அனைத்து நண்பர்களுக்கும்,
இதைப் பற்றிய மேலும் சில எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். அதன் பிறகு எதிர் வினையாற்ற நினைப்பவர்கள் அதை செய்யலாம்.
அன்புடன்
Printable View
அனைத்து நண்பர்களுக்கும்,
இதைப் பற்றிய மேலும் சில எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். அதன் பிறகு எதிர் வினையாற்ற நினைப்பவர்கள் அதை செய்யலாம்.
அன்புடன்
நடிப்புத் திமிங்கிலத்தின் 'Close-up' encounters of the first kind!: Part 1 : படித்தால் மட்டும் போதுமா (1962)
அண்ணன் காட்டிய (ஆஸ்கார்) வழியம்மா ? !(நம் வாழ்நாளில்) வசப்படுமா ஆஸ்காரின் வாழ்நாள் சாதனையாளர் விருது?! (NT இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் (Empty) தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே! (நாம் எடுத்துரைத்தாலொழிய) அவர் (ஆஸ்கார்) ஏதுமறியாரடி ஞானத்தங்கமே ?!
(நாம் ரசிகர்களாய்) படித்தால் மட்டும் போதுமா
நடிகர்திலகத்தின் வைர நடிப்புப் பட்டைகள் தீட்டப்பட்டு மெருகேறிக்கொண்டே வந்த காலகட்டத்தில் புதியபறவை வார்ப்பில் முன்னோடியாக அமைந்த குற்ற உணர்வு கலந்த தாழ்வுமனப்பான்மை ஆட்டிப்படைக்கும் கையாள்வதற்கு மிக சவாலான முன்கோபமும் மூர்க்கமும் கண்ணை மறைக்கும்......ஆனால் ரசிகர்கள் கண்ணிமைக்க மறுக்கும்....வேறு எந்த உலகளாவிய நடிப்புக்கலைஞனும் தேர்வு செய்யவே அஞ்சும் குணாதிசயத்தை நடிகமேதையின் close-up shots வெளிப்படுத்திய குறியீடு ....ஆஸ்கார்களே தலைவணங்கும் அற்புத நடிப்பிலக்கணக் கையேடு!
Seeing is believing the unbelievable and perceiving is relieving the apprehensions !
நடித்தால் மட்டும் போதுமா !!?.........
https://www.youtube.com/watch?v=Eeod3MiL-YQ
https://www.youtube.com/watch?v=o17JQ6TWP30
https://www.youtube.com/watch?v=7Cq8mVH9p6o
நடிப்பின் உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து நவரச நதிகளாய்ப் பாய்ந்து நடிப்புக்கடலில் சங்கமிப்பதைப் பார்த்த பின்புமா.....!
https://www.youtube.com/watch?v=sJPUF-RxJzw
மோஸசைப் பார்த்து பெருங்கடலே பிளந்து வழிவிட்டதுபோல் நடிகர்திலகத்தின் நடிப்புத் தேஜசைப் பார்த்து ஆஸ்கார் கதவுகள் திறந்து வழிவிடுமா ??
Oscar Award winning Charlton Heston as Moses parting the sea in his magnum opus 'Ten Commandments' :
https://www.youtube.com/watch?v=OqCTq3EeDcY
இன்று கப்பல் ஒட்டிய தமிழன் திரு வஉசி அவர்கள் நினைவு நாள்
இந்திய சுதந்திர போராட்டத்திற்கு பெரும் பாடுபட்டவர்களுள் திரு வ உ சி அவர்கள் மிக முக்கியமானவர். செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்பாடார், சிறையில் செகிழுத்து துன்பப்பட்டவர்.
இவருடைய வாழ்கை வரலாறு படமாக்கப்பட்டபோது, நடிகர் திலகம் அவர்கள் சிதம்பரமாக திரையில் வாழ்ந்துகாட்டினார். இதை பார்த்து, சிதம்பரனாரின் மகன் என்னுடைய தந்தையை எனக்கு மீண்டும் காண ஒரு வாய்ப்பு ஏற்பட்டது என்று பாராட்டி பேசினார்.
http://www.youtube.com/watch?v=skpI1Gl5cus
நன்றி நடுவர் அவர்களே.
