pazhaya NT thread-a pudicha, antha links ellAm pudichidalAm. Forget about mine, I am more interested in others' reviews. Especially Murali-sir and Saradha mdm's, and yours of course, you "what will happen next, watch and find out" reviews :smile:
Printable View
hah! kandupudichen, kandupudichen, pazhaya thread-a kandupudichen, the links are in the first page:
http://www.mayyam.com/talk/showthrea...Ganesan-Part-9
I know, I know. Miss those old ones, edited by the guy before S.A. Nathan...gad I forgot his name.
How can you? SS Sharma :D
60-year old magazine :shock:
Groucho,
All those old links became invalid after the hub changed to new format :(
Oh crap :sad:
நடிகர் திலகத்தின் நுணுக்கமான நடிப்பாற்றல்:-
நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி பலர் பலவிதமாக ஆராய்ச்சி செய்து நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் திரியில், நாமும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறோம்.
எந்த ஒரு சிறந்த கலைஞனும் ஒரு படைப்பினைத் தரும்போது, முதலில், தன்னை அந்தக் கட்டம் மற்றும் கணத்துக்குள் தன்னுடைய மனதை மட்டும் நுழைத்துக் கொண்டு, அதுவாகவே பாவித்து, தன்னுடைய அனுபவம், அறிவு மற்றும் திறமை மூலம், ஒரு படைப்பினைத் தர முயற்சிக்கிறான். இந்த internalisation பரிபூரணமாக அமையப் பெற்ற உன்னதக் கலைஞன் உலகில் நடிகர் திலகம் ஒருவரே என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அவருக்கு நடிப்புக் கலை என்பது கலைமகள் அருளிய வரம். அவரிடம் இருந்த spontaneity இதனை நிரூபிக்கும். இருப்பினும், தன்னுடைய வாழ் நாளில் கடைசி வரை, எப்போதும், தன்னுடைய கலையை அவர் மெருகேற்றிக் கொண்டே வந்திருக்கிறார் - பல வித முறைகள் மூலம். இதில், மிக முக்கியமானது அவரது ஆழ்ந்த, கூர்ந்து நோக்கி அணுகும் திறன். எந்த ஒரு விஷயத்தையும், அவர் மேம்போக்காக அணுகாமல், நூறு சதவிகித பரிபூரணத்துவத்துடன் தான் அணுகிக் கொண்டு வந்திருக்கிறார். இதனால் தான், அநேகமாக அவருடைய எல்லா படங்களும் கனமாகவே இருக்கும். இலேசான படங்கள் (so called light movies) அவரிடமிருந்து மிகவும் குறைவு தான்.
சில நாட்களுக்கு முன்னர், நண்பர் திரு. வாசுதேவன் அவர்கள், "அன்னை இல்லம்" படத்தில் ஒரு (இல்லை இது மூன்று ஒன்றோடொன்று தொடர்புடைய காட்சிகள்) காட்சியைத் தரவேற்றியிருந்தார். இந்தக் காட்சியில், நடிகர் திலகம் முத்துராமன் வீட்டிற்கு வந்து, உண்பதற்கு அமர்ந்து எம்.வி.ராஜம்மா அவர்களைப் பார்த்து (அவருடைய சுமங்கலித் தோற்றத்தைப் பார்த்து), பக்கத்தில், அவருடைய கணவருக்காக வைக்கப் பட்டிருக்கும் இலையையும் பார்த்து, 'அம்மா! உங்களது இந்த சுமங்கலிக் கோலம் சீக்கிரம் போகப் போகிறது' என்று நினைத்து வெதும்பி, எதுவும் சொல்லாமல், வெறும் முக பாவனைகளின் மூலம் அந்த சோகத்தைக் காண்பித்து அங்கிருந்து சென்று விடுவார். (எம்.வி. ராஜம்மா அவருடைய கணவர் எஸ்.வி. ரங்கா ராவ் உயிருடன் தான் இருக்கிறார் என்று வலுவாக நம்பி எப்போதும், அவருக்காக ஒரு இலையைப் போட்டு அதில், உணவு வகைகளை எப்போதும் பரிமாறி வைப்பார், என்றாவது ஒரு நாள் திரும்பி வந்து சேர்ந்து உண்டு மகிழ்வார் என்ற நம்பிக்கையில்!. எம்.வி ராஜம்மாவிற்கு, ரங்காராவ் கூடிய சீக்கிரம் மரண தண்டனை பெற்று இறக்கப் போகிறார் என்று தெரியாது. இது நடிகர் திலகத்துக்கும் தேவிகாவுக்கும் மட்டுமே தெரியும்.). அடுத்து, வழக்கறிஞரை சந்தித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி, இப்போது, வாய் விட்டுக் கூறிக் கதறுவார், தேவிகாவிடம்! முதல் இரண்டு காட்சிகளில் ஒரு சிகை அலங்காரத்துடன் வரும் நடிகர் திலகம், அடுத்த காட்சியில், வேறொரு சிகை அலங்காரத்துடன் வருவார். அதாவது, முதல் இரண்டு காட்சிகளில் நீளமாக இருக்கும் கிருதா உடனே வரும் அடுத்த காட்சியில், சிறியதாக இருக்கும். ஆக, அடுத்தடுத்து வரும் இந்த மூன்று காட்சிகளில், முதல் இரண்டு காட்சிகளும், மூன்றாவது காட்சியும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், முதல் இரண்டு காட்சிகளுக்கும் அடுத்த காட்சிக்கும் இருக்கும் அந்த உணர்ச்சிமயமான தொடர்பு சிறிதும் குறைந்திருக்காது. சரிய்யா, அவர் நுணுக்கமான நடிகர் என்று இப்போது தானே சொன்னீர், அதனால், அவருக்கு இருக்கும் நுணுக்கமான அறிவினாலும், ஈடுபாட்டினாலும், அவரைப் பொறுத்த வரை இது சுலபம் என்று நீங்கள் சொல்லலாம். ஒத்துக் கொள்கிறேன்.
இப்போது, அதே படத்தில் இடம் பெற்ற வேறொரு காட்சியைப் பார்ப்போம்.
இந்தக் காட்சி, முந்தைய காட்சியைப் போல பெரிய உணர்ச்சிக் குவியலான காட்சியல்ல. முந்தைய காட்சி படத்தின் இறுதிக் கட்டத்தில் வரும். இந்தக் காட்சியோ, படத்தின் நடுவில் வரும்.
