-
அந்த நாள் ஞாபகம்: காதலைக் கொண்டாடிய அம்பிகாபதி
தமிழ் சினிமா பேசத் தொடங்கிய 1931-க்குப் பின்னர் அதன் ஒரே கருப்பொருளாக இருந்தது புராணம்… புராணம்… புராணம் மட்டுமே. 1934-ல் நிவாஸ் சினிடோன் படக் கம்பெனி ‘ நிவாச கல்யாணம்’ என்ற புராணப் படத்தைத் தயாரித்தது. இதுதான் மதராஸில் தயாரான முதல் பேசும்படம். இதன்பிறகு தமிழ் சினிமா மதராஸில் மட்டுமல்ல சேலத்திலும் கோவையிலும் சொந்தக்காலில் நிற்கத் தொடங்கியது. புராணம் மெல்ல மெல்ல அதற்குப் புளிக்க ஆரம்பித்தது. அதற்கு அறிகுறியாக 1935-ல் வெளியான ‘ மேனகா’ திரைப்படம் வெளியானது. இதுவே தமிழ் சினிமாவின் முதல் சமூகப் படம்.
முதல் முழுநீளக் காதல்
மேனகா வெளியான பிறகு சமூகப் படங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ஆனால் ராஜா சாண்டோ போன்ற முன்னோடிகளைத் தொடர்ந்து தமிழ் சினிமாவுக்குப் புது ரத்தம் பாய்ச்ச ஒரு அந்நியர் வந்தார். அவர் நாம் கொண்டாட வேண்டிய புண்ணியர் எல்லீஸ் ஆர். டங்கன் என்றால் அது மிகையல்ல. அவரது வருகைக்குப்பிறகு புராண, வரலாற்று படங்களில் ஒலித்து வந்த உரையாடல் தன் மொழியின் சட்டையை உரித்துப்போட்டது. ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் புதிய பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டின. அவரது இயக்கத்தில் 1937-ம் ஆண்டு வெளியான ‘அம்பிகாபதி’ தமிழ் சினிமாவின் முதல் முழுநீளக் காதல் திரைப்படமாக மிளிர்ந்தது. துயரக் காவியமாக அது அமைந்தபோதும் அதில் காதல் கொண்டாடப்பட்டது. பல சாதனைகள் முதல் முறையாக நிகழ்த்தப்பட்டன. அவற்றைக் காணும் முன் அதன் கதையைக் கேளுங்கள்.
கவிஞனும் இளவரசியும்
அது பத்தாம் நூற்றாண்டின் சோழப் பேரரசு. கலிங்கம்வரை கட்டியாண்ட மூன்றாம் குலோத்துங்க சோழன் காலம். அவனது அரசவையில் ரத்தினமாக மின்னியவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர். அவரது வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்போது அவரது மகன் அம்பிகாபதி
(எம்.கே. தியாகராஜ பாகவதர்) பாட மாட்டானா!? தந்தையைப்போல் கவிதைத் தமிழில் சிறந்து விளங்கிய அந்த இளங்காளை போர்க்களத்தில் வாள் சுழற்றுவதிலும் சுத்த வீரன். கலிங்கப்போரில் தன் உயிரைக் காத்த காரணத்துக்காக அவனுக்கு வைர வாளைப் பரிசளிக்கிறார் மாமன்னன் குலோத்துங்கன். அதைக் கொண்டு தனது சகா ருத்ரசேனனோடு (பாலைய்யா) விளையாட்டுக்காக வாளைச் சுழற்றுகிறான் அம்பிகாபதி. அப்போது அவனது வீரத்தையும் அழகையும் ஒருங்கே காணும் இளவரசி அமராவதி(எம்.ஆர். சந்தான லட்சுமி) அந்தக் கணமே அவன் மீது காதல் கொள்கிறாள். வாள் வீச்சின் முடிவில் சிதறிய முத்துமாலைபோலச் சிரித்த இளவரசியைக் கண்டு அம்பிகாபதியும் காதலில் விழுகிறான். அவளைக் காண ஏங்கும்போது இளவரசியின் தோழி செய்தியுடன் வருகிறாள். அமராவதியைக் காண அந்தப்புரத்துக்கு வரும்படி அழைக்கிறாள். அம்பிகாபதியை சந்தித்துத் திரும்பிய தோழிக்கு உடம்பைப் பிடித்துவிட்டு ஒரு இளவரசி பணிவிடை செய்யும் காட்சி அதற்கு முன் இல்லை. காவலை மீறி அந்தப்புரத்துக்குள் நுழைந்ததும் முல்லைக்கொடி காற்றில் சிலுசிலுக்கும் உப்பரிகையில் இளவரசியைக் காண்கிறான் அம்பிகாபதி. அவன் தன்னைக் காண வந்துவிட்ட இன்ப அவஸ்தையோடு..