தங்கள் நடுநாயகமான தீர்ப்புக்கு நன்றி!
எனக்கும் குறிப்பிட்ட நடிகரை கேலி பேச வேண்டும் என்ற எண்ணம் சுத்தமாக இல்லவே இல்லை. அந்த கற்பனை சம்பாஷணை வேண்டுமென்றேதான் என்னால் எழுதப் பட்டது. ஏனென்றால் நடிகர் திலகத்தைப் பற்றி பக்கம் பக்கமாக பதிவு போடும் நம்முடைய திரியின் அங்கத்தினர்கள் குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டனர். நடிகர் திலகத்திற்காகவே நேரம் ஒதுக்கி உழைக்கும் செந்தில் சார், ரவிகிரன் சார், நீங்கள், கோபால் மற்ற பழைய உழைப்பாளிகளின் மணிக்கணக்கான உழைப்பு கேலிக்கும், கேள்விக்கும் உரியதானது.
இரண்டாவது சிவாஜியின் தீவிர வெறியன் என்று சொல்லிக் கொண்டு இணையத்தில் வலம் வரும் ஒரு சில ஜோரான அறிவாளிகளுக்கு சிவாஜி திரி உருப்பினர்களை ஏனோ அறவே பிடிப்பதில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை. எல்லாம் க(கா)ட்சி வேறுபாடுதான். எப்போதுமே இது போன்றவர்களால் பல சந்தர்ப்பங்களில் நமது உறுப்பினர்கள் அவமானப்படுத்தவே செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சிவாஜியின் மேல் பற்றுள்ளதை நான் மறுக்கவில்லை. அதற்குத் தலை வணங்குகிறேன். ஆனால் அதையும் மீறி வேறு சிலர் மீது பற்று ஆட்கொண்டதால்தான் இங்கே உறுப்பினர்கள் காயப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் உழைப்பு அசிங்கப்படுத்தப்படுகிறது. அந்தப் பற்றுதலை வெளிக்கொணரவே நான் போட்ட ஒரு வலை பதிவு அது. (வலை பதிவு என்றால் இணயப் பதிவல்ல) அதை நீங்களும் புரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு சுட்டிக் காட்டியுள்ளீர்கள். நன்றி!
இப்போது குறிப்பிட்ட நடிகரை நான் கிண்டல் அடித்த பதிவைப் போட்டதும் சில மணி நேரங்களில் அந்தப் பதிவை நீங்கள் எடுத்து விட்டீர்கள். அதற்கு காரணமும் சொல்லியிருக்கிறீர்கள். சிவாஜிக்கும் கீழே உள்ள ஒரு நடிகரை நான் வேண்டுமென்று மற்றவர்கள் உணர வேண்டுமென்று கிண்டல் அடித்ததுமே தங்களுக்கு அந்தப் பதிவை நீக்கச் சொல்லி நிர்ப்பந்தங்கள் நிச்சயம் உண்டாகியிருக்கும். அப்படி அவர்களுடைய அபிமான நடிகருக்கே அவர்கள் ஆதரவாய் ஒட்டுமொத்தக் குரல் கொடுத்து அந்தப் பதிவை எடுக்கச் சொல்லும் வேகம் இருக்கு போது உலகம் புகழும் சிவாஜியும், சிவாஜி ரசிகர்களும், பதிவாளர்களும் இங்கே அவமானப்படுத்தப்பட்டால் இங்கே உள்ளோருக்கு எவ்வளவு வேகம் இருக்கக் கூடும். பிறக்கக் கூடும். நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள். அதை அவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத்தான் அந்த கற்பனை உரையாடல் பதிவை நான் போட வேண்டியதாயிற்று. மற்றபடி யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல. தங்களுக்கு ஏற்படும் ரணம், வலி மற்றவ்ர்களுக்கும் அதே போலத்தானே இருக்கும் இருக்கும் என்று அவர்கள் இப்போது உணர்வார்கள் அல்லவா. அப்படி என் கணக்கு தப்பாய் இருந்தாலும் நீங்கள் அந்த நடிகர் அசிங்கப்பட வேண்டாம் என்ற நல்ல எண்ணத்திலோ அல்லது அந்த நடிகரின் ரசிகர்கள் ஓரளவிற்கு தங்களுக்கு நண்பர்களாயும்,கொஞ்சம் சிவாஜி ரசிகர்களாயும் இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் வம்பு எதற்கு என்ற எண்ணத்திலோ நீங்கள் என் பதிவை எடுத்திருக்கக் கூடும். அதனால் தவறில்லை.