நடிகர் திலகமும், முத்துராமனும் அருகருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். வழக்கம் போல, பக்கத்தில் ரங்கா ராவுக்காக ஒரு இலை போடப்பட்டு உணவு பரிமாறப் பட்டிருக்கும். அப்போது தான், முதன் முதல், அந்த வீட்டில் நடிகர் திலகம் சாப்பிடுவார். அப்போது தான், அவருக்கு அந்த இலையின் முக்கியத்துவம் தெரியும். எம்.வி. ராஜம்மாவின் பண்பை வியந்து பாராட்டி (எல்லாம் சாப்பிட்டுக் கொண்டே!), அவர்களை தன்னுடைய வீட்டிற்கு விருந்து சாப்பிட வர வேண்டும் என்னும் போது, எம்.வி. ராஜம்மா அவரிடம் "கண்டிப்பாக வருகிறோம். கல்யாண சாப்பாட்டிற்கு, வடை பாயாசத்துடன்" என்பார். அதற்கு, நடிகர் திலகமோ, "வடையாவது பாயாசமாவது, இங்கு உங்கள் வீட்டில், அந்த விருந்து, எனக்கு முன் வரப் போகிறது" என்று சொல்லி, முத்துராமனுடைய காதலைப் பற்றிக் கூறி, அந்தப் பெண் நல்ல நிறம், செக்கச் செவேரென்று இருப்பாள் என்று கூறி, மேலும் சில சம்பாஷணையுடன் அந்தக் காட்சி முடியும். இந்தக் காட்சி இரண்டு நிமிடங்கள் தான் வரும். இந்தக் காட்சியில், துவக்கத்திலிருந்து நீளமான கிருதாவுடன் வரும் நடிகர் திலகம், "அந்தப் பெண் செக்கச் செவேரென்று இருப்பாள்" என்று கூறும் அந்த ஒரு சில நிமிடங்கள் மட்டும், சடாரென்று, சிறிய கிருதாவுடன் காட்சி தருவார்! இது க்ளோசப்பில் எடுக்கப் பட்டிருக்கும். உடனே, மறுபடியும் அந்த சம்பாஷனை தொடரும் போது, பழைய நீள கிருதாவுக்கு மாறி விடுவார்! இத்தனைக்கும், முந்தைய காட்சியைப் போல, வேறு வேறு காட்சிகளல்ல இந்தக் காட்சி. தொடர்ந்து, இரண்டு நிமிடங்களுக்கு, நடிகர் திலகம், முத்துராமன் மற்றும் எம்.வி. ராஜம்மா நடிக்கும் காட்சி. இரண்டு வேறு வேறு காட்சிகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப் படும் போதே (எனக்குத் தெரிந்து குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் கழித்து தான் எடுக்கப் பட்டிருக்கும்), தொடர்பு காட்டுவதற்கு நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். நிலைமை இப்படியிருக்க, ஒரே நேரத்தில் எடுக்கப் பட்ட, நாம் மேலே கூறிய இந்தக் காட்சியில், தொடர்ந்து வரும் இரண்டு நிமிடங்களில், ஒன்றே முக்கால் நிமிடம் ஒரு ஒப்பனை, நடுவில், சில நொடிகள் மட்டும் வேறொரு ஒப்பனை; உடனே, கடைசி சில நொடிகளில் வேறொரு ஒப்பனை! இதுவும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப் பட்ட காட்சிகள். அப்படி என்றால், எந்த அளவிற்கு, நடிகர் திலகம் ஈடுபாடும், அர்ப்பணிப்பும், முனைப்பும், முயற்சியும் செய்திருக்கிறார்!!
இது போல், பல படங்களில் காணலாம். ஆனால், அவை எல்லாம் வேறு வேறு காட்சிகளாய் வரும். உதாரணத்திற்கு, புதிய பறவையில், வரும் "சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து" பாடலின் முதல் சரணம் பூராவும், படம் தொடங்கும் போதே எடுக்கப் பட்டிருக்கும். வேறொரு நீள கிருதாவுடன் வருவார். பல்லவியிலும், அனு பல்லவியிலும், இரண்டாவது சரணத்திலும், படம் நெடுகிலும் வரும் சிறிய கிருதாவுடன் வருவார். ஆரம்பத்தில், ஊட்டி ரேஸ் கோர்ஸில், சரோஜா தேவியுடன் பேசும் ஒரு காட்சியிலும், அடுத்தடுத்து, இதே போல், வேறு வேறு கிருதாக் கோலங்களில் வருவார்.
நடிகர் திலகம் 1953-லிருந்து, 1987 வரை, தொடர்ந்து, மூன்று ஷிப்டுகளில், நடித்துக் கொண்டே இருந்தார். வருடத்திற்கு ஆறு, ஏழு படங்களில் (சில வருடங்கள் நீங்கலாக - 1965, 1966, 1977, மற்றும் சில வருடங்கள்) நடித்துக் கொண்டு! வேறு வேறு கெட்டப்புகளில், வேறு வேறு பாத்திரங்களில், ஒவ்வொன்றும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில், காலங்களில்! அப்படி இருந்தும், காட்சித் தொடர்பினைத் (continuity) தொடர்ந்து நூறு சதவிகிதம் கடைப்பிடித்தார். இப்போதெல்லாம், ஒரு நடிகர் ஒரு நேரத்தில், ஒரு படம் மட்டுமே நடிக்கின்றார், நன்றாக concentrate செய்து நடிப்பதற்கு! இன்னும் சொல்லப் போனால், வட நாட்டின் புகழ் பெற்ற நடிகர் திலீப் குமார் அவர்கள், அந்தக் காலத்திலேயே, ஒரு நேரத்தில், ஒரு படம் தான் நடித்தார், மேற்கூறிய காரணத்துக்காக!
வேறு வேறு காட்சிகள் என்றால், ஓரளவு நடித்து விடலாம். ஒரே காட்சியில், இரண்டே நிமிடங்கள் தொடர்ந்து பேசும் வசனக் காட்சியில், இடையில், ஒரு சில நொடிகள் மட்டும் வேறு ஒரு கட்டத்தில் எடுக்கப்படும் போது கூட, எப்படி அவரால் பரிபூரணத்துவத்தைக் காட்ட முடிந்தது? இத்தனைக்கும், அப்போதெல்லாம் நேரடியாக பேசி நடித்தாக வேண்டும். இப்போது போல தனி ட்ராக் எல்லாம் கிடையாது! எல்லாம் அந்தக் கலைக் கடவுளுக்கும், அவரை தமிழ் நாட்டிற்கு ஈந்த அந்தக் கலைமகளுக்கும் தான் வெளிச்சம்!!