“ நீங்கள் காவலாளிகள் கண்களில் பட்டால் அபாயம் நேருமே?” என்று படபடக்கிறாள் அமராவதி.
“அவர்கள் கண்களைவிட உன் கண்களில்தான் அதிக அபாயம் இருக்கிறது!” இது அம்பிகாபதி. ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் – ஜுலியட்டும் சந்தித்துக் கொண்ட காட்சியை அப்படியே இங்கே பொருத்திவிட்டார் இயக்குநர் டங்கன். காதல் கனிரசம் சிந்திய அந்தக் காட்சியை ரசிகசிகாமணிகள் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே இருந்ததில் ஓராண்டு காலம் திரையரங்குகளில் ஓடிய சாதனை படைத்த முதல் தமிழ்த் திரைப்படமாக அம்பிகாபதி சாதனை வெற்றியைச் சந்தித்தது.
புதிய காட்சி மொழி
அம்பிகாபதியின் கனவில் அமராவதி தோன்றுகிறாள். “அமராவதி... அமராவதி...” என்று உருகிக்கொண்டே தூக்கத்திலிருந்து எழுகிறான் அம்பிகாபதி, இதைக் கண்டு பதறும் கம்பர், “ கனவுக்கும் நினைவுக்கும் உனக்கு வித்தியாசம் தெரியாமல் போய்விட்டதா? உன் கனவு கனவாகவே இருக்கட்டும். நினைவில் இருந்தால் அதை இப்போதே கொன்றுவிடு”
என்று எச்சரிக்கை செய்கிறார்.. “ அதற்கு என்னை நானே கொன்று கொள்வதே சரி” என்கிறான் அம்பிகாபதி.
“முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதில் ஏதாவது அர்த்தம் உண்டோ? சக்கரவர்த்தி குலோத்துங்கனின் மகள்
எங்கே!? கவி பாடிப் பிச்சையெடுக்கும் கம்பனின் மகன் எங்கே!? அடேங்கப்பா! மகாமேருவுக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமல்லவா இருக்கிறது?” பெரிய இடத்தில் நமக்கு ஏனடா பொல்லாப்பு? அவளை மறந்துவிடடா கண்ணே!” எனக் கம்பர் மகனிடம் கெஞ்ச..” மறந்துவிடுவதா? காதலில் அவள் மாதவி, கற்பிலோ கண்ணகி. சூரியச் சந்திரர் அறிய அவளைக் காந்தர்வ திருமணம் செய்தாகிவிட்டது அப்பா” என்று அம்பிகாபதி சொல்ல, அந்தக் காட்சியில் தந்தையும் மகனும் மாறி மாறிப் பாடும் “ என்ன செய்தாய் என்னருமை மைந்த?”
என்ற புலம்பல் பாடல் அத்தனை வலியைக் கொண்டது. பின்னால் நிகழப்போகும் துன்பியல் முடிவுக்கு அதுவே முரணாக அச்சுறுத்த
அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் நம்மை அழுத்தும் விதமாகக் காட்சிகளைப் படத்தொகுப்பு செய்திருப்பார் டங்கன்.
