏன் எங்களை விட்டுப் பிரிந்தாய்?...
இந்த நன்றி கெட்ட உலகம் வேண்டாமென்றா?...
(குறிப்பு : இந்தப் பாடலின் 1.09 நிமிடத்திலிருந்து 1.15 நிமிடம் வரை மிக உன்னிப்பாக அன்பர்கள் கவனிக்க வேண்டுகிறேன்.)
http://www.youtube.com/watch?v=9mzZV...yer_detailpage
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
Perunthalaivar Birthday celebration by Govt.of Puducherry on 15/07/2011
http://info.puducherry.gov.in/bkamar...ajar2011/1.jpg
Nadigar thilagam Death anniversary celebration by Govt.of Puducherry on 21/7/2011
http://info.puducherry.gov.in/dsivaj...vaji2011/1.jpg
Invitation by Govt.of Puducherry
http://info.puducherry.gov.in/events/21july2011.jpg
http://info.puducherry.gov.in/events/15july2011.jpg
வாசுதேவன் சார்,
'மகாகவி காளிதாஸ்' பாடலை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
மார்கழி மாதம் அதிகாலையில் எங்கள் தெரு கோயிலில், வருடாவருடம் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் ஒலிபரப்புவார்கள். மற்ற புராணப்பட பாடல்கள் இருக்கிறதோ இல்லையோ, மகாகவி காளிதாஸ் பாடல்கள் நிச்சயம் இருக்கும். அதனால் எங்கள் தெரு மக்களுக்கு இப்படப் பாடல்கள் மனப்பாடம்...
கல்லாய் வந்தவன்...
சென்று வா மகனே...
மலரும் வான் நிலவும்... (இரண்டு வெர்ஷன்)
காலத்தில் அழியாத காவியம் பல தந்த...
யார் தருவார் இந்த அரியாசனம்...
இப்படி, இந்தப்படத்தின் பாடல்களை எப்போது எங்கே கேட்டாலும் மார்கழி மாத அதிகாலைப்பொழுது என் நினைவுக்கு வரும்.
நாளை நடிகர்திலகம் இரட்டை வேடங்களில் கலக்கிய 'என் மகன்' உதய தினம்.
மதுரை நியூசினிமாவில் 100-வது நாள் விளம்பரம் காண இப்போதே ஆவலாக இருக்கிறேன்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
என் மகன்
[21.8.1974 - 21.8.2011] : 38வது ஜெயந்தி
சாதனைப் பொன்னேடுகள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : செப்டம்பர் 1974
http://i1094.photobucket.com/albums/...EDC4363a-1.jpg
100வது நாள் [கார்த்திகை தீபத்திருநாள்] : தினத்தந்தி : 28.11.1974
http://i1094.photobucket.com/albums/...EDC4364a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார் & வாசுதேவன் சார்,
தங்களது உணர்வுபூர்வமான பாராட்டுக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !
எதிர்ப்பை கண்ணியமான முறையில் பதிவு செய்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார் & வாசுதேவன் சார்,
"மகாகவி காளிதாஸ்" வீடியோக்களுக்கும், கண்ணோட்டங்களுக்கும் கனிவான நன்றிகள் !
Dear kumareshanprabhu Sir, Thank you very much !
அன்புடன்,
பம்மலார்.
அன்புள்ள பம்மலார்,
'எள் என்னும் முன்னே எண்ணெயாக வந்து நிற்பவர்' என்பதனை வழக்கம்போல மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். "என் மகன்" ஆவணப்பதிவுகளுக்கு நன்றிகள் ஆயிரம். (வேறொரு திரியொன்றில் சிலரிடம் 1969-ல் வந்த ஒரு திரைப்படத்தின் 100-வது நாள் விளம்பரம் கேட்டிருந்தேன். மூன்று மாதங்களாகியும் சத்தத்தையே காணோம். மூன்று வருடங்களானாலும் வராது என்பது தெரிந்த விஷயம்தான்).