நடிகர் திலகத்தின் பாடல் கட்டுரைகளினூடே, இந்த சிறிய பதிவை இட சந்தர்ப்பமளித்த திரு. வாசு மற்றும் திரு. வெங்கிராமுக்கு நன்றிகள்.
இந்தக் காட்சி பற்றி சொல்லி, திரு. ராகவேந்திரன் அவர்களிடம் கேட்டு, மீண்டும் ஒரு முறை அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு, அவரிடம் உதவும்படிக் கோரிய போது, அவரும் உடனே, எனக்கு அந்தக் காட்சியை மட்டும், என்னுடைய சொந்த மெய்லுக்கு அனுப்பினார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
திரு. ராகவேந்திரன் அவர்களே, எனக்காக ஒரு முறை அந்தக் காட்சியைப் பதிந்து, கோடானு கோடி சிவாஜி ரசிகர்களின் நெஞ்சை நிறையச் செய்யுங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
டியர் சாரதி,
உண்மையிலேயே மிகவும் நுணுக்கமாக ஆய்ந்து எழுதப் பட்ட பதிவு. உளமார்ந்த பாராட்டுக்கள். இந்தப் படத்தைப் பற்றி ஒரு பத்திரைகயில் அந்தக் காலத்தில் விமர்சிக்கும் போது இந்தக் காட்சியைக் குறிப்பிட்டு இதே கிருதா நீளம் குறைவாக ஒரு சில பிரேம்களில் வருவதைக் குறை கூறி விமர்சித்து எழுதியிருந்தார்கள். அவர்களுக்கு இந்த தொழில் நுட்பம், அதாவது இந்த ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் தனியாக எடுத்திருக்கக் கூடிய விஷயம் தெரியாமலிருந்திருக்காது. என்றாலும் விமர்சித்திருந்தார்கள். இதுவே வேறொரு நடிகராயிருந்திருந்தால் ஆஹா என்னே அவருடைய ஆற்றல், என்று வானளாவ பாராட்டியிருப்பார்கள்.
ஒரு வேளை பார்த்தசாரதி என்கிற ரசிகர் இதையெல்லாம் விரிவாக ஆராய்ந்து எழுதுவார் என்று விட்டு விட்டார்களோ...
இதோ அந்தக் காட்சி நமக்காக
http://youtu.be/vqKF4U86RAs
there had been numerous write ups on the celebrated characters played by Sivaji ganesan sir. Interested to know if there had been similar write ups on certain low profile, less noted roles such as Bale Pandia Rowdy character, Vani Rani Vaanisree's lover character, Deiva magan younger son character etc., to be frank these are roles that I do not like that much..the rowdy character and younger son character fading in front of the more like-able and powerful roles played by NT in the same movie. Vani Rani role... I dont know if that role required some one as great as Sivaji at all....... But I believe Sivaji sir would have given some nuances in these roles also. would be nice if someone can throw light on roles such as these?
RS,
People at various points of time had written about Vijay of Deivamagan and Marudu of Bale Pandiya including yours truly but if you ask whether it was a detailed write up on this characters, it was not. Vani Rani was an entirely different story. NT did it when CVR and Vanishree requested him to help out. Chankiya the original director of the film passed away during half stage and CVR took up the mantle from there.
The likes of Parthasarathy and Gopal would love to write about these characters and NT's depiction of the same.
Regards
YOU HAVE COME TO THE POINT. THIS IS WHAT I HAVE BEEN EXPECTING FROM THE CONNOISSEURS LIKE YOU TO ASK. This is what is the approach I was looking for. Thank you Subramani. Definitely your questions will be answered. There are lots and lots of nuances in each and every film of his. Please look out for postings in these lines as usual ... usual because ... this is what we have been doing all this long .. And so in future.
In fact these roles too have nuances. Particularly the song "Parthu Po" which was picturised partly in the India International Trade Fair at Island Grounds and indoors has a few nuanced performance by NT.
Raghavendran
சாரதி,
நடிகர் திலகத்தின் நடிப்பில் nuances எனப்படும் நுண்ணிய வெளிப்படுத்தல்களை காட்சியமைப்பின் உதவியோடு அழகாய் பதிவு செய்திருக்கிறீர்கள். ஒரு நாள் அல்லது ஒரு மாதம் ஏன் பல வருடங்கள் இடைவெளி நேர்ந்தாலும் அவரால் (மட்டும்) அதே உணர்வை முகத்திலும் சரி வசனம் பேசுவதிலும் கொண்டு வர முடியும். அது அவருக்கு கை வந்த கலை.
இதை படிக்கும் போது ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது [அதைதான் அலை பேசியில் பேசும் போது வேலை பளு இருப்பதால் சற்று நேரம் கழித்து தொடர்பு கொள்கிறேன் என்று சொன்னேன்]. ஒரு சந்தர்ப்பத்தில் இயக்குனர் நடிகர் மனோ பாலாவிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு செய்தியை பகிர்ந்துக் கொண்டார்
முதல் மரியாதை படப்பிடிப்பு இரண்டு மூன்று கட்டமாக மைசூர் சுற்றுவட்டாரங்களில் நடைப்பெற்றது. முதல் கட்டப் படப்பிடிப்பில் நடிகர் திலகம் ஒரு காட்சியில் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு கையில் ஒரு மம்மட்டி வைத்து தரையில் ஏதோ தோண்டி வசனம் பேசுவதாக காட்சி [படத்தில் இடம் பெற்றதா என்பது நினைவில்லை]. இயக்குனர் பாரதி ராஜாவும் சரி ஒளிப்பதிவாளார் கண்ணனும் சரி ஓகே சொல்லி விட்டனர். சென்னைக்கு திரும்பி வந்து பிலிம்-ஐ கழுவி பார்த்த போதுதான் அந்த காட்சி பிலிம்-ல் சரியாக பதிவாகாமல் Out of Focus ஆக இருந்திருக்கிறது. காட்சி எடுத்த பின் நடிகர் திலகம் இரண்டு முறை சரியாக வந்திருக்கிறதா என்று கேட்டாராம். சரி அடுத்த கட்ட படப்பிடிப்பில் adjust செய்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டனராம்
இரண்டாம் கட்டம் முடிந்து இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடக்கும் தறுவாயில் இந்தக் காட்சியின் ஞாபகம் வந்தவுடன் இதை எப்படி எடுப்பது அல்லது இதை எப்படி நடிகர் திலகத்திடம் சொல்வது என்று பெரிதும் தயங்கியிருக்கிறார்கள். காரணம் அந்த குறிப்பிட்ட காட்சியின் படபிடிப்பு முடிந்து அப்போதே ஒரு ஆறு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது பிறகு வசனம் இல்லாமல் காட்சியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். வசனத்தை voice over-ஆக செய்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
நடிகர் திலகத்திடம் சென்று இந்த costume பிளஸ் முண்டாசு கட்டி கையில் மம்மட்டி வைத்து நிலத்தை தோண்டுவது போல் போஸ் கொடுங்கள். Promotional still--ற்காக என்று சொல்லி விட்டார்கள் நடிகர் திலகமும் சரி என்று சொல்லி விட்டார். காமிராவை silent ஆக ஸ்டார்ட் பண்ணி விடுவதாக் பிளான்.