சாதனைகள் பல
காதலனும் காதலியும் சந்தித்துப் பேசும் காட்சிகளில் அதற்கு முன் தமிழ் சினிமா பார்த்திராத குளோஸ்- அப் காட்சிகளை முதல் முறையாகப் பயன்படுத்தினார் இயக்குநர். வானில் நிலவு ரம்மியமாக எரிந்துகொண்டிருக்க முதல் முறையாக அம்பிகாபதியும் அமராவதியும் ஏரிக்கரையில் சந்தித்துக் காதலைக் கொண்டாடும் பாடல் முழுவதையும் க்ளோஸ் அப்பில் கொண்டாடியிருப்பார். அவர்கள் கன்னத்துடன் கன்னம் வைத்துக் காதலில் மருகும் காட்சியும் அதுவே முதல் முறை. இத்துடன் நின்றுவிடவில்லை எல்லீஸ் ஆர் . டங்கன். படத்துக்கு டிரைலர் என்ற ஒன்றை எடிட் செய்து, ’ விரைவில் உங்கள் அபிமான டாக்கீஸ்களில் வருகிறது’ என்று முதன் முதலில் விளம்பரம் செய்தார். அதேபோல் சமஸ்கிருத வார்த்தைகளே
இல்லாமல் படத்துக்கு வசனம் எழுதிய கதை வசனக்கர்த்தா இளங்கோவனுக்கும், இசையமைப்பாளர், பாடலாசிரியர் பாபநாசம் சிவனுக்கும் முதல் முறையாகப் படத்தின் டைட்டிலில் பெயர் போடச் செய்தார். அதுவரை இல்லாத நடைமுறை அது.
இந்தப் படத்தின் மெகா வெற்றி பாகவதரை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக்கியது. காதல் கதைகளை மையப்படுத்திய கருப்பு வெள்ளை திரைப்படங்கள் படையெடுக்க பாதை அமைத்துக் கொடுத்தது அம்பிகாபதி. இதன்பிறகு தேவதாஸ், நெஞ்சம் மறப்பதில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம், கல்யாணப் பரிசு, தேன் நிலவு என்று சினிமா வண்ணம்பூசிக் கொள்ளும் வரை காதலை கவுரவம் செய்த படங்களைப் பிரிதொரு சந்தர்ப்பத்தில் கொண்டாடுவோம்.
Courtesy: The Hindu - Tamil
-
எஸ்.வாசுதேவன் .. வாங்க.. கா..திக்குப் பொருத்தமான பதிவு.நன்றி.
*
காதலர் தினம் சார்பாக அனைவருக்கு (அ.கா இ.கா.எ.கா) ம் என் வாழ்த்துக்கள்.
**
**
மாடல் தான் அம்மா..
அதிர்ந்து பேச்மாட்டாள்
படித்திருக்கிறாள்
பேசுவாள் மென்மையாக
நன்றாகச் சமைப்பாள்
கற்றும் கொடுப்பாள் தங்கைக்கு
உடையெல்லாம் சுரிதார்
அல்லது லெக்கின்ஸ் டாப்ஸ்..
ஆஃபீஸிற்குப் போட்டு வருவாள்..
இன்னும் எதுவும் லோன் எல்லாம் வாங்கவில்லை..
ம்ஹீம் வீட்டிற்குத் தான் தருவேன்
என்றெல்லாம் சொல்லவில்லை
சின்னப் புன்சிரிப்பு
சின்னச் சின்ன வாக்கியம்
குட்டி குட்டி மின்னஞ்சல்
ரொம்பக் குட்டியாய் எஸ் எம் எஸ்
இதான் அவளிடம் பிடிக்கும்..
அவளுக்கு ஒரே தம்பி
அவனும் படிப்பில் விளையாட்டில் சுட்டியாம்
பார்த்ததிலலை
பாசம் உண்டு..ஆனால் திட்டவெல்லாம்
செய்யமாட்டாள்
எப்படி த் தெரியுமா
சிலசமயங்களில் போனில் பேசுவாள்..
அதில் தெரியும்..
அனாவசியச் செலவெல்லாம்
நானும் செய்ததில்லை அவளும்..
சாதாரண ஹோட்டல் தான் காஃபி
சரவண பவன் கூட கிடையாது
உனக்குப் பிடிக்கும்..
மாடல்ங்கறயேடா
மாடல் என்றால் முன்னோடி
என்ற அர்த்தம் அம்மா..