நண்பர் முரளி சீனிவாஸ் உள்ளிட்ட மதுரை ரசிகப்பெருமக்களுக்கு நன்றிகள் பல. (சென்னை தேவி பாரடைஸில் 80 நாட்களைக்கடந்த நிலையில், முக்தாவின் 'அன்பைத்தேடி' படத்துக்காக தூக்கப்பட்டது. முக்தாவுக்கு இதே வேலை. திரிசூலம் சென்னையில் மிகச்சுலபமாக 200 நாட்களைத்தாண்டுவதையும், தனது இமயம் படம் மூலமாகக் கெடுத்தார்).
Sorry friends. iwas not able to contact you because of technical problems. REGARDING THE DISCUSSIONS ON KB ISSUE. FRIENDS HAVE ENLIGHTENED THE FACTS VERY WELL. IT IS UPTO HAMSADWANI TO REGRET FOR THE HAPPENINGS. ONE THING EVEN THOUSANDS OF KB COMES NT WILL SWALLOW THEM IN SINGLE ACTION THIS FACTS EVERY BODY KNOWS VERYWELL MOULDING IS NOT NECESSARY FOR NT NECESSARY FOR KB
Well said Ramajayam Sir.Quote:
MOULDING IS NOT NECESSARY FOR NT NECESSARY FOR KB
Raghavendran
டியர் பம்மலார்,
என் மகன் என்று நடிகர் திலகம் கொஞ்சும் அளவிற்கு அவர் மேல் தாங்கள் வைத்துள்ள பாசம், பக்தி அனைத்தும் நெஞ்சை நெக்குருக வைக்கின்றன. பாராட்டுக்கள்.
அன்புடன்
என் மகன் படப் பூஜையைப் பற்றி பொம்மை மாத இதழில் வெளிவந்த செய்திப் படம்
http://i872.photobucket.com/albums/a...jaBommaifw.jpg
மேலே உள்ள படத்தில் காமிராவின் அருகில் நிற்பவர் ஒளிப்பதிவாளர் மஸ்தான். முடுக்கி வைப்பவர் பாலாஜியின் மகள், பெயர் சுஜாதா என்று நினைக்கிறேன்.
தொடரும்
டியர் பம்மலார் சார்,
'என் மகன்' 38வது ஜெயந்தி தினத்தை ஒட்டி தாங்கள் வெளியிட்டுள்ள பேசும் படம் முதல் வெளியீட்டு விளம்பரம், மற்றும் தினத்தந்தி 100வது நாள் விளம்பரம் இரண்டுமே அற்புத பொக்கிஷங்கள். அளித்தமைக்கு நன்றி.
டியர் ராகவேந்திரன் சார்,
என் மகன் படப் பூஜையைப் பற்றி பொம்மை மாத இதழில் வெளிவந்த செய்திப் படம் அசத்துகிறது. அபூர்வமான, காணக் கிடைக்காத புகைப்படங்கள். 'என் மகன்' வளரும் போது வந்த செய்திப் படங்களும் அற்புதம்.
நன்றிகள் சார்..
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்..
"நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?"....
மனசாட்சி இல்லாத மனிதர்களைப் பார்த்து
நடிகர் திலகம் கேட்கிறார்...முடிந்தால் மனசாட்சி உள்ளவர்கள்
பதில் சொல்லட்டும்....
அன்பு நெஞ்சங்களே,
'என்மகன்' 38வது ஜெயந்தியை முன்னிட்டு நடிகர் திலகத்தின் அற்புத அங்க அசைவுகளில்.... இதோ..
http://www.youtube.com/watch?v=QoJ__lFYLGY&feature=player_detailpage
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
காளிதாசனின் புகழ் பாடிய ராகவேந்தர் சாருக்கும் வாசுதேவன் சாருக்கும் நன்றி.