முண்டாசு கட்டி கையில் மம்மட்டி வைத்து நிலத்தை தோண்டுவதற்கு முன் நடிகர் திலகம் நிமிர்ந்து " ஏம்பா பாரதி, நான் சும்மா நிலத்தை தோண்டற மாதிரி போஸ் கொடுத்தா போதுமா இல்லை அன்னைக்கு பேசின அந்த வசனத்தையும் பேசணுமா?" என்று கேட்டாராம். அப்படியே பூமி பிளந்து தன்னை விழுங்கி விடாதா என்று ஒரு கணம் பாரதி ராஜாவிற்கு தோன்றி வெட்கி தலை குனிந்தாராம். அதன் பிறகு சிறிது நாட்களுக்கு நடிகர் திலகத்தின் முகத்தை பார்க்கவே அவருக்கு வெட்கமாக இருந்ததாம்.
இங்கே இதை குறிப்பிட காரணம் நீங்கள் சுட்டிக் காட்டிய அந்த ஒரு நுணுக்கமான நகாஸ் வேலைகள் மற்றும் நினைவாற்றல் எந்தக் காலத்திலும் அவரிடமிருந்து மறையவுமில்லை, குறையவுமில்லை.
மீண்டும் நன்றி சாரதி.
அன்புடன்
டியர் சசிதரன்
தங்களுடைய பதிவினைப் படிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதே சமயம் தங்களுடைய பணிவு, மரியாதை போன்ற நற்குணங்களை எடுத்துக் காட்டுகிறது. தாங்கள் கூறியது போல் 80களின் சூழ்நிலை பல நல்ல படங்களைப் பார்க்கும் வாய்ப்பினை தங்களைப் போன்ற பல சிவாஜி ரசிகர்களுக்கு நல்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமே. உண்மையில் சொல்லப் போனால் தமிழகத்தை விட இலங்கையில் நடிகர் திலகத்தின் பல படங்கள் மக்கள் வரவேற்பை அதிக அளவில் பெற்றுள்ளன. உத்தமன், வசந்த மாளிகை, பைலட் பிரேம்நாத் போன்ற படங்களைக் கூறலாம். 70 மற்றும் 80களில் தகவல் தொழில் நுட்பம் அதிகமாக வளராத கால கட்டங்களில் கடிதப் போக்குவரத்து மட்டுமே சாத்தியமாக இருந்த கால கட்டத்தில் இலங்கையில் எனக்கு ஓரிரு நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் மூலம் நடிகர் திலகத்தின் படங்களின் வரவேற்பினைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வோம். அவையெல்லாம் மறக்கவொண்ணா நாட்கள்.
தங்களிடம் விஎச்எஸ் பிரதிகள் இன்னும் உள்ளதா. அவற்றை ஓரளவு சரி செய்து பிரதி எடுக்க முடியுமாயின் தயவு செய்து மறக்காமல் செய்யுங்கள். காரணம் தற்போது வெளிவரும் நெடுந்தகடுகள் பல முழுப்படத்தைக் கொண்டு வருவதில்லை. சில படங்களின் முக்கியமான காட்சிகள் விடுபடுகின்றன. எனவே தாங்கள் விஎச்எஸ் பிரதிகளை முடிந்த வரை பிரதி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின் மேலும் தொடரும்
அன்புடன்
ராகவேந்திரன்
Subra Sir,
My short write up on Deiva magan Vijay.
http://www.mayyam.com/talk/showthrea...592#post843592
You may find it interesting
http://www.mayyam.com/talk/showthrea...723#post844723
thanks to the stalwarts :) Ragavendra sir, Murali sir and Gopal sir for your kind response :) Please also add the nitchaya thamboolam hero character as well to the list... that I believe is by far the very common man character (played by Sivaji) without any heroism, special talents, any extreme qualities be it positive or negative....
with regards,
This is really true. So many good movies are there acted by Sivaji Ganesan and Devika. But Neelavanam is defenitely a different
one and acting by both is fantastic. I used to see immediately 'Kulamagal Radai/Andavan Kattalai " after this movie.
ஆலய மணி- 1962 -part 1
மன நலம் குன்றியவர்களை சமூகம் நடத்திய விதம் குறித்து ஆராய்ந்தால் மனம் பதைக்கும். 20 ஆம் நூற்றாண்டில்தான் psycho -analysis துறை fraeud என்பவரால் அறிமுக படுத்த பட்டு ,முன்னேற்றம் கண்டது. மன நலம் குன்றியவர் குறித்து சமூகத்தின் பார்வையும் மாறியது. அதற்கு முன் அவர்களுக்கு சமூகத்தால் சிகிச்சை என்ற பெயரிலும் (அரைகுறை வைத்தியர்,பூசாரி),வேண்டாத பிரஜைகள் என்ற முறையிலும் பட்ட கொடுமைகளை பற்றி ஒரு தனி பதிவே போடலாம். இதிலாவது,தன உலகத்தில் வாழும் ,வெளியுலகம் அறியா முழு மனம் குன்றியவர்கள் கொடுத்து வைத்தவர்கள். விளிம்பு நிலை மனிதர்களோ தன் உலகம்,சமூக உலகம் இரண்டிலும் ஊசலாடி, இரு நிலை பாதிப்பினால் சொல்லொணா துயரம் எய்தினர். இந்த வகை மன நிலை பிறழ்வுகளை வைத்து , 1950 களிலும், 1960 களிலும், வெகு சில ஹாலிவுட் படங்களே வெளியாயின. அவையும் பெரும்பாலும் thriller வகைதான். ஆனால் இந்திய சினிமா சரித்திர வரலாற்றிலேயே ,முதன் முறையாய், விளிம்பு நிலை பிறழ்வு கொண்ட ஒரு கதாநாயகனை, முன்னிறுத்தி , வடிவம்,உள்ளடக்கம் எல்லாவற்றிலும் ,மாறுபட்ட படமாய்(ஒரு அந்நிய பட inspiration ) ஒரு தமிழ் படம், சிவாஜி, ஜி.பாலசுப்ரமணியம்,ஜாவர் சீதாராமன்,கே.சங்கர், பீ.எஸ்.வீரப்பா கூட்டு முயற்சியில் வெளியானதும் இன்றி, எல்லாதரிப்பினராலும் ஆதரிக்க பட்டு பிரம்மாண்ட வெற்றி பெற்று, பிறகு தெலுங்கு,ஹிந்தி எல்லா மொழிகளிலும் தழுவ பட்டது. சினிமா சரித்திரமே, அதற்கு முன்னும்,பின்னும் ,அந்த ரசவாத அதிசயத்தை கண்டதில்லை.காணவில்லை. காதல்,நட்பு,விசுவாசம்,பொறாமை, possessiveness , மனித-மிருக மனநிலை போராட்டம்,எல்லாம் சம நிலையில் தேக்கிய ஒரு positive approach கொண்ட மிக நல்ல காவிய சித்திரம்தான் ஆலய மணி.