**
https://www.youtube.com/watch?featur...&v=IBUG2Am8mPo
(முன்னால் எழுதிய பாட்டு தான் கல் நாயக்.இப்ப ஓ.கேயா)
-
கவிதையும் கானமும்
//போன வருடம் – தொப்பி அணிந்த ஒரு நடிகையின் மென்சிரிப்புப் புன்னகையுடன் கூடிய புகைப்படம்..பின்னணியில் காஷ்மீரோ ஏதோ ஒரு குளிர்ப் பிரதேசம்..கொடுத்து பாட்டெழுதச் சொன்னார்கள் முக நூலில்..(அனுஷ்கா என நினைவு) கட்டளைக் கலித்துறையில் எழுதிப் பார்த்தேன்..
க.க.து என்பது ஒரு வரிக்கு பதினாறு வார்த்தைகள் ஒற்று நீக்கி வரவேண்டும் வெண்டளை பயில வேண்டும் கல் நாயக்.(வெண்டளைடீடெய்ல்லாம் அப்புறம்..)
கள்ளச் சிரிப்பதும் கண்பார்வை காட்டியே நின்றிருக்க
உள்ள உவகை உதட்டில் விரிந்தே மலர்ந்திருக்க
செல்கின்ற தென்றல சிலிர்ப்புடன் மங்கையுனைத் தீண்டவும்
துள்ளியே பார்த்தவென் தூயநெஞ்சின் சூடும் அறியாயோ
*
கண்ணன் நினைப்பில் கனிவுடன் பார்த்திடும் பார்வையதோ
கன்னச் சிவப்பின் காரணம் களிப்பெனக் காட்டுகையில்
தென்றலும் மென்மையாய் தேவதை தோளில் வருடுகையில்
எண்ணம் மயங்கியே எள்ளிச் சிரித்தவள் நின்றனளே
*
வாடி பயிரால் உருகிய வள்ளலார்தான் வந்தாலென்
தோடியில் தேன்போல் தீந்தமிழில் பாடுபவர் வந்தாலென்
மோடியோ மேல்யாரோ மானிலத்தில் ஜெயித்தே நின்றாலென்
ஊடி இளமை உணர்வில் சிரிக்கின்றேன் ஏகம்பனே.
*
ஓடி ஒளிய ஓரிடம் தடுக்க விழுந்ததுவும்
வாடி முகவலியில் வண்ணம் மாற வசைந்ததுவும்
பாடிப் பறந்தே பலவிடம் சென்ற பரவசமும்
ஊடி வருகுமே இத்தென்றல் தீண்டிடும் வேளையிலே
*
https://www.youtube.com/watch?v=O6Ss...yer_detailpage
-
கவிதையும் கானமும்..
**
பாட்டியின் டிரங்குப் பெட்டியினுள்
..பொன்னின் நிறத்தில் ஒருபுடவை
காட்டன் துணிதான் என்றாலும்
..காண்பாள் திறந்தே எப்பொழுதும்
நாட்டம் ஏனென நேற்றவளை
..நயமாய்க் கேட்க வெட்கித்தான்
’வேட்கை யுடனே உன் தாத்தா
..முதலில் தந்தார்” என்றாளே..
காஞ்சிப் பட்டுடுத்திக் கஸ்தூரிப் பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வரவேண்டும்
அந்தத் திருமகளும் உன்னழகைப் பெறவேண்டும்..
வீடியோகிடைக்கவில்லை.. ரோஜாரமணி என நினைக்கிறேன் வயசுப்பொண்ணு..
https://www.youtube.com/watch?featur...&v=fd2DwOSTn3U
-
கவிதையும் கானமும்..
நினைந்து நடக்கையிலே நேசமுடன் வந்தே
இணையாய் நடக்கும் நிலவாய் – இணையேவுன்
பொன்னைப் பழித்திடும் பூமுகம் நெஞ்சினில்
பின்னி வருகுது பார்
நெஞ்சினிலே உன் நிலவு முகம்…நினைவிலும் தொடர்வது அழகு முகம்
ஆசை முகம்
https://www.youtube.com/watch?v=b66g...yer_detailpage
-
சி.க.,
காதல் பதிவுகள் எல்லாம் அருமை. நம்பியார் பாடுவதுபோல் நன்றாகத்தான் இருக்கிறது. இன்னும் அந்த வில்லாத்த்தனமான கடுகடு முகம்தான் தெரிகிறது.