ஆனால் அதே போல யார் யாராலோ சிவாஜி இங்கே அசிங்கப்படுத்தப் படும்போதும், அவமானப்படுத்தப்படும் போதும் இதே சீரியஸான நடவடிக்கை எடுத்து அந்த பதிவுகளை நீங்கள் நீக்கியிருந்தால் நான் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன். இதை மட்டும் ஜெட் வேகத்தில் நீக்கியிருக்கிறீர்கள். ஓ.கே.ஆனால் நடிகர் திலகத்தை குறி வைத்து தாக்கிய சில பதிவுகள் அப்படியே ராஜா போல ஜம்மென்று திரியில் அரியணை வீற்று அமர்ந்திருக்கின்றன இன்றுவரை. இதற்கு என்ன பதிலோ தெரியவில்லை. மறுபடியும் சொல்கிறேன். எனக்கு அந்த நடிகரை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அறவே கிடையாது. எனக்கும் கூட அந்த நடிகரைப் பிடிக்கும்.
நான் அப்படி ஒரு பதிவைப் போட்டதனால்தான் தாங்களும் அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு (தங்களுக்கு மிக நெருக்கமாக இருந்தாலும் கூட) மிக நாசூக்காக தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து நியாயத்தை தயங்கித் வழங்கி உள்ளீர்கள். இல்லையென்றால் அப்படி ஒரு பதிவே வந்திருக்காது என்று தான் நானும் நினைக்கிறேன். அதற்கு என் நன்றி.
எனக்கு சிவாஜி பிடிக்கும்... அவர் ரசிகர்களைப் பிடிக்காது.. அவரைப் பற்றி பதிவிடுபவன் பைத்தியக்காரன்... என்ற ரீதியில் இனி இங்கே பதிவுகள் வர வேண்டாம். எனக்கு பலாப் பழம் பிடிக்கும்... உள்ளே உள்ள சுளையை எவன் தின்னுவான் என்ற கதைப் போலத்தான் இது. நடிகர் திலகத்தை சிலாகித்துக் கொள்வதும் கொள்ளாததும் எங்கள் வேலை. அதற்கு யாருடைய அனுமதியும் இங்கே தேவை இல்லை. தன்னுடைய அபிமானி கேலி செய்யப்படக்கூடாது என்று நினைப்பது போலத்தான் அடுத்தவரும் இங்கு நினைப்பார்கள். இதைப் புரிந்து கொண்டால் சரி.
இன்னொன்று. இங்கு எல்லோரும் இளம் தலை முறையினருக்கு நடிகர் திலகத்தை கொண்டு செல்ல வேண்டும் என்ற பல்லவியை பாடுகிறீர்கள். அப்படின்னா என்ன? இப்போது நாம் எல்லோருமே கிட்டத்தட்ட ஒரே வயதை ஒத்த ரசிகர்கள். நம்முடைய பழைய கால சிவாஜி நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஆனந்தம் அடைகிறோம். நடுவர் நீங்கள் சொன்னது போல கமல், ரஜினி ரசிகர்கள் தங்கள் அபிமானங்களை மீறி சிவாஜி புகழைப் பரப்பிவிட மாட்டார்கள். அப்படியே சொன்னாலும் தங்கள் நடிகர்களுக்குக் கீழ்தான் என்று சொல்ல நிறைய வாய்ப்புண்டு. (ஒரு சிலரை விட்டு விடுவோம்) மற்ற இளம்தலைமுறை நடிகர்கள் ரசிகர்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம். இதில் எங்கே இளம் தலைமுறைக்கு சிவாஜியை எடுத்து செல்வது.
சிவாஜி செந்தில் சார் அழகாக சொன்னார். பல வரிகள் சாதிக்காததை ஒரு படக் காட்சி சாதிக்கும் என்று. அது ஒரு வகையில் உண்மையே.