ஆலய மணியின் கதையை பார்ப்போம்.
பெரும் பணக்காரன் தியாக ராஜன் ,உறவினர் யாருமின்றி வாழும் தனியன். சிறு வயதில் அதீத possessive குணத்தினால்,நண்பன் ஒருவன் மரணத்திற்கு காரணமாகி (மீனா என்று பெயரிட பட்ட பொம்மைக்காக ) , சீர்திருத்த பள்ளியில் இருந்து மீண்டு , deep seated trauma வின் பாற்பட்டு குற்ற உணர்வில் இருந்து மீள துடிப்பவன்.அதீத கருணை, மனித நேயம், வள்ளன்மை,பெருந்தன்மை ஆகிய குணங்களை வளர்த்து மிருக குணங்களை பொசுக்கி வாழ நினைத்தாலும் அவ்வப்பொழுது தலை தூக்கும் போட்டி,பொறாமை குணங்களால் உந்த படுபவன். தற்செயலாய், சேகர் என்ற டாக்டருக்கு படிக்கும் ஒருவனின் நற்பண்புகளால் கவர பட்டு ,ஏழையான அவனை,சம-நிலை நண்பனாய் பாவித்து ஆதரித்து அன்பு செலுத்துகிறான்.சேகருக்கு வானம்பாடி என்ற புனை பெயர் காதலி. சேகருடன் சேர்ந்து படிக்கும் பிரேமா சேகரை ஒரு தலையாய் விரும்புகிறாள். பிரேமாவின் அப்பா ஆட்கொண்டான் பிள்ளையோ பண பேய். பெண்ணை தியாகுவிற்கு மணமுடிக்க விரும்புகிறார். தற்செயலாய் எஸ்டேட் கணக்கு பிள்ளை முத்தையாவின் இளைய மகள் மீனாவை சந்தித்து விரும்ப ஆரம்பிக்கிறான் தியாகு. சந்தர்ப்ப வசமாய் முத்தையாவின் மூத்த பெண் ,ஆட்கொண்டானால் வஞ்சிக்க படும் போது தலையிட்டு ,அந்த பெண்ணை விரும்பியவனே மணக்க காரணமான தியாகு,தன் நண்பன் சேகர் மூலம் தான் மீனாவை மணக்க விரும்புவதை தெரிவிக்கிறான். ஆனால் அந்த மீனாதான் ,தான் விரும்பிய வானம்பாடி என்ற உண்மை தெரிந்து அதிர்ச்சியடையும் சேகர்,தன் நண்பனின் விருப்பத்தை மதித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறான்.மீனாவிடம் உண்மையை தியாகுவிடம் இருந்து மறைக்க சொல்கிறான்.
இதனால் பொறாமையடையும் ஆட்கொண்டான், மீனாவை பழிவாங்க, காரின் brake ஐ பிடுங்க,காப்பாற்ற முனையும் தியாகு,brain concoction மற்றும் multiple -fracture இனால் கால்களின் செயல் பாட்டை இழக்கிறான். திருமண நிச்சயம் செய்ய பட்ட மீனா ,தியாகுவிடம் ,தொடர்ந்து அன்பு செலுத்தி ஆதரவு காட்டுகிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால்,மீனா -சேகரின் மேல் சந்தேகம் கொண்டு,சேகரை கொலை செய்ய மரண பாறைக்கு அழைத்து செல்கிறான் தியாகு . கொலை முயற்சியில் தப்பிக்கும் சேகர், உண்மையை சொல்ல,குற்ற உணர்ச்சியில் தியாகு தானே ,மரண பாறையில் இருந்து குதித்து விடுகிறான். பிறகு ,காப்பாற்ற பட்டு, கால்களை பெற்று, பிரேமா-சேகர், மீனா -தியாகு ,ஒன்று சேர சுபம்.