அப்புறம் அந்த காஞ்சி பட்டுடுத்தி வீடியோ நீங்கள் கொடுத்த லிங்கிலேயே கிடைக்கிறதே. பார்க்கவில்லையா? எனீவே இந்தாருங்கள் அந்த லிங்க். என்னால் இன்றும் நாளையும் அவ்வளவாக பதிய முடியாது என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
https://www.youtube.com/watch?v=ocGReZi_9Y8
-
Courtesy: The Hindu - Tamil
உன்னை முதன்முதலில் பார்த்தபோது
உன் பெயர்கூடத் தெரியாதெனக்கு
இப்போது இனிஷியல் முதற்கொண்டு தெரியும்.
அழகான பாதங்களில்
செருப்பின்றி நடக்கிறாய்
டைல்ஸ் தரையே ஆனாலும்
வீணாகிறதுன் பாத ஸ்பரிசம்.
கைரேகை சோதிடம் பார்க்க
எனக்குன் மலர்க்கரத்தைத் தருகிறாய்
அதை ஆண்டு அனுபவித்துவிட்டுத்
திருப்பித் தந்த பின்பு சிரிக்கிறேன்
எனக்குச் சோதிடம் தெரியாதென
மோதிர விரலை பூமத்திய ரேகை
எனச் சொன்னபோதே தெரியும்
என்று நீயுஞ்சிரிக்கிறாய்.
ரோஜாவைப் பார்க்கும்போது
உன் ஞாபகம் வருகிறது
உன் பெயர் ரோஜா
என்பதாலோ என்னவோ.
ஆனால் ரோஜாக்களைப்
பார்க்கும்போது வருவதில்லை
உன் பெயர் ரோஜாக்கள் அல்ல
என்பதாலோ என்னவோ.
குடையோ ஒதுங்கிடமோ
இல்லாத பெருமழையில்
தொப்பலாக நனைந்தபோதுதான்
பர்ஸில் உன் புகைப்படம்
நினைவுக்கு வந்தது
அட, உன் புகைப்படமும்
தொப்பலாக நனைந்திருக்கிறதே!
சத்தமில்லாமல் முத்தமே
கொடுக்க வராதா என்று
கிசுகிசுப்பாய்க் கடிந்துகொள்கிறாய்
நாங்களெல்லாம் அப்படித்தான்.
உனக்கொரு கட்டவுட் வைத்து
அதை என் முத்தங்களால்
அபிஷேகம் செய்யும் வரை
ஆறாது இந்த மனது!
ஒரு முத்தம்
ஒரே ஒரு முத்தம்
அதுவும் எனக்காகத்தான் கேட்கிறேன்
அதையும் உன்னிடம் மட்டும்தான் கேட்கிறேன்
அதற்கே இந்த கலாட்டா
இணையத்தில் பிரபலமான பெயர் பேயோன். நக்கல், நையாண்டி, எகத்தாளத்திற்கு பெயர் பெற்ற அனானி எழுத்தாளர் இவர். காதலர் தினத்தையொட்டி அவர் எழுதிய பத்து கவிதைகளிலிருந்து சில கவிதைகள் இங்கே பிரசுரிக்கப்படுகின்றன...
இது காமெடி மட்டுமே காயப்படுத்த அல்ல.
-
Courtesy: The Hindu - Tamil
ஒரு காதல் கதை
Love: Its elementary my dear Watson! என்று அவன் தன் ‘வாட்ஸ் ஆப்' ஸ்டேட்டஸை அப்டேட் செய்த அதே தினத்தில்தான், ‘அந்த நெற்றியில் ஒரு பொட்டு வைத்திருந்தால் ஒரு ஓவியம் முழுமையடைந்திருக்கும்' என்று அவள் புகைப்படத்தைப் பார்த்துச் சொன்ன அந்த நாளில்தான், அவன் காதல் நிராகரிக்கப்பட்டது!
அவனும் அவளும் நட்புடன் பழகிய காலத்தை நினைத்து, அவை தந்த கதகதப்பால் துணிவு கொண்டு, அவனது காதல் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து அவளுக்கு ஒரு கடிதத்தை எழுதினான். அதில் ஒரு காதல் கதையைச் சொல்லத் தொடங்கியிருந்தான்.