என்னுடைய வீட்டின் கீழ் ஒரு பிளஸ் 2 மாணவி இருக்கிறாள். அவளிடம் நான் எப்போதும் சிவாஜி பற்றி பேசுவேன். அவள் போரடிக்காதீங்க அங்கிள் என்று ஓடுவாள். நான் விட மாட்டேன். பல சிவாஜி படங்களைப் பற்றி சொல்லி அவர் நடிப்பைப் பற்றி சொல்லிக் கொண்டே இருப்பேன். அவள் ரொம்ப போராக காணப்படுவாள். ஒருமுறை கௌரவம் கேசட் கொடுத்து அவளைப் பார்க்க சொன்னேன் பிடிவாதமாக. முதலில் மறுத்த அவள் பின் கேசட்டை வாங்கி கொண்டாள். அன்று மாலை நான் அந்த கேசட்டை வாங்கப் போகும் போது கௌரவம் படம் ஓடும் சப்தம் கேட்டது.. அந்தப் பெண் தனது தம்பியுடன் கௌரவம் படம் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அங்கே வருவது அவளுக்குத் தெரியவில்லை. நடுவில் ஒரு திரைசீலை மறைத்துக் கொண்டிருந்தது. நான் அக்காவும் தம்பியும் படத்தைப் பற்றி என்ன கமெண்ட் பண்ணுகிறார்கள் என்று ஒட்டுக் கேட்டேன். எல்லோருக்கும் இருக்கும் ஆர்வம்தானே. படத்தின் கண்ணா நீயும் நானுமா பாடல் காட்சிகள், அதைத் தொடர்ந்து காட்சிகள் ஓடுகின்றன. சிவாஜி அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறார். நானும் 5 நிமிடங்கள் நின்று அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனமாகக் காது கொடுத்துக் கேட்கிறேன்.
அந்தப் பெண் தன தம்பியிடம் இப்படி கொச்சையாக சொல்கிறாள்
'டேய் மெல்வின்! சிவாஜி சூப்பரா நடிக்கிறான் இல்லே. இன்னா ஸ்டைலா நடிக்கிறான் . அதான் மேல் வீட்டு அங்கிள் இப்படி பைத்தியம் புடிச்சி அலையுது'
இது ஒன்னு போதாதா அய்யா. சின்னப் புள்ளங்களையும் ஒரு தரம் பார்த்தாலே வசியப்படுத்த வச்சுடுவாரே அதுதான்யா சிவாஜி. என்னமோ சிவாஜி புகழ் பரப்பறதாம். இளைய தலைமுறைக்காம்.
ஒரு ஒரு கர்ணன் லட்சம் லட்சமா குழந்தைகளையும், இளைஞர்களையும் தன் பக்கம் இழுத்துப் போட்டுகிட்டன்யா. அத்தோடயா. அத்தனை போரையும் தன நடிப்பால அழ வச்சான்யா.
அதிலிருந்து நிறைய சிவாஜி படம் நல்லதா கொடுங்க அப்படின்னு கேட்டு வாங்கிப் போய் பார்ப்பாள். ஆனல் மனதார நேரில் பாராட்ட மாட்டாள். அப்புறம்தான் ரசித்து பேச ஆரம்பித்தாள். அவளுக்குப் புடிச்ச படம் தெய்வ மகன்.
நாம் நம்ம திருப்திக்கு பழைய நினைவுகளை மகிழ்ச்சியா பகிந்துக்கலாம். அதுக்குத்தான் திரி.அவர் நடிப்பை ரசிச்சு ரசிச்சி எழுதலாம். வலியப் போய் புகழ் பரப்ப சிவாஜி ஒன்னும் சொத்தை இல்ல. எல்லார் மனதுலேயும் ஈஸியாய் நுழைய அந்த சிவாஜி ஒருத்தருக்கே தெரியும். இதை விட என்னய்யா பாக்கியம் வேண்டிக் கிடக்கு. யாரை நம்பியும் சிவாஜி பொறக்கல்ல ..போங்கய்யா போங்க. அந்த ஆளு திறமை பேசும்யா. காலா காலத்துக்கும் அந்த ஆளு திறமை பேசும்.