(தொடரும்)
ஆலய மணி- 1962 -Part -2
இந்த படத்தில் நடிகர் திலகம் ,பாத்திரத்தை மிக புரிந்து அசத்துவார். தாயன்பு அறியாத,தந்தையால் உதாசீன படுத்த பட்ட ,தனிமை பட்ட, தன்னை தூயவனாய் மாற்றி கொள்ள விழையும் பாத்திரத்தை முதல் காட்சியில் இருந்து ,கண் முன் நிறுத்துவார். (வழக்கொழிந்து கொண்டிருந்த தூய தமிழ் வசனங்கள் உறுத்தினாலும்).நண்பனுடன், என்னிடம் இல்லாத உயர்ந்த பண்பு உன்னிடம் உள்ளது என்று குறிப்பிட்டு, தானே ஒரு possessive type என்ற போதிலும்,நண்பன் ,ஒரு வாக்குவாதத்தில்(யார் காதலி உயர்ந்தவர்?) சட்டையை பிடித்து விட,ஒரே நொடியில் சுதாரிப்பார்.சம நிலை அடைவார். ஒரு explicit demonstrative பாணியில் நடிப்பார். நல்ல தன்மையை வளர்த்து கொள்ள விழையும் ஒருவனின் துடிப்பு அதில் நன்கு தெரியும். சரோஜா தேவியை முதல் முறை பார்த்து, ஒரு ஆச்சர்யம் கலந்த ஆசை பார்வை வீசும் போதும்,பிறகு ,உங்கள் பெண்ணின் வாழ்வு மலரட்டும் என்று சரோஜா தேவியிடம் திரும்பி ,ஒரு நொடி அர்த்தமுள்ள வாஞ்சையுடன் பண்ணும் gesture , deep seated trauma with shock and despair என்பதை காட்டும் சிறு வயது சம்பந்த பட்ட காட்சிகள், கால்கள் இழந்ததை உணரும் தருணம்,தனித்திருக்க விரும்பவதை வறட்சியுடன் சொல்வது எல்லாம் அற்புதம். நடிகர் திலகம் ,விஸ்வரூபம் எடுக்கும் இடங்கள்,, சந்தேகம் சூழ்ந்து மிருக உணர்ச்சி தலை தூக்கும் இடங்கள்.ஆசையுடன் ,தன் நிச்சயிக்க பட்ட பெண்ணை வெறிக்கும் எஸ்.எஸ்.ஆரை பார்த்து ஆத்திரப்பட்டு கத்தும் இடம், feeling of inadequacy யினால், விபரீத கற்பனையில் மூழ்கி(mind picture gives rise to restive passion and subsequent revenge attitude ),மிருக குணத்தில் தன்னை அமிழ்த்தும் இடங்களில்,அடடா முழு படமும் மிருகமாகவே இருந்திருக்கலாமே என்று ஏங்க வைக்கும் நடிப்பு.
இந்த படத்தை உயரத்தில் தூக்கி நிறுத்துவது, கதை,திரைக்கதை , எடிட்டிங், இயக்கம்,பாடல்கள்,இசை,சக நடிக-நடிகையரின் அபார பங்களிப்பு ஆகியவை. சிறிது சறுக்க வைப்பது out -dated தூய தமிழ். அதுவும் ஒரே ஒரு பாத்திரம் மட்டுமே தூய தமிழ் பேசும். நல்ல வசனங்களை கொண்டிருந்த ஆலய மணி,ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் இந்த வகை வசனங்கள் பெரும் குறையாக படும்.
மிக மிக குறிப்பிட பட வேண்டியது எஸ்.எஸ்.ஆரின் அபார நடிப்பும்,சரோஜா தேவியின் நல்ல பங்களிப்பும்.(பாலும் பழமும்,இருவர் உள்ளம் போல்)
விஸ்வநாதன்-ராமமூர்த்தி -கேட்கவே வேண்டாம். full form இருந்த போது வந்த படம்.கண்ணதாசன் - இரட்டையர் இசையில், கண்ணான கண்ணனுக்கு,தூக்கம் உன் கண்களை ,மானாட்டம்,பொன்னை விரும்பும், கல்லெல்லாம் மாணிக்க, சட்டி சுட்டதடா,எல்லாமே பயங்கர ஹிட் பாடல்கள்.படத்திலும் மிக நல்ல முறையில் படமாக்க பட்டிருக்கும்.
பட துவக்கமே ,அன்றைய ரசிகர்களுக்கு shock value கொண்டதாக பட்டிருக்கும். கதாநாயகிகள் கற்புக்கரசிகளாய் வலம் வந்த இந்திய திரையில் infatuation பற்றி பேசியது சாதா விஷயமல்ல. அன்றைய முதல் இடத்தில் இருந்த ஸ்டார் நடிகரின் படத்தில் இரண்டாம் ஹீரோ கதாநாயகியுடன் டூயட் பாடியது, கதாநாயகனை விட ,நண்பனை உயர் குணத்துடன் சித்தரித்தது எல்லாவற்றையும் பார்த்தால், நடிகர் திலகம் என்பவர் எப்படி நல்ல படங்களுக்காக ஒத்துழைத்தார் என்பது இமேஜ் இமேஜ் என்று ஓவர்-மார்க்கெட் செய்யும் இளைய தலை முறைக்கு பாடம்.
(தொடரும்)
ஆலய மணி- 1962 -part -3
ஆலய மணியில் எடிட்டர் ,இயக்குனர் கே.சங்கரின் பங்களிப்பு அபாரமானது. கத்தி மேல் நடப்பது போன்ற கதையமைப்பில் ,சிறிதும் சறுக்காமல், அனைத்தையும் லாஜிக் உடன் justify பண்ணும் இயக்கம்.ரசிகர்கள் விரும்பும் அம்சங்களையும் அழகாக கலந்து, காமெடி அது-இது என்ற கதையை தொய்ய வைக்காத அற்புத இயக்குனர். trauma சம்பந்த பட்ட காட்சி, பின்னால் சிவாஜியின் மன போராட்ட காட்சி(ஆண்டவன் கட்டளையிலும் அற்புதமாய் வந்திருக்கும்-தேவிகாவினால் அலைக்கழிக்க படும் காட்சிகளில்) என்று, எடிட்டிங்,நடிப்பு,இசை,இயக்கம் எல்லாம் கை கோர்த்து படத்தையே உயர்த்தும்.
சில சுவையான தகவல்கள் உண்டு. சங்கர் எம்.ஜி.ஆரை வைத்து பணத்தோட்டம் படத்தை சம காலத்தில் இயக்கி வந்த போது,நிறைய re-take கேட்கும் போது எம்.ஜி.ஆர் நகைச்சுவையாக, நீங்க யாரையோ மனசிலே வைச்சி என்னிடம் ரொம்ப எதிர்பாக்கிறீங்க. இந்த ராமச்சந்திரனிடம் என்ன முடியுமோ அதை மட்டும் கேளுங்க என்றாராம்.(எம்.ஜி.ஆருக்கு மிக பிடித்த சிவாஜி படங்கள் ஆலய மணி,தில்லானா மோகனாம்பாள் என்று கேள்வி)
இந்த படத்தை பொறுத்த வரை முதல் ஹீரோ கதைதான். ஜி.பாலசுப்ரமணியம் ஒரு மூல கதை மேதையாகவே போற்ற பட்டார்.(கே.எஸ்.ஜி, சோலைமலை,செல்வராஜ் போல்) சிக்கலான அமைப்பை கொண்ட கதைக்கு, மிக சிறந்த திரைகதையை கொடுத்த ஜாவர் பாராட்டுக்குரியவர்.