அந்தக் கல்லூரி நூலகத்தின் ஒரு மூலையில் இலக்கியப் பிரிவு இருந்தது. நூற்றுக்கணக்கான புத்தகங்களுக்கிடையில் ஷேக்ஸ்பியரின் புத்தகமும், வைக்கம் முகமது பஷீரின் புத்தகமும் அருகருகே ஒட்டிக்கொண்டிருந்தன. அந்தப் புத்தகங்களில் இருந்து ஜூலியட்டும், மஜீத்தும் ஒரு நாள் காணாமல் போனார்கள்.
அது மழைக்காலத்தின் முன்னிரவு. மழையின் முத்தங்களை வெறுத்த ஜனக்கூட்டம் தத்தமது வீடுகளில் அடைந்து கிடந்தது. இந்தக் காதல் பறவைகள் கைகளைக் கோத்துக்கொண்டு சாலையில் உலா வந்தன. அவ்வப்போது நிகழ்ந்த மின்னலில் புகைப்படம் எடுத்துக்கொண்டன.
ஜுலியட்டைத் தன் நட்சத்திர வீட்டுக்கு அழைத்துச் சென்றான் மஜீத். அகிரா குரோசவா, சத்யஜித் ரே, பாலுமகேந்திரா, குரு தத் என்று அவன் சேகரித்து வைத்திருந்த திரைப்படத் தொகுப்புகள் மேஜையில் சிதறிக் கிடந்தன. அந்தக் குவியலில் இருந்து ராஜ் கபூரின் 'பாபி' படத்தைத் தேர்வு செய்தாள் ஜூலியட். திரையில் இவர்கள் காதலித்துக்கொண்டிருந்தார்கள்.
ஏதோ ஒரு கணத்தில் அவன் கட்டிலில் கிடந்த கிதார் ஜூலியட்டுக்கு வியப்பைத் தந்தது. ‘ஹேய் நீ கிதார் எல்லாம் வாசிப்பாயா?' என்று கேட்டுக்கொண் டே அதை மீட்டத் தொடங்கினாள். கிதாரின் தந்திகளை ஸ்பரிசித்துக்கொண்டே அவள் தேவாலயப் பாடல் ஒன்றை பாட ஆரம்பித்தாள்....
‘Heaven is the wonderful place; filled with glory and grace; I want to see my saviours face...' என்று இறுதி வார்த்தையை முடிக்கும்போது அவள் கைகள் மஜீத்தின் கன்னங்களைத் தடவியது யதேச்சையானது என்று சொல்லிவிட முடியாது.
மஜீத்தோ பதிலுக்கு அவள் முகத்தை ஏந்தியவாறு, ‘உன் மீதான என் காதல் என்பது, எரியும் மெழுகின் ஒளியில் மத்தேயுவின் சுவிஷேசம் 22-ம் அதிகாரம் 37-ம் வசனத்தைப் படிப்பது போன்று புனிதமானது' என்றான்.
அவள் சிரித்தாள். அவன் சிரித்தான். அவர்கள் சிரித்தார்கள். இவ்வாறு சிரித்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் மனதில் ஏந்திக்கொண்டும் நள்ளிரவைக் கடந்தார்கள்.
முன்னிரவு வந்தது. தூக்கக் கலக்கம் கண்களில் தெரியும் ஜூலியட்டைக் கையில் ஏந்தியவாறு அவளது வீடான ஆர்கிட் மலரில் விட்டுவிட்டுச் சென்றான் மஜீத்.
அடுத்த நாள் ஜூலியட்டும், மஜீத்தும் புத்தகங்களில் இருந்து காணாமல் போயிருந்தது கல்லூரியில் பெரும் பிரச்சினையை உண்டு பண்ணியது. ஜூலியட்டின் வீடு, மஜீத்தின் அறை என எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தாயிற்று. அவர்களைக் காணவில்லை.
அவர்களின் இரு வீட்டாரும் சண்டை பிடித்துக்கொண்டார்கள். பிறகு அந்தச் சண்டை இரு சமூகங்களின் கலவரமாக மாறியது. அந்தக் கலவரத்தின் இறுதிச் சொட்டு ரத்தம் காய்ந்த பிறகும், அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பரிதி கண்ட பனிபோல அவர்கள் மறைந்து போயிருந்தார்கள்.
