-
மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் இமாலய வெற்றி அவருக்கு உலக புகழ் அளித்தது .
ரசிகர்களின் எண்ணிக்கையும், எம்ஜியார் மன்றங்களும் நாளுக்கு நாள் நாடெங்கும் உதயமானது .
1957ல் நடைபெற்ற தமிழக தேர்தலில் மக்கள் திலகம் தேர்தல் சுற்று பயணத்தில் எம்ஜியார் மன்றங்களும் முதன் முறையாக தேர்தல் பணியில் தங்களை ஈடு படுத்தி கொண்டனர் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களை ஒரு அரசியல் தொண்டனாக மாற காரணம் மக்கள் திலகத்தின் மேல் கொண்ட அளவு கடந்த பாசமும் , அவர் செய்த தான தர்மங்கள் , கொள்கை பிரசார படங்கள் என்றால் மிகையாகாது .
1959 -சீர்காழியில் நடந்த நாடக மேடையில் ஏற்பட்ட விபத்தில் மக்கள் திலகத்தின் கால் ஒடிந்து ஓராண்டு காலம் [1959ல் ஒரே படம் - தாய் மகளுக்கு கட்டிய தாலி] முழு ஓய்வில் இருந்தார் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமாக இருந்தது .இந்த இடைவெளியில்தான் பல வெள்ளிவிழா வெற்றி படங்கள் வந்து தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருந்தது .
நடிகர்திலகம் - காதல் மன்னன் இருவரும் ஒருபக்கம் , -பலபுது முக நடிகர்களின் வரவு - மெல்லிசை மன்னரின் பொற்கால துவக்கம் -வெற்றிப்பட இயக்குனர்களின் புதுமை படைப்புகள் என்று தமிழ் சினிமா முன்னேறி கொண்டிருந்தது .
மக்கள் திலகம் தனக்கு ஏற்பட்ட விபத்தில் இருந்து மீண்டு 1960 முதல் தன்னை சுற்றி இருந்த தமிழ் சினிமாவின் பலரின் வெற்றி மகுடங்களையும் ,தனது வெற்றிடத்தையும் புரிந்து கொண்டு மீண்டும் எடுத்தார் விஸ்வரூபம் - அதுதான்
மன்னாதி மன்னன்
பாக்தாத் திருடன்
ராஜாதேசிங்கு
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்து மேல் விருந்து வைத்து பல வெற்றி படங்களை தந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார் .
1961- பொன்னான மக்கள் திலகத்தின் ரசிகர்களின் மறக்க முடியாத ஆண்டு .
தொடரும் .........
-
நமது மக்கள்திலகம் திரியில் தவிர்கமுடியாத வேலையின்
காரணத்தால் வர முடியவில்லை மன்னிக்கவும்
பல அற்புத பதிவுகள் தொடர்ந்து வழங்கி வரும் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்
-
சென்னை பிராட்வே திரையரங்கில் மக்கள்திலகத்தின் 100வது
காவியம் ஒளிவிளக்கு http://i47.tinypic.com/2ce2h3c.jpgகொண்டாட்ட காட்சிகள்
-
-
-
-
-
-
-
திருவண்ணமலையில் அருமை நண்பர் திரு எம்ஜியார் பித்தன் கலீல்பாட்சா அவர்கள் 01-03-2013 அன்று மக்கள்திலகத்தின் பிறந்தநாள் மற்றும் மக்களதிலகம் எம்ஜியார் மன்றம் துவங்கி 48 ஆம் ஆண்டு விழா கொண்டாடினார்கள். மிகவும் அற்புதமான விழா நிகழ்ச்சிகள் விழுப்புரம் செல்வராஜ் அவர்களின் இசையுடன் கூடிய நகைசுவை மற்றும் அகிலஉலக எம்ஜியார் மன்ற தலைவர் தமிழ் மகன் ஹுசைன் அவர்களின் தலைவரை பற்றிய அற்புதமான பேச்சு ,புகைப்பட கண்காட்சி ,அன்னதானம் ,திருவண்ணாமலை கோவிலில் தங்கத்தேர் இழுத்தல் ஆகியவை மிகவும் சிறப்பாக நடைபெற்றது .இவ்விழாவில் புரட்சிதலைவர் பக்தர்கள் சென்னை ,மதுரை ,கோவை ,புதுச்சேரி மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து கலந்துகொண்டனர்
http://i49.tinypic.com/2hs66h4.jpg