என் மகன் விளம்பரம் கண்டவுடன் சில பல நினைவுகள். தங்கப்பதக்கம் மிக நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் போது இந்தப் படம் வெளியாகிறதே என்று ஓர் எண்ணம். இருந்தாலும் ஆகஸ்ட் 15 -ஐ எதிர்பார்த்திருக்கும் போது தமிழ் திரையுலக வரலாற்றிலே அது வரை கண்டிராத ஒரு வேலை நிறுத்தம். அன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்த்து நடந்த போராட்டம். தனிப்பட்ட கோவத்தை தீர்த்துக் கொள்ள திரைப்படங்களுக்கு 70 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்பட அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகமெங்கும் இயங்கிக் கொண்டிருந்த அனைத்து திரை அரங்குகளும் ஆகஸ்ட் 15 முதல் மூடப்பட்டன. அன்றைய நாளில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்த நடிகர் திலகம் அவர்களின் தலைமையில் கூடிய திரையுலக அமைப்புகள் வேலை நிறுத்தம் செய்வதென முடிவு எடுத்து அதை நடை முறைப்படுத்தியது.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு எந்த முதலீடுமில்லாமல் வந்து கொண்டிருந்த வரி வருமானம் நின்று போகவே அதிர்ந்து போன அரசு திரையுலக அமைப்புகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. நடிகர் சங்கம் சார்பில் நடிகர் திலகமும் கலந்து கொண்டார். அரசு எந்திரத்தை கண்டு அஞ்சாமல் அமைப்புகள் உறுதியாக இருப்பதை உணர்ந்த அரசு கூட்டிய வரி விகிதத்தை குறைத்து தான் அறிவித்த அரசாணையை திரும்பப் பெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற வேலை நிறுத்தம் விலக்கி கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 20 அன்று திரையரங்குகள் இயங்க ஆரம்பித்தன.
ஆகஸ்ட் 15 ந் தேதி வெளியாக வேண்டியிருந்த என் மகன் இதன் காரணம் ஆகஸ்ட் 21 புதனன்று நியூசினிமாவில் ரிலீஸ் ஆனது. முதன் முறையாக மதுரையில் நான்கு காட்சிகள் முறையே 1,4,7,10 மணிக்கு நடைபெற்றது. இது முதல் மூன்று நாட்களுக்கு இப்படி தொடர்ந்து பின் சனி ஞாயிறு வழக்கம் போல் காட்சிகள் நடைபெற்றன. சிறப்பான வெற்றியைப் பெற்ற என் மகன் மதுரையில் 100 நாட்களை நிறைவு செய்தது. இதன் மூலம் மதுரை மாநகரில் மீண்டும் தொடர்ந்து மூன்று படங்கள் 100 நாட்கள் கடந்து ஓடும் சாதனையை நடிகர் திலகம் புரிந்தார். முதலில் வாணி ராணி அடுத்தது தங்கப்பதக்கம் பிறகு என் மகன்.
என் மகனை பொறுத்தவரை மறக்க முடியாத மற்றொரு அம்சமும் உண்டு. 37 வருடங்கள் கடந்து விட்டன, எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. இருப்பினும் பொய்க்காத கவிஞனின் வாக்கும் அதற்கு திரையில் உருவம் கொடுத்த உண்மையே பேசிய கலைஞனின் குரலும் அன்றைய இன்றைய சூழலுக்கும் எத்தனை அழகாய் பொருந்துகிறது.
சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்
தலை மாறி ஆடும் இந்த அதிகார ஆட்டம்
என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்
இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்
நாடக வேஷம் கூட வராது
நாளைய உலகம் இவரை விடாது சொல்கின்றேன்.
பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்
பாவம் செய்தவன் தலைமுறை வரையில் பார்க்கின்றேன்.
அன்புடன்
டியர் mr_karthik,
பாராட்டுக்கு நன்றி ! தாங்கள் குறிப்பிட்டது போல் சென்னை 'தேவிபாரடைஸ்' திரையரங்கில் "என் மகன்", 21.8.1974 புதன் முதல் 12.11.1974 புதன் வரை 84 நாட்கள் ஓடிய பெருவெற்றிக்காவியம். 13.11.1974 தீபாவளியன்று "அன்பைத் தேடி" ரிலீஸ்.
ஓடும் படத்திற்காக வரும் படத்தை நாம் எப்பொழுதுமே நிறுத்தி வைத்ததில்லையே !
அன்புடன்,
பம்மலார்.