இது மற்றவர்களுக்கு வேண்டுமானால் கதையாக இருக்கலாம். அவர்கள் மறைந்து போனதற்கு மத வேற்றுமைதான் காரணம் என்பதை அனைவரும் அறிந்திருக்கலாம்.
ஆனால் என்னை நீ நிராகரித்ததற்கு, சமூகத்தின் உயர்ந்த இடத்தில் நீ இருக்கிறாய் என்பதும், நான் தாழ்ந்த இடத்தில் இருக்கிறேன் என்பதைத் தவிர வேறு என்ன காரணம்? இது மற்ற யாரையும் விட உனக்கும் எனக்கும் நன்றாகத் தெரியும். இல்லையா... ஜனனி!
-
கல் நாயக் நன்றி.. நோப்ராப்ளம்.. கா.ப உடுத்தி பாட் பார்க்கலை..லிங்க் மட்டும் கொடுத்த போது ஜேசுதாஸின் முகம் மட்டும் வந்தது.மறுபடி நன்றி..எப்போது முடியுமோ வாருங்கள்..
-
‘துட்டு படைச்ச சீமான்
அள்ளிக் கொட்டுற வார்த்தை போலே...’
கோபால்,
தங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... பதிவில் நான் விடுத்த அன்பான அழைப்பை ஏற்று மீண்டும் திரிக்கு வந்ததற்கும் நன்றி. பணிச்சுமையால் பதிலளிக்க ஏற்பட்ட தாமதத்துக்கு மன்னிக்கவும். இன்று கொஞ்சம் ஃப்ரீ. என் ரசனை பற்றி,.. குழிபறித்து... எச்சில் துப்பி.. என்று கூறியுள்ளீர்கள். பரவாயில்லை... லால்குடி உருக வைப்பார் என்றால் குன்னக்குடி குதூகலிக்க வைப்பார். என் தேர்வு குன்னக்குடி.
ஆனந்தவிகடன் எம்.டி. மரியாதைக்குரிய திரு.பாலசுப்பிரமணியன் அவர்கள் சமீபத்தில் அமரரானபோது, நீங்கள் அவருடைய நெருங்கிய உறவினர் என்று நண்பர்கள் பதிவிட்டதை பார்த்தபோதுதான் நானும் உங்களை இனம் கண்டு கொண்டேன்... பாரம்பரியமான குடும்பப் பின்னணி உள்ளவர் என்று. எதிர்ப்புணர்வு, வன்மம் இவற்றுக்கெல்லாம் எனக்கு அர்த்தமே தெரியாது. மாற்றுக்கருத்து உடையவர்களை எதிரிகளாக பார்ப்பவனல்ல நான். இங்குள்ள மாற்றுக் கருத்துள்ள நண்பர்களுடன் நான் பழகுவதை விடுங்கள். உங்களுக்கே அன்பழைப்பு விடவில்லையா? சில சமயம் நான் கடுமையாக பேச வேண்டி இருந்தாலும் அது எதிர்வினையாகத்தான் இருக்கும்.
சரி விடுங்கள்...... என்னதான் விஷமம் செய்து படுத்தினாலும் புத்திசாலியான சுட்டிக் குழந்தை எல்லாரையும் கவர்வது போல, நீங்கள் என்னதான் கடுமையாக வார்த்தைகளை அள்ளிக் கொட்டினாலும் கூட, விரும்பப்படுவதற்கு காரணம் உமது திறமையும் எழுத்தும்.
எம்எஸ்வி பற்றி நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் எனக்கும் உடன்பாடே. இங்குள்ள பலருக்கும் நினைவிருக்கும் என்று கருதுகிறேன். திரு. இளையராஜா அவர்கள் பெரிய இசைமேதையாக இருக்கலாம். ஆனால், 25 ஆண்டுக்கு முன் குமுதம் இதழுக்கு அளித்த அவர் அளித்த பேட்டியில், ‘டிஎம்எஸ்.க்கு bhaவமாக பாடத் தெரியாது’ என்று கூறியதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. எம்.எஸ்.வி.யின் 100 பாடல்களை பட்டியலிடுகிறேன் என்று சொல்லியுள்ளீர்கள். சுவைக்க காத்திருக்கிறோம்.
