இன்றைய தின மலர் தினசரி வெளியிட்ட செய்தி.
---------------------------------------------------------------------------------------
http://i57.tinypic.com/2n6xatw.jpg
http://i62.tinypic.com/2znpgsl.jpg
Printable View
இன்றைய தின மலர் தினசரி வெளியிட்ட செய்தி.
---------------------------------------------------------------------------------------
http://i57.tinypic.com/2n6xatw.jpg
http://i62.tinypic.com/2znpgsl.jpg
இன்றைய தின இதழ் நாளிதழில் வெளிவந்த செய்திகள்.
-----------------------------------------------------------------------------------------------------
http://i61.tinypic.com/24ffwhx.jpg
மக்கள் திலகம் அவர்கள் நினைவுநாள் - சில எண்ணங்கள் !
december 24 - நாட்காட்டியில் ஏழை எளிய மக்கள் மறக்க நினைக்கும் நாள் இன்று !
ஆம் ! ஜனனம், மரணம் இரெண்டும் மனிதன் சலுகை பெறமுடியாத இயற்க்கை !
மக்கள் அந்த இயற்கையிடம் கூட சலுகை வேண்டியது உன் ஒருவனுக்குதான், உன்னை எப்போதும் தங்களுடன் வைத்திருக்கவேண்டும் என்பதற்குத்தான்...!
இலங்கையில் பிறந்ததால் சிங்களவரா..?
கேரளாவை பூர்விகமாககொண்டதால் கேரளத்தவரா ?
அண்ணா மீது பற்றுகொண்டு தமிழ் மண்ணில் இருந்ததால் தமிழனா ?
இல்லை...இப்படி எதுவும் இல்லை...இவை எதுவும் இல்லை.....பிறகு எதுதான் உண்டு ?
ஏழை எளிய மக்கள் மீது அபரிதமான பற்றுகொண்டதால் நீர் இதய தெய்வம் அல்லவா ! அதுதான் உண்மை !
அயோத்தி ராமனின் பெயர் கொண்டது உமது பெயர்...ஆனால் கீதை சொன்ன கண்ணன் சாதுர்யம் உனது மட்டுமே திறம் !
பாரத போர் வென்றது கண்ணனின் சாதுர்யத்தால் மட்டுமே ! இருந்தும் போரில் அர்ஜுனன், பீமன் மற்றும் பல கைதேர்ந்த மன்னர்கள் களத்தில் !
அதைப்போல சிறப்பு கொண்ட தமிழ்நாடு தர்ம போர் !
சத்தியம் ! அசத்தியம் இடையே !
ஞாயத்திர்க்கும் அநியாயத்திற்கும் இடையே...!
தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே...!
களத்தில் ஒரு புறம் கௌரவர் படை !
மறுபுறம் அர்ஜுனன், பீமன் மற்ற கைதேர்ந்த மன்னர் ஒருவரும் இல்லாத ஒற்றையாள் பட்டாளம் உனது வடிவில் !
சூது கவ்விய தர்மத்தின் வாழ்வு மீண்டது ....உனது போர் சாதுர்யத்தால் !
திரை உலகில் உணகேன்று ஒரு தனி இடம் !
முழுமுதற்கடவுள் கணேசன் !
அப்பெயர் கொண்ட தம்பியை அன்பால் அணைத்த அண்ணன் நீர் !
அவர் தாயும் உனது தாயே ! உனது தாயும் அவர் தாயே !
அரசியல் பாதை வேறாக இருந்தாலும் இதுபோல ஒரு அண்ணன் தம்பி நிழல் உலகில் மட்டுமல்ல நிஜ உலகிலும் இல்லை என்பதற்கு பல உதாரணம் ....அதில் உச்சம் ஒன்று !
தம்பியின் தாய் திருவுருவச்சிலை திறந்தது ! அன்னை மீது கொண்ட பற்றும்...தம்பி மீது கொண்ட பாசமும்...இதை விட வேறு எதை சொல்வது ?
தம்பியுடையான் படைக்கஞ்சான் என்கிறது பழமொழி !
அண்ணனுடயானும் படைக்கஞ்சான் என்றல்லோவோ தம்பியும் பெருமிதம் கொண்டார் !
திரையில் நீர் பாடிய பாடல் பல உண்மையாகின, உண்மையாக்கிநீர்! மக்கள் சந்தோஷம் கொண்டனர் ..! ஆனந்தக்கூத்தாடினர் !
"கடலோரம் வாங்கிய காற்று" என்று திரையில் மக்களை குதூகலிக்க செய்தது...87ஆம் வருட கடைசி மாதத்தில் கடைசி வாரத்தில், கடலோரம் துயில் கொள்வேன் என்று உன் மனதில் அன்றே தோன்றியதால் தானோ ?
திரையில் ஒரு அரியாசனம் ! மக்கள் மனதில் என்றென்றும் நிறைந்த நிரந்தர சிம்மாசனம் !
பொல்லாத மனிதர் அய்யா நீங்கள் !
முதன் முதலாக என்னை நீர் எழுதி வைத்தது.... உம்மை பற்றிய எனது எண்ணங்கள் எனது வரிகளில்... இந்த பாழாய்ப்போன தினதிர்க்குதான் நீங்கள் என்னை உந்தவேண்டுமா ?
...இருந்தாலும் கண்ணீருடன் எனது நன்றி..நீர், எனக்கு கொடுத்த இந்த சந்தற்பத்திர்க்கும் கிடைத்த தருணத்திற்கும் !
வணக்கத்திற்குரிய தன்மான தலைவனே ! தமிழகம் அழிந்தாலும் உனது பெயர் நிலைக்கும் !
Rks