டியர் முரளி சார்,
சத்தியமான வார்த்தைகளை உரைப்பதும் அந்த சத்தியமான வாக்குகள் பலிப்பதும் ஒரு சத்தியமான மனிதனால் தான் முடியும். அது நடிகர் திலகத்தைத் தவிர வேறு யாரால் இருக்க முடியும். இந்த வரிகளை உச்சரிக்கும் தகுதி இன்றைக்கு யாருக்கு உள்ளது.... தேடணும்... தேடணும்.... தேடிக் கொண்டே இருக்கணும்....
அன்புடன்
என் மகன் திரைப்படத்தின் காட்சிகள் பொம்மையில் வெளிவந்தவை, தற்போது நமது பார்வைக்கு...
http://i872.photobucket.com/albums/a...llBommaifw.jpg
http://i872.photobucket.com/albums/a...ommaip02fw.jpg
அன்புடன்
டியர் ராகவேந்திரன் சார்,
பாசமான பாராட்டுக்கு பணிவான நன்றி !
ரசிகக் கண்மணிகளாகிய அன்புள்ளங்கள் அனைவரையுமே நமது கலையுலகத் தந்தை, "பிள்ளைகளே !" என்றுதானே வாய் நிறைய வாஞ்சையோடு, அன்போடு அழைப்பார் !
"என் மகன்" - 'பொம்மை' இதழ் நிழற்படங்கள், பொக்கிஷங்கள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் நெய்வேலி வாசுதேவன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
'நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா' பாடலின் வீடியோவைப் பதிவிட்டு வெளுத்து வாங்கி விட்டீர்கள் !
டியர் முரளி சார்,
"என் மகன்" - 'அன்றும் இன்றும்' சூப்பர் !
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகம் பற்றி அமரர் ராஜீவ் காந்தி
நடிகர் திலகம் கலையுலகில் 50 ஆண்டுகள் கோலோச்சி பீடுநடை போடுகின்றதைப் பாராட்டி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ராஜீவ் காந்தி அவர்கள் எழுதிய 25.9.1984 தேதியிட்ட பாராட்டுக் கடிதத்தின் நகல்
[உதவி : நமது ஹப்பர் திரு.கே.சந்திரசேகரன்]
http://i1094.photobucket.com/albums/...GEDC4369aa.jpg
இன்று 20.8.2011 முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் 68வது பிறந்த தினம்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
மரகதம்
[21.8.1959 - 21.8.2011] : 53வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 7.8.1959
http://i1094.photobucket.com/albums/...EDC4361a-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 21.8.1959
http://i1094.photobucket.com/albums/...EDC4362a-1.jpg
"மரகதம்" சென்னை 'வெலிங்டன்' திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய சிறந்த வெற்றிக் காவியம்.
இதன் 100வது நாள் விளம்பரம் கிடைக்கப் பெற்றவுடன் அவசியம் இங்கே இடுகை செய்கிறேன்.
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார்,
முத்தே, மணியே, பவழமே, மாணி்ககமே, மரகதமே என்று உங்களைத் தமிழில் உள்ள அனைத்து வார்த்தைகளையும் வைத்து வார்த்தை ஜாலம் செய்து வாழ்த்தி அந்த உத்தமக் கலைஞன் மகிழ்ந்து கொணடிருக்கிறார் என்பது திண்ணம்.
அன்புடன்
மரகதம் விமர்சனம்
http://i872.photobucket.com/albums/a...thamreview.jpg
மரகதம் திரைப்படத்தின் மற்றொரு விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a...gathamAdfw.jpg
அன்புடன்
நடிகர் திலகத்தின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு மணி மகுடம் என்மகன். N.T யின் 172- ஆவது காவியம்.
பூட்டு உடைக்கும் திருடனாகவும், ஏட்டு ராமையா தேவனாகவும் இரட்டை வேடம் நடிகர் திலகத்திற்கு.
பாசமான குடும்ப வேடங்களிலேயே N.T யை அதிகம் பார்த்த நமக்கு action role-களிலும் அவர் வெளுத்து வாங்க முடியும் என்று நிரூபித்தவர்கள் திரு,பாலாஜி அவர்களும், திரு சி.வி.ராஜேந்திரன் அவர்களும். (தங்கை, என் தம்பி, திருடன், ராஜா, என்மகன் )
வழக்கம் போல இரண்டு character-களுக்கும் சரியான வித்தியாசம்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் திருடனாக்கப்பட்டு எதிரிகளிடம் சிக்கித் தவிக்கும் தவிப்பாகட்டும்..