கல்நாயக்,
மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா... வைக் கேட்டு நானும் உருகியிருக்கிறேன். ராமாயணத்தை ஒரே சுலோகத்தில் விளக்கும் ஏக சுலோக ராமாயணம் என்று ஒரு சுலோகம் இருக்கிறது. சீதா ஜனனம்... லங்கா தகனம்... என்று வரும். சற்று யோசித்தால் கொண்டு வந்து விடுவேன். அது இருக்கட்டும். அது போல, இரண்டே வரிகளில்,
‘கோடு போட்டு நிற்கச் சொன்னால் சீதை நிற்கவில்லையே
சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே.’
என்று ராமாயணத்தை இரண்டே வரிகளில் முடித்த மேதைக்கு இது பெரிதா என்ன?
சின்னக் கண்ணன்,
கோபால் கூறியதைப் போல துள்ளி விளையாடுகிறீர்கள். பாராட்டுக்கள்.
------------------
பீகாரில் நிதிஷ் குமாரால் முதல்வராக்கப்பட்ட மாஞ்சி இப்போது நிதிஷூக்கே தலைவலியாக உருவெடுத்திருக்கிறார். நிதிஷூக்கு 130 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதால் மீண்டும் அவர் பதவிக்கு வர வாய்ப்பு உள்ளது என்றாலும் கூட, மாஞ்சியின் கொடுக்கும் தலைவலி நிதிஷே உருவாக்கிக் கொண்டது. மாஞ்சிக்கு உரிய மரியாதையை அவர் தரவில்லை.
மாஞ்சி கூறிய கருத்து கவனிக்கத்தக்கது. ‘‘ நான் முதல்வர் என்றாலும் கூட எனக்கு கீழே உள்ள அமைச்சர்களே என்னை மதிப்பதில்லை. அவர்கள் என்னை தரக்குறைவாக பேசினர். இதை நீங்கள் அனுமதிக்கிறீர்களா? என்று நிதிஷிடம் நேரடியாகக் கேட்டேன். அவர் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். நான் ஏழைதான். ஆனால் தன்மானம் மிக்கவன்’ என்று கூறியுள்ளார். கடுமையான வார்த்தைகள் எவ்வளவு தீவிரமான விளைவுகளுக்கு காரணமாகி விடுகிறது?
‘ஆட வந்த தெய்வம்’ திரைப்படத்தில் திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்களும் இசையரசியும் பாடிய ‘சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே...’ எனக்கு பிடித்த இனிமையான பாடல். மடித்து விடப்பட்ட முழுக்கை சட்டையும் லுங்கியுமாக வித்தியாசமான ‘சிக்’ மகாலிங்கம். ‘மாமா’வின் இசையில் மழையை மையமாக வைத்து மதுரக் கவிஞர் திரு.மருதகாசி எழுதிய வரிகள் பொருள் பொதிந்தவை.
‘‘கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே- அவன்
கஞ்சிக்காக கலங்கி விடும் கண்ணீர்த் துளியைப் போலே (சொட்டு சொட்டுன்னு)
‘‘முட்டாப் பயலே, மூளையிருக்கா (இந்த இடத்தில் மகாலிங்கத்தின் எக்ஸ்பிரஷன் ரசிக்கத்தக்கது.)
என்று ஏழை மேலே, துட்டு படைச்ச சீமான்
அள்ளிக் கொட்டுற வார்த்தை போலே
மழை சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே’’
.... வாழ்வியலை விளக்கும் அருமையான பாடல்.
1977-ம் ஆண்டு. புரட்சித் தலைவர் முதல்வராகி இருந்த நேரம். எதிர்க்கட்சித் தலைவராக திரு.கருணாநிதி அவர்கள். ஒரு விவாதத்தின் போது திரு. கருணாநிதி நிதானம் தவறி, ‘‘ஆட்சி, அதிகாரம் எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. நாங்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைதான் அது.’’ என்றார். (பதவி போன ஆத்திரம்)
புரட்சித் தலைவர் கோபப்படவில்லை. நிதானமாக எழுந்து சொன்னார்...
‘நீங்கள் எவ்வளவு ‘சாப்பிட்டீர்கள்’ என்று கணக்கு பார்க்கத்தான் நாங்கள் வந்திருக்கிறோம்.’
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்