https://scontent.fyto1-2.fna.fbcdn.n...73&oe=5EBC9343
Printable View
இன்று 15/04/2020 காலை 11 மணிக்கு கேப்டன் டி.வி.யில் நடிகர்திலகம் நடித்த
" கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி "
படத்தை காண தவறாதீர்கள். ¶
சிவாஜி, பத்மினி, மற்றும் பலரும் நடித்துள்ளனர்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...8e&oe=5EBB157B
இன்று 15/04/2020 - இரவு 07.30 மணிக்கு வசந்த் டி.வி. யில் நடிகர் திலகம் நடித்த " தெனாலிராமன்"
இந்த படத்தில் நடிகர்திலகம், ஜமுனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
படத்தை காண தவறாதீர்கள்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...25&oe=5EBDD8D0
சிவாஜிக்கு பின் வந்த அத்தனை நடிகர்களுக்கும், சிவாஜி முன்னோடியாக இருந்திருக்கிறார். அத்தனை நடிகர்களிடமும், ஏதோ ஒரு விதத்தில் சிவாஜியின் தாக்கம் கண்டிப்பாக இருக்கும். இல்லையென்று யாராவது சொன்னால், அது மனசாட்சிக்கு விரோதமாக சொல்லப்படும் பொய் என்பது, என் தாழ்மையான கருத்து.
நெகடிவ் ரோல் பற்றி பேசும் போது, சிவாஜி பிலிம்சின் சொந்தப் படமான புதிய பறவை பற்றி சொல்லியே ஆக வேண்டும். தன் சொந்த படத்தில், கொலைகாரனாக, வில்லனாக தயங்காமல் நடித்தார் சிவாஜி.
ஒரு முக்கியமான ரகசியத்தை மனதிற்குள் அடக்கிக் கொண்டு, குற்ற உணர்வோடு கூடிய சோகத்தை யும், கண்களில் மிரட்சியையும், முதல் சீனிலிருந்து காண்பித்து, நடித்திருப் பார். படத்தின் பிரபல இயக்குனர் தாதா மிராசி, (சிவாஜி நடித்த மூன்று தெய்வங்கள் மற்றும் ரத்த திலகம் படங்களை இயக்கியவர்.) 'என்னுடைய ஹீரோ, மிகச் சிறந்த நடிகர்...' என்று சிவாஜியை பெருமையோடு குறிப்பிடுவார். அந்தப்படத்தில், 'ப்ளாஷ்பேக்' காட்சியில், சிவாஜிக்கு அப்பாவாக நடித்திருப்பார் தாதா மிராசி.
அமெரிக்காவில் இருந்து, மார்த்தா கிரஹாமின், 'மாடர்ன் அமெரிக்கா' நடனக்குழு சென்னைக்கு வந்து, நிகழ்ச்சிகள் நடத்தினர். அந்த நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனித்த சிவாஜி, 'எங்கே நிம்மதி எங்கே நிம்மதி...' பாடல் காட்சியில், மாடர்ன் அமெரிக்கா நடனத்தை, நினைவில் கொண்டு, சில புதுமையான, நளினமான மூவ்மென்ட்ஸ் களை செய்திருப்பார். அந்த பாடல் காட்சிக்கு, தியேட்டர்களில் பலத்த கரகோஷம் எழும்.
இந்தப் பாட்டு எழுதும்போது, எம்.எஸ்.விஸ்வநாதனும், கண்ணதாசனும் சேர்ந்து, உட்கார்ந்து ஆலோசித்தனர். சரியான பல்லவி கிடைக்க வில்லை. அருகில் இருந்த சிவாஜி தான், 'எங்கே நிம்மதி எங்கே நிம்மதி' என்ற பல்லவியை, பாடலின் முதல் வரியாக எடுத்துக் கொடுத்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், கண்ணதாசனுக் கும் பொருத்தமான வரிகள் என்று படவே, இதுவே, பாடலின் பல்லவியாக ஆயிற்று; தமிழ் சினிமாவிற்கு புதுமையான பாடல் காட்சி கிடைத்தது.
நன்றி! திரு.Y.G. மகேந்திராவின்
நான் சுவாசிக்கும் சிவாஜி....
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...ec&oe=5EBAB5B6