தனக்குக் கோபம் தலைக்கேறும் போதெல்லாம் lighter- யை கொளுத்தி கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகட்டும்...
தன்னை சுவீகாரம் எடுத்துக் கொள்ளும் ஏட்டு ராமையா தேவரின் அன்புக்கு கட்டுப் படவேண்டிய சங்கடமான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டு தவிப்பதாகட்டும்...
தன் திருட்டுத் தொழிலால் காதலி பாதித்து விடக் கூடாது என்பதற்காக காதலை மறைத்து தவிப்பதாகட்டும்...
'நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்' என்று எதிரிகளிடம் கொக்கரிப்பதாகட்டும்...
தனக்கு ஒரு ஆண்பிள்ளை இல்லையே என்று ஒரு திருடனை சுவீகாரம் எடுத்துக் கொண்டு அவன் திருடன் என்று தெரிந்ததும் கொதித்துக் கொந்தளித்து,அவனை துவம்சம் செய்து விட்டு, பின் பாசத்தில் trumpet- எடுத்து சோகத்துடன் வாசிக்கும் பாங்காகட்டும்...
எதிரிகளிடமிருந்து தன் மகனை காப்பாற்ற மரங்கள் அடர்ந்த தோப்பில் போடும் அந்த அற்புத கம்பு சண்டையாகட்டும்...
தன்னை பாலாஜி முதுகில் சுட்டவுடன் "பின்னால நின்னு யாருடா சுட்டது..கோழப் பய...ஆம்பளையா இருந்தா முன்னாடி வாடா...டாய்..நான் தேவன்டா", என்று துடிதுடித்து உயிரை விடுவதாகட்டும்...
ஏட்டு ராமையாத் தேவராகவும், திருடன் ராஜாவாகவும் நடிப்பில் ராஜாங்கம் நடத்துகிறார் நடிக மன்னன்.
பொண்ணுக்கென்ன அழகு...
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்...
சொல்லாதே.. சொல்லாதே...ஊரார்க்கு சொல்லாதே ....
போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள்..
ஒளிப்பதிவு டைரக்டர் மஸ்தானின் 'குளு குளு' ஒளிப்பதிவு...
எம்.எஸ்.விஸ்வநாதனின் ஆர்ப்பாட்டமான இசை...
C.V..ராஜேந்திரனின் 'விறு விறு' இயக்கம்...
மொத்தத்தில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த வெற்றிமகன் "என் மகன்". ராஜாமணி அன்னை ஈன்ற அன்பு மகன், எங்கள் 'தெய்வ மகன்'....
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
வாசுதேவனின் மகன் ஜெயந்தி நாளன்று, தன் பிள்ளைகளில் ஒருவரான வாசுதேவனை அந்த நடிகர் திலகம் வாழ்த்திக்கொண்டுள்ளார் என்பது நிதர்சனம். என் மகன் திரைக்காவியத்தைப் பற்றிய தங்களின் ஆய்வு, சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.
தங்கள் வரவு நம் திரியின் மகுடத்தில் மற்றும் ஓர் மரகதக் கல் என்பது உறுதி.
தங்களுக்காகவும் மற்றும் நம் அனைத்து நண்பர்களுக்காகவும் மரகதம் திரைக்காவியத்திலிருந்து சில காட்சிகள், collage வடிவில்
http://i872.photobucket.com/albums/a...mcollagefw.jpg
அன்புடன்
மரகதம் திரைக்காவியத்தில் எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்கள் இசையமைப்பில் ராதா ஜெயலக்ஷ்மி - டி.எம்.சௌந்தர்ராஜன் குரல்களில் காலத்தால் அழிக்க முடியாத இனிமையான பாடல், கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு. இப்பாடலைத் திரு வாசுதேவன் தரவேற்றிய சூட்டோடு சுட்டாக நம் அனைவர் பார்வைக்கும் தருவார் என எதிர்பார்ப்போம்.
முன்கூட்டிய நன்றி திரு வாசுதேவன் அவர்களே
அன்புடன்