கோப காரன்,பொறாமைக்காரன், பாதி மனிதன்-பாதி மிருகம்,அழித்து விடும்(nihilistic ) உணர்வு மிகும் possessive உணர்வு கொண்ட மனிதன்,personality disorder இனால் வரும் நம்பிக்கை குலைவு(Feeling of inadequecy accentuates it), அதனால் எழும் பின்னலான மனித மன உணர்வுகள், மனித உணர்வுகளில் கறுபபு கறை படிந்து , அதன் நிழலில் மனசாட்சியின் குரலை நசித்து, மிருக வசப்படும் உணர்வை, மிகையில்லாமல், melo -drama குறைத்து , positive ஆக சொன்ன மிக மிக சிறந்த படைப்பு ஆலய மணி என்று அடித்து சொல்லலாம்.
(முற்றும்)
Excellent Mr. Gopal,
You analysis about Aalayamani, took your taste to new hights.
Aalayamani came as in Rank 1 at box office in 1962.
சிறப்பான அலசல் திரு கோபால். படத்தை இன்னும் நான் பார்த்ததில்லை. உங்களின் கட்டுரையை வாசித்த பிறகு ஆலயமணி என்னுள் புதியதொரு அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. நன்றிகள் பல.
:notworthy:
நன்மைக்கும் தீமைக்கும் நடுவே, மனித தன்மைக்கும் மிருக தன்மைக்கும் நடுவே, பாசத்திற்கும் பொறாமைக்கும் நடுவே ஊசலாடிக் கொண்டிருக்கும் ஒரு சின்ன கயிற்றில் நடந்து செல்லும் ஒரு விளிம்பு நிலை மனிதனான தியாகுவைப் பற்றிய ஆய்விற்கு நன்றி.
Split personality என்ற வார்த்தையெல்லாம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆவதற்கு முன்பே அத்தகைய ஒரு மனிதனை நம் கண் முன் காட்டிய நடிகர் திலகம் அவர்களை நாம் என்ன சொல்லி பாராட்டுவது? அதற்கு உறுதுணையாக் இருந்த K.சங்கர், G.பாலசுப்ரமணியன், ஜாவர் மற்றும் P.S. வீரப்பாவிற்கும் நமது நன்றியும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.
தமிழ் சினிமா கதாநாயகர்களில் என்றுமே மறக்க முடியாத ஒரு இடத்தை தக்க வைத்திருக்கும் தியாகு தன் 50 வயது பொன் விழாவை பூர்த்தி செய்யும் இந்த நேரத்தில் தங்கள் ஆய்வு வெளிவந்திருப்பது மிகப் பொருத்தம். [ஆலய மணி - 23.11.1962 - 23.11.2012].
என்ன, நடிகர் திலகத்தைப் பற்றியும் அவரின் நடிப்பில் மிளிரும் காட்சிகளை பற்றியும் அதிகமாக எழுதி இருக்கலாம். குறிப்பாக my meena is great and great பற்றி சொல்லியிருக்கலாம். கல்யாண ரிசப்ஷனுக்கு கூட்டிக் கொண்டு போக சொல்லும் அந்த காட்சியில் சேகர் என்று அந்த நண்பனை விளிக்கும் முறையே எப்படி மாறும் என்பதையும் அந்த வாய்ஸ் modulation பற்றியும் சொல்லியிருக்கலாம்.
அந்த "எஜமான் நடையழகை பார்த்தியாடா" பற்றியாவது கொஞ்சம் எழுதியிருக்கலாம்.
ஆனால் அந்த விளிம்பு நிலை மனிதனின் மன நிலையைப் பற்றி எழுதிய விதம் top. வாழ்த்துக்களும் நன்றியும்.!
அன்புடன்
நண்பரே,
ஒரு சின்ன மறுப்பு.
split personality என்பது வேறு. ஓபன் ஆக சொல்ல படா விட்டாலும் கிட்டத்தட்ட எங்கள் தங்க ராஜா தான் அந்த type .(though this is not explicitly stated in that film,more or less Dr.Raja's bairavan transformation fits the bill).
Dissociative identity disorder (DID), also known as multiple personality disorder (MPD),[1] is a mental disorder characterized by at least two distinct and relatively enduring identities or dissociated personality states that alternately control a person's behavior, and is accompanied by memory impairment for important information not explained by ordinary forgetfulness. These symptoms are not accounted for by substance abuse, seizures, other medical conditions or imaginative play in children.[2] commonly known as split personality.
ஆலயமணியின் தியாகு கீழ்கண்ட வகை.
borderline personality (disorder) a personality disorder marked by a pervasive instability of mood, self-image, and interpersonal relationships, with fears of abandonment, chronic feelings of emptiness, threats, anger, and self-damaging behavior.
குறுகிய காலத்தில் நூறாயிரம் கண்ட நண்பர்கள் திரிக்கு எங்கள் வாழ்த்துக்கள். மூவேந்தர்களாய் திரியை காத்து கொண்டிருக்கும் பம்மலார்,வாசுதேவன்,ராகவேந்தர் ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். . பம்மலார் மீண்டும் பதிவுகள் இடும் நாளை நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறோம்.
Dear Gopal,
Thanks for correcting me. Sort of a confusion may be due to midnight posting.
Regards
Sasidharan,
When you listed out the negative rolls by Sivaji, you forgot a very important roll Engineer Rajan in 'Andha Naal'.
[QUOTE=Vankv;975317]Sasidharan Sir,
This old posting recap for your eyes as you mentioned Vikraman.(My favourite character too!)
I have major regret in life for not being born on 7th Feb instead of 7th Nov.7th Feb is the date of release of Uthama Puthran,my No 1 rating of NT roles(Even NT rated it so,I suppose) .Though I share my date with Kamal&CV Raman and born on the date of release of Kathavarayan(One of the favourites of our dear Premium hubber"Vasu the Great"),I cant help carrying this remorse.I decided to name my 2 boys(when I was only 11!!??) as Vikram(Uthama Puthran) & Vijay(Deiva Magan),but I could implement my plan with the second as he was born on VijayDashmi Day.vikram is waiting for my Grand Son.
Vikram-In short,first time in the history of Indian Cinema(Modesty prevents me from quoting world),an actor is depicting a character with so many hues with underlying emotions without affecting the flow of a clean entertainer and makes it enjoyable too(Thanks to sridhar&Prakash Rao).
Vikram-A Narcist,Selfish,Pervert,Spoilt Child distanced from his mother since birth(No love No Hate),Highly egoistic ,accepts challange without thinking when ego is offended,Scant regard or concern for others including his close ones(Even give them up if it suit his means with a tinge of vicarious sadism),Easily influenced by his mentor(Eduppar Kai pillai in Tamil),Opportunist when it comes to crisis.
Is it not strangulating even when try to explain!! Imagine ,an actor without formal education in Acting like Marlon Brando(Elia Karzan),No DVDs to copy,No predecessors,No directors of world calibre,Simultaneously acting in 4 movies unlike todays artists, depicting this role to such a perfection!!!!You know even today ,I marvel at this role more than any of his other ones.
To substantiate my Character study,I am enlisting Scenes but I am not going into indepth analysis as I dont want to stand between you and your viewing experience.
Scene 1- Vikram's day of carnation ,his interaction with women around and his public speech.
Scene 2- First time his meet with Minister's daughter and his expressions to his uncle on his desire.
Scene 3- His first encounter with Mother where he sits and swings in a swing without a word.
scene 4- The scene inwhich Minister's daughter is brought to Andhapuram(Kathiruppan)
Scene 5- His discussions with his uncle on impending plans to capture the twin brother.
Scene 6- His expression of displeasure on his uncle on the failed attempt to capture Pathipan.
Scene 7- The scene inwhich Parthipan is captured and his reaction to Parthipan and Amudha.
Scene 8- After imprisoning Parthipan,his mercurial swings on his mother,uncle and the captured brother's mixed bag interractions.
Scene 9- When Parthipan decides to impersonate, Vikram's evasive and sort of delineation from his past almost a begging tone(like a child).
Scene 10- Climax where his anger peaks with his hurt ego.
I suppose that is the first and only movie where an actor shows that when he tries to imposter the other,it is not to 100% perfection like expression of his eyes and lesser perfection in body language .Wah! a third dimension to relish when Parthipan tries to act like Vikram and vice versa!!
The only movie inwhich I hated the hero and loved Villain so so so much.
பார்த்தசாரதி சார்,
உங்கள் அன்னை இல்லம் பதிவை மிக மிக ரசித்தேன். என்ன ஒரு நுணுக்கமான கவனிப்பு!! பிரத்யேக ரசனையின் சொந்தக்காரரே! நாங்கள் பிரம்மாண்டத்தை சுருக்கி வரையும் சாதாரணர்கள். நீங்கள் குறுகியதை விரித்து விவரிக்கும் உன்னத கற்பனையாளர். நீங்கள் குறிப்பிட்ட படியே,
பல பொருளாதார தடைகள், நடிக நடிகையர் கால்ஷீட் பிரச்சினை(எல்லோரும் சேர்ந்து தோன்றும் காட்சிகளில் அதிக பிரச்னை),ஒரே நடிகர் ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு படப்பிடிப்புகள்,நேர பற்றாக்குறை,பிலிம்-ரோல் பற்றாக்குறை என்ற பல்வேறு கஷ்டங்களிலும்,
கஷ்டமேயில்லாத ஒரே விஷயம், நடிகர் திலகத்தின் continuity shots தான்.மிக அழகாக கொடுத்துள்ளீர்கள்.
மிக்க நன்றி ஆதி ராம் , வெங்கி ராம், முரளி,சசிதரன்.
November - 7,1958 - காத்தவராயன் தினம்.
இன்றைய நாளில் பிறந்து இன்று பிறந்த நாள் காணும் எங்கள் விக்கிரமனே!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள கோபால்ஜி
இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
அன்புடன்
நன்றி சகோதரா. ஆயிரம் வாழ்த்துக்கள் எனக்கு கிடைத்தாலும், இந்த திரியின் சகோதரர்களின் வாழ்த்து ,என்னை என் நடிப்பு தெய்வமே வாழ்த்தியதற்கு சமம். என் வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் தந்த என் உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும் நடிகர் திலகம் என்ற நடிப்பு கடவுளை தொழுதே என் பொழுதை துவக்கினேன்.
நல்ல விஷயங்கள் எந்த மொழியில், உலகின் எந்த பகுதியில் இருப்பினும்,அதை தமிழுக்கு கொண்டு வந்து ,தமிழுக்கு வளம் சேர்க்க சொன்னவர் பாரதி.பாரதியாரின் ஆணையை சிரமேற்கொண்டு பல நல்ல வெளிநாட்டு திரைப்பட காவியங்களை, பல நல்ல பிற மொழி கதைகளை,படங்களை,பல நல்ல இந்திய நாடகங்களை,நமது மரபாம் தெரு கூத்து, மற்றும் காவியங்களை தமிழ் திரைப்படங்களுக்கு கொண்டு வந்து, புதிய சிந்தனைகள்,பரிசோதனை முயற்சிகள் ,புதிய வித்தியாச கதை களம், தமிழில் கொண்டு வர தளம் அமைத்த முன்னோடி நமது முழு முதல் நடிப்பு கடவுளாம் நடிகர் திலகமே. அது மட்டுமன்றி தமிழில் வெளி வந்த சிறந்த நாவல்கள்,கதைகள் திரைப்படங்களாக காரணமாய் இருந்த முன்னோடி.
நடிகர் திலகம் நடித்து படமான சில சிறந்த தமிழ் கதைகள்-
கள்வனின் காதலி- அமரர் கல்கி-
ரங்கோன் ராதா- அமரர் அண்ணா.
புதையல்- கருணாநிதி
மரகதம்- வழுவூர் துரைசாமி
பாவை விளக்கு- அகிலன்
பெற்ற மனம்- மு.வரதராசனார்.
குலமகள் ராதை- அகிலன்
இருவர் உள்ளம் - லட்சுமி
தில்லானா மோகனாம்பாள்- கொத்தமங்கலம் சுப்பு.
காவல் தெய்வம் - ஜெயகாந்தன்
விளையாட்டு பிள்ளை-கொத்தமங்கலம் சுப்பு.
நடிகர் திலகத்தின் சிஷ்யன் கமல்ஹாசனோடு இணைந்து பிறந்தநாள் காணும் நடிகர் திலகத்தின் ரசிகன் கோபால் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
happy birthday wishes Mr.Gopal. Your contributions to this thread are worthwhile in stabilizing the name and fame of our emperor of acting NT.It is time for all fans of NT we tried for getting the coveted Oscar life time achievement award by suitably projecting the acting versatility of NT on a global level. NT is second to none who have already got this award
Dear Mr. Gopal,
Wish you many more happy returns of the day.
Regards,
R. Parthasarathy